கண்கட்டு வித்தைக்காரா 5

Kan5

கண்கட்டு வித்தைக்காரா 5

5.கண்கட்டு வித்தைக்காரா

ஆதி வேகமாக குளித்து தயாராகி கீழே வந்து பிரெட்டும் ஜாமும் திங்க போக..சமயலறையிலிருநாது நெய் மணக்க தோசையோடு மகா வெளியே வந்தவள் அவன் கையிலிருந்த பிரட்டை பிடிங்கி கீழே வைத்து விட்டு..(பிரெட்டு போச்சே)

"அத சாப்டா, சாப்பிட்ட மாதிரியே இருக்காது இத சாப்பிடுங்க..அதோட என் ஒரு ஆளுக்கெல்லாம் சமைக்க முடியாதில்ல சார்"..என்று அவனுக்கு  சாம்பார் ஊற்ற.. அவனுக்கு தன் அன்னையின் தமிழ்நாட்டு சமையல் மிகவும் பிடிக்கும் ஆனால் அவனுக்கு அது செய்ய தெரியாது நேரம் எடுக்கும் என்பதால் இப்படி ஏதையாவது சாப்பிடுவான்.. மதியம் நல்ல ஹோட்டல் பார்த்து வெளுத்து வாங்குவான்.. இன்று காலை ஆரம்பமே நல்லாயிருக்கே என்று நினைத்து கொண்டு சாப்பிட.. 

"சார் மாசம் எவ்வளவு சம்பளம்"

  "எவ்வளவு வேணும் சொல்லு.. சரி இப்போ எதுக்கு சில்க் அதப்பத்தி பேசுற"

சட்னியை வைத்து கொண்டே..

"இல்ல சார் இந்த மாசம் சம்பளம் வந்தவுடனே ஊருக்கு போகணும் பாட்டியப் பார்க்க.."

"ஓ போகணுமா? "என்று சுதி குறைந்த குரலில் ஆதி கேட்க..

"ஆமா சார் அங்க திருவிழா வேறயிருக்கு அதோட   எனக்கு காலத்துக்கும் கல்யாணமே ஆகாதுன்னு கிண்டல் பண்ணினாங்க அவங்ககிட்ட  எனக்கு கல்யாணம் ஆகிடுச்சின்னு சொல்லணும்" என்று பேசி கொண்டே உள்ளே சொல்ல..(கல்யாணம் அமேசான்ல ஆர்டர் போட்டு வாங்கின மாதிரி சொல்லிட்டு போறா)

பைத்தியக்காரிக்கு அவன் கட்டிய தாலி வேண்டும் அவன் வேண்டாமாம் என்று அப்போதுதான் உள்ளே நுழைந்த ராஜ் தலையில் அடித்து கொண்டார்..

"வாங்கப்பா சாப்பிடுறிங்களா.."

"இல்லடா சாப்பிட்டுட்டுதான் வந்தேன்.. "

இருங்க காஃபி தர்றேன் என்று அவருக்கும் காப்பி கொடுத்துவிட்டு இவன் கையில் கொடுக்க..

"இப்போ எதுக்கு நீ ஊருக்கு போயிகிட்டு இரண்டு மாசம் ஆகட்டும் இரு கைகழுவிட்டு வந்து காஃபி குடிக்கிறேன் "என்று ஆதி இயல்பான புருஷன் பொண்டாட்டி போல இருவரும் பேசிகொண்டு செல்ல..

ராஜ்தான் குழம்பி போய் பார்த்தார்.."இதுக ஒப்பந்த திருமணம் பண்ணின நாய்ங்க மாதியா இருக்கு எப்படியோ இரண்டும் நல்லாயிருந்தா சரி "என்று நினைக்க.. அடுத்த ஷாக் கொடுத்தார்கள் இருவரும் கையை கழுவிவிட்டு வந்த ஆதி அவள் முந்தானையில் கைவைத்து துடைக்க அவளோ ஒரு படி மேலே போய் தன் முந்தானையை எடுத்து அவனை குனிய சொல்லி ஈர வாயை  துடைக்க..(அடேய் எங்க குட்டி நெஞ்ச வெடி வச்சி கொழுத்தாதீங்கடா)

இரண்டு பேரும்  முன்னமே உருகி உருகி காதலிச்சி கல்யாணம் பண்ணின மாதிரியிருந்தது..

மகாவோ இந்த ஒருவருடம் ஆதி  தன் கணவன்தான் திருமணம் எட்டாக்கனியாக இருந்தவளுக்கு திருமணம் மட்டுமே கண்ணில் விழுந்தது அவனோடு தாம்பத்திய ஆசையெல்லாம் இல்லை ஆனால் இருக்கும் வரை அவனோடு இயல்பாக இருக்க நினைத்தாள்..

ஆதிக்கு இந்த புதிய சூழ்நிலை பிடித்திருந்தது அவனை விட்டு மகா தள்ளி போகாமல் அவளாக வந்து கேர் பண்ணுவது பிடித்திருந்தது ஒருவருடம் அவளோடு ப்ரெண்டாக இருக்கலாமே என்று அவன் நினைத்தான்..(ராத்திரியில தெரியும் வண்டவாளம்)

இந்த கிறுக்கு மட்டிகளுக்கு தெரியவில்லை பஞ்சும் நெருப்பும் தள்ளியிருந்தாலே அதன் வெப்பத்தில் பத்திக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.. இப்படி ஒட்டி உரசினால் கப்பென்று பற்றிக் கொண்டு காட்டுத்தீயாக பற்றி எரியும் என்று.. எந்த பொண்டாட்டியை ப்ரெண்டாக நினைத்து தள்ளியிருக்க  முடியும் அதிலும் இவன் மகா சபலப் புத்திக்காரன் இத நம்ம சொன்னா உன் சோலியப் பார்த்துட்டு போக சொல்லுங்க நம்கெதுக்கு வம்பு ..

அவன் அவளிடம் பணத்தை கொடுத்து செலவுக்கு வச்சிக்க ராஜ்கிட்ட உங்க ஊர் போஸ்ட் ஆபிஸ் நம்பர் வாங்கி பாட்டிக்கு போன் பேசு ..

சரி சார் நன்றி மதியம் சாப்பாடு..

"சாரி சில்க்  மீட்டிங் இருக்கு நைட் வர லேட் ஆகும் தூங்கு ஐ கவ் அனதர் ஒன் கீ சோ நானே திறந்து வந்திடுவேன்.. பாய்" என்று அவளை தாண்டி போக..

இவள் ஓடி வந்து வாசலில் நின்று சிரித்த முகமாக அவனுக்கு டாட்டா சொல்ல ஆதி மனதில் ஏதோ சறுக்கியது கார் ஜன்னல் திறந்து ஒற்றை கையை நீட்டி அவளுக்கு கைகாட்டி விட்டு உள்ளே வர..

ராஜ் "நாம பைத்தியமா இதுக பைத்தியமா" என்று முழிக்க..

"ஹாஹா என்ன ராஜ் இப்படி முழிக்கிறிங்க..சில்க் செம டேஞ்சரஸ் நைட் ஆடாம அசையாம காரியம் சாதிச்சா" என்று நடந்ததை சொல்ல..

"ம்ம் பரவாயில்லையே இவனை சங்கிலி போட்டு கட்டும் திறமை இருக்கிறதே "என்று நினைக்க ஆடியோ நான் அந்த அப்பனுக்கே சுப்பன் எனும் விதமாக..

"அவள அவ போக்கில போய்தான் கவுக்கணும் வீட்ல அவ சொல்ற மாதிரிதான் இந்த ஒரு வருஷமும் அவளால ஆதாயம் இருக்கே நமக்கு .. ஆனா வெளியே என் இஷ்டப்படிதான் "என்று ரேஷ்மாவுக்கு போன் போட்டவன்..

"பேபி நைட் ரெடியா இரு.."

"நோ நோ என் வீடு இல்லை .....இந்த ஹோட்டல்ல ரூம் போட்டிருக்கேன் வந்திடு.. மறக்காம ஸ்காச்  வாங்கிட்டு வா அதானே உன் பேவரைட்" என்று சொல்லி சிரிக்க..

ராஜ் ராஜ்.

"ஹான் சொல்லுங்க சார்.."

"சில்க் அவுங்க பாட்டிகிட்ட பேச ஆசைப்பட்டா ரெடி பண்ணி கொடுங்க .இன்னைக்கே.."

"ஓகே சார்.. ஹீக்கும் இந்த அக்கறைக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை".. என்று நினைத்து கொண்டார்..

ராஜ் அதன்படி வீட்டுக்கு வந்து போன் போட்டு கொடுக்க சில மணிநேரம் கழித்து பாட்டி வந்து..

"அம்மாடி நீ போன் போடலைன்ன உடனே பயந்துட்டேன்.."

"பாட்டி எப்படி இருக்கிங்க" என்று நலம் விசாரித்து திருமணம் வரை சொல்ல..ஒப்பந்தம் தவிர்த்து..

"அடி ஆத்தே என்னடி சொல்ற "

'ஆமா பாட்டி ஒரு நிர்பந்தத்தில கல்யாணம் ஆகி போச்சி.. நீங்க சந்தோஷப்படுவிங்கன்னு பார்த்தா 

 கோவப்படுறிங்க"..(உன்ன வெளக்குமாத்தால சாத்தாம விட்டுச்சே சந்தோஷப்படு) 

"கூறுகெட்டவளே அவரு எப்படி  என்ன ஏதுன்னு தெரியாம.. இரு நான் அடுத்த பஸ்சுக்காக வர்றேன்"..(பாட்டி அறிவாளிதேன்)

"வேண்டாம் பாட்டி ஏன் உங்களுக்கு சிரமம் அவர் ரொம்ப நல்லவர் இருங்க ராஜ் அப்பாகிட்ட பேசுங்க" என்று கொடுக்க..(நல்லவர் ஹோட்டல்ல எதுக்கு ரூம் போடுறாரு பக்கி)

ராஜ் வாங்கும் சம்பளத்துக்கு மேலையே கூவ..திருப்த்தியான பாட்டி..(என்னா கூவு கூவுறாரு மனுஷன்) 

"அய்யா அவ சூது வாதி இல்லாத புள்ள இத்தனை காலம் கஷ்டத்த மட்டும்தான் பார்த்திருக்கு பேரனை நல்லா பார்த்துக்க சொல்லுங்க.. திருவிழாவுக்கு முடிஞ்சா கூட்டி வாங்க என் கண்ணார இரண்டு பேரையும் பார்க்கணும்.."

"சரிங்க சார்கிட்ட சொல்லி கூப்டுட்டு வாரேன்" என்று பொதுவான விஷயத்தை பேசி வைத்தவருக்கு மனம் கனத்தது...எப்படி சொல்வார் இரவு அவன் இன்னொரு பெண்ணோடு உல்லாசமாக இருக்க போகிறான் உங்கள் பேத்தி வாழ்க்கை சேற்றில் புரள்கிறது என்று..

கடவுளே இந்த கள்ளமில்லாமல் அப்பா என்று என்னை அழைக்கும் பெண்ணிற்கு நல்லதை செய் என்று வேண்ட மட்டுமே அவரால் முடிந்தது..(கடவுள்  சோ பிசி சார்)

மகாவுக்கு திருமணம் முடிந்து விட்டது என்பதே போதுமானதாகயிருக்க அந்த வீட்டில் சிட்டு குருவியாக சுற்றி வந்தாள்..(இவ என்ன மேக்.. தாலி வேணுமாம் புருஷன் வேண்டாமாம்)

இரவு ஆதி அந்த ஹோட்டல் அறைக்கு செல்ல ரேஷ்மா இவன் வருவதற்கு முன்மே   பாதி குடியில் தள்ளாடி ஆதியை கட்டி கொண்டு உதட்டை கவ்வ போக..(குவாட்ருக்கு பிறந்த குடிகாரி)

ஆதி முகத்தை சுளித்தான் காலையில் மங்களகரமான முகத்தோடு அவன் முகத்திற்கு நேரே நடமாடி அவன் சில்க் வந்து வந்து  போனாள் ரேஷ்மாவை முத்தமிட விடாமல்  கட்டிலுக்கு அழைத்து போக ஏற்கனவே பெட் சீட் கசங்கி போய் கிடக்க .. அவள் முகத்தை பார்க்க..

"நீ வர லேட்டாகும்னு சொன்ன அதான் என் பாய் பிரெண்ட் கூட பேசிட்டிருந்தே பேபி நம்பு "என்று அவனை அணைக்க..(நம்பு பேச மட்டும்தான்..ஓரே ரூம் இரண்டு கஸ்டமர் )

உடல் முதல்முதலாக கூசியது" ச்சை இவளை எதுவும் சொல்ல கூட முடியாது நாம் மட்டும் யோக்கியமா இவள் இனி சரிபட்டு வரமாட்டாள் வேறு ஏதாவது ப்ரெஸ் பீஸாக பார்த்து கொள்ளலாம்"   என்று நினைத்தவன் பணத்தை அள்ளி பெட்டில் போட்டு விட்டு வீட்டுக்கு வந்து கதவை திறக்க .. அவனுக்காக காத்திருந்தாள் அவன் மாது.. (இவன் திருந்த ரொம்ப குஷ்டம் )

திகைத்து முழித்தவன்.. 

சில்க் தூங்கலை ?

"இல்லை சார் பாவம் பசியோட வருவீங்கல்ல தூங்க மனசு வரல வாங்க சாப்பிடலாம்..."

"ஏன் நீயும் சாப்பிடலையா?  "

"இல்ல சார் உங்ககூட பேசிட்டு சாப்டா கூட கொஞ்சம் சாப்பிடலாம்ல அதான் வெயிட்ங் வெளியே எதுவும் சாப்பிட்டிங்களா"  என்று பாவமாக அவனை பார்க்க..(விட்டா முழுங்கி ஏப்பம் விட்டிருப்பான்)

இல்லை குளிச்சிட்டு வர்றேன் சாப்பிடலாம் என்று குளிக்க ஆரம்பித்தவன் கண்களில் மொத்தமும் அவன் மனைவி மட்டுமே ..

"ஏன் ஏன் எதற்கு அவளை பார்த்தால் தடம் மாறுகிறது.. இவ்வளவு நாள் இனிதாக இருந்த பெண்கள் இன்று அசிங்கமாக தெரிகின்றனர் என்னை இவள் என்ன செய்கிறாள் "என்று வெகுநேரம் தன் மனதின் வென்மையைக் குறைக்க..

குளியலறை கதவு தட்டப்பட்டதும் ஆதி திடுக்கிட்டு..

"ஹான் சொல்லு சில்க்.."

"வெளியவே டவல் போட்டுட்டு வந்திட்டிங்க சார் இந்தாங்க"  என்று கொடுக்க..

கதவை லைட்டாக திறந்து ஆதி அதை வாங்க.. கீழே கிடந்த ஈரத்தில் வழுக்கி மகா கீழே சரிய போக..

"ஏய் ஏய்" ..ஆதி டவலைக் கட்டிக்கொண்டு தள்ளாடிய அவளை தன்னோடு இழுத்து அணைக்க..

அவள் பஞ்சு திமில்கள் அவன் மீது வந்து முட்டி நிற்க.. ஆதி அவள் வழவழப்பான இடுப்பின் ஸ்பரிசம் தன் விரல் தொட பேச்சற்று போனான்..

அவனை விட்டு பட்டென்று விலகிய மகா "சாரி சார் தண்ணீ வழுக்கிடுச்சி" என்று அவன் விரல் பட்ட இடங்களை அழுந்தி துடைக்க..

ஆதிக்கு கோவம் வந்தது "ஏன் இவள நான் தொடக்கூடாதா  ரொம்ப பண்றா" என்று முகத்தை உர்ரென்று வைக்க..

"சாப்பாடு எடுத்து வைக்கிறேன் வாங்க" என்று அவள் நடக்க..

ஆடி அசையும் அவள் பின்னழகை  கண்கள் வெட்டாமல் ஆதி பார்த்து ரசித்தான்..

ரசிகனாக மட்டும் இருப்பானா இல்லை அவளின் கணவனாக மாறுவானா?