கண்கட்டு வித்தைக்காரா 9

Kan9

கண்கட்டு வித்தைக்காரா 9

9 கண்கட்டு வித்தைக்காரா

இருவரும் உடலால் இணைந்து ஒரு வாரம் ஆகிறது இந்த ஒருவாரத்தில் அவனுக்கு வேலையே மகாவை கட்டிலில் போட்டு தாயம் ஆடுவதுதான் அறையை விட்டு அவளை விடவே மனமில்லாமல் சில்க் என்று சுற்றுனான்.. 

சமலறைக்கு போனால் ஒட்டி கொண்டே நின்று இம்சை செய்வான்..அங்கதான் அவ்வளவு இடம் இருக்கே தள்ளி நின்று தொலைக்க மாட்டானா என்று மகா எரிச்சல் அடைவாள்.. இவனுக்கு அது தெரிந்தாலும் இரும்பை காந்தம் ஈர்ப்பதுபோல் அவள் ஈர்த்தாள் .. 

காலையில் சரி இன்று அவளுக்கு ஓய்வு கொடுக்கலாம் ஒருவார வேலை வேறு கழுத்தை நெறிக்க.. அவளை விட்டு பிரிய மனமில்லை ஆனாலும் வேறு வழியில்லாமல் கிளம்ப..

மகா அவனுக்கு சர்ட்டை சந்தோஷமாக ஐயன் பண்ணி கொண்டிருந்தாள் காலையில் ஆபிஸ் போக வேண்டும் என்று அவள் நெஞ்சில் முட்டி கொண்டு சொல்லவும் அப்பாடி என்று பெருமூச்சு விட்டவள் அப்போதிலிருந்து இப்படிதான் ஜாலி மூடில் அலைகிறாள்..(அடப் பாவி நீ செத்தா கேக் வெட்டி கொண்டாடுவா போல)

"சார் தேச்சிட்டேன் "என்று ஆதி கையில் கொடுக்க குளித்து விட்டு வந்தவன் டவலை துற எறிந்து விட்டு அவள் புடவை முந்தானை எடுத்துஅவள் கையில் கொடுத்து..

"சில்க் அன்னைக்கு மாதிரி துடைச்சு விடு "என்று அவள் முன்னால் குனிய..

"ச்சை கிரகம் பிடிச்சவன் போய் தொலைய மாட்டைக்கிறான்" என்று நினைத்து கொண்டு வேகமாக துடைத்து விட்டு நகர..அவள் கைபிடித்து இழுத்தவன்.. ஈரம் காஞ்சிடுச்சான்னு ஊதி பாரு.. என்று அடம் பண்ண அதையும் மகா செய்ய அவன் கண்கள் பழுப்பு நிறமாக மாற..

"ஓடிடு மகா நின்ன இன்னைக்கும் வேலைக்கு போகாம உங்கிட்டதான் வேலை செய்வான்" என்று நாலுகால் பாய்ச்சலில் ஓட.. 

ஆதி சிரித்து கொண்டே.. "உன்ன விடணும்னா அது நான் நினைக்கணும் சில்க் இன்னைக்கி வேலை கழுத்தை நெறிக்கிது இல்லை இப்பவே உன்ன தூக்கியிருப்பேன் "என்று சிரிக்க.. ரேஷ்மாவிடமிருந்து போன் வந்தது..

ஆன் செய்து காதில் வைத்தவன் பே... என்று வாயை எடுத்தவன் "ஹான் சொல்லு ரேஷ்மா" என்று சாப்பாட்டு டேபிளில் உட்கார..

மகாவுக்கு ஆதியை பிடிக்காதென்றாலும் இன்னொரு பெண்ணிடம் பேசுகிறான் என்றதும் முகம் தொங்கி விட்டது.. அவ்வளவுதானா ஒருவாரத்தில் நான் தெவிட்டி விட்டேனா.. என்று மனம் புகைய சப்பாத்தியை எடுத்து அவன் தட்டில் பொத்தென்று வைக்க..அவள் கைபிடித்து இழுத்தவன் தன் மடியில் அவளை வைத்து ஊட்டிவிடு என்று கண்காட்ட..

"இதுவும் அவக்கிட்டையே கேட்க வேண்டியதுதானே" என்று முணுமுணுத்து சாப்பாத்தியை பிய்த்து அவன் வாயில் வைக்க .. 

"ஒரு நிமிஷம் ரேஷ்மா "என்றவன் மகாவை அப்படியே இழுத்து வாயோடு வாய் வைத்து தன் வாயிலிருந்த சப்பாத்தியை அவள் வாய்க்குள் தள்ள.. மகா ஆ என்று அவனை பார்க்க .. இச் என்று உதட்டில் முத்தமிட்டவன் அவள் காதில் "இப்படி ஊட்டு" என்று ரகசியம் சொல்ல பெண்ணவள் உதடு கடிக்க.. 

ஆதிக்கு அவள் உதடுகள் வேண்டும் போல் இருக்க.. போனை லவுட் ஸ்பீக்கரில் போட்டுவிட்டு மகாவின் புடவைக்குள் கைவிட்டு இடுப்புசதையை தேடி தடவி அவள் கழுத்தில் மீசையால் கவிதை வரைய..

ரேஷ்மா "பேபி உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சின்னு சொன்னாங்க ஆனா அன்னைக்கு நைட் எங்கூட இருந்தீங்க .. உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சே இனி எங்கிட்ட வர மாட்டிங்களா?" என்று அவன் பணம் போய்விட்டதே என்று ஏங்கி கேட்க..(அவன் புல் டைம் பீசி)

ஆதி அவள் சொன்னதை கேட்கும் நிலையில் இல்லை அவனுக்கு அவன் மடியில் இருக்கும் பொண்டாட்டி போதும் போல் கொஞ்சி கொண்டிருந்தான்..

மகாவோ" கேடுகெட்டவன் இங்கே என்னிடம் கொஞ்சி கொண்டு போனில் அங்கேயும் கொஞ்சுகிறான்.. இழுத்து சூடு வைக்க வேண்டும் எப்போ பார்த்தாலும் எதையாவது பிடித்து தொங்கி உயிரை எடுக்கிறான்.. அவள்தான் கூப்புடுறாளே போய் தொலைச்சா என்ன ?என்னமோ ஒத்த பொண்டாட்டிக்கு உண்மையா இருக்கிற மாதிரிதான் .. விழுந்து புரள்றது சாக்கடையில பெரிய உத்தமன் கணக்கா நம்ம மடியில கிடக்கிறான் "என்று காய்ந்து எடுக்க.. 

வெளியே முகத்தை சாந்தமாக வைத்து கொண்டு அவனுக்கு ஊட்டிவிட சிரித்து கொண்டு அவளிடம் சில்மிஷம் செய்து சாப்பிட்டு முடித்து அலுவலகம் செல்ல..

மகா ஓடி போய் படுத்து கொண்டாள் அப்பா ஒருவாரமாக கண்கள் தூக்கத்துக்கு கெஞ்சுகின்றது என நினைத்து தூங்க..

ஆதி அலுவலகத்தில் முக்கியமான வேலைகளை அவசரமாக முடித்து மனைவியிடம் ஓட வேண்டும் என்று புது மாப்பிள்ளை போல் வேலை செய்ய.. ரேஷ்மா உள்ளே வர..

ஆதி பல்லை கடித்தான் ..தன் நேரத்தை வீணாக்க வந்ததோடு ஆபிஸுக்கு வர இவளுக்கும் எனக்கும் என்ன இருக்கிறது கட்டிலில் சேவை செய்ததற்குதான் காசு வாங்கிவிடுகிறாளே பின்ன எதற்காக இங்கே வர வேண்டுமென்று கோவம் கொண்டு..

என்ன என்று புருவம் உயர்த்த.. 

கொத்தாக பணத்தை அள்ளி வீசும் ஆதியை விட மனமில்லாமல் இங்கே வந்துவிட்டாள் ஆனால் அவனின் ஆளுமையான பார்வையில் பயந்தவள் ..தன் அழகின் மேல் நம்பிக்கை வைத்து அவன் பக்கத்தில் போய் கழுத்தை கட்ட.. 

ரேஷ்மா...... என்ற கத்தில் அவள் நடுங்கி தள்ளி நிற்க...

"ஹெள டேர் யு டச் மி .. கெட் அவுட்.. இன்னொரு முறை இங்க பார்த்தேன் தொழில் பண்ண முடியாது பி கேர்புல்" என்று கையிலிருந்த பைலை அவளை நோக்கி போட..

விட்டால் போதுமென்று ஓடிவிட்டாள் ..

ச்சை என்று அவள் தொட்ட கழுத்தை டிஸ்யூ வைத்து துடைத்தவன் மேஜையில் தலை வைத்து படுக்க.. அவன் சில்க் வந்தாள் இரவில் அவளோடு நடத்திய அந்தரங்க காட்சிகள் விரிய.. உதடுகள் சிரித்தது" யு ஆர் கில்லிங் மீ சில்க்" என்று தலை கோதியவன் ..ராஜ்ஜை அழைக்க..

எஸ் சார்..

ஹான் அது.. அது.. என்று வாழ்க்கையில் முதல் முறையாக தடுமிறினான்..

"இட்ஸ் மை பெர்சனல் .."

"ஓகே சார் சொல்லுங்க.."

"அது வொய்புக்கு என்ன வாங்கி கொடுத்தா பிடிக்கும் .. எங்க டேட் மாம்ம இதுவரை வாட்ச் பண்ணினது இல்லை சோ ஐ காண்ட் அவர்தான் மம்மிக்கு அடிக்கடி எதாவது கொடுப்பார்.. அம்மா முகம் அவ்வளவு அழகாயிருக்கும் அத வாங்கும் போது .."

 "ஆமா சார் அது ஒரு சந்தோஷம் மனைவிங்களுக்கு நான் கல்யாணம் முடிஞ்ச புதுசுல மல்லிகைப்பூ அல்வா வாங்கிட்டு போனா என் பொண்டாட்டி முகம் அந்த அல்வாவிட சிவக்கும் பாருங்க" என்று ரசித்து சொல்ல...

"மல்லிகைன்னா ஜேஸ்மின் தானே.."

"ஆமா சார் பட்டுபுடவைகூட பொண்ணுங்களுக்கு பிடிக்கும்.."

"ஓகே ராஜ் ஐயம் கேட்டிங் லேட் ஏதாவது முக்கியமான விஷயம்னா..'

"உங்களுக்கு போன் போடுறேன்.."

"அதத்தான் சொல்றேன் போன் போட்டு தொல்லை பண்ணாதீங்க "என்று கார் கீயை கேட்ச் பிடித்த படி ஓட..

"இது என்னடா அதிசயமா இருக்கு" என்று ராஜ் வாயில் கை வைத்தார்..

ஜவுளி கடையில் தேடி தேடி அழகான தங்க நிற பட்டுப்புடவை எடுத்தவன் அதற்கான ரூபி செட் தங்கம் கல்பதித்த நகை செட் வாங்கி கொண்டு கடையில் மல்லிகைப் பூவை வாங்கி உள்ளே வைத்து விட்டு.. 

சில்க் இன்னைக்கு இந்த பட்டுப்புடவை என்னால கசங்கணும்.. என்று சிரித்து கொண்டே வீட்டிற்குள் வர..

உள்ளே ஆணின் சிரிப்பு சத்தம் கேட்க யாராக இருக்கும் என்று நினைத்து உள்ளே போக..

அழகான கவர்ச்சியான சிரிப்போடு அமர்ந்து மகாவோடு பேசி கொண்டிருந்தான்..

ஆதி ஜீவன்..

மகா இந்த ஊருக்கு தேடி வந்த ஆதி ஜீவன்..

அவள் தேடி வந்த எஸ்டேட் ஆதி ஜீவன் எஸ்டேட்..

இவனோடு பேசும் போது சிரிக்க மறந்தவள் ஜீவனோடு பேசும் போது மொத்த பல்லையும் காட்டி சிரித்து பேச இவன் கண்கள் கோவத்தில் சிவந்தது மனம் பொறாமையில் வெந்தது..

உனக்கு வந்தா ரத்தம் அவளுக்கு வந்தா பீட்ரூட் ஜுஸா இன்னாடா உன் நியாயம் .. நீ பத்து பொண்ணுகூட பல்லக்காட்டுவ அவ சிரிக்கக்கூட கூடாதா வச்சாப் பாரு ஆப்பு.. 

மகாவின் மனம் இந்த ஆதி கேசவனுக்கா? இல்லை ஆதி ஜீவனுக்கா?..