எஃகில் கலந்த தளவம் 7
Ehgg7
7 எஃகில் கலந்த தளவம் !!
அரை தூக்கத்தில் கிடந்த அங்கை மீது வந்து பூஜாடி டொம் என்று விழுந்தது.... வலியில் தலையை தடவிக் கொண்டே எழும்பி அமர ... படுக்கையில் தூங்க முடியாமல் புரண்டு கொண்டிருந்த நீல்தான் தூக்கி வீசி இருந்தான்
இங்க என்னால தூங்க முடியல , நீ மட்டும் நிம்மதியா தூங்கலாம்னு நினைக்கிறியா? "
நீங்க தானே ஏலியன் சார் இன்னைக்கு ராத்திரி மட்டும் நல்லா தூங்கிக்கன்னு சொன்னீங்க...
"அதுக்கு என் முன்னாடி தூங்குவியா??...
"அப்போ பின்னாடி போய் தூங்கவா ஆஆஆஆஆ அடுத்த துணை ஜாடியும் வந்து விழ
"இவனுக்கு ஏதோ மண்டை கோளாறு பிடிச்சு போச்சா தூங்குங்கிறான், தூங்காதங்கிறான், என்ன பிரச்சனை இவனுக்குன்னு தெரியலையே என்று தலையை தடவிக் கொண்ட அங்கை
நான் தூங்கவா வேண்டாமான்னு ஒரு முடிவுக்கு வாங்க அதுவரை எதையாவது தின்னுட்டு இருக்கேன் ... என்று எழும்பி பிரிட்ஜ் நோக்கி போக...
தலைவலி தலைவலி என்னை பிடிச்ச தலைவலி நீ"
என்னை பிடிச்ச நெஞ்சுவலி நீங்க , நான் என்ன கத்திட்டா இருக்கேன்
என்ன சொன்ன??? ...
நெஞ்சுக்கறி தின்னு நாளாகுது வாய் நமநமன்னு வருதுன்னு சொன்னேன் .. நெஞ்செலும்பு கூட வேண்டாம் ஏலியன் ... ஆயா ஒன்னு இங்க வடை கடை போட்டிருக்குல்ல, அந்த கடை எங்க இருக்குன்னாவது சொல்லுங்க ,பார்த்தாவை கூட்டிட்டு போய் நாலு வடை வாங்கிக்கிறேன்
வாட் வடை கடையா? நீல் தலையை தடவினான்
"ஆமா தாத்தா சொல்லும் நிலாவுல ஆயா வடை கடை போட்டிருக்குன்னு.... கடைத்தெருவுக்கு வழி சொல்லுங்க சரி சரி வேண்டாம் நானே கண்டுபிடிச்சிக்கிறேன் அதுக்கு ஏன் முறைக்கிறீங்க..... ஒரு தியேட்டர் இல்ல, கடை இல்லை , துணி எடுக்க துணிக்கடை இல்லை , இட்லி வாங்க இட்லி கடை இல்லை, கேட்டா நாங்க எல்லாம் பெரிய இதுன்னு பீத்திக்க வேண்டியது... இதையெல்லாம் கேட்டா என்ன பைத்தியக்காரின்னு சொல்ல வேண்டியது, இடியட்ஸ் என்று அவள் பாட்டிற்கு அறைக்குள் புலம்பிக்கொண்டே உலாத்திக் கொண்டிருந்தாள்....
நீலுக்கு தலை விண் விண் என்று வலித்தது... படுத்தா குமட்டியது எழும்பி இருந்தா தலை சுற்றியது அந்த ஆத்திரத்தில் அவளை பிடித்து காய்ந்தான் ....
திங்கணும் தூங்கணும் இதை தவிர இந்த மனித ஜந்துகளுக்கு வேற வேலையே இல்லையா? ....
"எனக்கு எல்லாம் பேச வாய்ப்பு கொடுக்கலைன்னாவே ஒரு மணிநேரம் தம் பிடிச்சு பேசுவேன் .... கேள்வி கேட்டீங்கல்ல ஏலியன் ... இருங்க வர்றேன் தெம்பா சோடா ஒன்னு குடிச்சுட்டு வந்து நீங்க கேட்ட கேள்விக்கு பதில் சொல்றேன் .. என்று குளிராக ஒரு எனர்ஜி ட்ரிங்கை உள்ளே தள்ளிவிட்டு அவன் படுக்கை மீது இருக்க ,இவள் படுக்கை அருகே தரையில் சம்மணம் போட்டு அமர்ந்து கொண்டு ...
"ஏன் வேலை இல்ல ஏலியன் சார், உலகத்துல ஆணா பொறந்தா கெத்தா இருக்கலாம்னு உலகம் சொல்லும் ஆனா ரியாலிட்டி அது இல்ல... 20 வயசு வரைக்கும் நல்லா படிக்கணும் , அதுக்கு பிறகு அவன் தலையில தான் அத்தனை பாரமும் குடும்பத்தை குழந்தையை தனக்கு வந்தவளை இப்படி எல்லாத்தையும் சுமக்கணும்..... என்னைக்காவது ஓய்வு எடுத்திடலாம்னு நினைப்பான்.... ஆனா , அவனோட ஓய்வு எடுக்கிற காலமே முடிஞ்சு போகும் , கடைசியில சமாதியில போய் தான் ஓய்வெடுக்கணும் .... அதுவே பொம்பளையா பொறந்தா, குடும்பத்து மானத்தை காப்பாத்து , போற இடத்து மானத்தை காப்பாத்து அவங்க மனசு கோணாம பாத்துக்கோ , இவங்க மனசு கோணமா பாத்துக்க , பிள்ளைகளை வளர்க்கறது உன் பொறுப்பு, மாமியார் மாமனார் பார்த்துக்கிற கடமை .., புருஷனை சந்தோஷமா வச்சுக்குறது உன்னோட லட்சியம்னு அத்தனையும் நம்ம மேல போட்டுருவாங்க.... இது பின்னாடி ஓடி ஓடி நமக்கென்ன தேவை. நமக்கு என்ன வேணும்னே எல்லாம் மறந்து போகும்.... வேற என்ன புருஷன் படுத்திருக்கிற கல்லறைக்கு பக்கத்துல ஜோடியா அங்க மட்டும்தான் ஏலியன் படுக்க முடியும் .... இன்னும் இருக்கு தலையணையில் தலை சாய்த்து படுத்திருந்தவன் எப்போது தூங்கினான் என்றே தெரியவில்லை இவள் லபோ லபோ என்று உலக பிரச்சினையை பேசிக் கொண்டிருக்க.... அவள் தாலாட்டுப் பாட்டில் நீல் நல்ல நித்திரைக்கு போயிருந்தான்....
வாழ்க்கையில் முதல்முறையாக குறட்டை விட்டு நீல் தூங்குகிறான் என்று சொன்னால் நம்பவா போகிறான்...
என்ன இவரு முன்னுரைக்கே இப்படி தூங்கிட்டாரு, இன்னும் நிறைய இருக்கே ... யார்கிட்ட சொல்றது சரி ஒத்தையா புலம்புவோம்" என்று அவள் புலம்பலும் ஓயவில்லை , அவன் தூக்கமும் களையவில்லை.... நீல் சுருண்டு படுத்து நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தான்... சிறிது நேரத்தில் நீல் படுத்திருந்த படுக்கை மீது அங்கை தலையை மட்டும் வைத்தாள்.... தூக்கம் கண்ணை சுழட்ட ...
ப்ச் பார்க்கவா போறார் படுத்துப்போம்"... கொஞ்ச நேரத்தில் எப்போது எழும்பி மஞ்சத்தின் மீது படுத்தால் என்றே தெரியாமல் , அவனுக்கு அருகிலேயே படுத்துக்கொள்ள.... திரும்பிப் படுத்த நீல் தலையணை என்று நினைத்து, தன் அருகில் படுத்திருந்த அங்கையை அருகில் இழுத்து தன் நெஞ்சோடு அணைத்து பிடித்து , அவள் மீது கால் கைகளை வேறு போட்டுக் கொண்டு தூக்கத்தை தொடர ஆரம்பித்து விட்டான்.... ரெண்டு மணிநேர தூக்கமே சடுகுடு ஆடும் ... பல மணிநேரமாக அவளை அணைத்து கதகதப்பாக அசைவு இல்லாது தூங்கி கொண்டிருந்தான்
ஏற்கனவே இவள் கும்பகர்ணி சொல்லவா வேண்டும் அவன் குறட்டைக்கு, இவள் எதிர்பாட்டு பாட விடியலே வந்து விட்டது ....
அதிசயமாக அவனுக்கு முன்னால் அங்கே முழித்து விட்டாள்
"என்ன இது எங்கேயோ அமுங்கி கிடக்கிற மாதிரி இருக்கு ... மெட்டலாண்டி ராத்திரியே கொன்னு குழியில போட்டுட்டானா ? இருட்டா வேற இருக்கு... வலிக்காம செத்துட்டேனா? அவள் கண்ணை திறக்க அவன் கருப்பு டி ஷர்ட் மட்டும் தெரிய ...
போச்சு வாழ்க்கையில் ஒன்னுமே பார்க்காமலேயே செத்துப்போக போறேன் ... இந்த ரொமான்ஸ் ரொமான்ஸ்ன்னு ஒன்னு சொல்லுவாங்க அதுல மொத எழுத்தை கூட பார்க்கலையே... இப்படி மெட்டலாண்டி கையால போய் சேர்ந்துட்டேனே... இந்த சாபம் எல்லாம் அவனை சும்மா விடாது.... நாலு பொண்டாட்டி கட்டி., நாலு பேரும் சக்களத்தி சண்டை போட்டு சாகணும்... இவன் மண்டைய பிச்சிக்கிட்டு இருக்கவும் முடியாம, சாகவும் முடியாம அலையனும் இது என்னோட சாபம் !! நாசமா போக நாலு பொண்டாட்டியோட மிதி பட்டு சாக என்ற பல சாபம் போட ...இவள் புலம்பலில் நீல் நெளிய ...அங்கை மெல்ல தலையை தூக்கி பார்க்க இருவர் உதடு இணையும் தூரத்தில் நின்றது... அவன் முகமும் இவள் முகமும் அருகருகே உரசியது...
"எம்மாடி இந்த பேயனா, எப்ப இவன்கிட்ட வந்து படுத்தேன்னு தெரியலையே" என்று அங்கை அவனை விட்டு நகர போக, அவன் கைகள் அவளை நகர விடாது இடையில் போட்டு அழுத்தி வைத்திருக்க... போதாக்குறைக்கு அவன் கால்கள் வேறு பீரங்கி போல , அவள் தொடை மீது கிடக்க... எப்படியோ அவனை உருட்டி பிரட்டி நகட்டி போட்டுவிட்டு இவள் நகர்ந்தாள்....
ஒரு ஆணின் அருகாமை என்ன செய்யும் ? ஒரு மயிரும் செய்யாது!! காதல் இல்லாமல் மனதில் சுமக்காமல் , அல்லது காமமாவது கொண்டிருக்க வேண்டும் ... ஆணின் அருகாமையோ , பெண்ணின் அருகாமையோ ஆசையை கொடுக்க ... இல்லாத பட்சத்தில் வெறும் நிழல் தீண்டி போவது போல தான் எந்த உணர்வையும் அது பிரதிபலிக்காது... அப்படித்தான் அவளுக்கும் அவனுக்கும் இருந்தது ..
இங்கே பார்த்தசாரதி எப்போதும் போல பவ்யமாக அறையில் ஓரத்தில் உட்கார்ந்திருந்தான்
குளியல் அறைக்குள் லைக்கா போய் குளித்துவிட்டு மெல்லிய வஸ்திரம் ஒன்றைப் போட்டுக் கொண்டு வந்து படுக்கையில் உட்கார்ந்தவள் மருந்தை எடுத்து தன் காயத்தின் மீது தடவிக் கொண்டிருக்க.... அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் பார்த்தசாரதி...
இவளை நம்பி தூங்கி தலையில் கல்லை தூக்கி போட்டுட்டா ... எனவே அவள் இருக்கும் பொழுது தூங்கவே பயப்படுவான் .... அவள் தூங்கிய பிறகு தூங்குவான்... அவள் முழிப்பதற்குள் எழும்பி விடுவான் ... அவள் வெளியே சென்ற பிறகு அப்பாடா என்று நிம்மதியாக படுத்து தூங்குவான்
லைக்கா வந்து படுக்கையில் படுத்தவள் , உறங்க முடியாமல் உருண்டு கொண்டிருந்தாள் .... என்னதான் ஏலியனாக இருந்தாலும் இருப்பது ரத்தமும் சதையும் தானே... காயம் வலிக்க தானே செய்யும் ....
காயம் பட்ட கைகள் உளைச்சல் எடுக்க .. அவள் தூங்க முடியாமல் கிடக்க... மெல்லிய மயிலிறகு போன்ற கை வருடலில் அறையில் கிடந்த விளக்கை லைக்கா எரிய விட... அவள் அருகே பார்த்தசாரதி தான் நின்று கொண்டிருந்தான்.... அவன் கைகள் தான் அவள் காயத்தை வருடிக் கொண்டிருந்தது
ஏய் என்ன பண்ற என்று சற்று தடுமாறி அவள் எழும்பி அமர
"இல்ல பாத்துண்டே இருந்தேன் வலியில தூக்கம் வராம பொறண்டுண்டே இருக்கேள்... காலையிலிருந்து ராத்திரி வரைக்கும் ஓடிட்டே இருக்கிற பொண்ணு... எப்படி தூங்குற ரெண்டு மணி நேரமும் , தூங்காம வலியில உருண்டா நாளைக்கு காலையில எப்படி வேலை செய்வேள்.. அதான் கொஞ்சம் தடவி விட்டா உங்களுக்கு எதமா இருக்குமேன்னு தடவ நினைச்சேன்.. தப்பா நினைக்காதேள்... நீங்க கண்ண மூடி தூங்குங்க..... நான் தடவிட்டு இருக்கேன் என்றவனை ஒரு நொடி அழுத்தமாக பார்த்தவள்... சட்டென தன் மீது அவன் வைத்திருந்த கையை தட்டி விட்டுவிட்டு
எனக்கு இந்த கரிசனை எல்லாம் வேண்டாம் உன்னால் என் கூட படுக்க முடியுமா? இப்போவே இங்கேயே என்னோட தேவையை நிறைவேத்த முடியுமா என்றதும் அவன் கைகள் விலகி விட...
"முடியாது இல்ல போய் படு
இல்ல
போக போறியா இல்லை வேற வேலை பார்க்க வைக்கவா???...
ம்ஹும் என்று சாரதி ஓடி விட...
"வந்த வேலையை தவிர மத்த எல்லாம் செய்ய வேண்டியது யாருக்கு வேணும் இவன் உதவி ... என்றவள் வலியில் தூங்காது கிடந்தாளா , இல்லை தூங்க முடியாத அளவு ஏதோ ஒரு மனச்சிக்கலில் மாட்டி கொண்டாளா புத்தகத்தை தலைகீழாக வைத்து புரட்டி கொண்டிருந்த சாரதியை பத்து முறையேனும் பார்த்து விட்டாள்... அவனும் அவளை சட்டென தலையை தூக்கி பார்த்து விட .... முகத்தை திருப்பி கொண்டாள்....
விருப்பமின்மை எல்லாம் வெறுப்பாய் மாறுவதில்லை, பிடித்தம் எல்லாம் காதலாக மாறுவதும் இல்லை....