எஃகில் கலந்த தளவம் 6
Egg6
6 எஃகில் கலந்த தளவம் !!
நீல் என்னோட காயம் சிறுசுதான் இதுக்காக எல்லாம் பூமிக்கு போகாம மறுபடியும் நம்ம இடத்துக்கு போகணும்னு அவசியம் இல்ல..
நீ செத்தா எனக்கு என்ன வந்துச்சு ? இப்போ இருக்கிற மூட்ல நான் நினைச்சது செய்ய முடியாது அதான் ரிட்டர்ன் ஆகுறேன்... யாருக்காவும் யாரும் பரிதாபம் பட மாட்டார்கள் இதுதான் அவர்கள் ....
"பட் நீல், நம்ம லீட் சொன்ன வேலையை முடிச்சுதான் ஆகணும் .... நாடுகளுக்கும் நாடுகளுக்கும் இடையே கலவரத்தை உண்டாக்கணும்... பஞ்சம் வர வைக்கணும்.... மனுஷன் பதறிக்கிட்டே இருக்கணும் ... வாழ்வா சாவா நிலைமையில எப்பவும் உலகத்தோட ஏதாவது ஒரு பகுதி தடுமாறிக்கிட்டே இருக்கணும்... இயற்கை பேரழிவுகள் கொண்டு வந்து உலக மக்கள் தொகையை குறைக்கணும் ... ஆனா இன்னொரு பகுதி இது எதையுமே கண்டுக்காம செல்போனே உலகம்னு இன்ஸ்ட்ரா மோகத்துல அடிச்சுகிட்டு சாகணும் ......
"அதான் நினைச்ச படி எல்லாம் செய்ய நீயும் நானும் இருக்கோமே, பார்த்த தானே இன்ஸ்ட்ரா மோகம் நாட்டின் தலைவனையே உருவாக்க ஆர்மபிச்சிடுச்சே ஹாஹா என்று சிரித்தவன்
"அதனால தான தமிழ்நாட்டு பொண்ண தூக்கினேன்... நாம நினைச்சது எல்லாம் ஈசியா நடக்கும்னு நினைச்சேன் "என்று அங்கை பக்கம் திரும்பினான்... மேஜை அருகே பார்த்தா அங்கை வாயை பொத்தி வைத்திருக்க அவள் வாயை பொத்தியதும், ஆளு பேட்டரி உருவிய கார் பொம்மை ஆகி போனாளோ? சோர்வாகி போய் தூங்கி கொண்டு இருந்தாள்...
ம்ம் பயம்காட்டி வேலையை சாதிக்க நினைச்சேன் பட் அந்த அம்மாஞ்சி அதுக்கு கூட சரிபட்டு வரல என்று லைக்கா இன்னொரு பக்கம் தூங்கி தூங்கி விழுந்த பார்த்தசாரதியை அலுப்பாக பார்த்தாள்...
"இன்னும் நமக்கு அவகாசம் இல்ல நீல், உலகத்தை நம்ம கைக்குள்ள கொண்டு வந்தே ஆகணும் , அவங்க நடமாடும் அரக்கர்கள் ஆகி பாசம் அன்பு நேசம் இதையெல்லாம் காசுக்கு ஆசைக்கு வித்து பேயா மாறி நிக்கணும், அப்போதான நாம நினைச்ச மாதிரி உலகத்தை ஆட்டி படைக்க முடியும் ...
ம்ம்
"இதெல்லாம் நடந்தா தான் நாம அந்த பூமிக்குள்ள சக்கரவர்த்திகளா காலடி எடுத்து வைக்க முடியும்.... எத்தனை நாளைக்கு ஆக்சிஜனை சேகரிச்சு வச்சு நம்ம பூமிக்கு உயிர் கொடுக்க முடியும்.... எத்தனை நாளைக்கு காத்துல கந்தகமில்லாமல் நம்மளால வாழ முடியும் .... எத்தனை நாளைக்கு உணவை பூமியில இருந்து எடுத்துட்டு போக முடியும் .... ஞானத்துல பெருகி இருந்தாலும் தேவைகளை அடைய குறுகி நிக்கிறோம் நீல் .... எல்லாத்துக்கும் நாம இந்த உலகத்தை சார்ந்து இருக்கோம் ,ப்ச் அவ்வளவு ஏன் குழந்தை பெத்துக்க கூட உலக ஜந்துகளை தான் தேடி வந்து இருக்கோம்...
மனிதனுக்கு அவர்கள் தேவை அவசியம் இல்லை ஆனால் அவர்கள் வாழ பூமியின் ஒத்தாசை தேவை , நீரும் , மழையும் சுவாசிக்க காற்றும் இல்லாத சுடுகாட்டு தேசம் அவர்களுடையது... அதை இங்கிருந்து கொண்டு போய் நிறைக்கின்றனர்...
"நம்ம சேமித்து வைத்திருக்கிற ஆக்சிஜன் உயிர் வாழ்வதற்கான எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா குறைஞ்சுகிட்டு போகுது, அதனாலேயே நம்மளோட ஜனம் கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுகிட்டு வருது... இப்போ நம்ம போராடலைன்னா , இனிமே போராட கூட நம்ம கிட்ட ஆள் இருக்காது.... நம்ம மக்கள் தொகையில இறக்கம் வரக்கூடாதுன்னுதான் இந்த வேலையில நாம இறங்கி இருக்கோம்... அதை செஞ்சே தீரணும் நீல் .... தேச பக்தி கண்ணை மறைத்தது... அது அவர்கள் வாழும் தேசமே!! அதை உருவாக்கும் பொறுப்பு துணிய வைத்தது...
லைக்கா இந்த எக்ஸ்பிரிமெண்ட் மட்டும் சரியாயிடுச்சுன்னு வச்சுக்கோ அப்புறம் நம்ம இடமும் பெருகிடும்... சரிக்கு சமமா போட்டி போடுற அளவுக்கு நம்மளோட ஆட்களும் பெருகிடுவாங்க..
ம்ம் ஆனா நாம டைமை கடத்துறோமோன்னு தோணுது நீல் "
ஒரு வாரம் டைம் எடுத்துப்போம் லைக்கா , நோ ஆர் எஸ் தெரிஞ்சிடும்..."
இதுக ஒப்பேறும்னு தோணல ஏன் வேற ரெண்டு பேரை தூக்கிட்டு வர கூடாது....நீல் புருவத்தை வளைத்து யோசனை செய்த படி
குட் ஐடியா பட் டீன் ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்பார் "
ப்ச் அது வேற இருக்கோ ?
அதுவே செத்துட்டா கால சூழ்நிலை ஒத்துக்காம செத்துட்டாங்கன்னு சொல்லி முடிச்சிடலாம், அப்பறம் வேணும்னா மறுபடியும் ரெண்டு பேரை எடுத்துட்டு வரலாம் ....
ஓகே பார்ப்போம் ....
கலவியும் ஒரு பணி என்று நினைத்தனர் இருவரும்... கலவி ஆயக் கலைகளில் ஒன்று என்று தெரியாது போனதே...
அங்கை ஊரு வந்துடுச்சு எழும்பு வண்டியை நிறுத்திட்டாங்க என்று நிறுத்தப்பட்ட வாகனத்தில் இருந்து லைக்காவும் நீலும் ஏதோ பேசிக்கொண்டு அவர்கள் நோக்கி நடக்க .... பார்த்தசாரதி முதலில் எழும்பி தூங்கும் அங்காவை எழுப்ப பல மணி நேரமாக போராடிக் கொண்டிருந்தான்
ப்ச் ஏன்டா நுள்ளுன "என்று அவன் கிள்ளிய கையை தடவி கொண்டே கண்ணை திறந்தாள்...
ஊரு வந்திடுச்சு அங்கா .. "
இது என்ன வேற்று கிரகமா, வந்தவாசியா?? வீடும் மார்க்கெட்டும் போல அரை மணி நேரத்துல போறாங்க வர்றாங்க என்ற அங்கா வாயை மீண்டும் பொத்திக் கொண்டவன்
"அம்மாடி ராசாத்தி நீ கொஞ்ச நேரம் இந்த வாயை மூடு மறுபடியும் உன் சத்தத்தை அவன் கேட்டு மிஸ் பண்ணுன அத்தனை குண்டையும் நம்ம தொண்டையில இறக்கிடாம ..
பேசல என்பது போல அவள் கண்ணை சிமிட்ட.... லைக்கா வழியில் உட்கார்ந்திருந்த சாரதி காலை பூட்ஸ் காலால் நகட்டி விட்டு ...
இன்னைக்கு தப்பிச்சு இருக்கீங்க, இன்னும் எத்தனை நாள் தப்பிக்கிறீங்கன்னு பார்க்கிறேன் கெட் அவுட்" என்று லைக்கா சொல்லிவிட்டு கீழே இறங்க.... அவளுக்கு பின்னால் நீல் இறங்க போக பார்த்தசாரதி எழும்பும் அவசரத்தில் அவள் வாயை விட்டு விட ...
ஏலியன் சார் என்று நீலை அங்கை கத்தி அழைக்க பார்த்தசாரதி தலையில் அடித்துக் கொண்டு அவளை அமுக்கும் முன்பாக.... நீல் முன்னால் வந்து நின்றவள்
"சார் எப்படியும் நம்ம ரூமுக்கு தானே போறீங்க, போகும்போது இந்த ஹீரோ எல்லாம் ஹீரோயினை புல்லுக்கட்டு மாதிரி தூக்கி தோள்ல போட்டுக்கிட்டு ராஜா மாதிரி நடந்தார்ன்னு சொல்லுவாங்கல்ல அந்த மாதிரி கொண்டு போய் நம்ம ரூம்ல லேண்ட் பண்றீங்களா? ரொம்ப தூக்க கலக்கமா இருக்கு... தூக்கத்துல வேற எழுப்பி விட்டுட்டானா குமட்டிட்டு வருது ...
நீல் அவளை மேலும் கீழும் முறைத்துக் கொண்டே எல்லாரும் செத்தா மேல போவாங்க, நீ செத்து கீழ போக போறேன்னு நினைக்கிறேன்.. உனக்கு சாவு இந்த வாயால தான் எழுதி வச்சுக்க...." என்று பல்லுக்குள் வார்த்தையை கடித்து எரிச்சலில் துப்பி விட்டு நீல் போனான் ...
இரவும் வந்தது எப்போதும் போல அங்கை படுக்கை மீது பாடலும் நானே மியூசிக்கும் நானே என்று
இஞ்சி இடுப்பழகா மஞ்சை சிவப்பழகா சுமுக்கு ஜக்க சுமுக்கு ஜக்கா என்று பாடியபடி கிடக்க கதவு திறக்கவும்
"மெட்டலாண்டி வந்துட்டான் , பெட்டு மேல தூங்க விட மாட்டைக்கானே, இவன் மட்டும் புசு புசு பெட் மேல தூங்குறான் எனக்கு மட்டும் தரையாம் ..எழுதுங்கள் இவன் கல்லறையில் இவன் இரக்கம் இல்லாத ஏலியன் என்று , பாடுங்கள் என் கல்லறையில் இவள் பைத்தியக்காரிஇஇஇஇஇஇஇஇஇஇ "கையில் வண்ண குடுவையில் லம்பி கொண்டு அவளை நோக்கி உள்ளே வந்த நீலை கண்டு சற்று பீதியாக பார்த்தபடி
இவன் சும்மா இருந்தாலே சமாளிக்க முடியாதே குவாட்டரை வேற போட்டுட்டு வர்றான்... நம்ம ஊர்ல தான் டாஸ்மார்க் திறந்து வச்சி குடும்பத்தை கெடுக்கிறானுகன்னு பார்த்தா , இங்கேயும் இந்த இடர்பாடு இருக்கா எப்படி சமாளிக்க போற அங்கா ... பயப்படாத பயப்படாத பார்த்துக்கலாம் என்றவள் கண்கள் கூர்மையான பொருள் எல்லாம் எங்கே எங்கே இருக்கு என்பதை ஸ்கேன் செய்து கொண்டது ...
தன்னை மறக்கச் செய்யும் காதலாக இருந்தாலும் சரி பாணமாக இருந்தாலும் சரி, அதை இங்கே உபயோகப்படுத்தக் கூடாது என்பது சட்டம் ... அதை போட்டதும் அவன் தான் ...
எந்த போதையும் இந்த நாட்டிற்குள் நுழையக்கூடாது தனக்கென்று ஆசைகள் விருப்பங்கள் சுய தேவைகள் இருக்கவே கூடாது... எல்லாருக்கும் எல்லாம் சமம்!! அவர்களுக்கு தேவையானது எல்லாம் சரியாக பங்கு பிரித்து கொடுக்கப்படும்... உயிர் வாழ தேவையான காற்று, உணவு, இருப்பிடம் அத்தனையும் ஒன்று போல அத்தனை பேருக்கும் கிடைக்கும்.... சட்டம் வகுத்தவனே சட்டத்தை முதன்முதல் தளர்த்தினான் ... காரணம், இவளை ஆசையில் அணைக்க முடியவில்லை என்றாலும் போதையில் அணைத்து விடலாம் என்ற நம்பிக்கை..
தலையணையை தூக்கி கொண்டு படுக்கை விட்டு இறங்கி வம்பு வளர்க்காது அங்கை நடக்க , அவளை மறைத்தார் போல வந்து நீல் நின்றான்...
"எ...ன்... ன? அவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.. அவனும் அவளைத்தான் பார்த்தான் நைந்து போன சேலை, தீபாவளி ராக்கெட் போல பறந்து நின்ற முடி, நடு இரவு ஐஸ்வர்யாராய் கூட மினி பேயாகத்தான் தெரியும் ...
ப்ச் சலித்தவன் மீண்டும் அவளை பார்த்தபடி நீல் தன் பருத்தி ஆடை மீது கிடந்த வெள்ளி ஆடையை கழட்டி போட்டவன் அவளை முன்னேற விடாது நெருங்க
"எ....ன்ன ஏலியன் சார், உங்க பெட் அந்த பக்கம் அவள் கால்கள் பின்னே நகர இவன் கால் முன்னே நகர ....
"என்ன இவன் இப்படி பார்த்து வைக்கிறான், பாவம் பாத்து உயிருக்கு கெடு கொடுக்கலாம்னு பார்த்தா இவன் இன்னைக்கே சாவேன்னு என் கோபம் தெரியாம வந்து குறுக்கால நிக்கானே"
"எதுனாலும் பேசி தீர்த்துக்இஇஇஇஇஇஇஇஇஇஇ அவள் பேச குவித்த உதட்டை தன் ரெட்டை விரலில் இழுத்து பிடித்து நிறுத்திய நீல் ....
"பே.....சா.....தடி என்றான் தன் உதட்டு அருகே அவள் உதட்டை இழுத்து கொண்டு வந்து அவளை நெருக்கமாக நிற்க விட்டபடி...
"பே....சல ப்ளீஸ் விடுங்க.... என்றவள் உதட்டோடு உதட்டை இணைக்க அருகே கொண்டு போனவன் செயலில் இவள் பின் இருந்த சுவரில் இடித்து நிற்க.... நெஞ்சு முட்டும் தூரத்தில் வேற்றவன், அணைக்கும் தூரத்தில் அவள் , ஆனால் தீ பற்ற வில்லையே .....
ச்சைக் என்று அவள் உதட்டை விட்டவன்
"போதையில கூட உன்ன தொட பிடிக்கல .... இன்னைக்கு ராத்திரி சந்தோசமா தூங்கிக்க ஏன்னா நாளைக்கு நீ உயிரோட இருக்க மாட்ட ஓசியா தந்தா கூட உன்னை எவனும் தொட மாட்டான், வேஸ்ட் ப்ராடெக்ட் தள்ளு "என்று அவளை உதறி விட்டு, புது சரக்கில் தலை வலிக்க நீல் அப்படியே போய் படுக்கையில் விழ
"ம்க்கும் இந்த மெட்டலாண்டிக்கு மன்மதன்னு நினைப்பு , ஜிகினா மண்டையும் சிகப்பு கண்ணும் வத்தக்குழம்பு வத்துன முகரையும்னு இவனைத்தான் பார்க்க சகிக்கல, என்ன சொல்ல வந்துட்டான் என்று முணுமுணுத்து கொண்டே போய் படுக்க போனவள்
உவாக் இஇஇஇஇஇஇஇ என்று தலையை பிடித்து கொண்டு படுக்கை விட்டு எழும்பி அமர்ந்து உள்ளேயும் போகாது வெளியேவும் போகாது குமட்டிய சரகில் நீல் நெஞ்சை தடவ....
பக்கத்துல போனா குமட்டுல குத்துவானே போகவா வேண்டாமா.. சோறு போடலைன்னாலும் மூணு வேளை பழம் போட்டு வளர்த்தவன், என்ன ஏதுன்னு பார்ப்போமா?
உவாக்இஇஇஇஇ என்ற அடுத்த குமட்டலில் அவன் அருகே நின்றாள் அன்புக்காரி!!
சீசீ தள்ளி போ என்ன தொடாத அவன் நெஞ்சை தடவிய அங்கை பிஞ்சு விரலை தள்ளிவிட்டான்
அய்யோ சார் என்ன பண்ணுது? .... எதுவும் உதவி பண்ணவா "
உன் உதவி எனக்கு தேவையில்ல உவாக் என்று நீல் குளியலறை நோக்கி போனவனும் மனித குலத்தை ஒத்தவன் தானே இயலாமை அவனுக்கும் உண்டே ....
"சார் இந்தாங்க இதை குடிங்க "என்று நீரை திறந்து அவன் முன்னே நீட்ட அவன் அதை வாங்காது போய் முகத்தை நீரில் கழுவி துடைக்க
"ஒருத்தன் உதவி இல்லாம ஒருத்தர் வாழணும்னா நாம கடவுளா இருக்கணும் ஏலியன் சார் ... என்ன பிடிக்கலைன்னா பிடிக்காமலே இருந்துட்டு போகட்டும் .... என்ன கொல்லணும்னா கொல்லுங்க ஆனா ஒரு உயிர் துடிக்கிறதை பார்த்துட்டு கடந்த போற எஃகு இதயம் எனக்கு கிடையாது... இந்தாங்க பிடிங்க "என்று நீரை அவன் கைக்குள் திணித்து விட்டு பாயை விரித்து படுத்து கொண்டாள்...
கொல்ல துடிக்கும் அவனுக்கும் அன்பை கொடுக்க அவளால் தான் முடியும் ...