எஃகில் கலந்த தளவம் 5
Egg5
5 எஃகில் கலந்த தளவம் !!
இரண்டு கலர் காண்டாமிருகங்கள் கையில் கார சட்னி ஆக போகிறோம் என்ற எண்ணம் சற்றும் இல்லாது தூக்கத்தில் கனவு கண்டாளோ அவள் உதட்டை குவித்து கிளுக் என்று ஒரு சிரிப்பு சிரிக்க அவள் வெட்டி வைத்த கோவைப்பழ உதட்டில் அத்தனை அழகையும் குவித்து விட , ஆணவன் அதன் அழகில் தரைமட்டம் தானே ஆக வேண்டும்... அவனோ எரிச்சல் முட்டி போன சிகப்பு நிற கண்ணோடு அவளை பார்த்தான் ... சிரிக்க தெரியா எஃகுகளுக்கு சிரிக்கும் மாந்தர்கள் கோமாளியாகத்தான் தெரிந்தனர் ...
"நீல் எவ்வளவு தைரியம் இருக்கணும் .. கொஞ்சம் கூட பயமே இல்லாம இங்க வந்து ஒளிஞ்சி இருக்காங்கன்னா, இவங்க சாதாரண பட்டவங்க கிடையாது..இதுகளை இப்படியே விட்டோம் உனக்கும் எனக்கும் இங்க இருக்கிற இமேஜ், பவர் எல்லாம் பீஸ் பீஸா போயிடும்... "லைக்கா பல்லை நரநரவென கடித்து துப்பாக்கியை அய்யற்கன்னி நோக்கி குறி வைக்க, அவள் மணிக்கட்டை அழுத்தி பிடித்த நீல்
எதுக்கு செத்தோம்னு தெரியாமலேயே சாகக்கூடாது ... நம்ம கண்ணுலையே மண்ணை தூவிட்டு வந்த அவங்க சாவு அவ்வளவு ஈஸியா இருக்கக் கூடாது லைக்கா...
ம்ம் , எஸ் புரியுது என்றவள் தன் காலால் சாரதியின் காலை எட்டி உதைக்க ... அதே சமயம் நீல் தன் கால் கொண்டு அங்கை காலை வலிக்க அழுத்த
எந்த பொறம்போக்கு நாய்டா என் கால்ல மிதிக்கிறது ... என்று அங்கை எழும்பி அமர
பகவானே கால்ல ஆட்டோ ஏறின மாதிரி வலிக்கிறதே என்று இருவரும் அலறிக்கொண்டு எழும்பி அமர... மேல இருந்த மேஜை இருவர் மண்டையையும் ரணமாக்க தலையை தடவிக் கொண்டே அண்ணாந்து பார்க்க .. துப்பாக்கியை பிடித்துக்கொண்டு நீல் ஒரு பக்கம், லைக்கா ஒரு பக்கம் அவர்களை குறி பார்த்தபடி நிற்க...
"எம்மே இவனா "
பகவானே இவளா? நெஞ்சை பிடித்துக் கொண்டு இருவரும் பயத்தில் உறைந்து போய் பார்த்தசாரதி அங்கயர்கன்னியை ஸ்லோமோஷனில் திரும்பிப் பார்த்து ..
சொன்னேன் கேட்டியா இப்ப பாரு நல்ல மாட்டிட்டோம் , இனி கருமாதி பண்ண கூட நம்மளோட உடம்புல , ஒரு பாகம் இருக்காதுன்னு நினைக்கிறேன் ... இருவரும் உருண்டு தவழ்ந்து வெளியே வந்து அவர்கள் முன்னே எழும்பி நிற்க...
ப்ச் நான் பார்த்துக்கிறேன் என்று பார்த்த சாரதி கையை அழுத்தி தைரியம் சொன்னவள் கோவத்தில் முகம் சிவந்து நின்ற நீல் அருகே ஒரு ஸ்டெப் வைத்து முன்னே வந்தவள்
"ஏலியன் சார் உங்க கோவம் நியாயமானதுதான் பெட்ரோல் எல்லாம் போட்டு பறக்கும் தட்டை பூமி வரைக்கும் கொண்டு வந்து இறக்கி, எங்களை கடத்திட்டு வந்து இருக்கீங்க .... இப்படி சொல்லாம கொள்ளாம சட்டுபுட்டுன்னு கெளம்பி போறது ரொம்ப தப்புதான்... அறியாத பிள்ளைங்க தெரியாம தப்பு செஞ்சுட்டோம், ஒரு தடவை மன்னிக்க கூடாதா?? " என்று தோப்புக்கரணம் போடுவது போல் அங்கை கீழே குனிந்து உட்கார அவள் தலையைத் தாண்டி தோட்டா பறந்து போகவும் சற்று மிரண்டு போனவள் ...
இப்ப என்ன நடந்து போச்சு , அதான் கோழி அமுக்கிற மாதிரி எங்க ரெண்டு பேரையும் அமுக்கிட்டீங்களே... கொண்டு போய் நாலு நாளைக்கு , அஞ்சு நாள் கூட வச்சி கொடுமை படுத்துங்க... நாங்க தப்பாவே நினைக்க மாட்டோம் இல்லடா பார்த்தா.... "
ஏய்இஇஇஇஇஇஇஇஇஇஇஇஇ வாயை மூடு என்று கத்திய நீல் சத்தத்தில்
எப்ப பார்த்தாலும் அணுகுண்டு முழுங்கினவன் போலவே கத்தி வைக்கிறான் எப்பா காது கொய்ங்குது என்று மனதில் நினைத்தபடி
முகத்தை பாவமா வச்சிக்கடா பார்த்தா பாவம் பார்த்து விட்டிருவாங்க என்று கிசுகிசுப்பாக சாரதிக்கு ஐடியா வேறு கொடுத்தாள்
அவன் கட்டளைக்கு நில் என்றால் நிற்க வேண்டும் போ என்றால் போக வேண்டும் இதுதான் அவர்கள் கிரகத்தில் அவனுக்கான தனி கெத்து அவன் அமைதி என்று சட்டம் போட்ட பின்னும் வளவளத்த அவள் அவனை அவமரியாதை செய்த உணர்வு....
"நசநசன்னு காசுக்கு மேல எப்பவும் கத்திக்கிட்டே இருக்க, யூ டோன்ட் ஹவ் ஏ சென்ஸ்.... "
'அது இருக்கிறதுனாலதான்டா உன்னையை கெட்டவார்த்தை போட்டு திட்டாம சும்மா இருக்கேன் ... கடத்தின உன்னை கொஞ்சிக்கிட்டு இருக்கேன் எல்லாம் என் நேரம் .... பம்மிட்டு கிடக்கேன்...வாய் இருக்கிறது பேசத்தான பேசாத பேசாதன்னு கத்துறான் என்று அங்கா முணுமுணுக்க ....
சாரி மிஸ்டர் ஏலியன் ... ஆனா பேசினாதான நாங்க ஏன் இப்படி செஞ்சோம்னு சொல்ல முடியும் அப்பறம் மன்னிப்பு ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ குவித்த அவள் உதட்டின் உள்ளே நீல் துப்பாக்கி நுனி போய்விட
அய்யய்யோ அங்கா ஆஆஆஆஆஆ பார்த்தா பதறி அவளை நோக்கி திரும்ப போக... லைக்கா வைத்திருந்த துப்பாக்கி அவன் தலையில் அழுத்தப்பட... தொண்டை ஏறி இறங்க இருவரும் நீலை பார்க்க ..
உன்னை பல தடவை சொல்லி இருக்கேன்... என் முன்னாடி பேசாதன்னு.... இன்னும் ஒரு வார்த்தை வந்துச்சு உன் வாயில அடுத்த குண்டு பாஞ்சுடும் காட் இட் என்று ட்ரிக்கரை நீல் அழுத்த
ம்ம் ம்ஹூம் அவள் சமத்தாக தலையாட்ட துப்பாக்கியை எடுத்த நீல் அவள் ஆடையில் அவள் எச்சிலை துடைக்க
வாயை மூடு அதை திறந்த செத்த ... ச்சைக் எங்க உள்ள கருமம்டா இது ... கீச் கீச்னு கத்தி எரிச்சலை கிளப்புது... இனிமே பேசு தொண்டைக்கு இலவச ஆபரேஷன் பண்ணிடுறேன் மூடு வாயை ...
ம்ம் தன் வாயை கை கொண்டு பொத்திக்கொண்டவள்
இனிமே பேசல சார் ஆனா இந்த ஒரு வாட்டியும் மன்னிக்க கூடாதா என்று கைக்குள்ளையே மீண்டும் பேச...
நீல் அவள பேச விடாத சுட்டு தள்ளிடு , மேல ஏதாவது காரணம் சொல்லிக்கலாம்.... லைக்காவுக்கும் தான் அவளை பிடிக்க வில்லை .. சிரிப்பு இன்தென அறியா உலகில் உள்ள மங்கை அவள் ... வேடிக்கை , அழுகை , சிரிப்பு, மகிழ்ச்சி நட்பு , காதல் இப்படி கலவையான அத்தனையும் கொண்ட இந்த மனிதர்கள் போல தான் இல்லை என்று பொறாமை கொண்டாளோ? ஆனால் அவள் கண்ணில் அந்த பொறாமை பொட்டளவு தெரிந்ததே... என்னிடம் இல்லாத அனைத்தும் அவளிடம் இருக்கிறதே என்ற பொறாமை இருப்பது அப்பட்டமாக தெரிந்தது
"ஆத்தாடி வெள்ளை குந்தாணி கொல்ல பார்க்கிறாளே அவன் சும்மா இருந்தாலும் இவ உசுப்பி விடுறாளே என்று பதறிய அங்கை
ஏலியன் சார் நீங்க எவ்வளவு பெரிய ஆளு... வேற்று கிரகத்தோட கிங் , போயும் போயும் ஒரு பொண்ண உங்க கையால கொல்லலாமா? அது உங்க வீரத்துக்கு அழகா? நீங்க சிங்கம் மாதிரி நான் சிறு எறும்பு மாதிரி நீங்க என்ன கொன்னா தகுமா உங்கள் வீரத்துக்கு இழுக்கு... அதனால...
ஆமால்ல , உன்ன கொன்னா தப்புதான்.... ஆனா அவனை கொல்லலாம்ல என்றவன் துப்பாக்கி பார்த்தசாரதி நோக்கி நகர
அய்யோ பார்த்தா என்று பதறிப் போனவள் அவன் துப்பாக்கி குண்டு பாயும் முன் , ஓடிப்போய் நீலை முன்னோடு அணைத்து கொண்டு அவனையும் சேர்த்து இழுத்தபடி தரையில் சரிய... துப்பாக்கி குண்டு துளை தாண்டி சீறி பாய்ந்தது ....
ஷட்இஇஇஇஇஇ நீல் கீழே கிடக்க , அவன் மேல் அங்கை கிடக்க ... இவள் வந்து மோதியதில் துப்பாக்கி தோட்டா சற்று விலகி பார்த்தசாரதியின் அருகே நின்ற லைக்காவின் வலது கையை உரசி போக
ஆவ்ச் என்று லைக்கா சற்று வலியில் முனங்கி தரையில் சரிய போக , அவளை சட்டென பார்த்தசாரதி தாங்கி பிடித்துக் கொண்டான்..
அய்யய்யோ ரத்தம் போகுதே என்ற சாரதி குரலில் அங்கை நீலை விட்டு நகர போக.... அவன் கை அணைப்பில் அவள் கிடந்தாள்.... நீல் எஃகு நெஞ்சு மீது அவள் பஞ்சு முகம் மோதி இரும்பு இதயம் காயம் காணும் காலம் எப்போது வருமோ? அது இப்போது இல்லை என்பது போல... தன் மீது கிடந்த அவளை முகும் சுளித்து பார்த்த நீல் , சட்டென அவளை தூக்கி அருகே கிடாசியவன்
சீசீ இடியட் என்று தன் மீது பட்ட அவள் ஸ்பரிசத்தை கை வைத்து அழுத்தி அப்புறப்படுத்தியபடி நீல் எழும்பினான்....
பிறர் தன்னை யாராகவும் நினைத்து விட்டு போகட்டுமே ... நான் யார் என்று எனக்கு தெரிந்தால் போதுமே என்பது போலத்தான் அங்கையற்கன்னி ... அவன் நிராகரிப்பு வலிக்க அவள் என்ன அவன் காதலியா? அவன் முகம் சுளிக்க , அதை கண்டு இவள் முகம் கருக அவள் என்ன அவன் மனைவியா? உனக்கு பிடிக்கலைன்னா போவே என்றது போல ஒரு பார்வை பதிலாக கொடுத்து விட்டு..
சார் அவங்களுக்கு அடி பட்டிருக்கு பாவம் ரத்தம் போகுது ...
ப்ச் இங்க சாவு எல்லாம் சர்வ சாதாரணம் என்று நீல் மருந்து பெட்டியை எடுத்து லைக்கா அருகே வீசிவிட்டு தன் இடம் நோக்கி நடக்க
ச்சீ இதயம் இல்லாத பிறவிகள் தான் போல, கூடவே இருந்த ஒருத்தி ரத்த வெள்ளத்தில் கிடக்கிறாள் எப்படி போகிறான் என்று அங்கை ஆற்றாமை கொண்டு போகும் அவன் முதுகை வெறித்து பார்த்தபடி..
பார்த்தா அவங்களை தூக்கு , என்றதும் பார்த்தசாரதி லைக்காவை தூக்க போக .. அவனை கை நீட்டி தடுத்த லைக்கா ,
"எனக்கு யாரு உதவியும் தேவை இல்லை, உயிருக்கு பயந்த கோழையும் நான் இல்லை டோன்ட் டச் மீ" என்று லைக்கா கூறிவிட்டு மருந்து பெட்டியை எடுத்து அவளே கையில் துளை போட்டு காயத்தை சுத்தம் செய்து மருந்து போட... மனித ஜந்துக ரெண்டும் ஆ என்று வாயை பிளந்து அவள் அசாத்தியமான செயல்களை பார்த்தபடி நின்றனர் ....
"இப்போ புரியுது பார்த்தா இதுக ஏன் மனுசங்க போல பிள்ளை வேணும்னு கேட்கிறாங்கன்னு இவங்களுக்கு சதை வெறியும் இல்லை, அன்பு வெறியும் இல்லை.. இங்க கிடக்கிற கல்லும் மண்ணும் போல ஒரு வாழ்க்கை வாழ்றாங்க....
"இப்போ இந்த ஆராய்ச்சி ரொம்ப முக்கியமா அங்கா, அடுத்து நம்ம நிலமை என்னன்னு யோசிக்கவே பதறுது ....
"விடு அடுத்த ப்ளான் போடுவோம்
"ஏதே மறுபடியுமா?
"யானைக்கே அடி சறுக்கும் போது உனக்கும் எனக்கும் சறுக்காதா விடு விடு... , அடுத்த ப்ளான் சொதப்பாம போடுறேன்
"எம்மா தாயே உனக்கு கோடி கும்பிடு.. ஆளை விடு
"அப்போ பேர் வைக்க ரெடியாகு பார்த்தா
"ஹான் எதுக்கு ?
"பின்ன அவ பிள்ளை கொடுன்னு வந்து நிப்பாள்ல , நீ குடுத்து தான ஆகணும் ....
"அய்யய்யோ என்னால முடியாது , அவளும் அவ பார்வையும் எனக்கு பிடிக்கவே இல்லை ... அதுக்கு சாவே மேல் ...
தெரியுதுல்ல அப்போ நான் போடுற ப்ளான் எல்லாத்துக்கும் நீதான் சோதனை எலி, வா அப்படியே போய் ரெண்டு பேரும் என்ன பேசுறாங்கன்னு ஒட்டு கேட்போம்
அது தப்பு இல்லையா ?
நாலு பேருக்கு நல்லது செய்ய எதுவும் தப்பில்லை வந்து தொலை என்று பார்த்தசாரதி சட்டையை கொத்தாக இழுத்து கொண்டு போய் நீலும் லைக்காவும் இருக்கும் இடம் நோக்கி போனாள்....
கையில் காயத்தோடு சுழலும் சேரில் லைக்கா அமர்ந்து இருந்தாள்....
இது எப்படி சாத்தியம் !!??
ஏலியன் என்றால் கொய்யாக்காய் மண்டை கோணை மூஞ்சி, குடைமிளகாய் மூக்கு, பச்சை நிற மேனி , பளிங்காய் தோல், என்று ஒரு உருவ அமைப்பை ஏலியனுக்கு கொடுத்து வைத்திருக்க ... உலகத்து ஆணும் பெண்ணும் தோற்று போகக்கூடும் இந்த வேற்றுகிரக வாசிகள் அழகில் கம்பீரத்தில் ..அது சரி இவர்களும் கடவுள் படைத்த களிமண் பொம்மை தானே!! பூமிக்கு கரிய களிமண் என்றால் இவர்களுக்கு சிகப்பு செம்மண் போல ... கால் மீது கால் போட்டு சிகப்பு நிற டீ ஒன்றை ஆவி பறக்க நீல் குடித்து கொண்டிருந்தான் பார்வை கடந்து போகும் நட்சத்திர கூட்டங்களில் இருந்தது ...
ரெண்டையும் கொன்னுட்டு பிரச்சினையை தலைமுழுகிட்டு போயிடலாம் நீல் ஏன் ரொம்ப யோசிக்கிற... அவன் பதில் சொல்லாது கையில் உள்ள குடுவையை உருட்டிட
ஏன் எதுக்குன்னு சீப் கேள்வி கேட்பார்ன்னு பயமா
பயமா... எனக்கா என்றான் அவளை நோக்கி முகம் இறுக பார்த்தபடி
பின்ன ஏன் அவளுக்கும் அவனுக்கும் சான்ஸ் கொடுக்கிற ஐ நோ உன்னால இதுகளை சொடுக்கு போடும் நேரத்துக்குள்ள முடிக்க முடியும்
ரைட் ... பட் என் சாய்ஸ் தப்பாகாது நான் தோத்து பழக்கமில்லை .... என்ன காரணத்திற்காக அவளை தூக்கிட்டு வந்தேனோ அதை அவளை வச்சே முடிக்கணும் அதுதான் என்னோட சக்ஸஸ்..
என்ன பண்ண போற
எனக்கு நானே கெடு வச்சிக்க போறேன்
அப்படின்னா ?
ஒரு வாரம் டைம் அதுக்குள்ள ப்ராஜெக்ட் மூவ் ஆகுதா பார்க்கணும் இல்லன்னா ?
இல்லைன்னா
எஃகு ஆத்துல அவ டெட்பாடி மிதக்கும்...
அதுவும் கிட்டத்தட்ட தோல்விதானே
நான் கொன்னா தானே தோல்வி அவளே செத்துட்டா என்று நீல் துப்பாக்கியை சுழட்ட
எம்மே கொலைகார பாவிகளா? என்னைய கொல்ல என்னாமா ரூட் போடுறான் இந்த புல்லட் தலையன் என்று அங்கை நெஞ்சை பிடிக்க
என்ன அங்கை எங்கிட்டு திரும்பினாலும் நமக்கு கருமாதி பண்றது பத்தியே பேசுறாள்... என் அம்மாவை மறுபடியும் நான் பார்க்கவே முடியாதா? மறுபடியும் அம்மா கையால முருங்கைகாய் சாம்பாரும் வத்தக்குழம்பும் திங்கிற குடுப்பணை நேக்கு இல்லையா ? சாரதி பயத்தில் உறைந்து நிற்க..
நாசமா போறவனே நாசா வந்து உசுருக்கு ஊசல் ஆடிட்டு இருக்கோம் ... உனக்கு வத்த குழம்பு கேட்குதா ஒரு வாரம் வாயை திறக்காம இருக்கிற இடம் தெரியாம இருந்தும்போம்டா சூனா பானா , இல்லை உசுருக்கு உத்திரவாதம் இல்லை
ப்ச் அதை உனக்கு நீயே சொல்லிக்க அங்கா.. உன் வாய் தான் ஓவர் ட்யூட்டி பார்த்து அவரை எரிச்சல் உண்டாக்குது ...
ம்ம் இனிமே பேசல வா ரெண்டுக்கும் எடுக்கிறதுக்குள்ள அப்படிக்கா போய் அமைதியா குந்திப்போம்
அமைதியா, நீயா?? உன்ன நம்ப முடியாது என்று அவள் வாயை தன் கை கொண்டு இறுக பொத்திய பார்த்தசாரதி
என் உயிரும் உன் வாய்லதான் தாயே இருக்கு அதனால அது இப்படியே இருக்கட்டும் என்று அவள் வாயை விட்டு கையை எடுத்தான் இல்லை ...
பல பேருக்கு பிரச்சனை அக்கம்பக்கத்தில் உள்ளவரால் இல்லை ... வாயால் தான் அத்தனை வாக்கால் தகராறும், அதற்கு பூட்டு போட்டால் தேவையில்லாத பிரச்சனை தீர்க்கலாம் ...