எஃகில் கலந்த தளவம் 17
Egg17
17 எஃகில் கலந்த தளவம் !!
"ஏன் அண்ணே என் மகன் சாரதி இருக்கும்போது, உன் மகளுக்கு வேற இடத்துல பையன் பார்த்து பரிசம் போட்டு இருக்கியே , இதெல்லாம் நன்னாவா இருக்கு .... சின்ன வயசுலேயே சாரதிக்கு தான் உன் பொண்ணை குடுப்பேன்னு சொன்னியே அண்ணே இப்போ எனக்கு கூட சொல்லாம போயி காதும் காதும் வச்ச மாதிரி கல்யாணத்தை பேசி முடிச்சுட்டு வந்து இருக்கியே என்று லட்சுமி தன் அண்ணன் முன்னே புடவையில் கண்ணீரை துடைத்துக் கொண்டு நிற்க...
"ப்ச், உனக்கு கொஞ்சம் கூட இப்படி கேட்க கூச்சநாச்சமா இல்லையா லட்சுமி.... எந்த அப்பன் பொண்ண இந்த மாதிரி ஒரு அம்மாஞ்சி பையனுக்கு கல்யாணம் கட்டி கொடுப்பான், " என்றதும் தன் தாயின் பின்னால் நின்ற பார்த்தசாரதி தலையை தூக்கி பார்த்தவன் கண்கள் கலங்கிவிட்டது... சாந்தமாக இருப்பான், அதிர்ந்து கூட பேச மாட்டான் ... அவனுக்கு அவர்கள் ஊர் வைத்த பெயர் அம்மாஞ்சி, தேறாத கேஸ்,பொட்டப்பய இன்னும் சில ...
"என்ன அண்ணன் மத்த பயலுக போல நீயும் பேசுற
"வேற என்ன செய்ய சொல்ற , அடுப்படியில ஊதிட்டு இருக்கிறவனுக்கு கல்யாணம் கட்டி கொடுக்க சொல்றியா? திருமண விழாக்களில் சமையல் செய்வான் அவன் கைமணமே தனி .... சமையல் பெண்ணுக்கு உரியது என்ற ஆணுலகம் அவனுக்கு வைத்த பெயர்தான் இவைகள்....
"அவன் என்ன சண்டித்தனம் பண்ணிக்கிட்டு திரிஞ்சானா, இல்ல குடி கும்மாளம்னு இருந்தானா வேலை விட்டா வீடு, வீடு விட்டா வேலை கோவில்னு இருப்பான். இந்த மாதிரி புள்ள கிடைக்குமா?
"எனக்கு இந்த மாதிரி மருமகன் வேண்டாம் லெட்சுமி, பேசாம உன் மகனுக்கு ஒரு சேலையை வாங்கி கட்டிக்க சொல்லு பத்து பொருத்தமும் பொருந்தும்... அதுதான் அவனுக்கு சரியா இருக்கும் என்றதும் லட்சுமி பாய்ந்து போய் தன் அண்ணன் சட்டையை பிடித்து
"சீ என்ன வார்த்தை பேசுற , வாய் அழுகி போகும்
" இப்படி ஒரு மகனை பெத்து வச்சுக்கிட்டு அதுக்கு பொண்ணு வேற கேட்டு வந்திருக்க பாரு தள்ளு என்று அவர் லட்சுமியை பிடித்து தள்ளிவிட்டுவிட்டு
வீட்டுக்குள் போய் கதவை அடித்து சாற்ற
"அம்மா என்று தடுமாறிய தன் தாயை சாரதி தாங்கி பிடிக்க ஊரே வேடிக்கை பார்க்க, சாரதிக்கு அவமானம் தாங்க முடியவில்லை ....
"அம்மா வாம்மா போவோம்
"என்ன வார்த்தை பேசுறான் பாருடா
"இதுக்கு தான்மா சொன்னேன் தேவையில்லாத பிரச்சனை வேண்டான்னு, அவர் பொண்ணுக்கு யாரையும் பார்த்து கல்யாணம் கட்டி கொடுத்துட்டு போறார்.. உனக்கு என்ன
'இல்லடா என்று பார்த்தசாரதி கன்னத்தை தடவி முத்தமிட்டவர் ....
"என் மகனை போல ஒரு பையன் கிடைக்க அவதான் கொடுத்து வைக்கல
"சரிம்மா வா கிளம்பு
"இருடா.... அண்ணே நல்லா கேட்டுக்கோ எண்ணி 40 நாள்ல, உன் மக கல்யாணம் முடியறதுக்கு முன்னாடி என் மகனுக்கு மகாலட்சுமி மாதிரி மேலாகத்து தேவதை மாதிரி, ஒருத்தியை கல்யாணம் கட்டி உன் முன்னாடியே கூட்டிட்டு வந்து காட்டுவேன் பாரு... இது என் மகன் மேல சத்தியம்!! பொட்டப்பயன்னு கேலி பண்ணின இந்த ஊருக்கு மத்தியில, வாழ்ந்தா பார்த்த சாரதி போல வாழணும் ..இப்படி ஒரு புருஷன் அமையணும்னு ஏங்க வவைக்கிற அளவு என் மகன் வாழுவான்... வாடா இவன் பொண்ணு தரலைன்னா என்ன ... நமக்கு என்ன பொண்ணா கிடைக்காது.. உனக்குன்னு ஒரு தேவதை மேல இருந்து வருவா பாரு என்று பார்த்தசாரதி கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார்..
லெட்சுமி இரவெல்லாம் தூங்கவே இல்லை... காலையிலேயே தரகரிடம் போய் பார்த்தசாரதி ஜாதகம் போட்டோ எல்லாவற்றையும் கொடுத்து விட்டு வந்துவிட்டார்...
இரண்டு நாளாக பார்த்தசாரதி வேறு அமைதியாகவே இருக்க... ஐயோ பிள்ளை வருத்தப்பட்டு விட்டானோ என்று லட்சுமி மகனின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க .. அவன் இரவோடு இரவாக காணாமல் வேறு போய்விட...
மகனை நினைத்து கலங்காத நாள் இல்லை....
இன்றும் மனம் முழுக்க மகனை நினைத்து கவலையில் கனத்து கிடக்க லெட்சுமி திண்ணையில் உட்கார்ந்து புலம்பி கொண்டிருந்தார்...
சாரதி எங்க ராசா போன , என் மகன் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்று தெரியவில்லையே, ஊர் பெரியவர்களிடம் மகனை காணவில்லை என்று சொல்லியாற்று... போதாக்குறைக்கு போலீஸ் ஸ்டேஷன் வரை போய் கம்ப்ளைன்ட் கொடுத்து விட்டு வந்தாயிற்று ...
"பத்து நாள்ல புடவை கட்டி வந்து நின்றாலும் நிற்பான் என்று தெருவில் சிரிக்க லட்சுமி அழுது கொண்டே வந்து உட்கார்ந்து இருக்கிறார்....
துரு துருவென்று இருக்கும் மகன்தான்... தகப்பன் இறந்த பிறகு வேறு வழியே இல்லாமல் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு செல்ல ஆரம்பித்தான்.... அந்த வயதில் சமையல் வேலை தான் கிடைத்தது ...
"வேற எதாவது கிடைக்கா பார்ப்போமா சாரதி
"ஏன் அம்மா நல்ல வேலை தான ... போறேன் என்று போக ஆரம்பித்தான்... சற்று நாளில் தாய்க்கும் இதயம் பலகீனம் என்று அறிந்த பிறகு , வீட்டின் வேலையையும் அவனே செய்ய வேண்டிய நிலை தண்ணீர் எடுப்பான், தாயின் புடவையை ஆற்றில் துவைத்து காய போடுவான்... முற்றம் பெருக்குவான்... கோலம் போடுவான் கோவிலில் போய் பூஜை செய்வான், இதையெல்லாம் பார்க்கும் ஊரார் அவனை கேலி செய்யவும்.?. யாரிடமும் பழகாமல் தாய் மட்டுமே என ஒதுக்கப்பட்டான்.. எளிதாக அவன் அங்கையை ஏற்று கொள்ள காரணம் பார்த்தா என்று தன் தாயை போல அழைத்த அவள், அவன் தாயை பிரதிபலித்ததுதான்...
தான் உண்டு தன் வேலை உண்டு என்று அப்படியே வீட்டிற்குள்ளேயே இருந்து கொள்வான்.... சரி தன் அண்ணன் மகளை கட்டி வைப்பேன் என்று சொன்னானே என நம்பி லெட்சுமி இருக்க .
அவரும் கேவலமாக பேசவும் மகன் மனம் உடைந்து போனான் ,
"ம்ஹூம் என் பார்த்தா சாக மாட்டான். என்னை விட்டுவிட்டு ஒத்தையாக போக மாட்டான்... எப்படியாவது வந்துடுவான் என்று காத்திருந்தார்....
தரகர் தலையை தொங்கப் போட்டுக் கொண்டே வந்தார்
"என்ன தரகரே.. பொண்ணு துப்பு எதாவது வந்துச்சா....
"இல்லம்மா எல்லா இடமும் தம்பிக்கு வலை போட்டு தேடிட்டேன் ... எல்லாரும் பையன் ஒரு மாதிரி அமைதியா இருப்பானாமே, சரி வராதுன்னு சொல்றாங்க என்றதும் லட்சுமிக்கு இன்னும் கவலை பல்மடங்கு ஆகி போனது
எதிர்த்த வீட்டில் இருந்த அண்ணன் காதுகள் இங்கே உள்ள விஷயத்தை கேட்க சுருங்குவதை பார்த்துக்கொண்டே
"வசதி பணம் படிப்பு இது எதுவும் தேவையில்லை வரதட்சணையே வேண்டாம்... நகை எதுவும் போட்டுட்டு வரணும்னு அவசியம் இல்ல .
நல்ல பொண்ணா இருந்தா போதும்..ஜாதி சமயம் குலம் கோத்திரம் எதுவும் சோறு போடாது .... அவனை புரிஞ்சிக்க ஒருத்தி அது போதும் ....
"இல்லம்மா எல்லாரும் பையன் ஒரு மாதிரின்னு சொன்னதையே சொல்றாங்க என்று அவர் நெளிய
இதுக்கு தான் சொன்னேன் நான் சொன்னா என்னவோ இல்லாததை பொல்லாததை சொன்ன மாதிரி சிலிர்த்துட்டு நின்ன... உன் மகனை கூட்டிட்டு போயி நல்ல ஆஸ்பத்திரியில பாரு அதுக்கு பிறகு பொண்ணு தேடணுமா, பையன் தேடணுமான்னு யோசி என்று அண்ணன் கிண்டலாக சொல்லிவிட்டு பைக்கை எடுக்க..
நாசமா போறவனுங்களா, என் மகனுக்கு இப்படி ஒரு பெயரை சூட்டி , கொக்கரிச்சு சிரிக்கிறீங்களே நீங்க எல்லாம் உருப்படுவீங்களா? என்று லட்சுமி மணலை வாரி தெருவில் போட்டுக் கொண்டு நிற்க அந்த மணல் துகளாக அப்படியே புழுதியாக அந்த இடத்தை நிரப்ப புழுதி அடங்கியது, மழைத்துளி மெல்ல சடசடவென்று விழுந்தது.... அந்த மழைத்துளியின் நடுவே பார்த்தசாரதி தெருவுக்குள் நடந்து வந்தான்..
பல நாளாக மழிக்கபடாத மீசையும் தாடியும் என்று அவன் ஆறடிக்கு ஆண்மை கம்பீரம் கொடுக்க .... மணிக்கட்டு வரை கிடந்த சட்டையை மடக்கி விட்டபடி வந்தவனை எல்லோரும் பார்த்தபடி நிற்க தன்,எதிரே வந்த மாமனை பார்த்து தலையை திருப்பி கொண்டவன் தாயை நோக்கி ஓடினான்...
எய்யா பார்த்தாஆஆஆஆஆஆஆ எங்கடா போய் தொலைஞ்ச ...
"எதுவும் பஸ் தெரியாம ஏறி வேற எந்த ஊருக்கும் போய் சேர்ந்துட்டியா சாரதி... அது சரி , ஒரு கூறு இல்ல எப்படித்தான் இவனை வச்சு சமாளிக்க போறியோ லட்சுமி, இதுல வேற இவனுக்கு பொண்ணு பாத்து கட்டி கொடுக்கணும்னு நினைக்கிறியே அந்த பொண்ணோட நிலைமையை யோசிச்சு "என்றவர்கள் வார்த்தை அப்படியே நின்று போனது... அவன் பின்னால் நேர்கொண்ட பார்வையில் பச்சை நிற புடவை கட்டி நளினம் இல்லை என்றாலும் , பெண்ணிற்குரிய அத்தனை இலட்சணங்களும் கொஞ்சம் துக்கலாகவே தெத்தி தெத்தி நடந்து வந்து கொண்டிருந்த லைக்காவை பார்த்து அத்தனை பேர் வாயும் அடைத்துக்கொள்ள....
"இன்னும் எவ்வளவு நேரம் தாண்டா. இந்த கருமத்தை கட்டிக்கிட்டு நடக்க சொல்ற.... நடக்க முடியல கால் எல்லாம் தெத்துது ... எப்பதான் உன் வீடு வந்து தொலைக்கும் "என்று லைக்கா கிசுகிசுப்பாக தன் முன்னால் நடந்து வந்து கொண்டிருந்த பார்த்தசாரதியின் அருகே வந்து நின்றாள்
"அமைதியா இருன்னு சொன்னேன்... இங்க என் கூட இருக்கணும்னா நான் சொல்றது எல்லாத்துக்கும் ஏன் எதுக்குன்னு கேட்காம நீ தலையாட்டணும்... இல்ல
"இல்லன்னா, எங்க என்ன விட்டுட்டு போ பார்ப்போம் நேரடியா சேட்டிலைட் மூலமா மேல தகவல் அனுப்பிடுவேன்... அப்புறம் உன் பிரெண்ட் சோலி முடிஞ்சா" என்று லைக்கா பல்லை கடிக்க...
"அந்த ஒரே காரணத்துக்காகதான் நீ தொல்லைன்னு தெரிஞ்சும் கூடவே இழுத்துட்டு வந்துருக்கேன்.. என் தோழி உயிருக்கு எதுவும் ஆகிட கூடாதுன்னு தான் உன்னை என் வீட்டுக்கு அழைச்சிண்டு வந்து இருக்கேன் ....
"ஓஓஓ வீடு வந்துடுச்சா ...
"ம்ம் அங்க ராங்கி பண்ற மாதிரி இங்க, ஏதாவது பண்ணலாம்னு நினைக்காத... எங்க அம்மா உன்ன ரெண்டா முறிச்சி அடுப்புகுள்ள வச்சிடுவாங்க...
ம்க்கும் வைப்பாங்க வைப்பாங்க .... இதுதான் உன் அம்மாவா ??
ம்ம் , அமைதியா இரு ஊரே என்னைத்தான் வேடிக்கை பாக்குது .... என்ன சொல்லி எப்படி சொல்லி சமாளிக்க போறேன்னு எனக்கே தெரியல நல்ல ஞாபகம் இருக்கு இல்ல ... பார்த்தா அவளிடம் கிசுகிசுப்பாக பேச
ம்ம், என் வீட்ல மாப்பிள்ளை பாத்தாங்க எனக்கு அந்த மாப்பிள்ளை புடிக்கல சாகப் போனேன்... உங்க மகன் தான் என்ன காப்பாத்தி கூட்டிட்டு வந்தாருன்னு சொல்லணும்... அவ்வளவு தானே??
பார்த்தசாரதி ஆமாம் என்று தலையாட்ட
"அதுக்கு எதுக்குடா இந்த கருமத்தைக் கட்டி கூட்டிட்டு வர்ற , பேண்ட் சர்ட் தான் எனக்கு கம்பர்டபிளா இருக்கும் ... இது கசகசன்னு இரிட்டேட் ஆகுது..
இப்பதான சொன்னேன் ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்காதேன்னு.... அங்க வேணும்னா உனக்கு பவர் இருந்திருக்கலாம்.... இது என்னுடைய இடம் நான் சொல்றபடி தான் நீ இருக்கணும் என்று பார்த்தசாரதி அவளை கொடுக்கு போல கொட்ட...
ரொம்பதான் பனிஷ்மென்ட் முடியட்டும் அப்புறம் இருக்கு உனக்கு "என்று லைக்கா முகத்தை சுழித்துக்கொண்டவள் ... அவன் கூடவே நடந்து வந்தாள்
"பார்த்தா எங்கடா போய் தொலைஞ்ச என் புள்ளைய காணலையேன்னு 20 நாளா வயித்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு உட்கார்ந்துண்டு இருக்கேன் என்று ஓடி வந்து லட்சுமி தன் மகனை கட்டிக் கொள்ள
"இல்லம்மா காசி வரைக்கும் மன நிம்மதிக்காக போயிட்டு வந்தேன்..
"ஏண்டா சொல்லிட்டு போயிருக்கக் கூடாதா நான் என் புள்ளைக்கு என்னவோ ஏதோன்னு நெனச்சு பயந்து போனேன் தெரியுமா? என்று தன் மகனை நெட்டி முறிக்க... அப்போதுதான் பக்கத்தில் இருந்த லைக்காவை லட்சுமி பார்த்தார்..
"யாருடா இந்த பொண்ணு ?
"அதும்மா
"உன் கூட வந்திருக்கு என்ற லட்சுமி கிசுகிசுப்பாக கேட்க பார்த்தசாரதி ஏதோ சொல்ல வாய் எடுப்பத்குறதுக்கு முன்பாக...
"நானும் அவரும் லவ் பண்றோம் வீட்ல கல்யாணம் கட்டிக்க சம்மதம் கேட்டேன், மறுத்துட்டாங்க, அதான் அவர் கூடவே வந்துட்டேன் ... வாழ்ந்தா அவர் கூடத்தான் வாழ்வேன் எனக்கு சாரதி வேணும் என்றவள் எஃகு குரல் அந்த தெரு முழுவதும் ஒலித்தது.... ஊரே அதிர்ந்து நிற்க பார்த்தசாரதி பே என்று வாயை பிளந்து கொண்டு நிற்க ... தெருவே வாயில் கை வைத்துக் கொண்டு அவர்களை பார்க்க...
என்....ன்ம்மா சொல்ற ? லெட்சுமி வாயடைத்து போக...
ம்ம் நாலு வருஷம் லவ் பண்றோம் ... என்னால வேற யாரையும் கல்யாணம் கட்டிக்க முடியாது.. சாரதி கூட தான் இருப்பேன்... அதான் ஓடி வந்துட்டேன் என்றவள் பொய்யில் சாரதி நெஞ்சை பிடித்துக் கொண்டு அவள் மீது சாய , அவனை கொத்தாக பிடித்து நிறுத்தியவள் ....
என்ன ஆச்சு ?
உன்ன என்ன சொல்ல சொன்னேன், என்ன சொல்லி வச்சிருக்க என்று சாரதி கோவத்தில் அவளை முறைக்க
ப்ச் டங்க் ஸ்லிப் ஆகிடுச்சு... மூணு மாசம் தானே எதையாவது சொல்லி சமாளி .... கழட்ட விட்டுட்டு போயிட்டா நான் என்ன செய்ய , அதான் நங்கூரம் நச்சுன்னு போட்டாச்சு...
"அம்மா முறைக்குது"
அது உன் தனிப்பட்ட பிரச்சனை அதுக்கும் எனக்கும் சம்மந்தம் இல்ல, எனக்கு உடனே இந்த கோமாளி வேஷத்தை கலைக்கணும்...
ஆன்டி என் ரூம் எது நைட்டி எதாவது வச்சிருக்கீங்களா, கசகசன்னு இருக்கு ... இதுவா நம்ம வீடு என்று லைக்கா ஆளுக்கு முன்னாடி மகனுக்கும் தாய்க்கும் இடையே புகுந்து சாரதி வீட்டுக்குள் வலது கால் வைத்து உள்ளே போயே விட்டாள்.... அவன் அறை உள்ளே அனுமதியே இல்லாது நுழைந்த லைக்கா வேகவேகமாக புடவையை கழட்டி வீசிவிட்டு
எப்பா இப்பதான் மூச்சே வருது என்று கண்களை அலைய விட்டவள் ஹேங்கரில் தொங்கிய சாரதி சட்டையை எடுத்து முகத்தோடு வைத்து வாசம் பிடித்தவள்....முகம் மெல்ல இளக அதை அப்படியே தன் வெற்று மீது மாட்டி கொண்டு அவனே கட்டி அணைத்தது போல சில்லிட்டு நின்றாள்...
அவள் காலை சுற்றிய பாம்பா, கழுத்தை சுற்றிய பூமாலையா என்று அவன்தான் அறிந்து கொள்ள வேண்டும்...