எஃகில் கலந்த தளவம் 8

Egg8

எஃகில் கலந்த தளவம் 8

8 எஃகில் கலந்த தளவம் !!

நீல் ஆர் யூ ஓகே கதவு தட்டப்பட்ட  சத்தத்தில் தான் நீல் கண்களை திறந்தான் 

என்ன அதிசயம்  பத்து மணிநேரம் தொடர்ந்து தன்னிலை மறந்து தூங்கி இருக்கிறான்....

ஓ ஷட் " தலையில் அடித்து கொண்டு அங்கையை  அறையில் தேட அங்கையை காணவில்லை  ,

இவ கண்ணுல முழிச்சா அந்த நாளே வீணா போகும்... என்று தலையை உலுக்கி கொண்டான்... 

அறை எங்கும் பேப்பரில் ராக்கெட் செய்து பறக்க விட்டிருந்தாள்...  ஒரு பக்கம் ஆரஞ்சு பழம் உரித்த தோல்,   அங்கிருந்த புத்தங்களில்  ஆண் படத்துக்கு சேலை வரைந்து வைத்திருந்தாள் பெண் படத்துக்கு முறுக்கு மீசை ஜிமிக்கி வரைந்து கலை திறமையை காட்டோ காட்டு என்று காட்டி வைத்திருந்தாள் ....  ஒரு படுக்கை அறை கொண்ட  பிரிவு தான் அத்தனை பேருக்கும் .... அதற்குள் தான் அடங்கி கொள்ள வேண்டும் ... இந்த அறை அவனுக்கு இதுவரை போதும் இப்போது நசநச என்று இருப்பது போல தோன்றியது ... 

இவளை போலவே ஆக்கி வச்சிருக்கா இன்னையோட இவளை தலை முழுகி தொலையணும்... என்று  டவலை எடுக்க அதில்  அவள் நீள முடிகள்  இருந்தது ...  அவள்தான் துவட்டி  போட்டு விட்டு போய் இருக்கிறாள்  .... 

ஊப்ஸ் இஇஇஇஇ ஏலியனுக்கு வந்த சோதனையா இது என்பது போல நின்றான் ... 

இந்த ஜந்து  வந்ததுல இருந்து என் நிம்மதி போச்சு ஒழிச்சு தள்ளணும்  "காரணமே இல்லை என்றாலும்  அவளை கொல்ல துப்பாக்கி எடுத்து பேண்ட் பாக்கெட்டில் நீல் சொருகி கொண்டான்... 

நீல்  இஇஇஇஇஇஇஇஇஇ வாட் ஆர் யூ டூயூங் என்ற லைக்கா குரலில் எஃகு கலவையால் செய்த அரண்மனை மீது யோசனையாக நாடியை தடவி கொண்டு நின்ற நீல் மெதுவாக திரும்பி என்ன என்பது போல தன் சிவப்பு விழியால் அவளை கேள்வியாக பார்க்க .... 

காலையில கோ வொர்க்கஸூக்கு கொடுக்க வேண்டிய கமென்ட்  எதுவும் உன் ஹேண்டி சிஸ்டத்துல இருந்து வரல .... எல்லாரும் என்ன செய்யணும் ஏது செய்யன்னு தெரியாம என்ன வந்து கேட்கீறாங்க....  நீ என்னன்னா வேலையை மறந்துட்டு இங்க நின்று உலகத்தை ரசிச்சுட்டு  இருக்க , லைக்கா குரலில் பெரும் குற்றச்சாட்டு....அவனே இவ்வளவு நேரம் எப்படி தூங்கினேன் அதுவும் என் கை அருகே இருந்த  ரகசிய லேப்டாப் களவு போகும் அளவா தூங்கினேன் என்று யோசனையாக நின்றிருந்தவன் இவள் குற்றம்சாட்ட பல்லை கடித்தபடி... 

"என்ன குறை சொல்றது இருக்கட்டும் நான் வேலை செய்ய தாமதம் ஆனா,  என்னோட இடத்துல இருந்து நீ செய்யலாம்னு ஒரு லா இருக்கே ... ஏன் நீ காலையிலேயே அவங்களுக்கு செய்ய வேண்டியது பார்வர்டு பண்ணல ... நீ குறை என்று  சொல்வதை மட்டும் அவனால் பொறுத்து கொள்ளவே இயலாது ... 

அது "லைக்கா திணறலாக  அவனை பார்த்தாள் .... குளிக்க போன நேரத்தில் அவள் லேப்டாப்பும் காணாது போய்விட்டதே....

"மை ஹேண்டி சிஸ்டம் இஸ் மிஸ்ஸிங் நீல்" என்றாள்  தடுமாற்றம் கொண்ட குரலில் 

"என்னோடதும் மிஸ்ஸிங் தான் "என்று தடுமாற்றம் இல்லாது நீல் கூறி மீண்டும் யோசனைக்கு போக ..  

"வாட் உன்னோடதும் காணலையா??? 

"ம்ம் உலகவாசி தூக்கிட்டு ஓடிருச்சு "என்றான் தோளை உலுக்கி கொண்டு

"ஊப்ஸ்இஇஇஇஇஇ   அப்போ என்னோடதையும் அந்த கரிச்சான் வண்டுதான் தூக்கிட்டு போச்சோ "

"இவ்வளவு லேட்டா கண்டுபிடிச்சா இன்னும் பத்து வருசம் ஆனாலும் நீ என் இடத்துக்கு வர முடியாது லைக்கா.. 

"ப்ச் இந்த  உலகத்தை பத்தி எதுவேணும்னாலும் கேளு  , பிங்கர் டிப்ல வச்சிருப்பேன்..  பட் இந்த ஹூமன் பத்தி தெரிஞ்சுக்கும் முன்ன ஓ மை காட் முடியல "என்று லைக்கா ஒரு பக்கம் தலையை பிடித்து கொண்டு அமர ...

"டேய் பாத்தா பாத்தா " என்று கத்தி கொண்டே அங்கயற்கண்ணி ஓடி வந்தாள்...   வெள்ளி நீரோடை உள்ளே காலை விட்டு ஆட்டியபடி பார்த்தசாரதி உட்கார்ந்து இருக்க அவன் அருகே வந்து உட்கார்ந்த கன்னி..

"எதுக்கு இப்ப செவி கிழிய  சத்தம் போடுற அபிஸ்டு...."

"ப்ச் காலையில இருந்து இதுல பாம்பு கேம் வைக்க ட்ரை பண்றேன் வரவே இல்லை , நேரமே போக மாட்டைக்கு பாத்தா,  பாம்பு வால்ல இருந்து 

 டபுக் டபுக்குன்னு வரும்ல,  அந்த கேம் எனக்கு வச்சுதாயேன்" என்று நீலின் உள்ளங்கை அளவு கணினியை ஆட்டையை போட்டு கொண்டு வந்து சாரதியிடம் கொடுக்க ...

ஐஐஐஐ சேம் பிஞ்ச் அங்கா, நானும் அந்த மெட்டல் மண்டச்சிக்கிட்ட இருந்து தூக்கிட்டு வந்துட்டேன் பாரேன் என்று சாரதி லைக்காவின் கணினியை தூக்கி காட்ட 

அறிவாளிடா,  நம்ம ரெண்டு பேர் அறிவையும் பத்தி இந்த கிரகத்துக்கு புரியல.... 

அதே புரிய வைக்கணும்  அங்கா "

"அதை பிறகு புரிய வைப்போம் ,  பாம்பு கேம் செட் பண்ணி தா ..

ப்ச் இரு  இதுல இருந்து அம்மாவுக்கு போன் போட பார்கிறேன் முடியல என்று இருவரும் கணினியை தட்ட ... அக்கிரகத்து  மானிட்டரில் பே என்று இருவர் முகமும் லைவ் டெலிகாஸ்ட் ஆக .... 

ஐ பார்த்தா நாம... 

நான் அங்கா,  இவன் என் நண்பன் பாத்தா,  என்று இருவரும் போஸ் கொடுத்தபடி...  

அடுத்து நம்ம ப்ளான் என்ன  அங்கா ? 

ஒரு வாரம்  எங்க கோபத்தை எல்லாம் மூட்டை கட்டி வச்சிருக்கோம் வன்முறை உலகத்துக்கு மட்டும் அல்ல , கிரகத்துக்கும் நல்லது இல்லை .. கேப்டன் போல பேசி பேசியே எல்லாரையும் திருத்த போறேன் .... 

ஒருவேளை திருந்தலைன்னா.... பாத்தா அவளை திரும்பி பார்க்க 

வன்முறையை கையில எடுக்க வேண்டியதுதான் 

வன்முறையா அப்படின்னா? 

பேதி மாத்திரை போட்டு அம்புட்டு பேரையும் குளோஸ் பண்ணிட்டு நாம தப்பிச்சு ஓடிரலாம் ஹாஹா 

ஓஓஓ சூப்பர் அங்கா , கடைசியா எதாவது நாலு பஞ்சு டயலாக் சொல்லு அப்பதான் நல்லா இருக்கும்..  "

"ஆமால்ல  ஏமாற நாங்க என்ன ஏலியனா? 

நாங்க மனுசங்கடா ... 

"சம்மந்தமே இல்லாம இருக்கே "

"ப்ச் நான் பாலையா ஃபேன் அப்படிதான் பேசுவேன் .... இருவரும் திரையை உத்து பார்த்து  

பவுடர் இல்லாம முகம் டல்லா இருக்குடா பாத்தா 

ஆமா தாடி வளர்ந்து காட்டுவாசி போல இருக்கு... என்று இருவரும் தலையை சுற்றி எத்தனையோ பிரச்சனை இருக்க,   இருவரும் சம்மந்தமே இல்லாது பேசி சிரித்து கொண்டிருக்க....  

இதுகளை கொல்ல இனி என்ன காரணம் தேவை தவளை தன் வாயால் கெடுமாம்... அதுகளே சாவுக்கு காரணம் தேடி தந்திடுச்சு என்று  நீல் தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியில் ஒற்றை குண்டை மட்டும் லோட் பண்ணிவிட்டு லைக்காவை பார்க்க 

இது முதல்லேயே செஞ்சு இருக்கலாம் நீல் என்று லைக்காவும்  தன்  துப்பாக்கி உள்ளே குண்டை லோட் செய்தாள் .... 

அறிவாளிகளை சாய்ப்பது எளிதிலும் எளிது 

அரைகுறைகளை சாய்ப்பதே கடினம்!!

அறிவாளி என்ன செய்வான்  என இன்னொரு அறிவாளி யூகித்து விடலாம் 

ஆனால் அரைகுறை என்ன செய்யும் என்று எவனும் யூகிக்க முடியாது அவர்கள் பலமே  அறிவிலி தான் ... 

"சீக்கிரம் வா பார்த்தா இன்னைக்கு ஏழாவது நாள் சாப்பாடு ஆக்ஸிஜன் எல்லாம் நிரப்புற நாள் , அந்த அக்கா கிட்ட அடுத்த வாட்டி வரும் போது ரெண்டு செட்டு கொத்து பரோட்டா வாங்கிட்டு வாங்கன்னு கெஞ்சு கூத்தாடி இருக்கேன் ...உனக்கு ஒன்னு எனக்கு ஒன்னு சரியா ?

அது 

உனக்கு சைவம் தான் "

"அப்போ ஓகே ... உல்லாச உலகம் எனக்கே சொந்தம் என்று இருவரும் அந்த வெள்ளி  பூமியில் சுதந்திரமாக  நடந்தனர்...

"பார்த்தா 

"சொல்லு அங்கா

"ஏன் அந்த பொண்ணை உனக்கு பிடிக்கல பார்க்க அழகா தான இருக்கு ...திராட்சை பழத்தை அவனிடம் நீட்ட அதை வாங்கி வாயில் போட்ட பார்த்தா ...

"நமக்கு எப்பவும் ஆயுதம் பிடிக்காது  அங்கா , அவங்க அதிரடிப்படை நாம அமைதிப்படை பார்த்தாலே பயம் தான் வருது .... 

"ஓஓஓ அப்போ பொண்ணுன்னா அமைதியா அடக்கமா தான் இருக்கணுமா பார்த்தா ??

"அப்படி எப்போ சொன்னேன் அது அவங்க விருப்பம் ... அவங்க தைரியம் தன்னம்பிக்கை அடாவடி எல்லாம் அவங்களுக்கு அழகு ...அதுக்காக அவங்களை நான் ரசிக்கணும்னு அவசியம் இல்லையே அங்கா...

செம பார்த்தா... "

"என்ன கேள்வி கேட்கிறது இருக்கட்டும்,உனக்கு ஏன் அவரை பிடிக்கல 

"ஏன் பிடிக்கணும்??  காதல்னா நேசம்னா என்ன? 

"ப்ச் தெரில ... பார்த்தா தோளை உலுக்க 

"சுயமரியாதை"  என்றாள் திராட்சையை வாயில்  தூக்கி போட்டு கேட்ச் பிடித்தபடி 

ஓஓஓ 

ஒருத்தரோட சுயமரியாதையை சீண்டாத,  அலட்சியம் செய்யாத , அருவருக்காத,  மரியாதையான  நடத்தை தான் என்ன பொறுத்த வரை அழகிய நேசம் ....  காதல்னு கூட சொல்லலாம்.. 

"என்ன மதிக்காத அவரை நானும் இம்மி கூட மதிக்கவோ எட்டி பார்க்கவோ தேவையில்லையே பார்த்தா... அவருக்கு தான் என் தேவை தேவை எனக்கு அவர் அவசியமே இல்லை.... அவன் அழகனா இருந்தா இருந்துட்டு போடா,  எனக்கு நான் அழகி .... நீ வீரனா இருந்தா நீயே பீத்திக்க, எனக்கு இப்படி இருக்க தான் பிடிச்சு இருக்கு....  உன் லிமிட் உள்ள நான் வரல என் லிமிட்குள்ள நீ வராத ...  ஒரே அறையை சேர் பண்ணிக்கிற ரூம் மேட்ஸ் மட்டும் தான் ...   இந்த கதைக்கு அவர் நாயகனா இருக்கலாம் ஆனா என் கதைக்கு நான்தான் நாயகி , யாரை எங்க நிறுத்தி வைக்கணும்னு எனக்கு தெரியும் "என்று தோளை உலுக்கினாள் 

கீரிடமே என்றாலும் ஏற்றுகொள்ள முடியாத கீரிடத்தை தூக்கி வீசுவது சுயமரியாதையை காத்து கொள்ளும்!! 

வாவ் என்று பார்த்தா உச்சி கொட்டி 

சும்மா சொல்ல கூடாது அங்கா ஆளுதான் என்று அவன்  நாக்கை கடிக்க 

"சும்மா சொல்லு ஆளுதான் லூசு போல இருக்க பேச்சு கிளியரா இருக்குன்னு தான சொல்ல வந்த "

"ம்ம் அவன் ஆமோதிக்க... 

நான் யாருன்னு என்னை தெரிஞ்சவங்களுக்கு புரிஞ்சா போதும்ல பார்த்தா,  இதோ இப்போ நான் யாருன்னு உனக்கு தெரியுறது போல ..வேற யாருக்கும் நான் யாருன்னு காட்ட தேவையில்லையே... சில நேரம் லூசா சுத்தறுது நல்லது என்று அங்கா கண்ணை சிமிட்ட 

ஏன் ஏன் 

ஏன்னா நான்தான் அல்ரெடி லூசே,  மறுபடியும் யாரும் என்ன லூசாக்க முடியாதுல்ல ஹிஹி என்று  சிரித்து கொண்டே ஓடியவள் மார்பை துளைத்து போயிருந்தது நீல் கையில் இருந்து பாய்ந்த புல்லட் 

ம்மாஆஆஆஆ என்றவள் நெஞ்சை பிடித்தபடி விழ 

அய்யோ அங்காஆஆஆஆஆஆஆஆ என்று தாவி வந்து அவளை பிடிக்க போக சாரதி இடையை துளைத்து இருந்தது லைக்கா சிதற விட்ட புல்லட்... 

இவர்கள் தங்களுக்கு தேவையில்லை என்று வீழ்த்த வில்லை .... 

எங்கே தங்கள் இரும்பு இதயத்தை வீழ்த்தி விடுவார்களோ என்ற அச்சத்தில் வீழ்த்தப்பட்டார்கள்... 

இதுவும் வீரமே!! 

தூய நேசம் கூட எதிரியை தாக்கும் ஆயுதமே!!