எஃகில் கலந்த தளவம் 10
Egg10
10 எஃகில் கலந்த தளவம் !
இந்த கதைக்கான டீசர், டைட்டல் ரிசர்வ் , கான்செப்ட் ரிசர்வ் 2024 ஆம் ஆண்டே நம் பேஸ்புக் குரூப்பில் வெளியாகி விட்டது... கதையை எழுத இம்புட்டு நாள் ஆகி போச்சு ???????? ஏன் சொல்றேன்னா அதுக்குதான் சொல்றேன்.. எதுக்கு? அதுக்கு தான் ...
பகவானே ஏஏஏஏஏஏஏஏஏஏ என்று சாரதி குட்டி நாக்கு தெரிய அலற
படுக்கையில் பார்த்தசாரதி கிடக்க அவன் கால் மீது உட்கார்ந்து அழுத்தி பிடித்து , சாரதி இடையில் உள்ள காயம் மீது இருந்த பிளாஸ்திரியை அவன் துள்ள துள்ள கழட்டி கொண்டிருந்தாள் லைக்கா
"அய்யோ வசிக்கிறதே விடு என்று அவள் கையை தட்ட அவன் கையை இருபக்கமும் இழுத்து வைத்து ஒற்றை கையில் அடக்கி கொண்ட லைக்கா
"ப்ச் இப்ப எதுக்கு ரேப் சீன்ல லேடி கத்துற மாதிரி கத்திக்கிட்டு இருக்க ... சின்ன காயம் தானே என்னமோ உயிர் போன மாதிரி கத்துற..
" எது சின்ன காயமா ரெண்டு இன்ச் விரல் உள்ள போற அளவுக்கு காயம் இருக்கு, அவ்வளவு ரத்தம் போகுது, உனக்கு இது சின்ன காயமா? அது சரி சுட்டவ கிட்டேயே நியாயம் கேக்குறேன்ல நான் ஒரு பேக்கு தான்... முதல்ல இறங்குங்கோ..... நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம் பெல்லாம்மா பார்த்துப்பாங்க....
"அந்த பெல்லா அம்மா தான் இனிமே அவனை பார்த்துக்க வேண்டியது உன் வேலைன்னு என் தலையில உன்ன கட்டிட்டு போயிட்டாங்க... எனக்கு என்ன ஆசையா? இருக்கிற வேலை எல்லாம் விட்டுட்டு உனக்கு சேவை பாக்கணும்னு ,தலைவிதியேன்னு உன்னை உட்கார்ந்து பார்த்துட்டு இருக்கேன் ....சும்மா கத்தி சீன் போட்டுக்கிட்டு இருந்த , குரல்வலையை இறுக்கி கொன்னுடுவேன் ஜாக்கிரதை" என்று குரல்வலையை நெறிப்பது போல லைக்கா வர
"இங்க பாருங்கோ இதுக்கெல்லாம் பயப்பட மாட்டேன் , சாவு வரை பார்த்துண்டு வந்துட்டேன்... சும்மா மிரட்டி பார்க்காதேள்... தள்ளுங்கோ ஆஆஆஆஆ சொல்லிட்டே இருக்கேன், அய்யோ அம்மா" அவ என்னைக்கு இவன் பேச்சு கேட்டாள் இன்று கேட்க...
"அவ்வளவு தான் இதுக்கு போய் ஒப்பாரி வைக்கிற" என்று அவனை விட்டு இறங்கி போனவள் வலியில் கண்ணீரை துடைத்தவனை திரும்பி பார்த்தாள்.... இரண்டு நாளாக இரவெல்லாம் வலியில் அனத்தும் போது
"ப்ச் அந்த இடியட் வலியில அனத்துறான் என்னன்னு வந்து பாருங்க என்று நடுஇரவு பெல்லா அறையை போய் லைக்கா தட்ட
"தட்ஸ் நாட் மை ட்யூட்டி, காப்பாத்தி தந்தாச்சு என்னன்ன மருந்து எதுக்குன்னு எல்லாம் உனக்கு தெரியும் தென் நான் எதுக்கு? ...
"என்னால அவனை உட்காந்து பார்க்கிற பொறுமை எல்லாம் இல்லை "
"அதுக்கு நான் எதுவும் பண்ண முடியாது இது என்னோட ஸ்லீப்பிங் ஹவர்ஸ் கெட் அவுட்.... என்று பெல்லா அவளை வெளியே பிடித்து தள்ளி கதவை அடைத்து விட
"ப்ச் சுட்டவளை வச்சே சுகமாக்க சொல்றது எல்லாம் ஓவர் பெல்லா மேடம் .."
"எங்க சுட்டா சாகமாட்டான்னு தெரிஞ்சு சுட்ட உன்கிட்ட தானே அவன வச்சுக்கோன்னு கொடுக்க முடியும் என்றதும் லைக்கா சத்தம் இல்லாமல் நடக்க ஆரம்பிக்க
"எங்க அவன் மேல பார்வை போயிடுமோ, தன் கடமை மறந்து காதல் வயப்படுவோமோன்னு தானே அதுக்கு காரணமான அவனை சுட்டு தள்ளின", என பெல்லா குரல் வர லைக்கா சட்டென நடையை நிறுத்தி விட்டாள்
"பெண்ணின் மனம் பெண் அறிவாள் அந்த பழமொழி இந்த கிரகத்துக்கும் பொருந்தும்...
"ஜோக் , அப்படியெல்லாம் எதுவுமே இல்லை குழந்தையை பெத்துக்க மட்டும் தான் அவனை தூக்கிட்டு வந்தேன் ... இவன் மேல எனக்கு ஏதோவாம் ஹாஹா வேடிக்கையான பேச்சு என்று சிலிர்த்து விட்டு போக .... பெல்லா சிரிப்பு சத்தம் அவளை விரட்ட... விறுவிறுவென அறைக்குள் ஓடி வந்தவள் படுக்கை விட்டு கீழே விழுந்து கிடந்த சாரதியை பார்த்து விட்டு
நான் அரக்கி, எனக்கு ரத்தம் பார்த்து பயம் இல்ல சாவு பார்த்து மிரட்சி இல்லை... இவனோட காயமும், கண்ணீரும் இரத்தமும் என்ன எதுவுமே செய்யவே இல்லை.. பின்ன எப்படி எனக்கு இவன் மேல சம்திங்க் இருக்கும் மூளை சலவை பண்றாங்க.... நீ அசையாத லைக்கா ... இவன் சஸ்ட் என்னோட சர்வண்ட், எனக்கு குழந்தை வர உதவி செய்ய போற வேலைக்காரன் அவ்வளவு தான்.... அதை தாண்டி இவன் மேல எனக்கு எப்பவும் ஈர்ப்பு வராது ... மறுபடியும் இவனால உபயோகம் இல்லைன்னா மறுபடியும் இவனை கொல்லதான் செய்வேன்.... இதுதான் என் குணம் இதை எப்பவும் மாத்த மாட்டேன் ..
வலிக்கிறது ம்மா வயிற்றை பிடித்து கொண்டு சாரதி வலியில் முனங்கினான்... படுக்கையில் உருண்டதில் கீழே விழுந்து இருந்தான்... காயம் மீது ரத்தம் கசிய.... தட்டு தடுமாறி அவன் எழும்ப போக வலு இல்லாத விழ போனவன் அங்கிருந்த எஃகு வாளின் மீது மல்லாக்க விழ போக,. கண்ணாடி தரை மீது சறுக்கி வந்த லைக்கா வாளுக்கும் அவன் முதுக்கும் இடையே கையை கொடுத்து சாரதியை பிடித்து தூக்கி கொண்டவளை அவன் கண்ணை திறந்து பார்க்க ....
"ப்ச் பார்த்து எழும்ப மாட்டியா? என்று அவனை இடையோடு பிடித்து தாங்க பார்க்க.. சட்டென அவளை தள்ளி விட்ட சாரதி.... போய் படுக்கையில் மீண்டும் படுத்து கொண்டான்...
"அய்யோ பாவம்னு பிடிச்சா என்னையே தள்ளி விடுறியா உன்ன" என்று அந்த வாளை உருவி அவனை குத்த போக சாரதி பார்த்த உணர்வற்ற பார்வையில் அவள் கைகள் அப்படியே நின்றது வாளை கீழே போட்டு விட்டு மீண்டும் போய் சோபாவில் அம்ர்ந்தாள்... எப்போதும் அவன் சோபாவில் படுப்பான் இந்த ரெண்டு நாளாக அவன் படுக்கையில் விஸ்தாரமாக கிடக்கிறான், இவள் இரவு முழுவதும் கொட்ட கொட்ட முழித்து உட்கார்ந்து இருக்கிறாள்..
"ப்ச் இந்தா இந்த மாத்திரையை போடு வலிக்காது இங்கிருந்தே மாத்திரையை எடுத்து அவன் மீது தூக்கி எறிந்தாள்... அவன் அதை எடுக்காது திரும்பி படுத்து கொள்ள
"இப்ப உன் பிரச்சனை தான் என்ன ?
"என்ன கொல்ல அந்த மாத்திரையில எதுவும் வச்சிருப்ப .....
"அவ்வளவு எல்லாம் கஷ்ட பட மாட்டேன் இடுப்புல சுட தெரிஞ்ச எனக்கு தொண்டையில சுட்டும் கொல்ல தெரியும் .... என் குறி தப்புனது இல்லை ... அவன் அதை எடுக்காது வலியிலேயே கிடக்க
"இவனுக்கு என்ன பார்த்தா எப்படி இருக்கு? ....
பேய் மாதிரி என்று முனங்கிய அவனை திருப்பி போட்டவள் உதட்டை விரல் கொண்டு பிளந்து மாத்திரையை உள்ளே போட்டு நீரை ஊற்றியவள்..
வலின்னு பினாத்தி என் தூக்கத்தை கெடுக்காத அதுக்கு தான் மாத்திரை தந்தேன் மத்தபடி நான் எப்பவும் நல்லவ ஆக மாட்டேன்" ... என்று போனவள் பல முறை தூங்கும் அவனை வந்து பார்த்து விட்டு போனாள்.. அவன் தண்ணீருக்கு கையை நீட்டினால் அவன் கையில் நீர் இருந்தது .. ஆனால் சாரதி மறந்து கூட அவள் பக்கம் திரும்பவே இல்லை
இப்ப எதுக்கு அழுற?...
"அங்கையை கொன்னுட்டீங்களே எனக்காக இருந்தது அவ மட்டும் தான் என்றவன் கண்ணீரை அப்படியே பார்த்தபடி நின்றவள்...
"அவ சாகல ,பெல்லா மேடம் ரூம்ல ட்ரீட்மெண்ட்டுல இருக்கா சீ இஸ் பைன்
"அப்படியா?? சாரதி முகத்தில் அவ்வளவு நிம்மதி....
"அவ மேல அப்படி என்ன அன்பு ,நானும் அவளும் உனக்கு ஒன்னாதான் அறிமுகம் ஆனோம்... பட் அவ என்ன ஸ்பெஷல் யூ ஆர் லவ் ஹெர்? லைக்கா கேள்வியில் ஏதோ ஒன்று ஒளிந்தே வர
"ம்ம் லவ் தான்!!! என்றதும் அவள் முகம் எங்கும் கருமை படர உடல் இறுக..லைக்கா கையில் இருந்த வாட் இஸ் லவ் என்ற தலைப்பு கொண்ட புத்தகம் ஆத்திரத்தில் நசுங்கியது ...
"வாட் யூ மீன் ?
லவ்தான்!!
ஓஓஓ பார்த்ததும் காதலா ஹாஹா உன் முகரைக்கு காதல் ஒரு கேடு சீசீ இந்த பழம் புளிக்கும் தொனி அது ... விழுப்புண் காட்டாது வீர சிரிப்பு காட்டியது அவள் முகம் ....
அவள் இளக்காரமான பேச்சும் பார்வையும் சற்று இல்லை அதிகமாகவே அவனுக்கு பிடிக்காது ... மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும் என்று நினைப்பவனுக்கு அவள் செய்கை முகத்தை தொய்ய வைக்க...
காதல் தான் , தங்கச்சி மேல ஒரு அண்ணனுக்கு இருக்கிற லவ் ... ஒரு தகப்பனுக்கு மகள் மீது இருக்கிற லவ் .... டேபிளில் அவள் கிடாசிய வாட் இஸ் லவ் என்ற புத்தகத்தை மறுபடி அவள் கையில் எடுத்து வருடியது....
நீ என்ன பசியா போட்டு வதைச்ச , அவ கையில இருந்த ஒத்த பழத்தையும் என் கையில தந்து தின்னு பாத்தான்னு ,என் முகம் காட்டுற பசியை அறிஞ்சவ, என் வலியை புரிஞ்சவ ஒவ்வொரு முறை நீ காயப்படுத்தும் போதும் என் காயத்தை குணமாக்க தெரியலைன்னாலும் அந்த காயத்தை மறக்க வச்சவ.. அவ மேல அன்பு காட்ட வருட பழக்கம் தேவையில்லை அதே போல உங்களை வெறுக்கவும் எனக்கு காலங்கள் தேவைப்படல... என்று மனதில் பட்டதை பட்டென சொல்லி விட்டு சாரதி போர்வையை இழுத்து மூடி படுத்து கொள்ள... லைக்கா தோளை உலுக்கியவள் ...
இது என் போர்வை கொடு "என்று போர்வையை உருவி கொண்டு
உன் தங்கச்சி கிட்ட போய் போர்வை கேளு தருவா " ... என்று விட்டு போய் விட்டாள்...
எப்பவும் கழுதை பித்தம் தின்னது போலவே தான் சுத்தும் போல இந்த புள்ள" என்று புலம்பிக் குரல் கேட்கத்தான் செய்தது ...
குளிரில் சாரதி இரவெல்லாம் நடுங்கிட அவள் அரக்கி போல உட்கார்ந்து பார்த்தபடி புத்தகத்தை புரட்ட ஒவ்வொரு பக்கமாக புரண்டது
காதலின் அத்தியாயங்கள் உள்ளே அவள் கண்கள் மட்டும் பிரவேசித்ததா எஃகு இதயமும் பிரவேசித்ததா ?? லைக்கா , மெல்ல தலையை தூக்கி சாரதியை பார்த்தாள் ...
காலையில் போர்வை உள்ளே பத்திரமாகத்தான் தூங்கி கொண்டிருந்தான் சாரதி ...
வதைப்பது அல்ல நேசம்
வதைபடுவதே நேசம் !!
புத்தகத்தின் பத்து பக்கத்தை புரட்டி இருந்தாள் அதில் காதல் என்பது காமம் தேடுவது இல்லை அன்பை தேடுவது என்ற வாக்கியத்தோடு ஆரம்பம் ஆகி இருந்தது ..
அன்பு செய்
அன்பு கிடைக்கும்
நேசம் பழகு
நேசம் கிடைக்கும்
காதலிக்க தயாராகு
காதல் கிடைக்கும் என்ற வார்த்தைகளை அவள் பேனா அடிக்கோடிட்டு இருந்தது ...
கடைசி பக்கத்தில் காதலித்து பார்
உன்னையே நீ வெறுத்துவிடுவாய்
காதலித்து பார்
வாழ்வு சுடுகாடாய் மாறும்
காதலை கொடுத்தால்
ஏமாற்றமே மிஞ்சும்
என்ற பக்கங்கள் அவள் கண்ணில் படாது போனது அவள் துரதிர்ஷ்டமே!!