எஃகில் கலந்த தளவம் 9
Egg9
9 எஃகில் கலந்த தளவம் !!
பனி சூழ்ந்த அந்த எஃகு ஆற்றில் ரத்தம் உறைந்த நிலையில் பார்த்தசாரதியும் அங்கயர் கண்ணியும் மயங்கி கிடந்தார்கள்....
நீலும் லைக்காவும் தங்களுக்கு தானே வைத்துக் கொண்ட சூனிய பொம்மைகளை சுட்டு கிடாசி விட்டு , அப்பாடா உணர்வில் எஃகு அரண்மனை நோக்கி நடந்து வந்து கொண்டிருக்க ... அந்த இருட்டில் இருவர் வழியையும் அடைத்தது போல் வெள்ளி ஆடையில் உருவம் ஒன்று நின்று கொண்டிருக்க... லைக்கா அப்படியே அந்த உருவத்தை கண்டு நின்றுவிட... நீல் தோளை உலுக்கிவிட்டு அந்த உருவத்தை கடந்து நகர போக...
அவன் மணிக்கட்டை பிடித்து அழுத்தமாக நிறுத்திய அந்த உருவத்தை அவன் கண்ணோடு கண் பார்க்க
யார் நீங்க? என்ற அசட்டையாக ஒரு பார்வை அவரைப் பார்த்தபடி கேட்க
ஓ மறந்திடுச்சோ அவனுக்கு அதே போல ஒரு பார்வையை பதிலாக கொடுத்த அந்த உருவம்
"ஐயம் பெல்லா 777, இப்போ நியாபகம் வந்துடுச்சா அவனுக்கு குறையாத திமிர் குரல் வர ...
பேசிட்டு வா லைக்கா ஐ ஹேவ் வொர்க் "என்று கையை உதறியவன் நகர போக ... மீண்டும் அவன் கையை விடாது,பிடித்தாற் பெல்லா.. நடுத்தர வயது பெண் இவர்களை போல வெள்ளி ஆடை மார்பு மீது பெல்லா 777 என்ன பெயர் ... முடி பாப் கட் , லேசர் பார்வை அவர்கள் கிரகத்துக்கே உரிய நடை, உடை பாவனை ....
"நான் உன்கிட்ட பேசணும் நீல்
"எனக்கு யார்கிட்டேயும் பேசத் தேவையில்லை....
"நான் ஒன்னும் சொந்த விஷயமா உன்கிட்ட பேசணும்னு சொல்லல நீல், இந்த பிளானட் பத்தி கமோண்டா நீல் 420 கிட்ட பேசணும்...
ப்ச்
"நீ செஞ்சிட்டு வர்ற காரியத்தை பத்தி பேசணும், என்றதும் நீல் கழுத்தை தடவிக் கொண்டே வெல்லாவை மேலும் கீழும் பார்க்க...
"அவங்க ரெண்டு பேர் உயிரையும் எடுக்க உங்களுக்கு அதிகாரம் கொடுத்தது யாரு? என்று அதிகார தொனியில் பெல்லா கேட்க ....
"அத சொல்ல நீங்க யாரு ?இந்த எஃகு சாம்ராஜ்ஜியத்தின் மெயின் கமோண்டா, நான் என்ன வேண்டுமானாலும் செய்யறதுக்கு எனக்கு அதிகாரம் இருக்கு ..
"என்ன வேணும்னாலும் செய்ய உனக்கு அதிகாரம் இருக்கு... ஆனா , இந்த பிளானட்ல யாருடைய ரத்தமும் அதுவும் நம்ம பிளானட் மக்களுடைய ரத்தம் சிந்தப்படவோ , எடுக்கப்படவோ கூடாதுங்கிறது இங்கு உள்ள சட்டம்... அதை மறந்து அவர்களை காயப்படுத்திட்டு வந்தது சட்டப்படி குற்றம் தெரியும் தானே? குற்றம் சாட்டும் குரலில் பெல்லா அவர்களை அதட்ட ...தோளை உலுக்கிய நீல்
"என் உலகத்தை அழிப்பேன்னு சொன்ன ரெண்டு பேர கொல்றதுக்கு எனக்கு யாரும் அதிகாரம் தரணும்னு அவசியம் இல்ல... இது என் கடமை ... என் உலகத்தை காக்க வேண்டிய பொறுப்பு என்னோடது... "
ஓஹோ
"அதோட அவங்க ஒன்னும் இந்த கிரகத்தோட வாசிக கிடையாது உலக வாசிகள்.... அதுகளை இத்தனை நாள் உயிரோடு விட்டு வச்சிருந்ததே பெருசு...
"ம்ம் சரிதான் நீ பெரிய மேதைதான் ஒத்துக்கிறேன் நீல் 420... ஆனா என்னைக்கு உன் கூட அவளும், அவ கூட அவனும் கலந்தானோ.... என்று லைக்காவை பார்க்க அவள் அமைதியாக நின்றாள் ... ரெண்டும் கேப்மாரில்ல, இவன் முப்பது தடவை போட்டு வச்சிருக்க அவள் நாற்பது தடவை மேட்டர் முடிஞ்சு போச்சு என்று கள்ள ரிப்போர்ட் போட்டு வச்சிருந்தாளே....
"அப்பவே அவங்க உங்கள்ல பாதி... இந்த கிரகத்துக்கு சந்ததிய உருவாக்கிக் கொடுக்கிற வேலையில அவங்களும் இணைஞ்சுட்டாங்க , எப்போ உன் குழந்தையை சுமக்கிறதுக்கு அவளை இந்த கிரகம் உள்ள கூட்டிட்டு வந்தியோ, எப்போ அவ கூட நீ கலந்தியோ அப்பவே அவ இந்த கிரகத்து வாசியா ஆகிட்டா.... அப்போ அவளை கொல்றதுக்கு உனக்கு என்ன உரிமை இருக்கு சொல்லு" என்ற பெல்லாவின் கேள்வியில் லைக்கா எச்சில் விழுங்க ..நீல் புருவத்தை வளைத்து பெல்லாவை ஒரு பார்வை பார்த்தவன்
அது எங்க ரெண்டு பேருக்கும் இடையில அப்படி ஒரு விஷயம் நடந்திருந்தாதான் அவ இந்த கிரகத்தோட வாசி என்றதும் பெல்லா சிரித்து கொண்டே
"என்ன விளையாடுறீங்களா ரெண்டு பேரும் ,இந்த ரெண்டு வாரத்துல நீங்க ரெண்டு பேரும் 28 நேரம் சேர்ந்து இருக்கிறதா ரிப்போர்ட் இருக்கு நீல் .... அதுவும் நீயே கொடுத்தது நீல் ... இப்ப நீ இல்லைன்னு சொன்னா .... இல்ல என்கிட்ட சொன்னதை நம்ம சீஃப் கிட்ட சொன்னா , உன்னோட பதவியை எடுக்கிறதுக்கான அதிகாரம் கூட நம்ம டீனுக்கு உண்டு தெரியும் தானே.... இல்ல அந்த பொண்ண தூக்கிட்டு வந்து நான் சும்மாவே வச்சிருந்தேன், என்னால அவ கிட்ட எதுவுமே செய்ய முடியலன்னு , உன் தோல்வியை ஒத்துக்க போறியா ? வெளுத்து வாங்கும் பெல்லாவிற்கு பதில் சொல்லாமல் நீல் முதுகை காட்டி கையை கட்டிய படி நின்று கொள்ள...
நேரே லைக்காவின் அருகே போன பெல்லா பளீர் என்று ஒரு அறை லைக்காவின் கன்னத்தில் விட்டார். லைக்கா கன்னத்தை பிடித்துக் கொண்டு பெல்லாவை முறைக்க ....
"என்னடி முறைப்பு, தொலைச்சு கட்டிருவேன்... நம்ம கிரகத்துக்காக அந்த உலகத்துக்குள்ள போராடிக்கிட்டு இருக்கோம் நாம செய்யுறது அத்தனையும் தப்புன்னு தெரிஞ்சாலும், இந்த கிரகத்தை காப்பாற்ற வழி இல்லங்குறதுனால இது எல்லாம் செய்றோம் ... ஆனா அந்த அப்பாவி ஜீவன்க ரெண்டும் என்ன செஞ்சுது... உங்களோட தேவைக்காக தூக்கிக் கொண்டு வச்சீங்க , பத்திரமா பாத்துக்க தேவையில்லை , ஆனா உயிரோடவாவது பாத்துக்கலாம்தானே.... உங்களால உயிரோட பார்த்துக்க முடியலன்னா .... அப்படியே விட்டுருந்தா எங்கையாவது போய் அதுக பாட்டை பார்த்து இருக்கும்... ஈவு இல்லாம சுட்டு போட்டுட்டு போறீங்க.. உங்க கிரக வாசிக உயிர் மட்டும் பெருசு அவங்க உயிர் அற்பமா போச்சா ஹான்...
"அது சரி உங்ககிட்ட ஈவு இரக்கமெல்லாம் எதிர்பார்க்கிறது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் ஆனா, இந்த கூட்டத்து நடுவுல ஈவு , இரக்கம் பத்தி பேசிகிட்டு இருக்கிற என்னைய பாத்தா, எனக்கே சிரிப்பா இருக்கு... இங்க பாரு அவனுக்கு சொல்லி புரிய வை, அவங்க ரெண்டு பேர் உயிர் போச்சு நீங்க ரெண்டு பேரும் செஞ்ச பிராடுதனம் அத்தனையும் சீஃப் கிட்ட விலாவாரியா ரிப்போர்ட் கொடுக்க வேண்டியது இருக்கும்...
ஆதாரம் இல்லாத எதுக்கும் இங்கே தண்டனை கிடையாது என் அறைக்குள்ள நடந்த எதுக்கும் யாரும் குற்றம் சாட்ட முடியாது" என்ற நீலை உதட்டை வளைத்து பார்த்த பெல்லா
யா ரைட் , பட் உன்னோட ரூம் சிசிடிவி ரெக்கார்டு என் கையில என்றவரை நீல் தீயாக முறைக்க...
இதை மட்டும் சீப் கிட்ட பார்வர்ட் பண்ணினேன், இவ்வளவு கஷ்டப்பட்டு நீங்க பிடிச்ச இடத்தை நீங்களே இழக்க வேண்டியது இருக்கும்....
"இந்த மிரட்டலுக்கு எல்லாம் பயப்பட மாட்டேன்னு சொல்லு லைக்கா" என்று முதுகை காட்டி நின்ற நீல் குரல் வர....
உன்ன பெத்த நானே உன்ன கொல்ல வேண்டியது இருக்கும்... பெத்த எனக்கு கொல்ல நேரம் ஆகாதுன்னு சொல்லிடு லைக்கா" என்று பெல்லா அங்கையும் சாரதியும் கிடந்த இடத்தை நோக்கி போக
"என்ன பெத்தா நீங்க பெரிய இவுங்களா, உங்களை கொல்றதுக்கும் எனக்கு நேரம் ஆகாது" என்று கோவத்தில் நீல் குரல் பின்னால் வர ... பெல்லா மெலிதாக சிரித்து கொண்டே
இத்தனை வருசம் இந்த கிரகத்துல தான் இருந்தேன் கொன்னிருக்க வேண்டியதுதான? பரவாயில்லை உன்ன நான்தான் பெத்தேன்னு தெரிஞ்சிருக்கே குட் "என்று விட்டு பெல்லா மகனை திரும்பி பார்க்க அவன் விறுவிறுவென கோவத்தில் எஃகு தளம் அதிர நடந்து போய் கொண்டிருந்தான்...
தாய்பாசமும் ,காதலும் ,அன்பும் இந்த தேசத்தை நிறைக்காம எதுவும் மாறாது... மாறும் இனி எல்லாம் மாறும் மாறணும்.... தன் தேசம் சுடுகாடாய் கிடக்கிறதே என்று அவர்கள் போராடினால் என் தேசம் அன்பை மறந்து ஓடி கொண்டிருக்கிறதே என்று பெல்லா மட்டும் வருந்தாத நாள் இல்லை ....
இங்கு அன்பு என்பது பெரும் பிழை!! அதை விரும்பும் யாவரும் வெறுக்கப்படுவர், ஒதுக்கப்படுவர்..எஃகாய் வாழ்ந்தால் மட்டுமே இவ்வுலகம் பாராட்டும் சீராட்டும் அதில் தனி ரகம் பெல்லா!!
"ம்மா" அய்யற்கன்னி வலியோடு கண்ணை திறக்க கண்ணாடி அறை ஒன்றில் படுக்கை மீது படுத்து கிடந்தாள்...
"ஹாய் பியூட்டி உடம்பு எப்படி இருக்கு?? என்று கண்ணாடி கதவை தள்ளி கொண்டு பெல்லா உள்ளே வர ....
"இது சொர்க்கமா நரகமா??? சொர்க்கமா இருந்தா ரம்பை , ஊர்வசி இருக்கிற இடம் தெரியுமா? நரகமா இருந்தா எமன் சார் இருக்கிற இடம் எங்க இருக்குன்னு அட்ரஸ் தர முடியுமா?
"ஹாஹா இது எஃகு தேசம் தான், உனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கல ப்யூட்டி "என்று பெல்லா சிரிக்க
"ஏதே மறுபடியும் அதே மெட்டலாண்டி ஊர்லதான் கிடக்கேனா.... , ஒழுங்கா சுட்டு இருக்கலாம் தான நிம்மதியா செத்து சொர்கத்தையோ நரகத்தையோ சுத்தி பார்த்து இருப்பேன் , போச்சு மீண்டும் மீண்டுமா என்று அங்கை உதட்டை சுளித்தவள் சட்டென முகம் கவலை ஆகி
"பார்த்தா
"ம்ம் பைன் ,லைக்கா ரூம்ல இருக்கான் ...
"கடவுளே கோடி நன்றி... நீங்க? என்று கேள்வியாக கேட்க
"பெல்லா இந்த பிளானேட்டோட ஹெல்த் கேர் சீப் ...
"டாக்ட்டரா?
"ம்ம் ..
"உடம்பு எப்படி இருக்கு .... எழும்ப முடியலையே வலி இருக்கே .... என்றவளை அமைதியாக பார்த்த பெல்லா
"சின்ன காயம் தான்
"எது சின்ன காயமா தென்னை மரம் வைக்கிற அளவு குழியா கிடக்கு இது உங்களுக்கு சின்ன காயமா...சரி சரி ரெண்டு செல்லோடேப் போட்டு ஒட்டி விடுங்க பார்த்தாவை போய் பார்க்கணும் பாவம் அவன்தான் வலி தாங்க மாட்டான் .... என்றவள் அசைய கூட முடியாத அளவு வலி சுரீர் என்றது ....
"பத்து நாளாவது அசையாம ரெஸ்ட்ல இருக்கணும் ப்யூட்டி....
"பத்து நாளா?? அவள் குருவியாக வாயை பிளக்க
ம்ம் ....
என்ன யாரு பார்த்துப்பா... ப்ச் அனாதை பொணமா போக போறேன், அதை நினைச்சு தான் கஷ்டமா இருக்கு ... இப்படி சாகடிக்கிற அளவு, நாங்க என்ன பண்ணிட்டோம் மேடம் ... என்றவளுக்கு பதில் சொல்ல தெரியாத பெல்லா
"அவங்க இதயம் கல்லு ,உன் இதயம் பஞ்சு
"இதெல்லாம் காரணமா?? என்னவோ போங்க இனிமே அந்த மெட்டலாண்டி பக்கமே போக மாட்டேன்" என்று முடிக்கும் முன் கண்ணாடி கதவை திறந்து கொண்டு நீல் வந்தான்!.! கூடவே அவர்கள் சீப் குவாக்கும் உள்ளே நுழைய ...
எப்படி இருக்கா? என்றார் குவாக்
"பைன் குவாக், இப்போதைக்கு ஓகே பத்து நாள் ரெஸ்ட்ல இருக்கணும்" என்ற பெல்லா நீலை பார்த்து கொண்டே
அதோட சந்தோஷமான விஷயம் ....அங்கா இஸ் பிரகனண்ட் என்று பெல்லா ரிப்போர்ட் நீட்ட
ஏதேஏஏஏஏஏஏஏஏ அங்கா அலற ...
"பசிக்கும்ல இந்தா தின்னு என்று ஆப்பிள் பழத்தை அவள் வாயில் திணித்த பெல்லா...
"நாற்பது நாள்ல தான் வழக்கமா கரு உண்டானது தெரியும்... நம்மகிட்ட இருக்கிற அட்வான்ஸ் ஸ்கேனர் இவளோட கர்பத்தை கிளியரா காட்டுது அதோட நீலோட கருமுட்டை வேற வெரி ஸ்ட்ராங் போல "என்று பெல்லா நீலை பார்த்து சிரிக்க ... அவன் பல் அரைபடும் சத்தம் அப்படியே அறை எங்கும் கேட்டது
வாவ்!! இதுக்காக தான இவ்வளவு செஞ்சோம் பெல்லா.....
"செஞ்சது எல்லாம் நல்லது தான் ஆனா அவ உயிருக்கு உத்திரவாதம் இல்லையே ..
"ஏதோ ஆனது ஆகி போச்சு இப்போ நம்ம கிரகத்து குழந்தையை சுமக்கிறா ??
"ம்ம் அதைத்தான் சொல்றேன் இங்க உருவாக போற ஒவ்வொரு உயிரோட ரெஸ்பான்சுபிலிட்டியும் நம்மோடது... சோ அவ காயம் ஆறும் வரை அவளை பார்த்துக்க வேண்டியது நீலோட வேலை
"நான் ஏன் பார்க்கணும்.. என்று எரிச்சலில் கத்த
"ஏன்னா அவ உன் பிள்ளைக்கு தாய் ...
"அப்படி எல்லாம் இல்லை அங்க ஒரு மயிரும் நடக்கல என்று நீல் வார்த்தையை வாய்க்குள் முனங்க
"ம்ம் சொல்லு அப்படி எல்லாம் ....
"ப்ச் ஒன்னும் இல்லை
"சீப் நான் சொன்னா நீல் கேட்க மாட்டான் உங்களுக்கே தெரியும் , நீங்களே சொல்லிடுங்க....
"அவங்க தான ஹெல்த் சீப் அவங்களை பார்க்க சொல்லுங்க என்று நீல் நழுவ
"எஸ் பட், இவளை மட்டும் பார்க்கிறது என் வேலை இல்லை .... எனக்கு தேவையும் இல்லை ....
"எனக்கு மட்டும் வேலையா ?அவன் சுக்கான்சட்டியாக கடுகடுக்க
"நீதானப்பா அவளை வச்சி யூஸ் பண்ணின ஆளு , உன் பிள்ளையை சுமக்கிறவ அதை பெத்து எடுக்கிற வரை உயிரோட இருக்கணுமே... பார்க்கிறதும் விடுறதும் உன் தனிப்பட்ட விஷயம் சீப் எனக்கு வேலை இருக்கு ஐ வில் மூவ் "என்ற பெல்லா.... ஆப்பிளை முடித்து விட்டு வாயை திறக்க போன அங்கை வாயில் ஆரஞ்சு பழத்தை திணித்து வைத்து விட்டு
"இதை மட்டும் அரைமணிநேரத்துக்கு திறக்காத" என்று விட்டு போக...
நீல்
பெல்லாவை முறைத்து கொண்டிருந்த நீல் குவாக் குரலில் திரும்பி பார்க்க
"யூ டிட் இட் நீல் ... பைனலி நம்ம கிரகத்து குழந்தை ஒரு உலகவாசி வயித்துல ..வாவ் !!! இனி நம்ம குலத்தை யாரும் அழிக்க முடியாது.... வெல்டன் பாய் என்று நீல் தோளை தட்டி கொடுக்க அவன் பல்லை கடித்தான்...
குழந்தை பிறக்கும் வரை அவளை பத்திரமா பார்த்துக்க அதுக்கு பிறகு உனக்கு செட் ஆகலைன்னா பார்த்துக்கலாம்.... விழுங்கிய பலாக்கொட்டை தொண்டையில் நின்றது போல ஆகி போனது...
அவன் ஒரு பொய்யை சொல்ல , அதே பொய்யில் மீண்டும் அவளை அவன் தலையில் கட்டி விட்டு பெல்லா போய் விட்டார்....
ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் மட்டும் தான் பண்ணணுமா
காதலும் பண்ணலாம் மக்களே !!
பொய்மையும் வாய்மை யிடத்து புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்
திருவள்ளுவர் வெகேசன் லீவுக்கு இவுக கிரகத்துக்கு போயிருக்கும் போது சொல்லி கொடுத்துட்டு வந்து இருக்கார்...