மூப்பு அடையா யட்சகா 5

Yacha5

மூப்பு அடையா யட்சகா 5

5 மூப்பு அடையா யட்சகா!!

தப்பு செஞ்சா சாமி கண்ணு குத்திடும் "என்று சிறுவயதில் தாய் சொல்லி வளர்த்தாள், இன்று அந்த சாமியே தன்னந்தனியாக அந்த இரவில் இவள் செய்ய போகும் செயலுக்கு துணை போல அவளை பார்த்தபடி இருக்க... சிறிது நேரம் கடவுளை முறைத்து முறைத்து பார்த்தவள் 

"என்ன அப்படி பார்க்காத நான் பயப்பட மாட்டேன், என்ன இந்த நிலைமையில வச்சது நீ ... கை நிறைய நான் கேட்டிருந்த காசை தந்து இருந்தா, இப்படி சீவி சிங்காரச்சு ஆம்பள பிடிக்க வந்து இருப்பேனா? எத்தனை நாள் உன் கால்மாட்டுல வந்து உட்கார்ந்து அழுதேன் காசு கொடுன்னு நீ தரல.. சோ என் வழியை நான் தேடிட்டேன், இப்ப முறைச்சு என்ன பயன்? உனக்கு நான் தந்த காலக்கெடு முடிஞ்சு போச்சு அவ்வளவு தான் , இனி நான் என் போக்குலதான் போவேன் , அமைதியா நின்னு வேடிக்கை பாரு குண்டக்க மண்டக்க எதாவது செய்ய நினைச்ச , சாமின்னு கூட பார்க்க மாட்டேன் பார்த்துக்க என்ன பத்தி தெரியும்ல" சாமியா இருந்தா என்ன ? எனக்கு எதை பார்த்தும் பயம் இல்லை என்பது போல சாமியோடு ஒரு சண்டை போட்டு முடித்தவள் .. கண்களை கூச செய்தது காரின் முகப்பு வெளிச்சம் 

"எந்த மயிராண்டி இது, கண்ணுக்கு நேரா இப்படி வெளிச்சத்தை அடிக்கிறான் ஓஓஓ அவரோ ? துரிதமாக தன்னை சரி செய்து கொண்டு கோவில் சன்னிதிவிட்டு வெளியே வந்தாள்.... தேனிசை படி இறங்கி வர , காரில் இருந்து உதட்டை மறைக்கும் மாஸ்க் போட்டு வாட்டசாட்டமாக வெள்ளை நிற சிகை தாடியில் கருப்பு நிற சட்டையில் இறங்கிய அந்த ஆடவன் டிரைவரிடம் குனிந்து ஏதோ சொல்ல, கழுத்தில் கிடந்த செயின் டால் அடித்தது... கையை நீட்டி ஏதோ சொல்லவும் கார் நகர ... சுற்றி முற்றி பார்த்த அவன் சட்டென தலையை தூக்கி பார்க்க 

இவர்தானா? இல்லை வேற யாருமா ?அடையாளம் தெரியாது தேனிசை பே என்று பார்த்தபடி ஒவ்வொரு படியாக கீழே இறங்கி வர..நிலா வெளிச்சத்தில் யட்சன் தேனிசையை கண்டு விட்டான்... 

வாவ்ஊஊஊஊ ஒரு நொடி மெய் சிலிர்த்து ஊன் அசைந்தது உள்ளம் துடித்தது, காது சிவந்தது கண்கள் பளபளத்தது பதுமை கண்டு மீசை துடித்தது , அவள் நளினம் கண்டு இளமை துள்ளியது, நரை அதிர்ந்தது ... இவன் கால்கள் அவளை நோக்கி நடக்க, அவள் பாதம் இவனை நோக்கி வர.... 

அவள் மேல்படியில் இவன் கீழ் படியில் யட்சன் தலையை தூக்கி அவளை பார்க்க , இவள் குனிந்து அவனை பார்த்தாள்...  

சாரி மிஸ் தேனிசை ரொம்ப நேரமா வெயிட் பண்ணுறீங்களோ?"

நடக்க முடியாது முட்டி பிடித்து கிழவன் ஒருவன் வருவான் என்று நினைத்த அவளுக்கு அய்யோ ஆகி போனது துள்ளி ஏறிய அவன் மிடுக்கு நடை கண்டு .... குரலில் வந்த கம்பீரம் அவன் நடையின் வேகம் எல்லாம் உதட்டை பிதுக்க வைத்தது..

உடலா அது எஃகு கரைத்து ஊற்றி தேகம் வளர்த்து இருப்பான் போல , அதுவும் அவன் போட்டிருந்த கருப்பு சட்டை ரெட்டை பட்டன் திறந்து விட்ட அழகு , கூலர்ஸ் சட்டை நடுவே கிடந்தது.. தோரணை குறையா கிரேக்க சிலையாக நின்றவன் முகம் தான் முழுதாக தெரியவில்லை என்ற சிறு வருத்தம் அவளுக்கு.... அவன் ஆண் கண்கள் சிற்பி விட்டு வெளியே வந்த முத்து போல அவளை உருட்டி உருட்டி பார்த்தது....

மிஸ்தான??? என்றான் பூத்திருந்த புதுமலர் போல தங்கத்தாமரையாக தன் முன் சேலையில் வளைந்து நெளிந்த வண்டு உண்ணும் தேன் போல நின்ற அவளை பார்த்தபடி...

"ம்ம் இப்போதைக்கு மிஸ்தான் .... அங்க போய் பேசலாமா சார் " ஆள் இல்லாத இடம் நோக்கி அவள் கை நீட்ட... 

"யா ஷுயர்" என்று யட்சன் முன்னே நடக்க, அவன் வேகத்துக்கு ஈடு கொடுத்து இவள் ஓடத்தான் வேண்டி இருந்தது ...,  

குளம் மீது நிலவு மகள் படுக்கை போட்டிருக்க, மலர துடித்த தாமரை சூரியன் வருகைக்காக தலை தொங்கி காத்து கிடக்க ... கீச் கீச் என்று வண்டுகள் சத்தமிட நீரில் மழைத்துளி சட் சட்டென விழ இருவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்தபடி நின்றனர் 

எப்படி தொடங்க அவனுக்கும் தெரியவில்லை அவளுக்கும் தெரியவில்லை ... அவனுக்கு அவளை நேரில் பார்த்த பிறகு, சகலமும் மறந்த நிலை எப்படியாவது அவளை சம்மதிக்க வைத்தே தீர வேண்டும் சொதப்பிட கூடாது என்ற பேராவல்... அவளுக்கு குடுகுடு கிழவன் வருவான் என்னத்தையாவது சொல்லி சமாளிச்சிடுலாம் என்று நம்பி வந்த தேனிசைக்கு ஏமாற்றமே .. உடும்பு போல தேகம் கொண்டவன் மிடுக்கு சற்று மிரட்டி பார்த்தது ... அமைதி கலைக்க நினைத்த யட்சன் 

"சோ, இது உங்களுக்காக வாங்கிட்டு வந்தேன்" என்று சிறு பார்சலை அவளிடம் நீட்டினான்.... அவள் கேள்வியாக அவனைப் பார்க்க 

"ஹே, ஜஸ்ட் ரிலாக்ஸ் .. முதல் முதல்ல உங்களை பார்க்க வரும்போது , வெறும் கையோடு வரக்கூடாதுன்னு கொஞ்சம் பூ பழம் வாங்கிட்டு வந்தேன் ..அவ்வளவுதான் "என்றதும் தேனிசை சிறிது நொடி தாமதத்திற்கு பிறகு கையை நீட்டி அதை வாங்கி தன் ஹேண்ட்பேக் உள்ளே வைத்தவள்... அவளும் உள்ளிருந்து ஒரு சிறிய பேப்பர் மடிப்பை எடுத்து திறந்து அவன் முன்னால் நீட்டினாள் குங்குமம் இருந்தது.. அவன் கண்ணை சுருக்கி என்ன என்பது போல கண்ணால் கேட்க... 

"சாரி , நான் எதுவும் வாங்கிட்டு வரல அதான் கோவில் பிரசாதம் இது, கடவுள் நம்பிக்கை இருந்தா எடுத்து வச்சுக்கோங்க " என்று நீட்டியவள் கைகள் சற்று நடுங்கத்தான் செய்தது..

அடடா !! இந்த குரலை காலம் முழுவதும் கேட்டுக் கொண்டிருக்கலாம்,, பெயர் மட்டும் இனிக்கவில்லை, குரலும் தித்திப்பாக இனித்தது... பிகு செய்யாது யட்சன் கைகள் அதை நீட்டி எடுத்து நெற்றி மறைத்த தன் வெள்ளை சிகையை நகட்டி குங்கும கீற்றை வைத்தவன் கைகள் போகும் திசையை தேனிசை பார்த்து கொண்டு நின்றாள் அவன் கையை அசைக்கும் போது கையில் உள்ள கைசெயின் க்ளுக் க்ளுக் என்று உரசி சத்தமிட்டது ..

"பைல் பார்த்தேன், எனக்கு ஓகே , நீங்க என்ன முடிவு எடுத்து இருக்கீங்க மிஸ் தேனிசை" .... நேரே விஷயம் வந்து விட்டான் அவள் கையை பிசைந்தபடி 

"சாரி சார் உங்க டைம் வேஸ்ட் பண்ணியதுக்கு... எனக்கு விருப்பம் இல்லை " இவளும் உடனே மறுத்து விட்டாள் ஆசையில் மண் விழுந்தது போல உணர்வு.. சுள்ளென அவனுக்கு கோவம் வந்தது 

இப்படி தங்க தேர் போல வந்து நின்ற அவளை பார்த்தபிறகு விட தோணலயே 

வாட் ?? 

"அதை சொல்லத்தான் வந்தியான்னு கேட்காதீங்க சார் ... பட் அதை சொல்ல தான் வந்தேன் ... அவன் ஏதோ வாயை திறக்கும் முன்  

"அப்புறம் என்ன மயித்துக்கு பைலை கொடுத்தேன்னு கேக்காதீங்க , அப்போ எனக்கு இதோட வீரியம் புரியல இப்ப இது சரியா வரும்னு தோணல ... ஐயம் ரியலி சாரி சார் .... கோவப்படாதீங்க... அவள் கண்கள் சற்று கலங்கி அதே சமயம் கட் அன்ட் ரைட்டாக வார்த்தை தெறித்து வந்தது ... 

"அப்போ உங்க பணத்தேவை நிவர்த்தி ஆகிடுச்சா ?

"ம்ஹூம் ... என்று அவள் எங்கோ பார்த்து கண்ணீரை துடைக்க ... சட்டை பாக்கெட் உள்ளே இருந்து செக் ஒன்றை எடுத்து அருகே இருந்த சுவரில் வைத்து கையெழுத்து போட்டு நீட்டியவன்

இதுல 10 லட்சம் இருக்கு "

"எதுக்கு? நான் வேண்டாம்னு சொன்னேனே " வாங்காது அவனை பார்த்தாள் ...

"உங்கள நானும் கம்பெல் பண்ணல, தேவை இருக்குன்னு சொன்னீங்களே அதான் வச்சிக்கோங்க 

சாரி அகெய்ன், எனக்கு நீங்க காசு தர்ற அளவு , இதை நான் வாங்குற அளவுக்கு, எனக்கும் உங்களுக்கும் இடையே எதுவும் இல்லை வேண்டாம் "மெலிதாக புன்னகை செய்தாள்.. என்றதும் இன்னும் இன்னும் அவளை ஏனோ பிடித்து தொலைத்தது...  

வேணும்னா என்றவளை ஆர்வத்தோடு யட்சன் தலையை தூக்கி பார்க்க 

வேணும்னா ஆஆஆஆ 

இல்லை வேற யாராவது அனுப்பி வைக்கவா சார் 

"ப்ச் நோ நீட் 

"இல்ல எதிர்பார்ப்போட வந்து இருப்பீங்களே அதான் கேட்டேன்" என்று இழுத்தாள் ...

"யா எதிர்பார்த்து தான் வந்தேன் ... நீங்கன்னா ஓகே இல்லை வேண்டாம் .... என்று நடக்க ஆரம்பித்து விட்டவன் முன்னே வந்து நின்ற தேனிசை 

"ஒரு நிமிஷம் சார் ... 

"என்ன ? 

"பணம் வேணும்தான், பட் முடிவு எடுக்கவும் தயக்கமா இருக்கு ... எனக்கு என்ன பண்றதுன்னு தெரில அதான் ...

சோ என்ன பண்ண சொல்றீங்க ? அதான் வேண்டாம்னு சொல்லுறீங்களே" அத்தனை வயது குறைந்த பெண்ணை மரியாதையாக அவன் அழைப்பது ஏனோ இவளுக்கு பிடித்தது ... ஜொள் வடிக்காத பார்வை தெளிவான பேச்சு நடத்தை ஜென்டில்மேன் என்று முதல் பார்வையில் சர்டிபிகேட் வாங்கி விட்டான்... 

"ஒரு மாசம் டைம் எடுத்துக்கவா சார் 

"எதுக்கு அப்பவும் நோ சொல்லவா  

"இல்ல இல்ல , அந்த ஒரு மாசத்துல மறுபடியும் உங்களை தற்செயலா மீட் பண்ணினேன்னு வச்சிக்கோங்க...

"ம்ம் வச்சிக்கிட்டா" ரசனையாக தலையாட்டினான்..

"கடவுள் உங்களை என் கூட கோர்த்து விடுறான்னு வச்சிக்கலாம்... நான் ஓகே சொல்லிடுவேன்... இது மித் தான் பட் ட்ரை பண்ணுவோமே, சிறுபிள்ளை போல பிதற்றும் அவள் பேச்சு உதட்டை விரிய வைத்தது ....

ஒருவேளை உங்களை மீட் பண்ணவே இல்லைன்னா நோதான் சார்...

என் முகமே தெரியாது பின்ன எப்படி நான்னு கண்டுபிடிப்பீங்க?  

"நீங்க மரு வச்சா மார்வேடம்னு அந்த கால படத்தை பார்த்துட்டு மாஸ்க் போட்டு முகத்தை மறைச்சுட்டு வந்தா அடையாளம் தெரியாதா சார் .... கண்ணை கட்டி விட்டாலும் உங்களை அடையாளம் கண்டு பிடிச்சுடுவேன் அவன் கண்கள் அகல விரிந்தது 

எப்படி?  

உங்க கண்ணு போதும் உங்களை கண்டுபிடிக்க அதோட ம்ம்ம் என்று மூக்கை இழுத்து சுவாசித்த தேனிசை 

லாவண்டர் சென்ட் வாசம் , அப்புறம் நீங்க நடக்கும் போது உங்க சைசெயின் உரசும் சத்தம் எல்லாம் மைண்ட்ல ஸ்டோர் ஆகிடுச்சு...

ம்ம் பரவாயில்லையே உசார் பேர்வழி தான் போல ....

"பின்ன இந்த கேடுகெட்ட உலகத்துல மூளை இல்லைன்னா வாழ முடியாதே , ஓகே சார் கடவுள் மறுபடி உங்களை மீட் பண்ண வச்சா மேற்கொண்டு பேசுவோம்"

எனக்கு நம்பிக்கை இருக்கு மறுபடியும் ரெண்டு பேரும் மீட் பண்ணுவோம்னு "

எப்படி எப்படி ??"

கடவுளுக்கு லஞ்சம் கொடுத்துடுவேன்... முப்பது நாள் கழிச்சு பார்க்கலாம் பாய் என்றவன் போனை எடுத்து காரை வர சொல்ல ....

தனியா போயிடுவீங்களா மிஸ் ... 

ம்ம் அகெய்ன் சாரி உங்களை அலைய வச்சதுக்கு வர்றேன் என்று மழையில் நனைந்த படி பஸ்ஸ்டாப் நோக்கி ஓடிய அவளை ஏனோ விடவே தோன்றவில்லை..   

நீ சொன்னது போல இந்த முப்பது நாள்ல மறுபடியும் நீ கண்ணுல மாட்டின நீதான்டி என் ஆசைக்கு வடிகால்.. ஒருவேளை படல தப்பிச்ச என்று உடலை நெட்டி முறித்தவன் வாழ்கையில் பல நாளைக்கு பின் வந்த வண்ண இரவு இது .... 

ஒவ்வொரு நாளாக கடந்தது .. போகும் இடமெங்கும் யட்சன் கண்கள் அவளை தேடியது ... நாட்கள் கழிய கழிய ஒருவேளை கடவுள் இது தவறு என்று அவளை என் கண்ணில் காட்டவில்லையோ ... என் ஆசை தவறோ என்று தன் எண்ணம் போகும் நிலை நினைத்து வயது மறந்து பறக்க நினைத்த மடமை நினைத்து தன்னை சரி செய்ய நினைத்தாலும் .. ஒருநாள் வந்து போன அவளை மீண்டும் சந்திக்க ஆசையில் மனமும் உடலும் பேயாட்டம் போட்டது 

சார் ஏற்காட்டு ரெசார்ட்ல தீ விபத்து போல , ஸ்டேசன்ல ஏதோ கம்ப்ளைன்ட் ஆகிடுச்சாம், ஓனரை நேர்ல வந்து மீட் பண்ண சொல்லி இருக்காங்க" என்ற சண்முகம் வந்து சொல்ல .. 

30 நாள் முடிய போகிறது.. இன்று கடைசி நாள் இரவு.. இந்த ஒரு நாளில் என்ன நடக்க போகிறது... வேலையை பார்ப்போம் என்று யட்சனும் ஏற்காட்டுக்கு கிளம்பி விட்டான் ... நடு இரவு சரியான மழை தனியாக கார் ஓட்டி கொண்டு வந்தான்.... யாரோ அந்த இருட்டில் பைக்கை தள்ளி கொண்டு மழையில் நனைந்த படி விறுவிறுப்பாக நடந்து போய் கொண்டிருக்க.., 

அய்யோ பாவம் பைக் பஞ்சர் போல "என்று நினைத்த யட்சன் காரை அருகே கொண்டு வர வர அது பெண் என்று தெரிந்தது..

பொண்ணா பரவாயில்ல செம தைரியம் தான் என்றவன்... தைரியம் என்றதும் தேனிசை நியாபகம் வந்தாள் 

ம்ம் சுகர்பேபி போல யாரும் வர முடியாது , என்னா பேச்சு தோரணை ஒரு மாசம் முடிய போகுது இனி என்னத்த .. நமக்கு சாகுற வரை இனி கிளுகிளுப்பே இல்லை போல .. வேலையை கட்டிக்கிட்டு சாக வேண்டியதுதான் "என்று புலம்பிய யட்சன் கார் அந்த பைக் முன்னே வந்து நின்றது ... 

மேடம் எனி ஹெல்ப் என்று கார் விண்டோவை திறந்து கேட்க, தன் அருகே கார் வந்து நிற்கவும் அந்த பெண் திரும்பி பார்க்கவும் மின்னல் வெளிச்சம் அவள் முகத்தில் விழுந்து அவள் யார் என்று காட்டியது

அங்கே நின்றது தேனிசை !!   

இளைய வயதுக்காரன் கூடத்தான் கடவுள் இணை சேர்க்க வேண்டுமா என்ன ?

நரை அழகனோடு கூட இணைக்கலாமே!!