அஃது 17
Akthu17
17 அஃது!!
தன் மகளின் இருதய சிகிச்சைக்காக கருப்பன் செண்பகம் அவன் மகள் அனைவரும் அர்ஜூன் சொன்ன மருத்துவமனையின் வாசலில் வந்து அண்ணாந்து பார்த்தனர் ..
"என்ன மச்சான் இம்புட்டு பெரிசா இருக்கு, இங்க செலவு செய்ய நம்ம கையில காசு இல்லையே.. வெறும் ஒரு லட்சத்தை வைத்து எப்படி பாப்பாவுக்கு குணப்படுத்த போறோம்" என்று சொன்ன மனைவியை அவனும் பாவமாக எச்சில் விழுங்கிப் பார்த்தான்...
"தெரிலேயே செம்பா அர்ஜூன் அய்யாதான் இங்க வர சொன்னார் நம்ம நிலமையை அவர்கிட்ட சொல்லுவோம்..
அதற்குள் காரில் இருந்து அர்ஜூன் இறங்கி வர அவன் அருகே அவன் மனைவி ஐசுவர்யாவும் அவனோடு சிரித்த முகமாக இறங்கி வந்தாள்
"ஐசு , ஒரு பெரிய மனுஷனை அறிமுகம் பண்றேன்னு சொல்லி இருந்தேன்ல.. அது இவர்தான் என்று அர்ஜூன் வாரியர் தன் மனைவிக்கு கருப்பனை அறிமுகம் செய்ய..
"வணக்கம் அண்ணா நல்லா இருக்கீங்களா நல்லா இருக்கீங்களா அண்ணி என்று பட்டு சேலையில் வந்து நின்ற அந்த பெண்ணை பார்த்து இருவரும் நெளிய ...
"எங்க கையில எதுவும் வாங்க மாட்டீங்கன்னு தெரியும் .. பட் முதல் முதல்ல உங்கள பார்க்க வரும்போது சும்மா வரக்கூடாதுல்ல , அதான் பூ வாங்கிட்டு வந்தேன் வச்சிக்கிறீங்களா அண்ணி என்று அர்ஜூனின் மனைவி கைநிறைய பூவை எடுத்து செண்பகம் கையில் கொடுக்க.. அவள் கணவனை திரும்பி பார்க்க.. கருப்பன் சரி என்று சொன்னது அதை வாங்கி தலையில் சூடிக்கொண்டாள்..
"என்ன கருப்பன் இங்கேயே நின்னுட்டீங்க டாக்ட்டர் சாரை பார்த்தீங்களா... "
"ம்ஹூம் உள்ள போக பயமா இருக்கு சார் , நீங்க சொன்னிங்கன்னு இந்த ஹாஸ்பிட்டலுக்கு வந்துட்டோம், பார்க்க ரொம்ப பெருசா இருக்கு .. என் கையில ஒரு லட்சம் ரூபாய் தான் இருக்கு" என்று கருப்பன் தயக்கமாக அர்ஜூனை பார்க்க...
"டாக்டர் எனக்கு தெரிஞ்சவர்தான் வாங்க பேசிக்கலாம் என்றதும் அர்ஜூனின் பின்னே அவர்கள் நடக்க ஆரம்பிக்க...
டாக்டர் சூரிய பிரகாஷ் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் என்ற பெயர் பலகை தாங்கிய கதவை திறந்து கொண்டு அர்ஜூன் உள்ளே வந்தான்..
"கேஸ் பைலை புரட்டி கொண்டு இருத்த சூர்யபிரகாஷ் தலையை தூக்கி பார்த்தான்....
"வணக்கம் சூர்யா சார் எப்படி இருக்கீங்க
"ம்ம் பைன் நீங்க ?
"குட் , நான் நேத்து ஒரு பேஷண்ட் விஷயமா உங்ககிட்ட பேசி இருந்தேனே
"யா ரிப்போர்ட் எல்லாம் பார்த்தேன் அர்ஜூன், சீக்கிரமாவே ஆப்ரேஷன் பண்ணிடலாம் என்றதும் கருப்பன் கையை கட்டிய படி சூரிய பிரகாஷ் முன்னால் நிற்க குழந்தையை முழுதாக செக் செய்த சூர்யபிரகாஷ்...
"குழந்தைக்கு மேஜர் ஆபரேஷன் தான் பண்ண வேண்டியது இருக்கு ,
"ஓஓஓ பண்ணினா புள்ள புளைச்சிடுமா சாமி.. எனக்கு இருக்கிறது ஒரே புள்ள தான் , இவங்க ரெண்டு பேரும் இல்லன்னா நான் வாழ்றதுக்கே அர்த்தமில்லாம போயிடும் சாமி எப்படியாவது காப்பாத்தி தாங்க" என்று கைகூப்பி தொண்டை கரகரக்க கருப்பன் குலசாமியாக சூரிய பிரகாஷை பார்க்க
எவ்வளவு பணம் தேவைப்பட்டாலும் தர்றேன் சாமி ஏதோ கிட்னி வித்தா பைசா தருவாங்கன்னு வெளியில் பேசிகிட்டு இருந்தாங்க, ரெண்டு கிட்னியில ஒன்னு கொடுத்தா என் மகளுக்கு இருதயத்தை சரி பண்ணிடலாமா சாமி "என்றவன் இதுவரை அவன் பார்த்த அத்தனை நாயகர்களிலும் ஒரு படி மேல்தான்....
செலவு ஜாஸ்தியாக தான் செய்யும், எவ்வளவு வச்சிருக்கீங்க?? என்று சூரிய பிரகாஷ் நெட்டி முறிக்க
கருப்பன் , தன் வேட்டியில் முடிந்து வைத்திருந்த அத்தனை கசங்கிய காகித பணங்களையும் மேஜையில் கொட்ட சில்லறை, கிழிந்த ரூபாய் அதில் ஒட்டு போட்ட ரூபாய் என்று ஒரு லட்சம் ரூபாய் மேஜை மீது குவித்து வைத்தவன்
இவ்வளவுதான் இருக்கு சாமி என்றதும் சூரிய பிரகாஷ் அதில் இருந்து 100 ரூபாய் நோட்டை எடுத்து தன் பாக்கெட்டில் வைத்துக் கொண்டவன்...
எப்பவுமே இலவசம் எனக்கு பிடிக்காது, ஏன்னா திறமை இருக்கிற எவனும் எதையும் ஓசியா கொடுக்க மாட்டான் ... சோ உங்க மகளுக்கு செய்ய வேண்டிய சிகிச்சைக்கு என்னுடைய பீஸ் நான் எடுத்துகிட்டேன் இது போதும்..
ஐயா என்று கருப்பன் அதிர்ச்சியாக பார்க்க
மிஸ்டர் அர்ஜூன் நேத்து எல்லாத்தையும் சொன்னார்
அனுதாபத்தால எனக்கு யாரும் உதவி செய்ய வேண்டாம் சாமி .."
ஹாஹா இது அனுதாபம் இல்லை , எங்களுக்கான கடமை எங்களுக்கு கொடுக்கப்பட்ட கடமை... அத நாங்க செய்யலன்னா வேற யாரு செய்வா... ஆபரேஷன் முடிஞ்ச பிறகு உன் மகளுக்கு நிறைய ஹெல்தியா சாப்பாடு கொடுக்கணும்... சோ இத வச்சு அதை வாங்கு நர்ஸ் ...
எஸ் சார் "
மிஸ்டர் கருப்பனை கூட்டிட்டு போய் ஏ கிளாஸ் ரூம்ல தங்க வைங்க ... குழந்தையுடைய சிகிச்சை முடிஞ்சு போகிற வரைக்கும் அவருக்கான அத்தனையும் இந்த ஹாஸ்பிட்டல் நிர்வாகம் தான் செய்யணும் அதுல ஏதாவது குறை இருந்துச்சு
இல்ல சார் எல்லாத்தையும் கரெக்டா பார்த்துடுவோம் என்றதும் ராஜ கவனிப்பில் கருப்பனின் மகள் சிகிச்சை அங்கு நடைபெற்றது .....
ஏழைகளின் நியாயம் சபை போய் சேராது தங்களுடைய நியாயத்தை கேட்க கூட பணமும் அதிகாரபலமும் தேவைப்படுகிறது ... எத்தனை கருப்பன் இதே போல் போராடி தங்களுக்கான நியாயத்தை வாங்கிக் கொள்வார்கள் ...
கோவில் திருவிழா ஜெஜெ என நடந்து கொண்டிருந்தது ...மூன்று கார்களில் வந்து நண்பர்கள் தங்கள் குடும்பத்தோடு இறங்கினர்....
"டேய் ரவி பூ வாங்கிட்டு வா , நான் அன்னதானம் ரெடியாகிட்டான்னு பார்த்துட்டு வர்றேன் என்று கிருஷ் இறங்க...
இவன் மட்டும் எப்பவும் லேட்தான் என்று கடைசியாக வந்த அருணை திட்டி கொண்டே அத்தனை பேரும் கோவில் உள்ளே நுழைந்தனர் ..
குடும்பத்தின் அருமை தெரிந்து கொண்டனர் ... மூவர் குடும்பமாக சேர்ந்தது வார கடைசியில் எங்காவது போவது இருக்கும் பணத்தில் ஒரு பகுதியை இல்லாத பேருக்கு கொடுப்பது என்று தங்களை முழுதாக மாற்றி விட்டனர்....
மூன்று குடும்பமும் திருவிழா முடித்து விட்டு வெளியே வர ...
வளையல் வளையல் என்ற குரலில் அத்தனை பேரும் ஒன்றுபோல திரும்பினார்கள் ... கோவில் வாசலில் கருப்பன் வளையல் வியாபாரம் செய்து கொண்டு நின்றான்... அவன் அருகே நிலா புத்தகத்தை புரட்டி கொண்டிருக்க , செம்பா சாய்வு நாற்காலி ஒன்றில் பூவை தொடுத்து கொண்டே வேடிக்கை பார்த்தவள் இவர்களை கண்டு மெலிதாக சிரிக்க ...அந்த சிரிப்பில் தான் இவர்கள் சிதைபடுவது இத்தனை நடந்த பிறகும் அவர்களை சினேகிக்க ஒருத்தியால் முடியும் என்றால் அவள் எப்பேற்பட்ட பண்பு உள்ளவளாக இருப்பாள் , அவளை போய் இப்படி ஆக்கி விட்டோமே என்று எப்போதும் வலிக்கிறது...
அய் வளையல் மாமா என்று குழந்தைகள் மூன்றும் ஓடி வந்து கருப்பன் கையை பிடிக்க
:எப்படி இருக்கீங்க கண்ணுகளா "
"நல்லா இருக்கோம் மாமா ... திருவிழா வந்தோம்.... நண்பர்கள் மூவரையும் கருப்பன் தலையை தூக்கி பார்க்கவில்லை.... எதாவது பேச மாட்டானா என்று ஏக்கமாக அவர்கள் பாக்க ... அவன் பார்வை பிள்ளைகள் புறமே, இவர்கள் கொடுத்த உதவியையோ இல்லை இவர்கள் நிழலில் வாழ பழகி இருந்தாலோ இத்தனை வருத்தம் இருந்திருக்காது.... எதுவுமே வேண்டாம் உன்னை மன்னிக்கவும் மாட்டேன் என்று போன கருப்பன் சரியான தண்டனையை அவர்கள் வாழ்நாள் முழுக்க கொடுத்து விட்டான் ...
பிள்ளைகள் கையில் கண்ணாடி வளையல்களை மாட்டி விட்டவன் சிறுது நேரம் அவரகளிடம் பேசி விட்டு அனுப்பிவிட ....
"அம்மா நிலா அக்கா பத்தாப்புல பஸ்ட் வந்திருக்காம்..
"ஓஓஓஓ
"இங்கதான் கோவில் பக்கம் வீடு கட்டி இருக்காங்களாம்
"ஓஓஓஓ
டவுன்ல புதுசா கடை போட்டிருக்காங்களாம், நேரம் கிடைக்கும் போது இப்படி திருவிழா கடையும் போடுறாங்க போல" என்று மூன்று குழந்தைகளும் அவர்கள் பற்றிய விஷயத்தை கூறி கொண்டே வர காரில் சாய்ந்து நின்ற நண்பர்கள் கண்கள் கருப்பன் குடும்பத்தையை வெறித்து பார்த்தது ...
செம்பா சோற்றை பிசைந்து கருப்பன் கையில் கொடுக்க அவன் அதில் ஒரு உருண்டையை மனைவி வாயில் அள்ளி கொடுக்க ...
அவனே மனதால் ஒரு கோடிஸ்வரன் !!
அவன் முன்னே அத்தனை பேரும் தோற்று தான் போயினர் ..
கருப்பன் தனக்கு இவர்கள் செய்ததை மறந்தே போனாலும் இவர்களை மறக்க விடாது ....
மனிதனை மதிக்க தெரியாத எவனும் மனிதனாக இருக்க தகுதி அற்றவன் ....
ஏழையோ இருப்பவனோ இல்லாதவனோ மதிக்க கற்று கொள்ளுவதே மாண்பு !!
மாண்பை தொலைத்து மனிதம் இழக்காதீர் !!
நன்றி
வாழ்க வளமுடன் ,
வாழ்க தமிழ் ,
வளர்க தமிழ்நாடு !!