அஃது15
Akyhu15
15 அஃது !!
கருப்பன் இடுப்புக்கு கீழே செயல் இழந்த தன் மனைவி செண்பகத்தை தூக்கிக் கொண்டு வந்து அவர்கள் முன்னால் அமர வைக்க... மூவருக்கும் வெட்கி தலை குனிவதைத் தவிர வேறு வழியில்லை...
தன் பிள்ளைகளையோ மனைவிமார்களையோ பார்க்க முடியவில்லை, எல்லா மனைவிகளுக்கும் தன் கணவர்கள் ஹீரோக்கள்தான் .. ஆனால் இப்படி ஒரு குடும்பம் சிதைந்து போக காரணமாய் இருக்கும் தன் கணவர்களை எப்படி ரசிக்க.. கருப்பன் காலடியில் கட்டிக் கொண்டு நின்ற அந்த கருப்பு தேவதை பெண்ணை அத்தனை பேரும் கண்கள் கலங்க பார்த்தனர்...
இதுதான் கருப்பன் மனைவி செண்பகம் இது அவர் மகள் நிலா என்று அர்ஜூன் அறிமுகம் செய்ய அய்யோ என்று ஆகி போனது ..
அன்னைக்கே எங்க மூணு பேரையும் கார் விட்டு ஏத்தி கொன்னு இருந்தா கூட நாங்க மூணு பேரும் சேர்ந்து நிம்மதியா போயிருப்போம் ஆனா இப்படி குறை உயிரா எங்கள ஆக்கிட்டீங்களே....என்றவன் குற்றச்சாட்டில் குருகி போயினர்...
"கருப்பன் ஏதோ சின்ன அடியாய் இருக்குன்னு நினைச்சு தான் நாங்க அன்னைக்கு அப்படி நடந்துக்கிட்டோம்.. இவ்வளவு பெரிய இஞ்சுரி இருந்திருக்கும்னு நாங்க நினைக்கல, அதோட அன்னைக்கு இருந்த நிலைமையில் எங்களுக்கு நிதானம் இல்லாம போயிடுச்சு" என்று அருண் போய் கருப்பன் கையில் பிடிக்க... அந்த கையில் அன்றைய தினத்திற்குரிய திகில் இன்னும் நடுக்கமாக கருப்பன் விரல்களில் இருக்க...
"இரத்தமும் சதையுமா பிஞ்சு கிடக்கும் போது அசால்டா பணத்தை தூக்கி போட்டுட்டு போயிட்டீங்க ஆனா சிதைஞ்சு போனது எங்க உடம்பு மட்டும் இல்ல, எங்க குடும்பமும் தானே இன்னைக்கு உங்க குடும்பம் அலறும்போது வலிக்குது அன்னைக்கு என் குடும்பம் அலறும் போது உங்களுக்கு அந்த சத்தம் இசையா கேட்டதோ?? என்றவன் பேச்சில் மூவரும் எச்சில் விழுங்கினர்.. அருவருப்பான காரியத்தை செய்து விட்டனர் மன்னிப்பு கூட கேட்க முடியாத நிலையில் மூவரும் நின்றனர்...
"காக்கையும் குருவியும் கூட தான் இனத்துல இன்னொரு உயிர் போனா, நாள் முழுக்க கரையுது ஆனா இந்த மனித ஜந்து மட்டும்தான் இன்னொரு உயிர் கஷ்டப்படும் போது சகஜமா கடந்து போயிடுது, இல்ல போனை வச்சு அதை வீடியோ எடுத்து லைக் வாங்க அலையுது ,, இன்னும் சிலர் எனக்கு என்ன வந்தது என் வீட்டிலேயா துக்கம் நடந்திருக்குன்னு அசால்டா கடந்து போயிடுறாங்க..
"குற்றம் செஞ்சது அத்தனையும் நீங்க, ஆனா கஷ்டம் எல்லாம் எனக்கா?? மான் போல துள்ளி ஓடுன என் மனைவி இன்னிக்கு முடங்கி கிடக்குறா.. என் பொண்ணு உயிர் வாழ்வாளா நாளைக்கு உயிரோடு இருப்பாளான்னு பயந்து பயந்து என் மகளை பார்த்து ஒவ்வொரு நாளும் பதறி ஒரு வாழ்க்கை... இதுக்கெல்லாம் காரணம் நீங்க!! உங்க குடும்பம் உங்க பிள்ளைங்க கஷ்டப்படும் போது உங்களுக்கு எவ்வளவு வலிக்குது பதறுது எனக்கும் இதே வலி இருந்திருக்குமே..
"கருப்பன் மன்னிச்சிடு
"ஹா ஹா மன்னிப்பு இந்த மன்னிப்பு இந்த வார்த்தை இருக்கிறதுனால தானே எல்லா தப்பையும் அசால்டா எல்லாரும் பண்ணிட்டு இருக்கீங்க, எல்லாத்தையும் பண்ணிட்டு மன்னிப்பு கேட்டுக்கலாம் மன்னிப்பு அதைக் கேட்டதும் எல்லாம் மாறிடுமா சார்... இந்த மன்னிப்பு கேட்கிறதுனால என் மகளோட இருதயம் சரியாகிடுமா, இந்த மன்னிப்பு கேட்பதினால என் மனைவியோட துள்ளலை மறுபடி பார்க்க முடியுமா எதையும் உங்களால திருப்பி தர முடியாது இல்ல ??"
ரவி இல்லை என்ற தலை ஆட்ட
"நியாயப்படி எனக்கு ஏற்பட்ட அத்தனை வலியையும் உங்களுக்கு கொடுக்கணும்னு நான் நினைச்சிருந்தா உங்க குழந்தைகளை எல்லாம் உயிரோடவே விட்டு இருக்க கூடாது ... ஆனா நீங்க மனுஷனா நடந்துக்கல நான் மனுஷனா தான் இன்னும் இருக்கேன்... எனக்கு வலிச்ச மாதிரி உங்களுக்கு வலிக்க கூடாது என்கிற காரணத்துக்காகதான் உங்க பிள்ளைகள எல்லாம் கொண்டு வந்து அப்படியே கொடுத்து இருக்கேன்... நீங்க செஞ்ச தவறுகளுக்கு அந்த புள்ளைங்க என்ன பாவம் செஞ்சதுன்னு, அவங்க மேல சுண்டு விரல் கூட படாமல் மறுபடி கொண்டு வந்து கொடுத்து இருக்கேன் .. உங்க மன்னிப்போ இல்ல உங்க ஆறுதலோ எனக்கு தேவையில்லை இனிமையாவது மனிதனா நடந்துக்கோங்க... எல்லாருக்கும் இருக்கிறதும் குடும்பம் தான்... ஏழைகளுக்கு அடிச்சா வலிக்காதுன்னு இல்ல எங்களுக்கு வலிக்கும் , ஒரு அளவுக்கு தான் எங்களுக்கும் அந்த வலியை பொறுக்க முடியும்... வா செண்பா போகலாம் "என்று தன் மனைவியை நோக்கி அவன் கையை நீட்ட ... மனைவி அவனை நோக்கி தன் கைகளை விரிக்க , மனைவியை தன் கைகளில் தூக்கிக் கொண்டவன், முன்னால் வந்து நின்ற மூவரும்
"கருப்பா நடந்தது நடந்து போச்சு எங்களால முடிஞ்ச உதவிய
"உதவி இந்த உதவி என்கிற வார்த்தை தான் பல பேரை பிச்சைக்காரனாக்கிக்கிட்டு இருக்கு, என் மனைவியை என் பிள்ளையை பார்க்க எனக்கு தெரியும்..
"இத உதவியா நினைக்காத கருப்பா உன் மகளை குணப்படுத்த 100% வாய்ப்பு இருக்கு , ஒரு மருத்துவமனை சொல்றேன் நல்ல இருதய டாக்டரை பார்த்தா உன் பொண்ண குணப்படுத்திடலாம்
"தெரியும் என் பொண்ணுக்கு அறுவை சிகிச்சை பண்ணா குணமடைவான்னு அதுக்காக நான் ஒரு லட்ச ரூபா சேர்த்து வெச்சிருக்கேன் என்று சொன்ன கருப்பனை நண்பர்கள் மூவரும் ஐயோ என்று பார்த்தனர்
"ஒரு லட்சம் ரூபாய் எந்த மூலைக்கு காணும் என்று பெருமூச்சு விட்டு
"இந்த பைசா எல்லாம் காணாது கருப்பா, நாங்க மூணு பேரும் என்றவர்களை நோக்கி கையை நீட்டி மறுப்பாக தலையாட்டிய கருப்பன்
"எங்களுக்கு பணம் காசு இல்லாம இருக்கலாம் சார் தன்மானம் நிறைய இருக்கு .. இவ்வளவு பண்ணினது உங்ககிட்ட இருந்து காசு பறிக்கன்னு நீங்க நினைச்சிட கூடாது பாருங்க .. உங்க காசு எனக்கு வேண்டாம், நீங்க உண்மையாவே எனக்கு செஞ்சதுக்கு மனம் வருந்துறீங்கன்னா உங்க பிள்ளைங்கள பணத்தினுடைய அருமை சொல்லி வளருங்க... மனிதர்களுடைய அருமை சொல்லி கொடுங்க போதும்... எங்க பாட்ட நாங்க பாத்துக்குறோம்..
"போவோமா மச்சான், மழை வர்ற மாதிரி இருக்கு என்ற மனைவியை குனிந்து பார்த்த கருப்பன் சரி என்று தலையாட்ட... அவன் கால்கள் , கோர்ட் வாசலில் மறுபடி கொண்டு வந்து நிறுத்தப்பட்ட தங்கள் வளையல் வண்டி நோக்கி ஆசையாக விரைந்து போனது....
கோடி கோடியாக பணம் சேர்க்கும் ஆசை இல்லை இந்த குடும்பத்தை நேசித்து கொண்டு மூன்று வேளை சோறு தின்றால் போதும் அவ்வளவு தான் அவன் மீஆசை.
மனைவியை வளையல் வண்டியின் கீழே உள்ள மறைப்பில் படுக்க வைத்தவன் மகளையும் தூக்கி வளையல் வண்டிக்கு மேல் வைத்து , குடையை மகள் கையில் கொடுத்து விட்டு..
வளையல் வளையல் வளையல் கலர் வளையல் கண்ணாடி வளையல் அலுமினிய வளைகள் வளையல் வேணுமா வளையல் என்று கத்திக்கொண்டே கருப்பன் அந்த இடத்தை விட்டு நகர மூவரும் அந்த இடத்திலேயே மரத்துப் போய் நின்றனர் ..
இனி காலம் உள்ளவரை கருப்பனுக்கு செய்த செயல் அவர்களை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் குற்றம் செய்து விட்டோமே என்ற வலி அவர்கள் மூவர் வாழ்க்கையையும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்... கருப்பன் அவர்களை தொடரவில்லை என்றாலும் கருப்பனுக்கு செய்த செயல் அவர்களை தொடர்ந்து உருத்தி கொண்டே இருக்கும் ...
மச்சான் "மழை சொரென்று பெய்ய., கருப்பன் வளையல் வண்டியை தள்ளிக் கொண்டு ஒரு மரத்தடியில் கொண்டு போய் விட... தன் முந்தானை எடுத்து கணவனின் தலையை துடைத்து விட்டாள் செண்பகம் .... அவன் முகத்தில் வடிந்த நீரை தன் கையால் துடைத்து விட்டாள் நிலா... மனைவி , மகள் இருவரையும் கண்கள் கலங்க கருப்பன் பார்க்க ,
"மச்சான்
"சொல்லு செம்பா
"ஏன் மச்சான் என்னால உங்களுக்கு மனைவியாவே இருக்க முடியாதுன்னு டாக்டர் எல்லாரும் கைய விரிச்சிட்டாங்க , நான் ஒரு நடைப்பிணம்தான் இதோ இந்த மண்பொம்மை மாதிரி நானும் ஒரு பொம்மைதான், என்ன வச்சு உங்களுக்கு எந்த பிரயோஜனமும் கிடையாது... அப்படி இருந்தும் ஏன் மச்சான் என்ன இப்படி தூக்கி சுமக்கிற.... எங்கேயாவது விட்டுட்டு, உன் வாழ்க்கையை நீ பார்க்க வேண்டியது தானே ...எனக்காக ஏன் இதெல்லாம் "
"நான் உன்ன விட்டு போனா நீ என்ன பண்ணுவ செம்பா "
"அது , நான் காலம் உள்ள வரைக்கும் ஏதோ பிச்சை எடுத்தாவது சாப்பிட்டுக்கிட்டு வாழ்ந்துடுவேன் எதுக்காக உன்னோடு வாழ்க்கையை கெடுத்துக்குற மச்சான் என்று எப்போதும் கேட்க நினைக்கும் கேள்வியை கணவனை நோக்கி கேட்க..
"வெறும் அஞ்சு நிமிஷம் உடம்பு சுகம் அது மட்டும் தான் கணவன் மனைவி வாழ்க்கைன்னு நினைச்சியா செம்பா .... எந்த நிலைமையிலும் உன்னை கைவிட மாட்டேன்னு தாலி கட்டுன அன்னைக்கு சொன்னேன் ஞாபகம் இருக்கா? என்றதும் செம்பா ஆம் என்ற தலையாட்ட
"உன் உயிர் போற வரைக்கும், என் உயிர் போற வரைக்கும் உன்ன கைவிடமாட்டேன் ,
"இது கடமையா மச்சான்
"ம்ஹூம் இதுக்கு பேரும் காதல்தாண்டி!!!!
"எப்படி மாமா இது காதல், என்னால என்னால உன்ன சந்தோஷப்படுத்த முடியாதே
"நீ தர்ற ஒத்த முத்தம் போதும்டி, என் செல்லமே அதை தாண்டி நீ என்ன சுகத்தை எனக்கு தரணும் .. என்ற கணவனின் கையை பிடித்து தன் முகத்தில் வைத்துக்கொண்ட செம்பா
மச்சான் ""
ம்ம் சொல்லு
"அவங்களப்போல டிப்டாப்பா , நீ டிரெஸ் போடல ஆடம்பரமா இருக்கல .... ஆனா என்ன பொறுத்த வரைக்கும் அவங்க எல்லாரையும் விட ஆயிரம் மடங்கு நீ உயர்ந்தவன் மச்சான்....
ஓஹோ "
"ம்ம் திரையில தெரியிற மிடுக்கான நாயகர்களா நீ இல்லாமல் இருக்கலாம், ஆனா என் கண்ணுக்கு நீ தான் நாயகனா தெரியுற ... ஆறடி உடலும் அழகிய உருவமும் காதலுக்கு தேவையே இல்ல போல இல்ல மச்சான் என்ற மனைவியின் நெற்றியில் முட்டிய கருப்பன் ..
பாத்தியா , சந்தடி சாக்குல நான் அசிங்கமா இருக்கேன்னு சொல்ற "
அட போ மச்சான் உன் அழகு என்னன்னு எனக்கு மட்டும்தான் தெரியும், நீ பேரழகன்!!!! என்று செம்பா கருப்பனை நெட்டி முறிக்க
புல்லாங்குழலில் நுழைந்து போகும் காற்று எப்படி இசையாய் மாறுகிறதோ? அப்படியே உடல் தேவை இல்லாத இந்த பந்தத்திற்கு பேரும் காதல் தான்!!
இந்தக் காதலுக்காக இந்த காதலிக்காக இவன் போராடியதற்கும் பெயரும் காதல் போராட்டம் தான் இதுவும் மீக்காதலே...
அஃது எது??
அஃது காதல்
அவன் கொண்ட காதல் அவர்களை துரத்தி துரத்தி வேட்டை ஆட வைத்தது ...