கண்கட்டு வித்தைக்காரா 13

Kan13

கண்கட்டு வித்தைக்காரா 13

13.கண்கட்டு வித்தைக்காரா 

காரில் தனிமையில் பயணம் அவனுக்கு பலவற்றை சொல்லி கொடுத்தது.. இவளே உன் இணை.. இவளோடு இருந்தால்மட்டுமே நீ பரிபூரணம் அடைவாய்.. அவள் இல்லாத இந்த பயணம் வேப்பங்காயாக கசந்தது.. திரும்பி அவள் மடி தேடி ஓடி விடலாமா என்று கூட ஆதிக்கு தோன்றியது..

காரை ஓட்டி கொண்டே ஆயிரம் தடவை அவளோடு போனில் பேசினான்.. 

"ப்ப்பா கார் ஓட்டும் போது போன் பேசகூடாது" என்று அவனை பத்திரப்படுத்த..

உங்கூட பேசினால்தான் ஐயம் பீலிங் ப்ரீ டி பேசு என்று பேச வைத்தான்.. 

கொடைக்கானல் போய் சேர்ந்ததும் அவள் இல்லாத வீட்டில் மூச்சி முட்ட ஓடி விட்டான் ஆபீஸுக்கு..

அங்கே போய் வேலையில் கஷ்டப்பட்டு தன் நினைவை திரும்பினான்..

இரவு வீட்டுக்கு வர.. அவனுக்காக காத்திருந்தாள் ரேஷ்மா..

புருவம் சுருக்கி அவன் என்ன என்று கேட்க.. ஓடி வந்து அவனை அணைக்க வர.. அவளை தள்ளி நிப்பாட்ட..

ஆதி பேபி ?

"என்ன எதுக்கு இங்க வந்த.."

"உன் வொயிப் ஊருக்கு போயிட்டாள்ல நைட் எனக்கு வேலையிருக்குமே" என்று அவனை தடவ..

கம்பளி பூச்சி மேலே ஏறியது போல் அந்நிய பெண் தொடுகையை உணர்ந்தான்..

"நான் உன்ன கூப்பிட்டதா நியாபகம் இல்லை அண்ட் இனிமே உன்ன மாதிரி பொண்ணுங்களுக்கு எங்கிட்ட வேலையும் இல்லை .. சோ கெட் அவுட்".. என்று கதவை திறந்து கொண்டு ஆதி உள்ளே செல்ல..

வெளியே நின்று தூரத்தில் அவர்கள் நெருங்கி நின்றபடி போட்டோ எடுத்த மற்றொரு பெண்ணை பார்த்து கைகாட்ட.. அவள் ஓடி வந்தாள் அன்று மார்கெட்டில் பார்த்த பெண்..

"என்னடி போட்டோ எடுத்தியா அவன் பொண்டாட்டி நம்பர் கண்டுபிடிச்சியா.."

"ஆமாடி எடுத்துட்டேன் இவன மாதிரி பணம் காய்க்கிறவன விட நாம முட்டாளா நீ இரு நான் போய் அவன வழிக்கு கொண்டு வர பார்க்கிறேன் சபலப்பட்டா நமக்கு லாபம் தானே இல்லைன்னா இந்த போட்டோவ காட்டி முடிஞ்சத பிடிங்குவோம் " என்று இரண்டாம் பெண் சுஸ்மா ஆடையை முன்னே இழுத்து விட்டு அழகு கோளங்கள் தெரிய கதவை தட்ட..

 ஆதி அப்போதுதான் மகாவிடம் போனில் பேசிக் கொண்டிருக்க கதவு தட்டும் சத்தம் கேட்டதும் மகா யாருப்பா இந்த ராத்திரியில என்று கேட்க..

"தெரியலை சில்க் பார்த்துட்டு உனக்கு போன் போடுறேன்" என்று போனை வைத்து விட்டு கதவை திறக்க.. சுஸ்மா வந்து ஆதியை கட்டிபிடிக்க ரேஷ்மா போனில் அதை போட்டோ எடுத்துவிட்டு ஒளிந்து கொண்டாள்..

"ஏய் யார் நீ ?"என்று அவளை விலக்கி பார்த்தவன்..நீயா என்ன வேணும் எதுக்கு வந்த என்று அவளிடம் கேட்ட கேள்வியை கேட்க..

"நீங்க தான் வேணும் உள்ள போய் பேசலாமா ?"என்று அவனை உள்ளே கூப்பிட..

"இங்க பாரு எங்கிட்ட பேச எதுவும் இல்லை இடத்தை காலி பண்ணு.."

"இருக்கே நிதானமா உள்ள போய் பேசலாம் வாங்க ஆதி சார்" என்று சட்டமாக உள்ளே போய் அமர்ந்து தொடை தெரிய ஆடையை நகட்டி உட்கார பழைய ஆதி பாய்ந்திருப்பான் இவன் மகாவின் சுட்டுவிரல் பட்டால்கூட சுண்டி எழும்பி நிற்பவனுக்கு இந்த தாராளம் அருவருப்பை கொடுத்தது .. இத்தனை நாள் சொர்க்கமாக தெரிந்த பெண்ணுடல் நரமாக கோரமாக தெரிந்தது..

"என்ன விஷயம்னு சொல்லிட்டு இடத்தை காலி பண்ணு "என்று அவன் எதிரில் அமர..

"உன்னால இரண்டு தடவை அபார்ட் பண்ணியிருக்கேன்.."

"வாட்.. யூ ப்ளடி..நான் பாதுகாப்பு இல்லாம எவளையும் தொட்டதில்லை .."

'அத ஊர் நம்பாதே தம்பி.. "

"யாரும் நம்ப வேண்டாம் ..."

"உன் பொண்டாட்டிகூடவா?"

"வாட் ஆர் சேயிங்.."

"இப்போ நீ என்ன பண்ற சுளையா இருபது லட்சம் என் கையில வச்சா.. ரேஷ்மா நம்மள வச்சி எடுத்த போட்டோ அவக்கூட எடுத்த போட்டோ எல்லாத்தையும தந்திட்டு எங்க வழியப் பார்த்து போயிடுறோம் ..இல்லை உன் பொண்டாட்டி போனுக்கு எல்லாத்தையும் பார்வர்ட் பண்ணிடுவேன்.."

"ஹாஹா அவளுக்கு என்ன பத்தி எல்லா தெரியும் போ போ.."

"படுக்கையில நாம இரண்டு பேரும் இருந்த வீடியோ காட்டினா கூடவா உன் மேல கோவம் வராது..பத்தினி பொண்டாட்டியா இருந்தா கோவம் வராம இருக்காதே.."

"ஏய் என் பொண்டாட்டிய ஏதாவது சொன்ன வெட்டி போட்டிருவேன் "என்றவனுக்கு அவள் சொன்ன உண்மை சுடத்தான் செய்தது.. அதை அவள் பார்த்தாள் தன்னிடம் மட்டுமே அவள் காட்டிய புதையலை நான் ஊருக்கே காட்டி கலக்கப்பட்டு நிற்கிறேனே .. அவள் கண்கள் என் அசிங்கத்தை பார்த்தால் செத்துவிடுவாளே என்று வருந்தியவன்..

"இப்போ என்ன மிரட்டிறியா.. "

"மிட்டல்னுகூட வச்சிக்கோ எனக்கு காச கொடு அத்தனை உன்னோட லீலைகள் கொண்ட பென்ட்ரைவ்வ உன்கிட்ட கொடுக்கிறேன்".. என்று மிரட்ட..

தப்பு செய்யும் போது வராத சோதனை அவன் திருந்திய பிறகு ஓடவிட்டு விரட்டியது..மகாவுக்கு தன்னை தெரியும் ஆனால் இதை எப்படி எடுத்து கொள்வாள் .. அதற்காக இந்த பணந்தீண்ணி கழுகிடம் பணத்தை கொடுத்தால் ஏமாற்றாமல் இருப்பாளா. என்று நினைத்தவன்..

எனக்கு யோசிக்க டைம் வேணும் காலையில சொல்றேன் என்றவன் அவளை அனுப்பிவிட்டு தன் அறைக்கு வர..

மகா போன்போட்டு "ஆதி யாரு வந்தது "என்க.. ஏற்கனவே மண்டை கழந்து போயிருந்தவன்..

"நான் பீசியா இருக்கேன் போன வை "என்று கத்த..

மகா மணியைப் பார்க்க மணி பனிரெண்டு இரவு அப்படி என்ன பீசி எதுக்கு இப்படி கத்துகிறான் என நினைத்து போனை வைத்து விட..

காலை ஆதி அடியாட்களிடம் சுஸ்மாவை காட்டி அவளை மிரட்டி ஆதாரத்தை வாங்கிவிட..

கோவம் கொண்ட சுஸ்மாவும் ரேஷ்மாவும் தங்கள் போனில் அவனோடு எடுத்த போட்டோவை மகாவுக்கு அனுப்பிவிட்டு..

"நேற்று உன் புருஷனுக்கு நாங்கதான் பொண்டாட்டியா இருந்தோம் எப்பா ஒரு பிடி பிடிச்சிட்டான்.. என் பொண்டாட்டிக்கு ஒன்னும் தெரியலைன்னு பீல் பண்றான்.. எங்ககிட்ட கேட்டு அவனை எப்படி திருப்திபடுத்திறதுன்னு கத்துக்க ஹாஹா "என்று மெசேஜோடு நேற்று இரவு அவர்கள் வீட்டில் இருவரும் அவனோடிருந்த போட்டோவை அனுப்பிவிட..

காலையிலிருந்து போன் போடலையே ஒருவேளை பீசிதானோ என்று திண்ணையில் அமர்ந்திருந்த மகாவின் போன் மெசேஜ் வர...

அதை எடுத்து பார்த்தவள் கண்கள் வஞ்சனையில்லாமல் நீரை சுரந்தது.. ஒருநாள் கூட அது இல்லாமல் இருக்க முடியாமல் நானிருந்த அதே வீட்டில் கூத்து அடித்திருக்கிறான் இவனைப் போய் உருகி உருகி காதலித்திருக்கிறேனே .. அவனுக்கு தேவை பெண் அது எவளாகயிருந்தால் என்ன.. அப்போ எங்கிட்ட அன்பு காட்டியது பொய்யா.. அதான் அவன் வாயால் சொன்னானே அந்த நேரம் நீ எனக்கு பிடித்திருக்கிறது திருப்தியடைகிறேனென்று..அதற்காகத்தான் என்னை வைத்திருந்தானா.. நான் ஈனப்பிறவியா? அப்படி ஒரு வாழ்க்கை தேவையா ?வேண்டாம் வேண்டவே வேண்டாம் நான் வாழாவெட்டியாக ராசியில்லாதவளாகவே இருந்து கொள்கிறேன் இனி அவன் தேவையில்லை என்று போனை உடைக்க..

பாட்டி "எதுக்குடி அதப்போட்டு உடைக்கிற..அதுல காண்டி கிரேஸ் இருந்திச்சே இனி அந்த கேமுக்கு எங்கே போவேன்" என்று பாட்டி டூவென்டி கிட் போல் சொல்ல..

"ஆ..ஆ.. பாட்டி "என்று கத்தியவள் கண்கள் சொருக அப்படியே மயங்கி விழ..

கண்களை முழித்த போது பாட்டி மடியில் கிடக்க...

"ராஜாத்தி நம்ம குலம் தளச்சிருக்கு.."

ஹாங்..

"முழிக்காத..பேராண்டி குழந்தை உன் வயித்தில வளருது "என்று நெட்டி முறிக்க..

அவனை வேண்டாமென ஒதுக்க.. நான் வளர்கிறேனே மம்மி என்று அவர்கள் மகன் அவர்கள் உறவுக்கு பாலமாக வந்தான்..

இந்த புது ரத்தம் அவள் எடுத்த முடிவை மாற்றுமா ?