முக்கூடற் பள்ளு பாடவா டீசர்

pallu

முக்கூடற் பள்ளு பாடவா டீசர்

டீசர் 1 

முக்கூடற்பள்ளு பாடவா  !!

இன்று முதல் அமேசான் நேரடி ஈபுத்தகமாக வெளியீடு.. 

சென்னை அப்பெல்லோ மருத்துவமனை !!

தலைமை மருத்துவர் அறை ... 

அறையில் நிசப்தமான அமைதி 

மருத்துவர் படுக்கையில் கிடந்த நபரை பெருமூச்சு விட்டு பார்க்க அந்த நபரோ மருத்துவர் கூறிய விஷயங்களை கேட்டு எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டாது கண் மீது கை வைத்து அமைதியாக படுத்திருந்தான்... 

மிஸ்டர் சாம்ராட் என்றதும் கண்களை மறைத்த கையை மெல்ல நகட்டி,  தன் முகத்தை காட்டினான் , உணர்வுகள் துடைக்கபண்பட்ட முகம்..  

ராய் புட்டிங் கம்பெனி சேர்மன் ...

சாம்ராட்ராயன்  , வயது வெறும் 28 ..

தொழில் துறையின் பிஸினஸ் சீட்டாக் என அழைக்கும் சொல்லுக்கு  சொந்தக்காரன், அழகு , பணம் , தொழில் ,குடும்பம் என அனைத்தும் இருகிறது எந்த குறையும் இல்லை என மமதை கொண்டானோ? நேற்று வரை இருந்த நிம்மதி இன்று இல்லையே... 

"மிஸ்டர் சாம்ராட்

"சோ,  முப்பது நாள் மட்டும்தான் நான் உயிருள்ள மனுசன்,  அதுக்கு பிறகு பிணம் இல்லையா?  என்றவன் கனீர் குரலில் மருத்துவர் பதில் இல்லாது அவனை பார்க்க ..

"சும்மா சொல்லுங்க டாக்டர்". 

"ப்ளீஸ் சாம்ராட் , மனச தளர விடாதீங்க ...

"ப்ச் ப்ச் ஐயம் ஆல்ரைட்,  எல்லார்க்கும் மரணம் சொல்லாம வரும்,  பட் எனக்கு சொல்லிட்டு வருது .. அந்த அளவுக்கு மரணதுக்கு என்ன பிடிச்சிருக்கு போல "என்றவனை மருத்துவர் பாவமாக பார்த்தார் .. 

"மிஸ்டர் சாம்ராட்  அதான் சொன்னேன்,  உங்க வீட்டுல இருந்து வேற யாரையாவது வர சொல்லுங்க,  நான் அவங்க கிட்ட பேசுறேன் 

"எதுக்கு?  அவங்க நிம்மதியை கெடுக்கவா? ஒன்னும் தேவையில்ல, நான் என்ன ஸ்டேஜ்ல இருக்கேன் டாக்டர் .."

"அல்மோஸ்ட் பைனல் ஸ்டேஜ், சாம்ராட் 

"ஓஓ என்ன நோய் ? 

"குறிப்பிட்டு சொல்ல முடியாது சாம்ராட் ... ரத்தத்தில அதிகப்படியான கிருமி  , கவனிக்காம விட்டதில, உடலில் உள்ள அத்தனை உறுப்புகளையும் செயலிழக்க வச்சிடுச்சி.. 

"ட்ரெண்மெண்ட் பண்ண முடியாதா? 

"ட்ரீட்மென்ட் பண்ண கூடிய நிலையை கடந்திடுச்சி சாம்ராட் ..

"ஓஓ புரியுது" மென்மையாக சிரித்தான்..  மருத்துவருக்கே அய்யோ!!! என்றாகி போனது...  

எனக்காக நான் இதுவரைக்கும் வாழ்ந்ததே இல்லை இந்த 30 நாள் எனக்காக வாழ ஆசைப்படுகிறேன்..  அதை எப்படி சொல்றது என்று தயங்கியவன் ..

"இந்த உலகத்துல நான் பார்த்தது ஒரு பக்கம்தான் இன்னொரு பக்கத்தை  இதுவரைக்கும் நான் பார்த்ததில்லை,  ஆனா அந்த பக்கத்தையும் நான் ரசிக்க விரும்புறேன்.. இந்த  முப்பது நாளும் நான் இந்த உலகத்தில் அனுபவிக்காதது எதுவுமே இருக்க கூடாது..

"புரியல சாம்ராட்  இதழை  வளைத்து சிரித்த சாம்ராட்  

"இதுவரைக்கும் பணம் குடும்பம் அப்படின்னு ஓடிட்டேன் .. இனிமே இந்த 30 நாளும் எனக்காக வாழ ஆசைப்படுறேன் தட் மீன்ஸ் நான் அனுபவிக்காத சுகங்கள் முடிஞ்ச வரைக்கும் அனுபவிக்க போறேன்,  அதுல பெண் சுகமும் உண்டு ,  நான் பொண்ணுங்க கூட சேர்ந்தா ஏதாவது அவங்களுக்கு அஃபெக்ட் பண்ணுமா???"

"சேச்சே அதெல்லாம் எதுவும் செய்யாத சாம்ராட்,  இது என்ன ஹச்ஐவியா உங்ககிட்ட இருந்து இன்னொருத்தருக்கு பரவ , ஒன்னும் ஆகாது ..

ஓகே பைன் என்று கிளம்பி விட்டான் ... 

********

ஜம்மு காஷ்மீர் அருகே காடுகளுக்கு மத்தியில் ஒரு கெஸ்ட் ஹவுஸில் அவனும் இயற்கையும் மட்டும் துணையாக என்று இஷ்டம் போல தம் , தண்ணீ என சாம்ராட்  நாட்கள் இதோ ஏழு நாள் முடிந்து போனது ..  ஆனால் பெண் என்ற ஒன்று  வந்தால் மட்டும் ஒவ்வ வில்லை ... சுத்தம் சோறு போடும் என்று பழகியவனுக்கு அடுத்தவர் உபயோகிக்கும் சிவப்பு விளக்கு பெண்கள் அசெளகரியம் கொடுக்க..  ரெண்டு முறை காசை கொடுத்து அறை வரை போனவன் யுடர்ன் அடித்து வந்து விட்டான்.. 

இருட்டு பாதையில் சாம்ராட் தன் காரை ஓட்டி கொண்டிருக்க தீடிரென அவன் கார் பேண்ட்டில் ஒரு உருவம் தூக்கி வீசப்பட  சாம்ராட்  காரை தடுமாறி நிறுத்தி..இறங்கி ஓடி வந்தான் .. ஏதாவது விலங்காக இருக்குமோ??  என இறங்கி வநதவன் கார் ஹெட் லைட் வெளிச்சத்தில் ஒரு குட்டி உருவம் சுருண்டு கிடக்க...

"ஆளா இந்த நேரத்தில இந்த காட்டுக்குள்ள"  காடு என்றதால்தான் அவன் கவனம் இல்லாது வந்தது.. தன் மடமை நொந்து கொண்டு  அந்த உருவம் அருகே நெருங்க நெருங்க  கண்ணை விரித்தான் 

பெண்ணா??? 

பொண்ணா??? இங்கேயா? சுற்றி கூஇருட்டு தவிர ஒன்னும் இல்லை..  மொத்தமாக மலையும் காடும் அருவி என இருட்டு அச்சுறுத்தும் இடத்தில் பெண் என்ன செய்கிறாள்?  அவள் அருகே போய் சாம்ராட் பெண்ணை திருப்பி போட..

கடவுளே கடவுளே கடவுளே என கண்ணை பொத்தி கொண்டு அப்பெண் பயத்தில் முணுமுணுக்க... 

"எதுவும் ஆகலை கண்ணை திற" என்றதும் குப்புற கிடந்த அப்பெண் கண்ணை திறந்து மல்லாக்க விழ... ஐந்தரையடி அழகிய பதுமை .. பிரம்மனின் கலைநயம் அத்தனையும் சேர்ந்து செய்த மேனகை அவள் ... 

"உனக்கு ஒன்னும் ஆகல பயப்படாத எழும்பு .. என்றதும் அப்பெண் உதட்டை பிதுக்கி அழ தயாராக 

"என்னாச்சி? ஏற்கனவே அழுது அழுது முகம் சிவந்து போயிருந்த பெண்ணை கண்டு சாம்ராட்  கண்ணை சுருக்கினான் .. 

"சாவுக்கு கூட என் மேல கருணை இல்ல போல சார் என்று மென்மையில் குலைத்து எடுத்த குரலில் அப்பெண் கூற ..

"வாட் சாக  வந்து விழுந்தியா?"  ராயன் அதிர்ந்து போனான் .. 

"ம்ம்" பின்னால் எட்டி பார்க்க நாலைந்து பேர் அவளை விரட்டி வருவது தெரிய 

"சார் சார் வண்டியை ஏத்தி என்ன கொன்னுடுங்க சார் நான் மட்டும் அவங்க கையில கிடைச்சேன், கடிநாயா குதறிடுவாங்க சார் ப்ளீஸ்" என சாம்ராட் காலை பிடித்து கொண்ட அப்பெண் பின்னால் பார்த்து கொண்டே தன்னை கொல்லும் படி கெஞ்ச ..

"ஏய் வாட் திஸ் எழும்பு ... "அருகே உருவங்கள் தெரிய இப்பெண்ணுக்கு உடல் ஆட ஆரம்பித்து விட்டது ...

"கொல்ல மாட்டீங்களா??" என்றவள் வேகமாக  வந்து கொண்டிருந்த லாரி நோக்கி அடுத்து ஓட ஆரம்பிக்க..

"ஷட் என்னாச்சி இந்த பொண்ணுக்கு??" என நினைத்தவன் துரிதமாக ஓடி போய் அவளை நிறுத்திட திமிரியை அப்பெண்ணை தூக்கி கொண்டு காரில் போட்டவன் 

"எதுவா இருந்தாலும் பேசிக்கலாம் காம் டவுன் " ..என்றவன் அவள் பதட்டம் குறைக்க நீரை கையில் கொடுத்தவன்..

"உன் பேர் என்ன ?

"எமிலி சார்" என்று பின்னால் திரும்பி திரும்பி தன் அருகே வரும் நபர்களை பயந்து கொண்டே பார்க்க ..

"பக்கத்தில தான் என் வீடு வர்றியா ?

"ம்ம் என்று அரண்டு முழித்த அப்பெண்ணை விட்டுவிட்டு போக மனம் இல்லாது 

எமிலியை தேடி  அலையும் நபர்கள் கண்ணை விட்டு மறைக்க நினைத்து,  வேகமாக வண்டியை எடுத்து கொண்டு தன் இருப்பிடம் நோக்கி நகர்ந்து விட்டான் .. 

மரணத்தின் வாசலில்,  இருவர் பந்தம் எழுதப்பட்டது..

 

சாம்ராட் ராயனின்  இறுதி ஆசையை நிறைவேற்ற கடவுள் அனுதாபம் கொண்டு,  பனிபடாத வெயில் சூடாத, ஒரு மோகினியை அனுப்பி வைத்து புண்ணியம் தேடி கொண்டானோ??

லிங்க் கீழே 

https://www.amazon.in/dp/B0C6SSP1B6