எஃகில் கலந்த தளவம் 24

Egg24

எஃகில் கலந்த தளவம் 24

24 எஃகில் கலந்த தளவம் !! 

பார்த்த சாரதி துணிக்கடை சென்று விட்டு வீட்டுக்குள் வர லெட்சுமி கன்னத்தில் கை வைத்து திண்ணையில் உட்கார்ந்து இருந்தார் 

என்னம்மா அவக்கிட்ட பேசுனீங்களா 

எங்க நீ போன நேரத்தில இருந்து கதவை தட்டுறேன் பேசவும் இல்லை கதவை திறக்கவும் இல்லை... பணக்கார வீட்டு பொண்ணோ? நமக்கு செட் ஆகுமாடா? தாய் பாவமாக மகன் முகம் பார்க்க 

என்கிட்ட பண்ணின ராங்கித்தனத்தை அம்மாக்கிட்ட காட்ட ஆரம்பிச்சுட்டான்னு நினைக்கிறேன் இவள என்று மனதில் திட்டி கொண்டு 

அப்படி எல்லாம் இல்லம்மா நான் என்னனு போய் பார்க்கிறேன் 

ம்ம் ஆசையா இருந்தேன் என்கிட்ட பேசுவான்னு  

கவலை படாதீங்க அவளை உங்களுக்கு கண்டிப்பா பிடிக்கும் பாருங்க 

சரிடா சரிடா, லைக்கா இருக்கும் அறைக்குள் போகும் மகனையே பார்த்து கொண்டு நின்றார்...

சாரதி கதவை திறக்க கால் மீது கால் போட்டு அவன் சட்டையில் கயிற்று கட்டில் மீது லைக்கா படுத்து கிடந்து புத்தகம் ஒன்றை புரட்டி கொண்டிருக்க வேகமாக போய் அதை புடுங்கி எறிந்தான்...

அம்மா வந்து கதவை தட்டினா திறக்க தெரியாதா?  

நீதான கதவை திறக்க கூடாதுன்னு சொல்லிட்டு போன ஸ்டுபிட்...

அதுக்கு பேச கூடவா மாட்ட 

எதுக்கு நாலு பிட்டு போட்டு வைப்பேன் , அதுக்கும் வந்து கத்துவ.. அதான் நீயே பேசிக்கன்னு அமைதியா விட்டுட்டேன்

திமிர் திமிர் நீயெல்லாம் 

நானெல்லாம்? அவள் புருவம் வளைத்து கேட்க 

அம்மான்னா என் உயிர் ..

வச்சிக்க .... என் உயிர் எல்லாம் கிட்னி , ஹாட் லங்க்ஸ் இதுல தான் இருக்கு ... இந்த மனுஷங்களுக்கு மட்டும் தான் , அம்மானா உயிர் தங்கச்சின்னா மயிறுன்னு வந்துடுறீங்க , இப்போ அதுக்கு என்ன செய்ய சொல்ற ? 

அவங்களுக்கு மரியாதை குறை வந்துச்சு 

வந்தா 

வர கூடாது அவ்வளவு தான் ...

"எய்யா சாரதி என்ன வச்சி மருமகளை திட்டாத ராசா, புள்ள தூங்கி இருப்பா," வெளியே இவன் திட்டும் சத்தம் கேட்டு லெட்சுமி குரல் கொடுக்க 

"பாவம்டி என்ன தவிர அவங்களுக்கு யாரும் இல்லை 

"இப்ப என்ன நடந்ததுன்னு இவ்வளவு ரியாக்ட் பண்ணிட்டு இருக்க ..."

"ப்ச் அது சரி துப்பாக்கி வச்சி என் உடம்புல துளை போட்ட உன்கிட்ட போய் அன்பு பாசம்னு சொல்றேனே இதெலாம் நோக்கு புரியவா போகுதுறது ... இந்தா இதுல சேலை இருக்கு 

மறுபடியும் சேலையா?  

"இது ஷாப்ட் சேலைதான் .... சுடிதார் எல்லாம் விலை அதிகம் போட்டுருக்கான் ... 

கொலுசு எங்க உள்ளே இல்லை ஆர்வமாக அவன் வாங்கி வந்ததை லைக்கா உருட்டி கொண்டு கேட்க 

"இதுவே அம்மா சேர்த்து வச்சிருந்த உண்டியல்ல இருந்து தான் தந்தாங்க... கொலுசுக்கு எல்லாம் காசு இல்லை ... அம்மா பூ வாங்கிட்டு வந்து தர சொன்னாங்க இந்தா வேணும்னா வச்சிக்க இல்லை சாமி படத்துக்கு போடு ஆனா குப்பையில போட்டிராத அம்மா வருத்தப்படும் 

ஓஓஓ பூவை முன்னும் பின்னும் வைத்து பார்த்தவள் 

இதை எப்படி பிக்ஸ் பண்ணணும்... பாப் தலையில் நிற்பேனா என்ன பூவை சாரதி வந்து வைத்து விட 

நல்லா இல்ல உடனே முகத்தை சுளித்தாள் 

உனக்கு என்னதான் நல்லா இருந்து இருக்கு கொஞ்சம் நேரம் வச்சிக்க....

ம்ம் தோளை உலுக்கியவள் சற்று முடி வளர்த்து பின்னல் போட்டா பூவும் பொட்டும் அழகா இருக்குமோ தன் நிமிர்ந்த ஆண் உடலை போல மாறி போன எஃகு மேனிக்கு பெண்மை கற்று கொடுத்து கொண்டு இருந்தாள் 

மறுபடியும் சமையல் வேலை போனா தான் காசு சாப்பாட்டு ஆட்டை ஓடும் என்று சாரதி சொல்லி கொண்டு அறைக்குள் கோடு கிழிக்க... 

"எதுக்கு இந்த சீனா இந்தியா பார்டர்னு தெரிஞ்சுக்கலாமா ??

"இதை தாண்டி நீயும் வர கூடாது நானும் வர மாட்டேன் .... 

"ஓஓ பாதுகாப்பு வளையம் "

"ம்ம் உன்ன பத்தி தெரிஞ்சவன் நான்தான என் கற்புக்கு போட்ட எல்லைக்கோடு இது 

"ஆமா இன்னும் பெருசா போட்டுக்க... முட்டி மோதியும் திறக்காத கதவுக்கு ஏழு திண்டுக்கல் பூட்டாம்...

என்ன சொன்ன ?

"கேட்டதுல்ல அதான் சொன்னேன் என்றவளை சாரதி திரும்பி முறைக்க போனவன் சட்டென திருப்பி கொண்டான் பாவாடை ஜாக்கெட்டில் நின்று சேலையை சுருட்டி கட்டி கொண்டு நின்றாள்...

"மறுபடியும் கல்யாண ஆர்டர் எதாவது கிடைக்கான்னு போய் தேடிட்டு வர்றேன் பத்திரமா இரு என்றவனை லைக்கா திரும்பி பார்க்க 

"நீ பாதுகாப்பா இருந்தாதான் அங்க என் அங்கை பாதுகாப்பா இருப்பா ..புரியுதா??? 

உதட்டை கோணி கொண்டு அவன் நெஞ்சில் கை வைத்து தள்ளி வழியை விட்டு நகர்த்தியவள்...

"இப்படியே பேசிட்டு இரு ... வேற எதையும் செஞ்சிக்க மாட்ட ... என்றுவிட்டு வெளியே போனவள் தாயை எதுவும் இன்சல்ட் செய்து விடுவாளோ என்று சிறுது நேரம் குறுக்க மறுக்க அலைந்தான்...

சாப்பிடுறியா தங்கம் லெட்சுமி அவளை ஆசையாக தடவி பார்க்க 

ம்ம் 

கீரை போட்டு சோற்றை பிசைந்து எடுத்து கொண்டு ஓடி வந்த லெட்சுமி சோற்றை உருட்டி லைக்கா கையில் வைக்க தலையை சரித்து லட்சுமியை ஒரு பார்வை பார்த்தாள்...

என்ன தங்கம்...

"என் பேர் லைக்கா நாட் தங்கம் 

"எனக்கு இனிமே நீ தங்கம் தான் ... இந்தா தின்னு 

இதெல்லாம் பிடிக்காது என்று வாயை குணக்கெடாக திறக்க போனவள் ஆர்வமாக லைக்காவை பார்த்த லெட்சுமிக்கு மறுப்பு சொல்லாது சாப்பாட்டை விழுங்க ஆர்ம்பித்தாள்...

ஆமா தங்கம் உன் கண்ணு ஏன் சிகப்பா கிடக்கு... நம்மூர் ஜாடை இல்லையே எந்த ஊரு அவள் பற்றிய விவரம் தெரிய லெட்சுமி கேட்க 

அது வந்தும்மா அவளுக்கு சிகப்பு கண் நோய்...என்று சாரதி பதிலை சொல்ல .. 

சிகப்பு கண்ணு நோயா?  

ம்ம் ஆமா மத்தபடி மூக்கும் முழியுமா நல்லா அழகா தான இருக்கா .... 

அது சரி ... எந்த ஊர் தங்கம்....

எஃகு 

எருமைப்பட்டி என்றான் லைக்காவிடம் கண்ணை காட்டி கொண்டே ..

எருமைப்பட்டியா அது எங்கிட்டு இருக்கு ? 

மேல் பக்கம் எதுக்கும்மா நீங்க இவ்வளவு கேள்வி கேட்கிறேள்... 

இல்லை அவளை பத்தி தெரிஞ்சுக்கலாமேன்னு 

அவளை பத்தி நேக்கு தெரிஞ்சா போதாதா? என்ற மகன் பேச்சு நடத்தை எல்லாம் முழுதாக மாறித்தான் இருந்தது .. 

எங்க இழுத்துட்டு போற கை கழுவ வந்தவளை இழுத்து கொண்டு தூண் மறைவில் விட்ட சாரதி 

பாரு எதையாவது பேசி நீயும் மாட்டி, என்னையும் மாட்டி விட்டிராத ... லெட்சுமி தூரத்தில் நின்று வளைந்து நெளிய அவருக்கு அங்கிருந்து பார்க்கும் போது, சாரதி லைக்காவுக்கு முத்தம் கொடுப்பது போல தெரிந்தது ..

நான் எதையாவது சொல்லி இந்த கல்யாணத்தை தடுத்துடுவேன் ... நீ மட்டும் வாய திறந்துடாதே நான் சொல்லாம எதுவும் பேசக்கூடாது புரியுதா? 

அவ்வளவு தானே நீ சொன்ன மாதிரியே செஞ்சுட்டா போச்சு ...

உன்னை நம்பி வேலைக்கு போகலாமா , லைக்கா நாலா பக்கமும் தலையாட்ட..

தலையாட்டே சரியில்லையே என்று சாரதி தன் தாயிடம் சொல்லிவிட்டு கிளம்ப... 

லெட்சுமியை பார்த்துக் கொண்டே உதட்டை துடைத்தபடி வெளியே வந்த லைக்கா...

இப்படித்தான் அத்தை உங்க மகன் எல்லாருக்கும் நல்லவர் ஆனா எனக்கு மட்டும் கெட்டவர் என்று விட்டு போக...

எவ்வளவு சீக்கிரமா முகூர்த்தத்தை வைக்கிறோமோ அவ்வளவு நல்லது என் மகனா இப்படி?? என்று நம்பவே முடியாது நின்றார் லெட்சுமி..... 

அம்மா போய் தூங்குங்க என்று இரவு லைக்கா அறைக்குள் நுழைய போன மகனை தடுத்த லெட்சுமி 

கல்யாணம் ஆன பிறகு" என்று இழுக்க ...

ம்மா நான் பாதுக்காப்பா அவளை வச்சிக்கிறேன் அதனால கூடவே இருக்கேன் என்ற மகனின் பேச்சில் லெட்சுமி குலைய... கட்டிலில் கிடந்த லைக்காவுக்கு தன்னை மீறி சிரிப்பு வந்து விட்டது 

உனக்கு எதாவது ஆகிட்டா என்ன பண்றது ... மூணு மாசம் என் கண்ணுக்குள்ளேயே தான் இருக்கணும் என்று தன் எல்லை உள்ளே பாயை விரித்து படுத்த சாரதி 

ஆமா அம்மா ஏன் அப்படி பார்துச்சு நீ எதுவும் தேவையில்லாம பேசி வச்சியா ?

நான் ஏன் பேச போறேன், நீயே போதும் உன் மானத்தை வாங்க என்று போர்வை இழுத்து லைக்கா மூடி கொள்ள...

"ஏன் மானம் போகுது 

"பின்ன , பாதுகாப்பா வச்சிக்கிறேன்னா என்ன அர்த்தம் ?

என்ன அர்த்தம் ? என்ற சாரதி புரிந்து அலறி 

அய்யய்யோ அம்மா அப்படியா நினைச்சு இருப்பாங்க... சொல்லும் போதே தடுத்து இருக்க வேண்டியதுதான.. உன்னால மானம் போச்சு அம்மா என்ன பத்தி என்ன நினைச்சு இருக்கும் கவலையில புலம்புறேன் சிரிக்கவா செய்ற? என்று சாரதி சொம்பை தூக்கி அவள் மீது வீச... 

டேய் சாரதி கல்யாணம் முடியும் வரை கொஞ்சம் கவனம் ய்யா என்ற தாயின் குரல் வர 

இல்லம்மா அது 

அய்யோ என்ன இது ஏன் இப்படி பண்றீங்க விடுங்க என்று கட்டிலில் படுத்து கிடந்து காலை ஆட்டி கொண்டே லைக்கா கத்த 

ஸ்ஊஊஊஊ ஓடி வந்து அவள் வாயை பொத்தி 

ஏன்டி? என்றவனை கண்ணை உருட்டி பார்த்தவள் அவன் கையை தட்டி விட்டு 

நீதான் இப்போ பார்டர் விட்டு பார்டர் தாண்டுற ... என்று எல்லைக்கோடு கடந்து அவளிடம் வந்திருந்ததை சுட்டிக்காட்டிட...

உன்ன அஅஅஅ  

லொக் லொக் தாயின் இருமல் சத்தம் வர ஓடிப்போய் பாய் மீது சத்தமில்லாது படுத்து கொண்டான்.... தூங்கும் அவனை ஒருக்களித்து படுத்து கிடந்து லைக்கா பார்த்தபடி இருந்தவள் அவன் ஆழ்ந்த தூக்கம் போகவும் இறங்கி அவன் அருகே வந்தவள் சாரதி கைகளை பிடித்து அவன் நெஞ்சின் மீது படுத்து கொண்டவள் மீண்டும் அவன் கையை எடுத்து தன் இடையோடு போட்டவள் 

கொஞ்ச நாள் இதை எல்லாம் அனுபவிச்சுட்டு உன்ன தொல்லை பண்ணாம போயிடுறேன் சரோ.. உனக்காக சேலை கட்டிக்கிறேன், உனக்காக சாதாரண பெண்ணாக மாற ஆசை படுறேன் ... இந்த மூணு மாசமும் நான் உனக்கான ஒருத்தி மட்டுமே ... எனக்கும் வாழ ஆசை வர வச்சிட்ட.. லைக்கா லைக் யூ ... என்று அவன் முகம் பார்த்து ரசித்து கொண்டே சொன்னவள் நச் என்று பார்த்தசாரதி உதட்டில் இச் வைக்க... தூக்கத்திலேயே பதில் முத்தம் நச் என்று அவள் உதட்டில் வைத்தான்.. அந்த முத்த மயக்கத்தில் இருந்து மீளவே முடியாது கிடந்தாள் வேற்றுவாசி அழகி!! 

நேசம் என்ன என்று தெரியாத வரை அது வெறும் வார்த்தையே 

நேசம் எது என்று அறிந்த பின்பே அது சாவிலும் கொடிய எலும்புருக்கி நோய் என்று புரியும் !!