காதலின் மீதியோ நீ-5

காதலின் மீதியோ நீ-5

காதலின் மீதியோ நீ-5

நித்ரா சாயங்காலம் தனது வேலை முடிந்ததும் வீட்டுக்கு வந்தவளது முகமே சரியில்லை.உடனே மித்ரா அவளது முகத்தைப் பார்த்துவிட்டு “ ஆயுஷ் சார் முதல் நாளை உன்கிட்ட வேலையைக் காண்பிச்சுட்டாரா என்ன?”என்று நக்கலாகக் கேட்டார்.

“ஆமா”என்று சொன்னவள் மீண்டும் உம்மமென்றிருந்தாள்.

“ஏன்டி முதல் நாளே வேலைக்குப் போயிட்டுவந்து இப்படி இருக்கியே. இனி எல்லா வேலையும் மொத்தமா வருமே அப்போ என்ன பண்ணுவ?”

“நான் இந்த கம்பெனிக்கு வேலைக்குப்போக விரும்பலைக்கா” என்று சொன்னதும் மோகன் உள்ளிருந்து எட்டிப்பார்த்தான்.

அவன் பார்த்ததும் “அது அது அந்த ஆயுஷ்தான் அன்னைக்கு நான் மால்ல ஒருத்தன் சண்டைப் போட்டான்னு சொன்னனே அவன்.அன்னைக்கு லிப்ட்டுக்குள்ள வைச்சும் கழுத்தை நெறிச்சான் தெரியுமா அவன்தான் அந்த எம்.டி ஆயுஷ்தான்.நான் அங்க வேலைக்குப் போகலைக்கா” என்று சின்னப்பொண்ணு மாதிரி அழவே ஆரம்பிச்சுட்டாள்.

அதைப்பார்த்து ரூமுக்குள்ளிருந்து வெளியே வந்த மோகன்” ச்ச்சை முதல்ல இந்த அழுகையை நிறைத்து எப்போ பாரு என்னத்துக்குனாலும் ஒரே அழுகை. எதையும் ஒரு ஸ்போட்டிவா எடுத்துக்கிறது கிடையாது. சும்மா அழுதுகிட்டு இருக்க. எங்க கல்யாணத்துக்கு முன்னாடியும் இப்படித்தான் என்னையவே தப்பா நினைச்சவதானே நீ ,ஒருத்தங்க முகத்துப் பார்த்து ஆட்களைத் தராதரம் பார்க்க தெரியாது. யாரு எப்படின்னு பேசவும் தெரியாது. எனக்குத் தெரியும் நீ வேண்டாதனமா ஏதாவது ஆயுஷ்கிட்ட பேசியிருப்ப. வாயை கொடுத்திருப்ப.அதுதான் அவன் உன்னை வைச்சு வாங்கியிருப்பான். அவன் சும்மாவே ஈகோ புடிச்சுத்தான் ஆடுவான். நீ அதுக்கு தகுந்தமாதிரி ஏதாவது பேசியிருப்ப, இல்லன்னா சீண்டியிருப்ப. சும்மா வேலைக்குப் போகமாட்டேன் அதுஇதுன்னு சொன்னனு வையேன் லேடிஸ் ஹாஸ்டல்ல கொண்டுவிட்டு வேலைசெய்து சாப்பிடுன்னு போட்டிருவேன் பார்த்துக்க”என்று கோபத்தில் சத்தம்போட்டான்.

அதைக்கேட்ட ருக்குமணிக்கோ தனது தம்பி மகளை மகன் திட்டியதும் எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்துச்சோ தெரியாது நேராக வந்தவர்”நீ வாடி நம்ம ஊருக்குப்போவோம் அவனாச்சு அவன் குடும்பமாச்சு .ஹாஸ்டலுக் கு அனுப்புவானாம்ல ஹாஸ்டலுக்கு. அந்த வளர்ந்துக்கெட்டவன் அன்னைக்கே ரொம்பத்தான் பேசுனான். இதுக்குமேல அவளைத் திட்டுனன்னு வையேன் அவ்வளவுதான் நல்லாயிருக்காது”

அதைக் கேட்டதும் தனம்வந்து “நீங்க சும்மா இருங்க .இவ எதுக்கெடுத்தாலும் சின்ன பிள்ளை மாதிரி என்ன ஏதுன்னு புரியாம ஏதாவது சண்டை இழுத்திருப்பாள். ஏதாவது பேசிருப்பாள்.அதுக்காக இப்போ வேலையே வேண்டாம் என்று நினைக்கிறது முட்டாள்தனம்.இன்னைக்கு ஒருநாள்தானே வேலைக்கு போய் இருக்கா. அதுக்குள்ள மூஞ்சிய தூக்கிவைச்சிட்டு வேலைக்கு போக மாட்டேன்னா எப்படி? அவன்தான் அங்க எம்.டியே.இப்படியே வேலைக்குப் போகமாட்டேன்னா என்ன அர்த்தம்? சும்மா இருங்க வாழ்க்கையில் நிறைய எதிர்கொண்டு பார்க்க வேண்டாமா?நீங்க அவளுக்கு சப்போர்ட் பண்ணாதிங்க.அவளை ஹாஸ்டல்லயே விட்றுவோம்”என்றார்.

மித்ராவோ மோகனைப் பார்க்க அவனது பொய் கோபம் அவளுக்குப் புரிந்திருந்தது.

அதனால் அமைதியாக இருந்துவிட்டாள்.

நித்ராவுக்கு அம்மாவும் அத்தானோடு சேர்ந்து பேசவும் அழுகையாக வந்தது.

உடனே எழுந்தவள் “இப்போ என்ன நான் அங்கவேலைக்குப் போகணும் அவ்வளவுதானே

விடுங்க. நான் அங்கயே வேலைக்குப் போறேன். எனக்கு யாரும் அட்வைஸ் பண்ண வராவேண்டாம்” என்று எழுந்து அறைக்குள் வேகமாகச் சென்று கதவை அடைத்துக்கொண்டாள்.

அது தனத்துக்கு மருமகனை சின்ன மகள் அவமானப்படுத்தியது போன்று நினைத்தவர் வேகமாக போய் கதவைத் தட்டினார்.

“அவள் கதவை திறக்காத இருந்தாலும் வேகமாக தட்டியவர் “யார் என்னனு மட்டு மரியாதை இல்லாமல் பேச படிச்சிருக்கா. இந்த பழக்கம் சரியில்ல.உனக்கு அப்படி கஷ்டமா இருந்துச்சுன்னா நீ ஊர்ல இருக்க வீட்டுல போய் ஒத்தையில இருந்துக்கோ. நான் வரமாட்டேன். நீயே வேலை பார்த்து நீயே சம்பாதி நீயே சாப்பிட்டுக்கோ” என்று சத்தம் போட்டார்.

உள்ளிருந்து அதுதான் “வேலைக்குப் போறேன்னு சொல்லிட்டனே எதுக்கு இப்போ கத்துறீங்க.விடுங்க” என்று சத்தம்போட்டு அழுதாள்.

அதைப்பார்த்ததும் மோகன் “விடுங்க அத்தை.அவளுக்குன்னு வாழ்க்கையில் எல்லாம் வரும்போது சரியாகிடுவா” என்றுவிட்டுப் போய்விட்டான்.

மித்ராதான் “நான் அவக்கிட்ட பேசிக்கிறேன் நீங்கபோங்க” என்றுவிட்டு கதவைத்தட்டி உள்ளே சென்று அவளிடம் பேசினாள்.

அதன்பின் ஓரளவு சமாதானமானவள் அடுத்த நாளிலிருந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள். வீட்டில் எந்த வித பிரச்சனையும் இல்லை ஆனால் வேலையில் தான் ஆயுஷ் வைச்சு செய்தான்.

 முதல் நாள் கொடுத்த வேலையை அன்று இரவு லேப்டாப்பில் மொத்தமாக வரைந்து முடித்தவள் அதை வீடியோவாகவும் போட்டு வைத்துவிட்டு தனக்கொரு காப்பி விடுத்து வைத்துக் கொண்டாள்.

அவளைப் பொறுத்தவரையில் வேலையென்றால் அதை நேர்த்தியாகவே செய்து முடித்துவிடுவாள்.

அடுத்தநாள் போனதும் அவளைக் கூப்பிட்டு விட்டான். உடனே எழுந்துப் போனவளை மேலும் கீழும் பார்த்தான்.

“என்ன சார் கூப்பிட்டிருந்தீங்களாமே?” என்று கேட்டாள்.

“நேத்து அந்த வேலைய முடிக்கலன்னாலும் முடிச்சு குடுத்துட்டு தான் போகணும்னு சொல்லி இருந்தேனே! ஏன் செய்யல? ஒரு நாள் சம்பளம் உங்களுக்கு கட் பண்ணுவேன்” என்று மெதப்பாகப் பார்த்துச் சொன்னான்அ.

“அதை நேத்தே உங்க அபிசியல் மெயிலுக்கு அனுப்பிட்டனே சார். நீங்க அதை இன்னும் செக் பண்ணலையா சார்? ராத்திரி உக்காந்து வேலையை முடிச்சுட்டனே?” என்று கெத்தாகச் சொன்னாள்.

அதைக்கேட்டவன் “என்னது மெயில் பண்ணிட்டியா? அப்படியா?எப்போ? என்று கேட்டவன் மெயிலை செக் பண்ணிட்டு அவள் இரவு இரண்டுமணிக்கு மேலதான் வொர்க் முடிச்சு அருப்பிருக்காள் என்றதும் உள்ளுக்குள் வேலையை மெச்சிக்கொண்டான்.

ஆனாலும் அவளை ஏதாவது செய்யவேண்டுமே என்று மனம் பரபரக்க அவளது ப்ளானைப் பார்த்ததும் அப்படியே அசந்துவிட்டான்.

அது அப்படியே அவனதுக் கண்களிலும் தெரிந்தது. ஆனால் அதை அவளுக்குத் தெரியக்கூடாதென்று மறைத்தவன் “என்னதிது இப்படி 

ப்ளான் பண்ணியிருக்கீங்க. எனிவே ஒகேதான் நான் இதைக்கொஞ்சம் மாடிபை பண்ணிக்கிறேன். இன்னைக்கு வேலை நடக்கிற ஒரு சைட்டுக்குப் போகணும் ரெடியாக இரு”என்று அனுப்பிவிட்டான்.

“சைட்டுக்கா? இவன் கூடவா? ஐயையோ!” என்று பதட்டத்தோடு தனது கேபினுக்குள் போனவள் அப்படியே யோசித்து கொண்டிருந்தாள்.

அவள் பக்கத்தில் இருக்கிற எல்லாருமே ஹிந்திக்காரங்க அவங்களே பேச்சி கொடுத்தாலும் நம்மளுக்கு பேச்சு வராது கடவுளே என்று முழித்துக் கொண்டிருந்தாள்.

ஒருவழியாக அவளது வேலையில் மும்முரமாகியபோது ஆயுஷ் ப்யூன் மூலமாக அவளை அழைத்து வெளியே வரச்சொன்னான்.

சைட்டுக்கு என்றதும் எதையும் எடுக்காது அப்படியே வேகமாகப் போனவளுக்கு கையிலும் காசில்லை போனும் எடுத்துக்கொண்டுப் போகவில்லை.

அவள் வெளியே வந்ததும் ஆயுஷ் தனது காரை எடுத்து வரச்சொன்னவன் அதில் ஏறி உட்கார்ந்து திரும்பி அவளைப் பார்த்தான்.

“ஓ நம்மளையும் ஏறச்சொல்லுறானோ?” என்று தயங்கித் தயங்கிப் போனவளைப் பார்த்ததும் எரிச்சல் வந்தது.

“நீ ஆடி அசைந்து வர்றதுக்கு உங்கப்பன் காரு கிடையாது.என் கார் சீக்கிரம் வா சைட்டுக்குச் சீக்கிரம் போகணும் ”என்றுசத்தமிட்டான்.

டிரைவர் அவளை ஏதோ விநோதமாகப் பார்க்கவும் ஒருமாதிரி உணர்ந்தவள் சட்டென்று ஏறி உட்கார்ந்து டோரை அடைக்க அதில் கால் மாட்டிக்கோண்டது.

“அவுச் ஆஆஆ என்றவளைப் பார்த்தான்.

“முன்னபின்ன கார்லயே ஏறினது கிடையாதுபோல” என்று ரொம்பக் கேவலமாக வார்த்தைகளால் வதைத்தான்.

அவனுக்கு தெரியும் மோகனிடம் கார் இருக்கு. அவளை தினமும் காரில்தான் கூட்டிட்டு வருகிறான் என்று தெரியும். மித்ராவைப் பற்றியும் தெரியும், அவரது குடும்பத்தை பற்றியும் தெரியும். இதெல்லாம் தெரிந்தே வேண்டுமென்று அவளை வலிக்க பேசவேண்டும், தன்னிடம் மண்டியிட வைக்க வேண்டும் என்று வார்த்தைகளை கடினமாக பேசினான்.

அவளுக்கு கால் வலித்தது. காலை தடவிக் கொண்டிருந்தவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது ஆனாலும் அதை வெளியே காண்பிக்ககூடாது என்றிருந்தாள்.

இவளுக்கெல்லாம் பாவமே பார்க்கக்கூடாது.நல்ல வலிக்கட்டும் வலியில் அழட்டும் என்று உள்ளத்தில் நினைத்திருக்க அவனும் கல்லுபோல உட்கார்ந்திருந்தான்.

ஒருவழியாக அரை மணி நேரம் பயணத்தில் அவர்கள் கட்டிக் கொண்டிருக்கும் பெரிய கன்ஸ்ட்ரக்சன் சைட்டுக்குள் சென்று இறங்கினார்கள்.

நித்ரா அதைப்பார்த்து அப்படியே வாயை பிளந்து கொண்டு நின்று விட்டாள். இவ்வளவு பெரிய கட்டிடம் கட்டுறளவுக்கான பெரிய கம்பெனியா இவங்களோடது என்றுதான் ஆச்சர்யமாகப் பார்த்திருந்தாள்.இவ்வளவு பெரிய கம்பெனியாக இருக்குமென்று அவள் கனவிலும்கூட நினைத்துக் கூட பார்த்ததில்லை.

அதை அவள் பார்த்து விதத்தைக் கண்டதும் ஆயுஷுக்கு அப்படியே ஒரு கெத்தும் தோரனையும் வந்தது.

அவளருகில் வந்தவன் “என்ன ஏதோ ஒரு மாடி ரெண்டு மடிக் கட்டிடம்னு சும்மா நினச்சியா.ப இந்த கன்ஸ்ட்ரக்சன் பார்த்தாலே ஐயாவோட ஸ்டேட்டஸ் சொல்லாமலே என்னன்னு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். நீ எல்லாம் என் முன்னாடி நின்னு பேசக்கூட தகுதி இல்லாதவள். அன்னைக்கு மால்ல எப்படி நடந்துக்கிட்ட?” என்று குரூர எண்ணத்தோடுக் கேட்டான்.

அவன் கேட்ட விதத்திலே அவன் எதற்காக கேட்கிறான் என்று புரிந்து கொண்டவள் அமைதியாக நின்றிருந்தாள்.அவனை திரும்பி கூட பார்க்கவில்லை.

அதுவே அவனை இன்னும் உசுப்பிவிட்டது.அவனது ஈகோவை தலைக்கேற வைத்து ஆட வைத்தது

அவளை திரும்பி பார்த்து “இவ்ளோ பெரிய ஆளு இவன்கிட்டதான் வேலைக்கு போகப்போறேன்னு நினைச்சிருந்தா அன்னைக்கே என்கிட்ட மன்னிப்பு கேட்டு காலில் விழுந்திருப்பல்ல”என்று பெருமையாக கேட்டான்.

“நீங்க எவ்ளோ பெரிய ஆளாக இருந்தாலும் என்னோட பதில் அதேதான். நான் சாரி கேட்கல அப்படிங்கறது என்னோட தப்புதான். ஆனா அதுக்காக நீங்க பேசினா பேச்சுக்கள் ரொம்ப அதிகம். உங்க ஸ்டேட்டஸ் பெருசுன்னு என்னு மிடில் கிளாஸ்னு சொன்னீங்க. அதைவிடவுற் ஒரு வார்த்தை சொனீங்களே.அக்லி சாக்லேட் இது இதுன். வேற எவன் சொல்லியிருந்தாலும் செருப்பால அடிச்சிருப்பேன். நீங்கனாலன்னுதான் சும்மா விட்டேன்” என்று பதிலடி கொடுத்தாள்.

அப்படியான ஒரு பதிலை சத்தியமாக ஆயுஷ் நித்ராவிடமிருந்து எதிர்பார்க்கவில்லை .இங்க இருக்கும் பல பெண்கள் அவனது ஸ்டேட்டஸ் எல்லாம் பார்த்து அவனிடம் வழிகிறதையும். அவன் என்ன சொன்னாலும் நாய்போல வாலாட்டிக்கொண்டிருப்பதையும் கண்டவன்தானே!

அதனால் அவளையும் அதைப்போல நினைத்துவிட்டான். அவள் கொடுத்த பதிலில் அப்படியே ஆடிப்போய்விட்டான்.

அந்தவார்த்தை கேட்டதும் கோபத்தில் மீண்டும் அவளது கழுத்தைப் பிடித்து நெறிக்கப்போனான்.

 

அதற்குள் அங்கிருந்த ஆட்கள் திரும்பிப் பார்க்கவும் உடனே சைட்டுக்கு வந்திருக்கிறோம் என்ற உணர்வுக்கு வந்தவன் அவளிடம் இருந்து விலகி நின்றான்.

ஆனாலும் அவள் பேசிய வார்த்தைகளுக்கான தண்டனை அப்போதே கொடுக்க ஆரம்பித்துவிட்டான்.

இருவரும் சைட்டுக்குள்ளாக நடந்தனர்.மேலே உள்ள வேலையையெல்லாம் கண்காணிக்கணும்னு அழைச்சுட்டு போனவன் அப்படியே அங்கிருக்கும் மூடப்படாத ஓபன் லிப்ட்டுல ஏறிவிட்டான்.

இவன்கூட நம்ம போகணுமா? வேண்டாமா! என்று யோசனையில்நின்றிருந்தவளைப்பார்த்து இந்த லிப்ட்டு ஒன்லி எம்.டிக்கு மட்டும்தான் வேலைக்காரங்களுக்கெல்லாம் படி வழிதான் அனுமதி.

அப்படியே படிவாழியாக மேலயேறி இருபதாவது ப்ளோருக்கு வந்திரு. அங்க கொஞ்சம் மாடிபிக்கேஷன் இருக்கு.அதைக் குறிச்சுட்டு அப்பாக்கிட்ட பேசணும்.மேல வந்திடு” என்றவன் அவளைப்பத்தி யோசிக்காது போய்விட்டான்.

லிஃப்ட் மேலே போகும் போது குனிந்து நித்ராவை பார்த்தவன் “இதுதான் உன் இடம்.இதுதான் என் இடம். நான் எப்பவுமே உனக்கு மேல தான் என்று கையால் சொன்னவனை அன்னார்ந்த்துப் பார்த்திருந்த நித்ராவுக்கு உண்மையிலயே இவனென்ன பணப்பைத்தியமா என்று நினைக்கத் தோன்றியது!