குரோத கொள்முதல் அழகே 5
Kurotham5
5 குரோத கொள்முதல் அழகே !!
"சீக்கிரமா வா பொக்கிஷா, அந்த சண்டாளன் கண்ணுல மாட்டிண்டோம் அவ்வளவுதான் , பாவம் நமக்கு உதவி செய்ய போய் அந்த வாசுவும் மாட்டிண்டான், கடவுள் தான் அவருக்கு உயிர் பிச்சை கொடுக்கணும் ..."
"இப்படியும் மனுஷால் இருப்பாளாப்பா, இவாள எல்லாம் தண்டிக்க கடவுள் அவதாரம் எடுத்து வர மாட்டாரா? நீங்க அடிக்கடி சொல்லுவேளே, தப்பு நடக்குற இடத்துல கடவுள் அவதார புருஷனா அவதாரம் எடுத்து வந்து, அவாள அழிச்சிடுவான்னு ஆயிரம் கதை சொன்னேளே , அந்த பொறுக்கி அத்தனை பேர் மத்தியிலும் என்ன அசிங்கப்படுத்தும் போது. ஏன் அப்பா கடவுள் வரல" என்று பொக்கிஷா தன் தகப்பன் முகத்தை பார்க்க.... பரந்தாமனுக்கு என்ன பதில் சொல்ல தெரியவில்லை....நன்னெறி இவை என்று கதைகள் மூலம் வளர்க்க பட்டவள் காணும் காட்சி அலங்கோலமாக இருக்க புரியாது முழித்தாள்..
"அது அந்த காலம் இது கலியுகம் ...ஆடி தான் தீர்ப்பாங்க, அவதாரம் எடுத்து வர்ற அவதார புருஷனையும் அடக்கி ஆண்டுருவாங்க, நம்மள நாம தான் தற்காத்துக் கொள்ளனும் போல இருக்கு சீக்கிரம் வாம்மா ட்ரெயின் போயிட போகுது...." அவர்கள் போக வேண்டிய ட்ரையின் கிளம்ப தயாராக இருக்க தகப்பனும் மகளும் வேக வேகமாக ஓடி போனார்கள் பரந்தாமன் ஓடும் ட்ரைனில் முதலில் ஏறிவிட ...
"அய்யோ ஏறும்மா சீக்கிரம் "என்று பரந்தாமன் கையை நீட்ட ஓடி வந்து பொக்கிஷா படிக்கட்டில் ஏற அவள் வாழ்க்கை போல காலும் அன்றோ சறுக்கியது ....
ஆஆஆஆஆஆஆ என்று அலறிக்கொண்டு விழப்போன நேரம் உள்ளிருந்து ஒரு கரம் அவள் கரத்தை பிடித்து இழுத்து தூக்கி உள்ளே விட்டது ...
பார்த்து ஏறுங்க ஆர் யூ ஓகே ?என்று சிரித்த முகமாக அவள் கையை பிடித்தபடி நின்றான் ஜீவா இன்பாதித்தன்...
"ம்ம் நன்றிங்க...
"பரவாயில்லை பார்த்து போங்க "என்றவன் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கி ஓடினான்... அவனை பார்த்து கொண்டே பெருமூச்சு விட்ட பொக்கிஷா
"அந்த பொறுக்கி வாழ்ற இடத்துல, இப்படி நாலு நல்லவாளும் வாழ்றா அதான் இன்னும் உலகத்துல மழை பெய்றது இல்லப்பா
'ம்ம் வா இந்த ஊர் எல்லையை தாண்டிட்டா போதும் நாம தப்பிச்சிடலாம் என்று இருவரும் ஆசுவாசமாக சீட்டில் அமர்ந்தனர் ஊர் எல்லையை தாண்டிய பின்னே நிம்மதி மூச்சு விட்டனர் ... தங்கள் சொந்த ஊருக்கு தான் போக நினைத்தார்கள் .. ஆனால் அங்கேயும் தேடி வந்து விட்டால் என்ன செய்ய? சென்னையில் இருக்கும் தன் தங்கை வீட்டுக்கு போய்விட நினைத்து சென்னை ட்ரைனில் ஏறி விட்டனர் .. இனிமே வஞ்சகமூர்த்தி கண்ணில் படாது வாழ்ந்த விடலாமே என்ற நப்பாசைதான்...
"இந்த ஊர்ல தான் ட்ரைவர் வேலை பார்க்கணுமா..ஊரே ஒரு தினுசா இருக்கே கையில வேற பைசா இல்லை என்ன பண்றது ... மறுபடியும் ஊருக்கு கூட போக முடியாதே" என்று பெட்டியோடு புலம்பி கொண்டு வந்த ஜீவா சட்டையை ,ஒரு கை கொத்தாக பிடித்து தூக்க
"யாரது ,வந்ததும் தூக்கி தொங்க போடுறது? என்று ஜீவா தலையை தூக்கி பார்க்க ... வஞ்சமூர்ததி ரத்தம் சொட்டிய கண்ணோடு குருதி குடிக்கும் கோவ விழியோடு நின்றான் ....
"டேய் இந்த போட்டோவுல இருக்கிற பொண்ணை பார்த்தியா?? என்று போனில் பொக்கிஷா படத்தை காட்டினான்...
லவ் அட் பஸ்ட் சைட் பார்த்த முதல் பார்வையில் காதல் மட்டும் தான் வரணுமா என்ன , பார்த்த முதல் பார்வையில் இருந்தே பொக்கிஷா மீது காமம் கொழுந்து விட்டு அன்றோ எரிந்தது ..
அவள் நியாபகம் தூக்கத்தை விரட்ட விரகதாப ஆசையில் உருண்டான்.. நான்கு முறை அவள் பெயரை உச்சரித்து உடல் திருப்தி அடைந்தாலும் உள்ளம் ததிருப்தி அடையவில்லை அதன் விளைவு தூக்கமும் வரவில்லை, படுக்கை மீது அவள் போட்டோவை வைத்து கொண்டு அவள் நிர்வாணம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்து கொண்டே சிலாகித்தான்.. அழகிய அவன் கற்பனையை கலைக்க அவன் போனுக்கு போன் வந்தது ...
"அண்ணன் மாமி ஆட்டோவுல ஏறி எங்கிட்டோ போகுது , கூடவே அந்த கிழவணும் போறான் கையில சூட்கேஸ் வேற இருந்தது என்று தகவல் வர
"என்னை நல்லவனாவே இருக்க விட மாட்டாங்க போலவே ... சின்னப்பொண்ணு சாஃப்டா ஹேண்டில் பண்ணுவோம்னு நெனச்சா ,இவ நம்ம பிறவி குணத்தை காட்ட வச்சிடுவா போல இருக்கே.... என்று துப்பாக்கி கத்தி என்று அத்தனையும் எடுத்து சட்டை உள்ளே சொருகி கொண்ட வஞ்சகமூர்த்தி ரெயில்வே ஸ்டேசன் வந்து இறங்கி , அவளை தேட எந்த பக்கம் போனாள் என்று தெரியவில்லை .. சரியாக குறுக்கே ஜீவா வந்து மாட்ட தூக்கி பிடித்து விட்டான்
"இவளை பார்த்தியா "
"இதை சும்மா கேட்டாலே சொல்லுவேங்க ... அதுக்கு எதுக்கு ஆணியில போட்டோவை தொங்க போடுற மாதிரி என்னை வானத்துல தொங்க விட்டு இருக்கீங்க ? என்றதும் பொத்தென்று வஞ்சமூர்ததி அவனை கீழே விட்டவன் ஜீவா கசங்கிய சட்டையை நீவி விட்டப்படி
"எங்க தம்பி இந்த புள்ளையை பார்த்த? "
"சென்னை போற ட்ரென்ல நான் இறங்கினேன் இவங்க ஏறினாங்க,. கீழ விழ பார்த்தாங்க நான்தான் கை பிடிச்சு தூக்கி விட்டேன் .... என்றவன் சட்டை பையில் கட்டு பணத்தை திணித்து வைத்துவிட்டு வஞ்சமூர்ததி விரிட் விரிட் என்று நடக்க
மகாபிரபு!! எதுக்கு இந்த பணம்னு சொல்லவே இல்லையே... என்று ஜீவா கத்த..
"நீ,செஞ்ச உபகாரத்துக்கு" என்று வஞ்சகமூர்த்தி குரல் வர
அட அட !! என்ன மனுசன் ஒரு தகவலை சொன்னதுக்கு கட்டு ரூபாயா? கையில் நயா பைசா இல்லையே குவாட்டருக்கு வழி இல்லாது கை நடுங்க நின்றவன் நேரே கட்டு பணத்தை தூக்கி கொண்டு பார் நோக்கி நடை போட்டான் ...
"ட்ரெயின் நின்னுடுத்து ஏதோ ஸ்டேசன் போல நேத்துல இருந்து நீ எதுவும் ஆகாரம் எடுக்கலையே நான் எதாவது போய் வாங்கிண்டு வர்றேன்" ... என்று பரந்தாமன் எழும்ப
"ம்ம் ஜாக்கிரதையா போங்கோ? என்று ஜன்னல் ஓரம் தலையை சாய்த்து பொக்கிஷா அமர்ந்து இருக்க ... அவள் தகப்பன் இறங்கி கீழே போக, பொக்கிஷா சட்டென ஏதோ தோன்ற சுற்றிலும் இடத்தை பார்க்க காடு போல இருந்தது மூளை விபரீதமான சமிக்ஞை கொடுக்க
அப்பா ஆஆஆ என்று பொக்கிஷா பதறி எழும்ப நச்சென்று முடி அடர்ந்த அகல நெஞ்சில் மோதி நின்றாள் ,.... எச்சில் விழுங்கி தலையை தூக்கி பார்த்தாள் ,ரெண்டு நாளாக அவளை மிரட்டும் பேய் உருவம் வஞ்சமூர்த்தி நின்றான்...
"அப்பாதானே உன் அப்பாவை பத்திரமா நான்தான் வச்சிருக்கேன்... விவரம் தெரியாத ஆசாமியா இருக்காரே ... நடு காட்டில எவனாவது கடை வச்சிருப்பானா.. என்கிட்ட வந்து டீக்கடை எங்க இருக்கு தம்பின்னு விசாரிச்சான், அப்படியே கொத்தா தூக்கிட்டு போயி மாமாவுக்கு மரியாதை செய்ய சொல்லி இருக்கேன்... என்றதும் பொக்கிஷா அரண்டு போய் பார்க்க.,, அவள் கன்னத்தில் தன் கையில் இருந்த கத்தி வைத்து மெலிதாக வலிக்காமல் தட்டியவன் ...
"ஓடிப் போறியா குண்டூஸ்
"ம்ஹூம்
"அதுக்கு நீ என் கண்ணுல மாட்டாம இருந்திருக்கலாம் , எனக்கு உன்னை புடிச்சிருக்காம இருந்திருக்கலாம்... உன் அழகு என் கண்ணை பறிக்காம இருந்து இருக்கலாம் ... உன் உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால் வர எனக்கு போதை ஏத்தாம இருந்திருக்கலாம்... உன் வாசம் எனக்கு கஞ்சா செடி போல சுகத்தை கொடுக்காம இருந்திருக்கலாம் .. அத்தனையும் கொடுத்துட்டியே, இப்போ அனுபவிக் விடாம போனா என் மனசு தாங்குமா சொல்லு? என்றவன் பேச்சு பழமாக இருந்தாலும் , பார்வை என்னவோ அவள் ஒரு இன்ச் நகர்ந்தாலும் கன்னத்தில் தடவிக் கொண்டிருந்த கத்தி கழுத்தில் பாய்ந்து விடும் என்பதை சொல்லாமல் சொன்னது... அவள் உடல் எங்கும் அந்த ஊதக்காற்றிலும் வியர்த்து நடுங்க....
"எங்க போக போற குண்டூஸ், சென்னையில உன் மாமா ஒருத்தன் ,பேர் என்ன என்று அடியாட்களை நோக்கி தலையை திருப்ப...
பட்டாபி அண்ணே"
ஹான் , பட்டாபி ரெவன்யூ இன்ஸ்பெக்டரா இருக்கானே அவன் வீட்டுக்கா? இல்ல பெங்களூர்ல உன் சித்தி ஒருத்தி இருக்காளே அம்புஜமா அழுமூஞ்சா அவ வீட்டுக்கா? இல்ல மகாபலிபுரம் பக்கம் உன் ஒன்னு விட்ட சித்தப்பா ஒருத்தன் இருக்கானே, அந்த சப் கலெக்டர்,அவன் வீட்டுக்கா எந்த வீட்டுக்கு போக போற? சொல்லு நானே கூட்டிட்டு போயிட்டு ரெண்டு நாள் இருந்து விருந்து திண்ணுட்டு வந்திடலாம் ஆனா கூட நானும் வருவேன் "என்றவனை அவள் கண்மை கண்கள் விரித்துப் பார்த்தது ....
"உலகம் சிறுசு குண்டூஸ், பணம் பாக்கெட்ல இருந்தா உலகமும் இந்த குட்டி பாக்கெட்டுல அடங்கிடும்.. நீ எங்க போனாலும் கடைசியா இந்த பாக்கெட் உள்ளே தூக்கி போட்டு கொண்டு வந்திடுவான் இந்த வஞ்சமூர்த்தி, என் திறமையை பத்தி ஊருக்குள்ள கேட்டுப்பாரு..." என்று அட்டகாசமான சிரிப்பை அந்த நடுராத்திரி சிரிக்க கல்லறை மீது நகை அலங்காரம் ஆகுமோ?? அவளோ கண்கள் கலங்க தன் எதிரே இருந்த ராட்சத மிருகத்தை பார்க்க ..
"அட இந்த பார்வைக்கு தாண்டி நான் டோட்டல் பிளாட்டாகி போய் கிடக்கிறேன்.. நீ இப்படி பார்க்கும்போது அந்த ராதா, கனகா, ரோசா நிரோஷா , ருக்கு கொக்கு எல்லாரும் உன் காலடி தூசிக்கு சமானம் ஆயிருவாளுகடி ... அவளுக கூட எத்தனை நாள் படுத்து இருப்பேன்... இந்த பார்வை உன் கண்ணுல மட்டும் தான்டி பார்க்கிறேன் , ப்ச் சும்மா சொல்ல கூடாது அள்ளுது ஊஊஊ என்றவன் நாவு அவள் கன்னத்தில் கோடு கிழிக்க... அவள் உப்பு நீர் சுவை அவன் நாவின் மொட்டு அறிய
"எல்லாருக்கும் அழுதா புடிக்காது.. ஆனா எனக்கு மட்டும் இந்த கண்ணுல கண்ணீரை பார்க்கும்போது ஒரு மாதிரி உச்சந் தலைக்குள்ள போதை கிர்ன்னு ஏறுது தெரியுமா ? போதையான கண்ணோடு பொக்கிஷாவை பார்த்தவன்....
"போதையில இருக்கிறவன் நிதானமா இருக்க மாட்டான் அப்படித்தான் நானும், உன் போதையில மதி மயங்கி கிடக்கேன், மரணத்து வரை போய் பார்த்திராத.. எப்போ என்னை விட்டு ஓடிப்போக நினைச்சியோ... உன்ன ஒன்னும் பண்ண மாட்டேன் போ என்றவன் அவளை அலேக்காக தூக்கி சீட்டில் அமர வைத்துவிட்டு.... கருப்பு வேட்டியை ஏத்தி கட்டி கொண்டு நடக்க ஆரம்பிக்க ... ஓடி வந்து அவன் காலடியில் விழுந்த பொக்கிஷா
"என் தோப்பனாரை விட்டிடுங்கோ ,
"பரவாயில்லையே டக்குன்னு பல்ப் எரிஞ்சுடுத்தே... பட் டூ லேட் குண்டூஸ் , வயசான காலத்துல சுகர் பிபி கொலஸ்ட்ரால், பித்தம் கபம்னு அத்தனையும் இருக்காமே, அந்த கிழவன் இருந்தா என்ன செத்தா என்ன ?நோயோட போராட்டம் நடத்துறதுக்கு பேசாம போயிட்டு போறான் விடு ... என்றவன் பின்னே ஆட்டுக்குட்டி போல ஓடினாள்.. மழை வேறு வெளுத்து வாங்க ...
நான் இனிமே எங்கேயும் போக மாட்டேன்,தயவு செஞ்சு அவரை விட்டுடுங்கோ...
"டேய் இஇஇஇஇஇஇஇஇ என்றதும் அடியாள் தட்டு நிற மாமிசத்தை கொண்டு வந்து வஞ்சமூர்ததி கையில் கொடுக்க ... அவன் விசில் அடிக்கவும் தெரு நாய்கள் சீறி வந்து அவன் முன்னே நிற்க ...
"சுடச்சுட கறி, இந்தா உங்களுக்கு இன்னைக்கு விருந்து என்று கறிகளை நாய்களுக்கு போட
இது என்ன கறி தெரியுமா குண்டூஸ் .....
அ.....ப்......பா..... அய்யோ அப்பா என்று வீசப்பட்ட சூடான கறிகளை பொக்கிஷா அலறி கொண்டு போய் எடுக்க ஓடிட .... நாய்கள் அவளை ஆக்ரோசம் கொண்டு விரட்ட ,இவற்றை தன் கார் பேனெட்டில் உட்காந்து விசில் அடித்தபடி வஞ்சகமூர்த்தி பார்த்து கொண்டிருக்க ....
ஆஆஆஆஆஆஆஆஆ நாய்கள் கடித்து குதற ரெண்டே நொடியே அவன் விசிலுக்கு அத்தனை நாயும் பம்மி பின்னே போக, ரோட்டில் விழுந்து கிடந்த பொக்கிஷா திரும்பி அவனை பார்க்க ...
நாய் நன்றி உள்ளது , எத்தனை நாள் கறி போட்டிருக்கேன் அதுவும் மனுஷக்கறி என் ஒத்த விசிலுக்கு கவ்விடும் கவ்விடும்...
அப்பா அப்பா ஆஆஆ
உன் தோப்புக்கு ஆயுசு கெட்டி என்று புருவம் வளைத்து காட்ட ... பொக்கிஷா எதிர் இருந்த மின்கம்பத்தை பார்க்க அங்கே பரந்தாமன் கட்டி வைக்கப்பட்டிருக்க ....
அப்பா அப்பா அப்பா என்று தகப்பனை தடவி பாரத்தாள் ....
அம்மாடி என்று அவர் கண்ணை திறந்து பார்க்கவும் தான் பெருமூச்சு வந்தது ....
அப்பாஆஆஆஆஆஆ .... மழை நீர் நடுவே அவள் கண்ணீர் உடைப்பெடுத்து ஓடியது,.. அவள் கண்ணீருக்கு மதிப்பே இல்லாத ஒருவன் முன்னால் தன் கண்ணீர் சிந்தபடுவதை உணர்ந்தாளோ?? சட்டென தன் கண்ணீரை நிறுத்தி கையால் கண்களை துடைத்து கொண்டவள் வஞ்சமூர்த்தி நோக்கி திரும்பி நடந்தாள்... அவனோ மழைநீரில் நனைந்த பன்னீர்புஸ்பம் போல ஆடை நனைந்து உடல் அங்கம் எங்கும் பளிச்சிட, தன் முன் வந்து நின்ற அவளை உதட்டை நாவால் எச்சில் பண்ணி கொண்டே பார்த்த கயவன் கண்ணை நேருக்கு நேர் பார்த்தவள்
நீங்க சொல்ற எல்லாத்துக்கும் சம்மதம் .."
அப்படின்னா புரியலே குண்டூஸ்... காதை குடைந்து கொண்டே அவளை ஏற இறங்க பார்த்தான்
"நீங்க கேட்கிறதுபடி நான் செய்றேன்
"ப்ச், இதெல்லாம் செல்லாது நான் உங்க வப்பாட்டியா இருக்க சம்மதம், என்ன ஏத்துக்கோங்க உங்க படுக்கையில தினம் தினம் ____மணமா கிடக்க தயார்... என்னோட படுத்து சுகம் தாங்க, நானும் உங்களுக்கு சுகம் தர்றேன்னு உறுதிமொழி என் காலை ,ப்ச் ப்ச் கையில விழுந்து எடு... போனா போகுதுன்னு எல்லாத்தையும் மறந்துட்டு, உன்னை வப்பாட்டியா ப்ரோமோட் பண்றேன் ம்ம்" என்று வஞ்சகமூர்த்தி கையை அவள் முன்னே நீட்ட கொட்டும் மழை நடுவே ஒரு அகோர அரக்கன்!!
உங்க வப்பாட்டியா உங்களாண்ட படு......த்து
____ணமா மிஸ்ஸிங் குண்டூஸ்
______ படுத்து உங்களுக்கு சுகம் தர
உறுதி மொழி எடுக்கிறேன் , இன்றிலிருந்து நான் வஞ்சமூர்த்தி வப்பாட்டின்னு சொல்லு
ம்ம் அவன் கையில் முகத்தை புதைத்து சொல்லி முடிக்க ...
இன்னையில இருந்து நீ யாரு குண்டூஸ் ?
பொக்.... அவள் பெயரை மறக்க வைத்தான்..
ஹான் கேட்கல .....
வஞ்சக மூர்த்தி வ....ப்பாட்டி...
உன் வேலை என்னது ?
உங்களுக்கு தாசியா இருக்கிறது
குட் குட் கீப் இட் அப் பொழச்சிப்ப.... டேய் அவ தோப்பனரா நிலத்துல லேண்ட் பண்ணி விடுங்கோ என்று சிரிக்க... பரந்தாமன் கட்டை கழட்டி இருவர் வேறு வண்டியில் அழைத்து செல்ல ....
அப்பா
அவரை நம்ம பாய்ஸ் பார்த்துப்பானுக... உன் வேலை ,இனி என்னை கிளுகிளுப்பா வச்சிக்கிறது மட்டுமே புரியுதா ?
ம்ம்
அந்த நடுகாட்டில் மழை இரவில் அவனும் அவளும் மட்டும் நின்று கொண்டிருந்தனர்...
கடவுள் , ஆணவன் கொண்டு ஆடும் மனிதர்களை ஆட விட்டே அடக்குவான்!!
இவனும் கொஞ்சம் ஆடட்டுமே!!