வன்முறை செய் தப்பில்லை 18
Van18
18 வன்முறை செய் தப்பில்லை !!
தடங்கலுக்கு மன்னிக்கவும், கொஞ்சம் ஹெல்த் இஸ்யூ ஆகி போச்சு அதான் வர முடியல ..
ரைஸ் மில் உள்ளே தடதடவென்று சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது....
ஜீவா தம்பி, மூர்த்தி என்ன உன்னை பக்கத்துல இருந்து பார்க்கவா செய்யுது எதுக்கு இப்படி கிடந்து வேலை பாத்துட்டு இருக்கேன் ... பேசாம நீயும் வந்து எங்களோட உட்கார்ந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு தானியங்களை காயவைத்து மிஷின் உள்ளே போட்டுக் கொண்டிருந்தவன் மெலிதாக சிரித்துக் கொண்டு...
தேவைக்கு அதிகமாகவே ஓய்வெடுத்தாச்சு அண்ணே , இனியாவது கொஞ்சம் உழைக்கலாமேன்னு, நான் வேலைய பார்த்தாலும் கூட இருக்கிற நீங்க என்னை உருப்பட விட மாட்டீங்க போல இருக்கு..என்று மெலிதாக சிரித்தவன்..
"உங்களுக்கு வேலை பார்க்க இஷ்டம் இல்லன்னா எவ்வளவு நேரம் ஆனாலும் ஓய்வெடுங்க... ஆனா அதுக்கான கூலியை குறைச்சிட்டு தான் தருவேன் என்ற ஜீவாவை அத்தனை பேரும் அதிர்ந்து பார்க்க
எவனோ ஒருத்தன் நமக்கு படி அளக்கிறான் ,நமக்கு செய்றான் , நாம எப்படியும் இருக்கலாம்னு பொறுப்புகளை ஓரம் கட்ட நினைக்கிறதே மிகப்பெரிய தப்புதான்... இனிமே அந்த தப்பை நானும் செய்ய மாட்டேன், என்ன சுத்தி இருக்கிறவங்களும் செய்யக்கூடாது ... அப்படி செய்யுறதா இருந்தா , அதுக்கான நட்டத்தை நீங்க அனுபவிங்க... எதுக்கு என் முதலாளி அனுபவிக்கணும் என்றதும் சாப்பாட்டு நேரம் முடிந்தும் காத்தோட்டமாக படுத்து கிடந்தவர்கள் வேக வேகமாக வந்து வேலையை செய்ய ஆரம்பித்து விட்டார்கள்,
ஜீவாவுக்கு வயிறு கப கப என்று பசித்தது சாப்பிடுவதை விட சமைப்பது எவ்வளவு பெரிய கஷ்டம் என்று சில நாட்களாக தான் பார்த்துக் கொண்டிருக்கிறான்... பருப்பு அவிந்தும் அவியாமலும் தக்காளி மசிந்தும் மசியாமலும் உப்பு போட்டு போடாமலும் பத்தியச் சாப்பாடு போல உள்ளே இறங்க மறுக்கிறது.... இன்றும் கிண்டி கொண்டு வந்த சாப்பாட்டை திறந்து வைத்துவிட்டு சாப்பிட உட்கார்ந்தான் .... வழக்கம் போல முகத்தை சுளித்தான்... குப்பையில் போட கூடாது என்று வயிற்றில் தள்ளுகிறான் ...ரவை கிண்டி எடுத்து வந்திருக்க... அதை பிசைந்து வாயில் வைக்க போக புல்லட் ஹாரன் பறந்தது .... அது அவன் மணாளினி பைக் ஆயிற்றே, சட்டென தலையை தூக்கி பார்க்க கேட் அருகே பாரிஜாதம் பைக் நிற்க...ஃ மகன் தாயின் முன்னிருந்து இறங்கி சாப்பாட்டு கூடையை தூக்கி கொண்டு ஓடி வந்தவன்
அண்ணன் அப்பா சாப்பிட்டிருச்சோ? என்று பதட்டம் அவன் குரலில்
"இல்ல தம்பி இப்போதான் வேலை முடிச்சு உட்காருது...
"ஓஓஓ நல்லவேளை... பாவம் என் அப்பா அம்மா சாப்பாடு இல்லாம, ஆளு இளைச்சு போச்சு "இன்பா கவலை வேறு பட்டு கொண்டு தகப்பன் நோக்கி ஓடி வந்தவன்
எப்போய் , சாப்பாடு கொண்டு வந்து இருக்கேன் அதுல கை வைக்காத .... என்று வாசலில் நின்றே கத்த
எதுக்கு? யார் கொடுத்து விட்டா? இன்னும் வெயிலில் ரைஸ்மில் வெளியேதான் பாரிஜாதம் நின்றாள்
"உனக்கு தந்துவிட ஊரெல்லாம் பொண்டாட்டியா இருக்கு... இருக்கிறது ஒரு பொண்டாட்டி அதுதான் தந்துவிடும்... வேற யார் தந்துவிடும் ... ஆசை இருக்கலாம், பேராசை எடுக்க கூடாதுப்போய் என்று அவன் வைத்திருந்த சாப்பாட்டை நகட்டி வைத்துவிட்டு... தன் தகப்பனுக்கு தட்டு டம்ளர் எல்லாவற்றையும் எடுத்து சாப்பாட்டை எடுத்து வைக்க ஆரம்பிக்க
"ஏன் உன் அம்மாக்காரிக்கு, உள்ள வந்து கொடுத்தா ஆகாதம்மா... வாசல்லையே கொடுத்து அனுப்பி இருக்கா... இதுதான் புருஷன் மேல அவ வச்சிருக்க பயபக்தியோ...
"புருஷன் மேல ஏகப்பட்ட பய பக்தி இருக்கு.. ஆனா, புருஷன் வேலை பார்க்கிற முதலாளி கிட்ட தான் சண்டை ... அதான் ரைஸ்மில்லுக்கு உள்ள நுழைய மாட்டேன்னு சண்டித்தனம் பண்ணி வெளியவே நிக்குது...அது மசிஞ்சு போற ஒரே ஆளு நீதேன் மாமன்கிட்ட கூட மல்லுதான் கட்டும் .. "
"உன் பக்கத்திலேயே உட்கார்ந்து சாப்பிட்டு முடிச்ச பிறகுதான் வரணும்னு எனக்கு கட்டளை வேற போட்டு விட்டிருக்கு சீக்கிரம் சாப்பிடு,, அம்மா வெயில்ல நிக்குதுல்ல
"ஏண்டா வெயில்ல நிக்கிறா கொஞ்சம் மரத்தடியில் போய் நிக்க சொல்லு...
"ஏன் அதை போய் நீ சொல்றது... நானும் பாத்துக்கிட்டே தான் இருக்கேன் சும்மா சும்மா அம்மாகிட்ட முகத்தை காட்டுற .. ஒத்த சேலை எடுத்து கொடுத்தா காணுமா?
"வேற என்ன பண்ண சொல்ற...
"அப்படியே வளையல் கடைப்பக்கம் கூட்டிட்டு போகணும் , கோவில் குளம் இழுத்துட்டு போகணும் ராத்திரி என்னை தூங்க வச்சுட்டு.. ஏதாவது சினிமா பார்க்க போகணும் ? ஏன்பா இதெல்லாம் உனக்கு தெரியவே தெரியாதா? உன்னோட ஹிஸ்டரியில் இதெல்லாம் அழிக்கப்பட்ட வரலாறு போலவே இருக்கே...
"ம்ம், என்ன செய்ய, உன் அளவுக்கு ஞானம் இருந்திருந்தா , நான் ஏன்டா லவ் பண்ண தெரியாம சுத்த போறேன்.... நீ எல்லாம் கல்யாணம் முடிஞ்சா ஆறாவது மாசத்திலேயே ஏழு பிள்ளை பெத்துருவ போல இருக்கே "என்றதும் மகன் கிளுக்கி சிரிக்க அவனுக்கு ஒரு வாயை ஊட்டி விட்ட ஜீவா ...
"நீ சொல்ற காதல் உன் அம்மாவுக்கு போதுமாடா?
"ம்ம் தெரிலையே
"நான் சுத்தி பார்க்கிற காட்சி எல்லாம் காதலை கற்று கொடுக்கல... கண்ட கருமத்தைதான் கத்து கொடுக்குது.. எனக்கு அதை பார்த்தா காதலிக்க ஆசை வரல கண்ணா... ஒரு காதல்!!! அதை எப்போ நினைச்சாலும் தித்திக்கணும் ,ரெண்டு பேருக்கும் அந்த காதல், பாயாசம் உள்ள கிடக்கிற முந்திரி போல தோண வைக்கணும்..
எப்போய் நீயா இது பின்னுறீயேப்பா...
"கார் பத்தியே யோசிச்சவனை காதலை பத்தி யோசிக்க வச்ச உன் அம்மைதான் கெட்டிக்காரி...
"அட அது பாவப்பட்ட புள்ளைப்பா காதலிக்க தெரிஞ்ச அளவு ;அந்த காதலை உன்கிட்ட காட்ட தெரியாம தோத்து போச்சு
"ப்ச் எனக்கு புரிஞ்சுக்க தெரியல சரி வுடு ,என்ன ஆகி போச்சு நீ மனசு வச்சா அப்பாவும் காதலன் ஆயிடலாம்
"என்ன பண்ணணும்னு சொல்லு பண்ணிடலாம் ..
"இது உன் அம்மா பங்கு போய் கொடுத்துட்டு வா" என்று ஒரு உருண்டை சாப்பாட்டை எடுத்து மகன் பிஞ்சு கையில் கொடுத்து அனுப்ப ... இன்பா சாப்பாட்டை தூக்கிக்கொண்டு தாயை நோக்கி ஓட இவன் இங்கிருந்தே மனைவி முகத்தில் தெரிகின்ற ரியாக்ஷனை ரசிக்க காத்திருக்க...
"நேத்து சேலை வந்துச்சு, இன்னைக்கு சோறு வந்து இருக்கு ... அப்பா சாப்பிடாம மொத உருண்டையை எனக்கும், இரண்டாவது உருண்டையை உனக்கும் கொடுத்துவிட்டு இருக்கு... நீ சாப்பிடுவியாம் என்று அந்த குட்டி கைகள் தாயின் வாய் அருகே போக... ஏதோ சாப்பாட்டையே கண்டிருக்காதவள் போல இதுவரை சாப்பிடாமல் பட்டினி கிடந்தவள்போல அந்த சாப்பாட்டை ஆஆ என்று வாங்கிக் கொண்டாள் ..
அவள் சமைத்த உணவு தான் இன்று தேனாக இனித்ததே!! அதில் அருஞ்சுவை இல்லை காதல் சுவை அதீதமாய் தெரிந்தது ..
நான் சாப்பிட்டுட்டேன்னு அப்பாக்கிட்ட போய் சொல்லு... அவர சாப்பிட சொல்லு இனிமே நெதமும் அம்மாவே சாப்பாடு சமைச்சு கொடுத்து விடுமான்னு தகவல் கொடுத்துடு...
ம்ம் மகன் திரும்ப போக கையை பிடித்து இழுத்தவள்
ம்க்கும் என்று தாய் நெளிய
என்னம்மா புதுசா நெளியுற....
அது வந்து இதை அப்பாக்கிட்ட கொடுக்கிறியா?? அவள் ஒரு கடிதத்தை மடித்து மகன் கையில் கொடுக்க
"தூதுக்கு புறா இல்லைன்னு என்னை அனுப்புறீங்களா...:
"ஹிஹி , என் குட்டி __ஞ்சான்ல, அம்மாவுக்கு செய்ய வேற யாரு இருக்கா....
"சரி சரி வுடு ஜமாய்ச்சிடலாம்
"அதை ஓபன் பண்ணி பார்க்காம கொண்டு போய் கொடு
"அடுத்தவங்க லெட்டரை படிக்கிறது அநாகரிகம் ஐ நோ
"இரு இரு இதையும் கொடுத்துடு" என்று மகன் வலது கன்னத்தில் நச்சென்று முத்தம் வைக்க
"இது வேறையா டபுளா கொடுத்துடுறேன் என்று இன்பா வீறுநடை போட்டு போக ... காதல் தூது கொண்டு சென்ற மகனை பார்த்தபடி புல்லட்டை மரத்தடியில் பார்க் பண்ணி அதன் மீது அமர்ந்து கணவனை சைட் அடிக்க....
இந்தா அம்மா தந்து வுட்டிச்சு... கையை கழுவி கொண்டு நின்றவன் சட்டை பாக்கெட் உள்ளே திணித்தவன்... அவன் சட்டை காலரை இழுத்து இரண்டு கன்னத்திலும் மாறி மாறி முத்தம் வைத்து
இதையும் தர சொல்லிச்சு... ஜீவா இங்கிருந்தே அவளை பார்க்க சட்டென கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருந்த பாரிஜாதம் காலை இறக்கி பவ்யமாக உட்கார்ந்து கொண்டாள்.... அவளை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவன் நச் நச்சென கணக்கு இல்லாத முத்தத்தை மகன் நெற்றியில் கொடுத்து ...
இதை அங்க டெலிவரி பண்ணிடு ...
இதுல எத்தனை எனக்கு எத்தனை அம்மாவுக்கு ..
உன் அம்மா எடுத்தது போக மீதி அத்தனையும் உனக்கு தான் ...
ம்க்கும் நீ கசக்கி போட்ட காகிதத்தை கூட என்னை தொட விடாது கேட்டா அதுல உள்ள அவர் கைமணம் கெட்டு போகும்னு பத்திரப்படுத்தி வைக்கும் முத்தத்தையா தர போகுது... சரிப்பா கிளம்பறேன் பாத்திரத்தை கொடு....
இரு இரு உன் அம்மா கொடுத்துட்டா நானும் பதிலுக்கு தரணும்ல என்று உள்ளே போனவன் அவள் தந்து விட்டிருந்த கடிதத்தை திறந்து பார்க்க
அது என்ன ம்ம் ? பதில் வேணும் ... என்று எழுதியிருந்தாள்..
மெலிதாக மீசையை தடவி சிரித்தான்.. மீசை ஆணுக்கு அழகு மட்டும் அல்ல .. அஃது ஆசையை கட்டுப்படுத்தும் ஆசையை கூட்டும் நுண்ணிய கருவியும் கூட, மோகம் வந்தாலும் கோபம் வந்தாலும் ஆணின் கைகள் அந்த மீசையை தடவிடும்..
அவன் ஒரு கடிதத்தை எழுதி மகன் கையில் கொடுத்தவன்...
இதை அம்மாகிட்ட கொடுத்துடு....
இப்ப உங்களுக்கு செய்கிறேன் வளர்ந்த பிறகு என் ஆளுக்கு நீங்க தான் தூது போகணும்..அதுக்கு எல்லாம் தேவையே இருக்காது .. என் ஆளை மறிச்சு மாமனை கட்டிக்கிறியாடின்னு ஒரே போடா போட்டிர வேண்டியதுதான் என்ற இன்பாவை ஜீவா முறைத்து கொண்டு
ஒருவேளை மாட்டேன்னு சொன்னா ?
இருக்கவ இருக்கு மாமன் கடை, நாலு மஞ்சள் கயிறை வாங்கி கழுத்துல கட்டி விட்டிர வேண்டியதுதான் உன்ன போல பத்து முடிச்சு போடணும் அதுதான் என் ஆசை என்ற மகனுக்கு நாலு கொட்டு போட்டவன்
முதல்ல அது _____ ட்டும் அப்புறம் ஆள் பிடிக்கலாம் மகன் எதோ முனங்கி கொண்டே போக
டேய் என்னடா சொன்ன ...
மக்கும் உனக்கு இப்ப நாங்க பேசுறது புரிய ஆரம்பிச்சுட்டு , இதுக்கும் சேர்த்து அடிப்ப எதுக்கு வம்பு ...
யப்பா என்னா வாய் இவனை சமாளிச்சு அவளை சமாளிச்சு மத்தது எல்லாம் யோசிச்சாவே படிக்காத எக்ஸாம் ஹாலுக்குள்ள போன மாதிரியே பீல் ஆகுதே தேறிடுவேனா... இத்தியாதிகளில் பார்டர் பாஸ் ஆகியவன் என்று வேறு கிண்டல் செய்திருக்க இவன் வேலை ரொம்ப சுமார் போல என்று புரிந்து ... அவ வாயால் பட்டம் வெல்லும் ஆவலோ ஆவலில் கொக்கரித்தது வெள்ளை சேவல் !!
இந்தாம்மா அப்பா தந்து வுட்டுச்சு என்று தாய்க்கு நச் நச் முத்தம் கொடுக்க
அடிங்க யாருக்கிட்ட ஏமாத்த பார்க்கிற
மொத்தமா 12 முத்தம் தந்தார் மீதி ஆறை எங்கடா?
ம்மோய் அது எனக்கு ...
:அதெல்லாம் செல்லாது கொடுடா , உனக்கு வேணும்னா தனியா போய் வாங்கிக்க என்று மகனிடம் காதலுக்காக வன்முறை செய்து மீதி முத்தமும் வாங்கி கொண்டவளுக்கு மீசை குத்த கணவன் தரும் முத்தம் வேண்டும் என்று பேயாக அன்றோ ஆசை வந்தது ...
"இந்தா இதுல நீ எழுதின லெட்டருக்கு பதில் இருக்காம் " என்று ஜீவா எழுதிய லெட்டரை தாயின் கையில் கொடுத்து விட்டு பைக்கில் ஏறி அமர்ந்து தகப்பனுக்கு கையை ஆட்ட...
"ம்க்கும் இதுக்கும் லெட்டரா.... என்று அவனை பார்து உதட்டை கோணியவள் கடிதத்தை மடித்து ஜாக்கெட் உள்ளே திணித்து விட்டு ..
"இந்த துண்டு சீட்டுக்கு தான் பெட்ரோல் போட்டு வந்தாங்ககலாமா ... ஏன் துரை வந்து கையை ஆட்ட மாட்டாராமா அங்கிட்டே நின்னு கையை ஆட்டுறார்.. என்று காதல் குறை அத்தனையும் கண்ணில் தெரிய
"வேலை நேரத்துல காதலுக்கு கூட விலக்குதான்னு அம்மாக்கிட்ட சொல்லுடா என்றான் சட்டையை கழட்டி ஆணியில் தொங்க போட்டபடி அவன் கூற ..
"ரொம்பதேன் போயிட்டு வர்றேன் "என்று கணவனை பாரிஜாதம் பார்க்க... மகன் கண் மறைத்து உதட்டை குவித்து முத்தமிட்ட ஜீவா செயலில், அய்யோ ஆயிரம் தாமரை ஒரே நேரத்தில் சூரியனை கண்டு மலர்ந்தது போல மலர....
கண்ணாடியில நானும் பாத்துட்டேன்போய் உனக்கு இன்னும் சூட்சமம் வரணும்" என்ற மகன் குரலில்
"சீசீ போங்கடா என்று ஜீவா உள்ளே ஓடி விட்டான் ....
"என்னவா இருக்கும் "விளையாடும் மகனை ஒரு பார்வை பார்த்து கொண்டவள் கடிதத்தை பிரித்து பார்த்தாள்
"அந்த ம்ம் க்கு பதில் இரவு 11 மணிக்கு உன் மகன் தூங்கிய பிறகு , பின்னால் இருக்கும் மோட்டார் ரூமில் பதில் சொல்கிறேன் ... பதில் தேவை என்றால் வரலாம் மிஸஸ் ஜீவா இன்பாதித்தன் அவர்களே!! என்று எழுதி இருக்க எத்தனை முறை அதை வாசித்தாள், அவளுக்கே தெரியாது... திரும்ப திரும்ப அந்த காதல் கடிதம் கடித்து குதறப்பட்டது அவள் உதட்டில்.... அவன் கொடுத்து விட்ட எச்சில் பாத்திரத்தை கழுவ திறக்க பாத்திரம் அழகாக கழுவி அதன் உள்ளே மல்லிகை சரம் மகனுக்கு தெரியாது மறைத்து கொடுத்து விட்டிருக்க...
அய்யா பூவா!! எனக்கா?? ஒரே துள்ளாக வயது மறந்து துள்ளியே விட்டாள்..
ஆகச்சிறந்த வன்முறையே காதல்தான் போல?! பிரிந்தாலும் இணைந்தாலும் வன்முறை செய்தே சாகடிக்கும் கலையில் காதலும் ஒன்று !!