வன்முறை செய் தப்பில்லை 22
Van22
22 வன்முறை செய் தப்பில்லை !!
அவன் நெஞ்சில் இப்படி துயில வேண்டும் என்று எத்தனை நாள் கனா., நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்த பாரிஜாதய்தை அவன் கைகள் பத்திரமாய் தூக்க ... சட்டென கண்களை விழித்தவள் தன்னை தூக்கியது அவன் கரம் என்றதும் அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்து கொள்ள..
"புள்ள தனியா கிடப்பான்.. அங்க போய் படுத்துப்போம்" என்று ஜீவா அவள் தூக்கம் கலையாமல் நடக்க, அவன் முகத்தை அண்ணாந்து பார்த்தாள்...
அவளுக்கு ஏன் கணவன் தேவை ? அவள் தேவைகளை பூர்த்தி செய்ய கணவன் தேவையில்லை... அவள் தேடல்களையெல்லாம் பூர்த்தி செய்ய கணவன் தேவை !!
அவள் விருப்பங்களை எல்லாம் செய்ய கணவன் தேவையில்லை !!
அவள் விரும்பியதை எல்லாம் விரும்பியபடி செய்ய கணவன் தேவை !!
அவள் மகிழ்ச்சியாக இருக்க கணவன் தேவை இல்லை
அவள் மகிழ்ச்சியை தேட கணவன் தேவை
அவள் நிம்மதியாய் இருக்க கணவன் தேவை இல்லை...
அவள் நிம்மதியே அவனாக போனதினால் அவள் கணவன் தேவை..
பிடிக்க ஒரு கரமும், சாய ஒரு தோளும் அவளுக்கு போதும் ... அதை அவனுக்கு கொடுக்க தெரிந்தால் போதும்....
தாயும் தகப்பனும் படுக்கையில் தனக்கு ஒவ்வொரு பக்கமும் படுத்து தூங்க இன்பா இருவரையும் மாறி மாறி பார்த்தான் ... ஜீவா கை மகன் மீது கிடக்க பாரிஜாதம் கையும் மகன் மீது அணைத்து பிடித்து இருக்க.. மெல்ல அசப்பு இல்லாது எழும்பிய இன்பா தகப்பன் கரத்தை தூக்கி தாயின் மீது போட்டவன் தாயின் கரத்தை எடுத்து தகப்பன் மீது போட்டவன் ... இருவரையும் நெட்டி முறித்து சத்தம் இல்லாது இருவருக்கும் முத்தம் கொடுத்தவன் அங்கே கிடந்த குட்டி கட்டலில் போய் படுத்து கொண்டான் ....
பக்குவம் சில நேரம் அதிகபிரசங்கி தனமாக கூட தெரியலாம்.. அவனுக்கு தான் தெரியும் ,தகப்பன் இல்லாது அவன் பட்ட அவமானமும் வேதனையும் தன் தாய் காட்டாத கண்ணீரும் ...அதற்கு பேர் பிஞ்சிலே விளைந்தது என்று உலகம் சொன்னால் வச்சிட்டு போடா என்று தோளை உலுக்கி கொள்வான் ...
டேய் உன் அம்மை நல்லா தூங்குறா காலையில வேலை இருக்கு .. உனக்கு தோசை போட்டு வச்சிருக்கேன் அப்பா மில் போறேன், அம்மா எழும்பினதும் இந்த லெட்டரை கொடுத்துடு அவசர அவரசமாக ஜீவா கிளம்பி கொண்டே மகன் கையில் லெட்டரை திணிக்க ...
மக்கும் இதுக்கு இல்லையா எண்ட்டு..
ஹிஹி இது நல்லா இருக்குடா...
ப்ச் அவனவன் டுவிட்டர் இன்ஸ்ட்ரான்னு போயிட்டு இருக்கான் மானத்தை வாங்குறப்பா நீ, சவத்தை கொடு வேறென்ன செய்ய ... ஒத்த தங்கச்சி கிடைக்க என்ன எல்லாம் பண்ண வேண்டி கிடக்கு... துரித முத்தம் மகனுக்கு மட்டும் கொடுத்து விட்டு ஓட போக
எப்போய் உன் பொண்டாடிக்கும் கொடுத்துட்டு போயிடு இல்ல எழும்பி ஆடுவா.... நான் திரும்பிக்கிறேன் மகன் திரும்பி கொள்ள ..அழுத்தி மனைவி உதட்டில் அன்றோ இச்சை வைத்தான் .... அவள் உதட்டை சுழிக்க.... மீண்டும் ஒரு முத்தம் கொடுத்து விட்டு ஓடினான்..
எம்மோய் ஸ்கூலுக்கு போறேன் , இந்தா உன் புருசன் விடு தூது என்று அரக்கபறக்க மகனுக்கு உணவை ஊட்டிய தாய் கையில் லெட்டரை கொடுக்க
"இருடா இருடா அப்பா மில் வழியாதான போவ போகும் போது இதை கொடுத்துடு என்று அவள் ஒரு லெட்டரை இன்பா கையில் கொடுக்க
"நீயுமா ? பாரிஜாதம் குலைய
"நீ என்ன கருமம் வேணும்னாலும் படு தாயே வெட்கம் மட்டும் படாத" என்று தலையில் அடித்து கொண்டு மகன் போக
"என்ன பாரிஜாதம் கொஞ்ச நாளா வட்டி பிரிக்க போகல "பக்கத்து வீட்டு பெண் மகனை வழி அனுப்பி கொண்டு நின்ற அவளிடம் கேட்க
""இனி அதை எல்லாம் நிறுத்த போறேன் அக்கா
"என்ன தீடீர்னு ?
"இத்தனை நாள் என்ன பார்த்துக்க யாரும் இல்லை இப்ப எனக்குன்னு என் புருசன் இருக்கார்... நான் ஏன் காடு மேடுன்னு கால் வலிக்க அலையணும் ...அவர் எனக்கு செய்வார், நான் அவருக்கு செய்வேன் அது போதும் ... மதியம் மச்சானுக்கு சாப்பாடு கொண்டு போகணும், மீன் வந்தா சொல்லுங்க என்று ஊர் கேட்க கத்தி சொல்லி விட்டு தான் போனாள் ....
இத்தனை நாள் என் இல்லாமை கண்டு பேசி பேசி நோகடித்தீர்கள் அல்லவா ..நான் நல்லா இருக்கேன் நல்லா இருப்பேன் என்று சொல்வதில் தான் என்ன ஒரு கர்வம்!!
கணவன் மனைவி பிள்ளை என்று வாழும் வாழ்க்கையில் சண்டையும் சச்சரவும் இல்லாது இல்லை ... தாயும் மகனும் ஒரு பக்கம் போனால் இவன் ஒரு பக்கம் போய் முழித்துதான் வைப்பான் ஆனாலும் அதின்முடிவு என்னவோ பேரின்பமே!!
மகன் கண்களை மறைத்து மோட்டார் ரூமில் நாளுக்கு ஒரு தடவையாவது ஏர் உழுது விட்டதில்,பெண் நிலம் விளைந்து விட .. வாந்தி எடுத்த பாரிஜாதம் தலையை இன்பா தடவி விட்டு கொண்டு அருகே நிற்க
என்னடா என்னத்த உன் அம்மா தின்னுட்டு வாந்தி எடுத்துட்டு கிடக்கிறா... தனக்கு வாங்கிய பைக்கையும் மனைவி புல்லட்டையும் துடைத்து கொண்டு நின்ற ஜீவா புரியாது பார்க்க
எப்போய் எதாவது வாயில வந்திட போகுது அம்மா முழுகாமை இருக்கு என்று மகன்கூட விவரம் சொல்ல
ஆஆஆஆ என்று வாயை பிளந்த தகப்பன் வாயில் சீனியை போட்டவன்
ஹேஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏஏ எனக்கு தங்கச்சி வர போகுதே என்று டவுசர் இல்லாதே இன்பா தெருவுக்குள் ஓட போக ..
டேய் டவுசர் போடுடா" தகப்பன் கத்த
"எப்பவுமா இப்படி அலைய முடியும் அலையும் போது அலைஞ்சுப்போம்...அரைக்கிலோ பவுடர் அடிச்சது வீணா போகும்ப்பா "என்ற பதில் தான் வந்தது
மில்லில் வேலையில் ஜீவா இருக்க ...காலை உணவு வைத்து அனுப்பும் கூடையோடு எப்போதும் போல அவள் கடிதம் இன்றும் வந்தது ...சாப்பாட்டை தின்று முடித்து விட்டு கடிதத்தை ஜீவா எடுத்து வாசித்தவன்
எதுஇஇஇஇஇஇஇஇஇஇஇ அலறியோ விட்டான்
யோவ் உன் பிள்ளையை எவனோ கடத்திட்டு போயிட்டானாம், போனை போட்டு இன்பார்ம் பண்ணினான். அம்புட்டு தான் சேதி !!!இப்படிக்கு உன் பொண்டாட்டி என்று முடித்து வைத்திருந்த மனைவி செயலில் பல்லை கடித்து, வீட்டுக்கு ஓடி வர அவளோ தொடை தெரிய சேலையை ஒதுக்கி போட்டு அம்மியில் மசாலா அரைத்து கொண்டிருந்தாள்...
ஏண்டி பஜாரி பிள்ளைய கடத்திட்டாங்கன்னு பதட்டப்பட்டுக்கிட்டு இருக்கேன்... நீ என்னன்னா கவலையே இல்லாம மசாலா அரைஞ்சிட்டு இருக்க
அதுக்கு என்ன செய்ய சொல்ற ??
பச்ச புள்ளடி என்ன பண்ணி தொலைச்சாங்களோ தெரியலையே . ஜீவா பதட்டமாக கையை பிசைய
உன்கிட்ட தாண்டி கத்திக்கிட்டு இருக்கேன் ... கடத்தி எவ்வளவு நேரம் ஆகுதாம் ...
ஒரு மணி நேரம் ஆகுது "
"ஒரு மணி நேரமா ஜீவாவுக்கு மூச்சே நின்று விட்டது
ஏண்டி உனக்கு தைரியம் இருக்கலாம், ஆனா இந்த முரட்டு தைரியம் இருக்க கூடாது.. என்னதான் அவன் பெரிய ஆள் மாதிரி பேசினாலும், அவன் சின்ன புள்ள தாண்டி .... அவனுக ஒரு அடிக்கு தாங்குவானா.... ஐயோ பிள்ளை பெத்த பிராசஸ் பண்ணின எனக்கே இப்படி பதக் பதக்னு இருக்கே அவனை பெத்தவ நீ உனக்கு ஏண்டி ஒண்ணுமே ஆகல ..
"ஏன்னா எனக்கு என் மகன பத்தி தெரியும்.. மணி 12 ஆக போகுது இன்னும் கொஞ்ச நேரத்துல என் பிள்ளைக்கு பசிக்கும் அதுக்குத்தான் ஆட்டுக்கறி வச்சுக்கிட்டு இருக்கேன்.... நீங்க பதட்டப்படாம அப்படியே ஃபேன் அடியில போய் உட்காருங்க மச்சான் ... இப்போ தாளிச்சு ஊத்திடுவேன் அப்படியே முந்திரிய வறுத்து போட்டு சேமியா பாயாசமா வச்சிட்டா , என் மகனுக்கு ரொம்ப பிடிக்கும் .... என்ற பாரிஜாதத்தை குத்தமா கொல்லவா என்பது போல் பார்த்தவன்
"பேசாம டேடிக்கு போன் போட்டுடவா
"எதுக்கு இத்தனை நாள் நீ இருக்கியா செத்தியான்னு கூட பார்க்காத, உன் டேடி உன் பிள்ளைக்கு மட்டும் என்ன செஞ்சிட போறாரு..." என்று சிடுசிடுப்பாக கூறிவிட்டு கருவேப்பிலையை தாளிக்க போட..
"அப்போ மூர்த்தி அண்ணன்கிட்ட
"எதுக்குன்றேன் , என்னை தங்கச்சியாவே ஏத்துக்காத அவரு இப்ப எதுக்கு வந்து என் மகனை காப்பாத்தணும் ...
இப்போ என்ன பண்ணனும்னு சொல்ற, நானே போயி சண்டை போட்டு என் மகனை காப்பாத்திட்டு வரணுமா... அவசரத்துல கிழிக்கிற மேகி பாக்கெட் மாதிரி என்னை ரெண்டா கிழிச்சு அனுப்பி விட்டுடுவாங்கடி
"கிழிபட்டு வா... நீ தான பெத்த, எனக்கு ஒரு பொட்டப்பிள்ளை பெத்துக்கொடுன்னு இப்போ மறுபடியும் லோடு ஆக்கிவிட்டது நீதானே... அப்போ நீ தான் உன் பிள்ளைகளுக்கு காவல் காக்கணும்... நீ தான் உன் பிள்ளைகளை பாதுகாக்கணும்... கண்டவனா வந்து உன் பிள்ளையை காப்பாற்றுவான்... காப்பாத்த முடிஞ்சா, காப்பாத்து இல்ல.... அப்படியே உன் பிள்ளையோட நீயும் போய் சேரு... போகும்போது இந்தா சாப்பாடு ரெடியாகி போச்சு , உனக்கும் ஒரு கேரியர் போட்டு தர்றேன் டைம் கிடைக்கும்போது எங்கேயாவது உட்கார்ந்து சாப்பிடுய்யா என்று கூடையோடு வந்து அவன் பக்கத்தில் நின்ற பாரிஜாதத்தை சத்தியமாக முறைக்க முடியாமல் சோர்ந்து போய் பார்த்தவன்
பார்த்தாலும் பார்த்தேன் இப்படி ஒரு அம்மா பிள்ளை ஜோடியை நான் பார்த்ததே இல்லடி... உண்மையாவே உனக்கு ஒரு பொட்டு பதட்டமில்ல
எதுக்கு பதறணும்... நான் என்ன தொடை நடுங்கி பயலையா பெத்து வச்சிருக்கேன்... சிங்கக்குட்டியை பெத்து வச்சிருக்கேன்.. 10 பேர் கடத்திட்டு போனாலும் , அந்த பத்து பேருக்கும்தான் சேதம் ஆகுமே தவிர , என் பிள்ளைக்கு முடியில கூட சேதம் வராது .. சும்மா கிடந்து பதட்டப்படாத மச்சான், வா ஜாலியா ஒரு ரவுண்டு போவோம் ... அதெல்லாம் என் புள்ள வீடு வந்து சேர்ந்திடும்...
ம்ம் நம்ம புள்ளையை ஏண்டி கடத்தி இருப்பாங்க? பாரிஜாதம் புல்லட்டை ஓட்டிக்கொண்டிருக்க அவள் பின்னால் உட்கார்ந்து மனைவியின் தோளில் கை வைத்து சோர்வாக அவள் முதுகில் சாய்ந்து இருந்த கணவன் புலம்பல் தாங்க முடியவில்லை
ஜீவா என்னதான் அழகிய கணவனாக மாறிவிட்டாலும் அவன் சுபாவம் மென்மையானது இதுதான் வாழ்க்கை என்று கற்றுக் கொண்டாலும் சில முரட்டாட்டங்கள் எல்லாம் அவனுக்கு வரவே செய்யாது....
யாருக்கு தெரியும் ....
இப்ப என் பிள்ளை என்ன செய்யுதோ என்ன பாடு படுதோ
நானும் அதான் யோசிக்கிறேன் , கடத்தினவன் நிலமை என்ன ஆச்சோ தெரிலேயே ...
கார் ஒன்று ஹைவே ரோட்டில் சீறி பாய .... குத்து பாடல் டம் டொம் என்று அதிர்ந்தது...
டேய் தடியா என்ன கடத்தவா செஞ்சி இருக்க... என்ற இன்பாவை கடத்திய தடியர்கள் ஆமா என்பது போல பார்த்தனர் ...
ஓகேடா குட் ஜாப்
டேய் பல்ல ஒடச்சிடுவேன் மரியாதையா பேசுடா..
காசுக்காக கடத்தல் பண்ற உனக்கு எல்லாம் என்னடா மரியாதை வேண்டி கிடக்கு ... அதோட நான் பாரிஜாதம் மகன், அவ்வளவு சீக்கிரமா எல்லாம் யாருக்கும் மரியாதை குடுக்க மாட்டேன்.. சரி சரி என்கிட்ட பேசி நேரத்தை வீணடிக்காத, என் அம்மாவுக்கு போன் போடு .. எவ்வளவு பணம் கேட்கலாம்னு இருக்க ? கடத்திய தடியன் நாடியை துப்பாக்கி கொண்டு சொரிந்து கொண்டே, தன் எதிரே இருந்த இன்பாவை மேலும் கீழும் பார்த்தான்..
கண்ணில் சும்மா கூட ஒரு பொட்டளவு பயமில்லை கடத்திக் கொண்டு போகிறார்களே என்ன செய்வார்களோ என்று பதட்டம் இல்லை... கால் மேல் கால் போட்டு முன் சீட்டில் உட்கார்ந்து இருந்தவன்
கடத்தல் எல்லாம் பண்ற இன்னும் இந்த பழைய டைப் கார் தான் வச்சிருக்கியா? ஸ்கார்பியோ இன்னோவா இந்த மாதிரி வாங்கி சும்மா கெத்தா கடத்தினாதானே நல்லா இருக்கும் பெட்டி கடை கம்பெனியா?? மொத மொதல்ல கடத்தப்பட்டு இருக்கேன் கொஞ்சம் ரிச்சா அம்மாகிட்ட பணம் கேளு எவ்வளவு அமௌன்ட் கேக்க போற?
ஒரு கோடி
அட அல்லறை சில்லரை பயலே ... ஒரு கோடிக்காகவா என்னை கடத்திட்டு வந்த என்று சலித்தவன்
ஒரு பத்து கோடி கேளுப்பா, அதெல்லாம் எங்க அம்மா நிறைய வச்சிருக்கு ... அப்படியே கையில ரெண்டு வைர வளையல் போட்டு இருக்கும் அதையும் கொண்டு வர சொல்லு... அப்புறம் பேங்க்ல ஏகப்பட்ட நகை உள்ள வச்சுருக்கு... அதையும் எடுத்துட்டு வர சொல்லிடு , இரு இரு போனை எடுத்த அவன் இன்பாவை திரும்பிப் பார்க்க ..
என் அம்மா கிட்டன்னா வெறும் கோடி தான் வாங்க முடியும் அவனை நீயே வச்சுக்கோன்னு என்ன உனக்கே தத்து கொடுத்தாலும் சொல்றதுக்கு இல்ல..
ஹான்
ஏன்னா அவ்வளவு தொல்லை கொடுப்பேன்... பேசாம நீ என்ன கடத்துனதுக்கு பதிலா மூர்த்தி மாமா மகளை கடத்தி இருக்கலாம்.. அவருக்குத்தான் பொண்ணுன்னா உயிர், அவர் பொண்ணையும் கடத்தி என் பக்கத்துல வச்சிருந்தா நேரமாவது போகும் பாரு ...
அவன் ரெண்டு லட்டு தின்னா ஆசையா என்பது போல பார்க்க
இப்போ மாமி மகளை பார்க்குக்கு கூட்டிட்டு வரும் மாமா பார்க் போய் சேர்ந்துட்டியான்னு மாமிக்கு ஒரு போன் போடுவார்.. அந்த நேரத்துல மாமி பதில் சொல்லும் அந்த இடப்பட்ட நேரத்தில் என் மாமா மகளை அலேக்கா தூக்கிட்டு வந்துடலாம்.. என்னப்பா இப்படி பார்த்துட்டு இருக்க , இவ்வளவு அழகா ஸ்கெட்ச் போட்டு தர்றேன் ஏதாவது ஜூஸ்கீஸ் வாங்கி கொடுக்க கூடாது பேசி பேசி தொண்டை எல்லாம் வரண்டு போச்சு என்றதும் டிரைவர் தோளில் தட்டி ஜூஸ் வாங்கி கொடு என்று பின்னால் இருந்தவன் கூற
ரொம்ப கூலாவும் வேண்டாம் ரொம்ப ஹாட்டாவும் வேண்டாம் இடைப்பட்ட மீடியம் ஸ்டேஜ்ல பிரஷ்ஷா ஒரு ஜூஸ் வாங்கிட்டு வாங்க..
நாம இவன கடத்தி இருக்கோமா? இல்லை , இவன் நம்மள கடத்தி இருக்கானான்னு தெரியலையே இந்த பேச்சு பேசுறான் என்ற டிரைவர் முனங்கி கொண்டே இறங்கி போக.?
அடுத்த அரை மணிநேரத்தில் மூர்த்தி மகள் காணாது போய்விட
உன்ன யார் மூர்த்தி மகளை கடத்த சொன்னது என்று பொற்றவை அலற
இங்க பாரு இவனை கடத்தினா கூட பிரயோஜனம் இல்லை ஆனா மூர்த்தி அண்ணன் மகளை கடத்தினா
ரெண்டு பேர் உயிரும் ஊசலாடும்... லூசாடா நீ அவர் கூடவே அத்தனை வருடம் குப்பை கொட்டுனியே அவர் எப்படி பட்ட ஆளுன்னு உனக்கு தெரியாது என்று பொற்றவை பொறிந்து தள்ள ...அன்று வஞ்சகமூர்த்தி கையாளாக இருந்த ரகு தலையை சொரிய
இல்லை இந்த பையன் சொன்ன ஐடியா நல்லா இருந்துச்சு அதான் ...
தூதூஊஊஊ, அவன் உன்னை மூர்த்தி கிட்ட நேக்கா மாட்டி விட்டான்டா பரதேசி, ஜீவாவை வச்சி பணம் சம்பாரிக்க நினைச்சேன்.. இப்ப மூர்த்தி கிட்ட போய் சிக்குனா நம்ம நிலமை ....
ஏய் முட்டை கண்ணி பெரிய இவளா நீ , உன் அப்பாரு மடியில இருந்தா அத்தானை கண்ணுக்கு தெரியாதோ ? பார்த்தியா தூக்கிட்டேன் என்று தன் மடியில் இருந்த மாமன் மகளை மிரட்டி கொண்டு இருந்தான் இன்பா அவள் அழ வாயெடுக்க
மூச் தொலைச்சு புடுவேன், அத்தான் சொல்லுடி என்று ரெட்டை ஜடை பொம்மையை மிரட்ட
அ....த்....தா...ன் என்ற குறிஞ்சி கன்னத்தில் பச்சக் என்று முத்தம் வைத்தான் இன்பாதித்தன் !!
இந்த முத்தம் காதலில் சாருமோ அன்பில் சாருமோ வம்பில் சாருமோ ஆனால் அழகான முத்தமாக பதிவாகியது!!