வன்முறை செய் தப்பில்லை 4

Van4

வன்முறை செய் தப்பில்லை 4

4 வன்முறை செய் தப்பில்லை!! 

தன் காதலனுக்காக,  பக்குவமாக தோசையும், கோழிக்கறியும் ரெடியாகி கொண்டிருந்தது....  தாயின் அருகே கிட்சன் திண்டின் மீது இன்ப உட்கார்ந்து கொண்டு ,  தாய் சொன்ன சத்திய சோதனை  கதையை கேட்டபடி

"ஏன்மா அப்படி சொன்ன?  யாராவது இந்த ஒரு மாசத்துல கிடைச்சு அப்பா அவளை கல்யாணம் கட்டிக்கிட்டு போய்ட்டா ...நீயும் நானும் என்ன செய்கிறது என்று குட்டி உதட்டை பிதுக்கினான்... 

"டேய் உங்க அப்பா விசிலே போடாத குக்கர் மாதிரி..அவரை வச்சி ஒன்னும் வேகாது,   இவரை வச்சு குப்பை கொட்ட  உன்னாலையும்,  என்னாலயும் தான் முடியும்,  எவளும் இவர் கூட வாழ்க்கை நடத்தவே முடியாது ...

"அது என்னவோ உண்மைதான்... ஆனா ,  எதுக்கும் சூதானமா இருக்கிறது நல்லது , இத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்கார் மறுபடியும் போயிட்டா நாம அப்பாவுக்கு என்ன பண்ணுவோம்?  உனக்கு அப்பாவை எவ்வளவு பிடிக்கும்னு தெரியாதா ,  ராத்திரி அவர் போட்டோவ வச்சு எத்தனை முத்தம் கொடுப்ப அவர் வந்தது என்னை விட உனக்கு தானம்மா அதிகமான  சந்தோஷம் "என்ற மகன் உச்சியில் முத்தம் கொடுத்த பாரிஜாதம்... 

"மக்கும் அது உனக்கு தெரியுது.  உன் அப்பனுக்கு தெரியணுமே..  இந்த உலகத்துல என் தாய் கேவலமானவன்னு அவளை ஒதுக்கி வைக்க தெரிஞ்சது..  என்ன ஒதுக்கி வச்ச அண்ணனை எட்டிக் கூட பாக்காம திமிரா வாழ தெரிஞ்சுது...  ஆனா  உன் அப்பன்கிட்ட மட்டும் என் திமிரு , வெட்க மான ரோசம் எதுவும் வேலையே செஞ்சது இல்லை..  அவன் என்னை எட்டியே பார்க்க மாட்டான்டா ... ஆனா,  அவனுக்காக கால் கடுக்க காத்தே நிக்கிறது கூட அவ்வளவு பிடிக்கும்...  இப்பவும் காக்க வைக்கிறான் பாரு,  அவனைப் போலவே உன்னை பெத்து,  அவன் கையில கொடுத்த பிறகு கூட எவளையோ பார்த்த மாதிரி பார்த்துட்டு போறான்..  கிறுக்கி,  அப்பவும் அவனுக்காக கிடந்து சமைச்சுக்கிட்டு இருக்கேன்...  என்னத்த சொல்ல?  என்று மகனுக்கு தெரியாது பாரிஜாதம் முகத்தை திறப்ப ... தன் பிஞ்சு கை கொண்டு தன் தாயின் முகத்தை திருப்பிய இன்பா..

"விடும்மா விடும்மா வந்துடுச்சுல்ல , இனிமே மாமா போல நம்ம அப்பாவும் உன்னை புல்லட்டில வச்சிகிட்டு புடுபுடுன்னு கோவிலுக்கு கூட்டிட்டு போகும் 

"அப்போ நீ 

"நானும் அப்பா முன்னாடி உட்கார்ந்து இருப்பேன்ல..

"கோவில் வாசல்ல மாமா மாமிக்கு பூ வாங்கி கொடுத்து தலையில வச்சி விடும், அது போல அப்பாவும் சீக்கரம் உனக்கு வச்சிவிடும் பாரேன் 

"அப்படியாடா  ???கண்கள் மலர கதை கேட்டாள்..

"ஆமா, யாருடா என் பொண்டாட்டியை திட்டுனதுன்னு வேட்டியை மடிச்சி கட்டி ரவுண்டு கட்டும் பாருங்க ... 

ம்க்கும் கட்டிட்டாலும்"

"என்ன ஸ்கூல்ல எல்லாம் வந்து சேர்த்து விடும் ... நான்தான் இன்பா அப்பான்னு என்ன கிண்டல்  பண்ணின எல்லார் கிட்டையும் சொல்லும் நான் கெத்தா அப்பா கூட நடந்து போவேன்... இதெல்லாம் நடக்கும்தானம்மா?? என்ற மகனுக்குத்தான் எத்தனை எத்தனை ஆசைகள் ... ஏங்க பெருமூச்சு தாய் மகன் இருவருக்கும் வந்தது... 

உன் தகப்பன் மோசம் என்று அவள் சொல்லி வளர்த்து இருந்தால்...  இன்பா,  ஜீவாவை வெறுத்து இருப்பான் ... தகப்பன் இல்லாது வளர்வதை விரும்பி இருப்பான்...  ஆனால்,  அவள் ஒருநாளும் ஜீவாவை வெறுப்பு புள்ளியில் நிறுத்தியதே இல்லை .. தன் காதலை ஜீவாவுக்கு சொன்னாளோ இல்லையோ மகனுக்கு சொல்லி சொல்லி வளர்த்து இருவருக்கும் ஜீவா பைத்தியம் முற்றி போனது .. அது தெரியாது ஜீவாவோ இன்ஸ்ட்ரா  பேஸ்புக் என்று பெண்களை தேடி கொண்டிருந்தான் ...  

"எம்மோய் கதவை மூடிக்க,  நான் சாப்பாட்டை கொடுத்துட்டு  அப்பா கூட போய் படுத்துக்கிறேன்..  தூக்க முடியாது கூடையை இழுத்து கொண்டு இன்பா ஜீவா இருக்கும் வீட்டை நோக்கி நடக்க ... கதவை திறக்கும் நேரம் காதலன் முகம் தெரியாதா என்ற ஆசையில் பாரிஜாதம் இங்கிருந்து ஆர்வமாக பார்த்தபடி இருக்க ...

"எப்போய் எப்போய்" இன்பா ,  கதவை வேகமாக தட்ட எரிச்சலாக படுக்கை விட்டு எழும்பினான் ... வாசலில் பளீர் புன்னகையில் சாப்பாடு கூடையோடு அவனை இடித்து கொண்டு இன்பா உள்ளே வர 

என்னடா?  "

அம்மா சாப்பாடு கொடுத்துட்டு வர சொல்லிச்சு இந்தா சாப்பிடு "

"ப்ச் வச்சிட்டு போ"

"என்னது போகணுமா உனக்கு பாதுகாப்புக்கு நான் இங்கேயே இருக்கேன் கொட்டாவி விட்டபடி இன்பா படுக்கை மீது கால் மீது கால் போட்டு படுக்க ...

"ஏது நீயா ?? நான் நிம்மதியா தூங்கவும் கூடாதா உனக்கும் அம்மாவுக்கும் என்னதான் வேணும்னு என் உயிரை எடுக்கிறீங்க...  மரியாதையா வெளியே போயிடு இரிட்டேட் பண்ணிக்கிட்டு" என்று ஜீவா வாய்க்குள் முனங்க .. இன்பா சத்தமில்லாது  எழும்பி வெளியே வந்து விட..  கதவை அடைக்க போன பாரிஜாதம் மகன் வந்து நிற்கவும் 

"என்னடா போன வேகத்துல வந்துட்ட 

"அவர் திட்டுறார் ,. 

"திட்டுறானா எதுக்கு ? 

"கூட படுக்க கூடாதாம் 

"என் பிள்ளையை திட்ட அவனுக்கு என்ன உரிமை வந்துச்சு, நீ படுக்காம வேற யார் படுக்க முடியும் வாடா,  அம்மா பாத்துக்கிறேன் "என்று மகனை தூக்கி இடையில் வைத்து கொண்டு நங்கு நங்கு என்று தரை அதிர ஜீவா வீட்டை நோக்கி போனவள் கதவில் ஓங்கி ஒரு மிதி மிதிக்க...  கதவு திறந்து கொண்டது .. அப்போதுதான் லுங்கி உள்ளே கிடந்த கசகச ஆடையை கழட்டி கொண்டு நின்ற ஜீவா பதறி திரும்ப... இன்பா கிளுக்கி சிரிக்க 

"என் புள்ளை எப்போ வேணும்னாலும் வருவான் போவான்.. இன்னொரு தடவை அவனை விரட்டுன எக்ஸ்ட்ரா பிட்டிங்கை நறுக்கிடுவேன் ஜாக்கிரதை" என்றவள் கண் போன இடத்தை பார்த்து ஜீவா பதறி லுங்கியை இறக்கி கீழே விட ...

"ஏங்க நான் ஒன்னுமே சொல்லலைங்க...பெட்டுல இடம் இல்லைன்னு தான் சொன்னேன் ..

அந்த பயம் இருக்கட்டும் ... பெட்டுல இடம் இல்லைன்னா பாய் போட்டு தரையில படுங்க.  ஆத்திரத்துக்கு வெட்டாந்தரை கூட பஞ்சு மெத்தை போல இருக்குடின்னு உருண்டதுல வந்த விளைவு தான் இது பிடிங்க "என்று மகனை ஜீவா கையில் திணித்தவள்... 

அவனுக்கு  கை சூப்புற பழக்கம் இருக்கு ராத்திரி கையை சூப்புனா தட்டி விடுங்க புரியுதா?? ஜீவா தொண்டையில் பந்து உருண்டது 

பத்து வயசு வரை கை சூப்புனீயாம்,  உன் டேடி சொல்லி சிரிக்கிறார் என்று தேனிசை சொன்னது நியாபகம் வந்து மகனை திரும்பி பார்க்க தூக்கத்துக்கு கண் சொக்கி,   தகப்பன் தோளில் சாய்ந்த இன்பா விரல் உதட்டுக்குள் சப் சப் என்று சத்தம் போட்டு சுவைக்கப்பட..

ப்ச் என்று பாரிஜாதம் வந்து மகன் விரலை எடுத்து விட்டு அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்து 

ஒருநாளும் அவனை பிரிஞ்சது இல்லை உம்ம கூட இருக்க   ரொம்ப ஆசைபடுறான், பத்திரமா பார்த்துக்குங்க.. என்றவள்  அவன் காலடியில் கிடந்த குட்டி ஆடையை உதட்டை கடித்து பார்த்து கொண்டே ... 

இன்னும் அதே பிராண்ட் தானா மச்சான்..  பிட்டிங் சரி இல்லைன்னு சொன்னீங்களே?  என்று அவள் கிசுகிசுக்க வியர்த்து போய் நின்றான் ..

சுதந்திரமா வச்சி பழகுன்னுன்னு சொன்னதுல இருந்து நானும் சுதந்தரமா விட்டாச்சு என்று கண்ணை சிமிட்டி விட்டு  பாரிஜாதம் அவனை  திரும்பி பார்த்து கொண்டே போக ... 

அந்தரங்க அசவுகரியம் எல்லாம் எப்படி புட்டு புட்டு வைக்கிறாள்...   உண்மையாவே தப்பு நடந்து விட்டதா? புரியாது , போகும் அவளை பார்த்தபடி நின்றான் ..  

அய்ய என்ன இது இடையில் வந்து மகன் போடும் காலை தூக்கி தூக்கி கீழே போட ...முடியவில்லை தாயின் மீது கால் போட்டு தூங்கியே பழகிய மகன் தகப்பன் மீது போட.. 

தூங்க கூட தாயும் மகனும் விட மாட்டைக்கிறாங்களே .... சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிட்ட மாதிரி நானே வந்து மாட்டிக்கிட்டேன் போலேயே என்று புலம்பி கொண்டே பாயை கீழே போட்டு நடுஇரவு ஜீவா கீழே படுத்து கொள்ள ... சிறுது நேரத்தில் நெஞ்சில் பாரம் உணர்ந்து ஜீவா கண்ணை திறந்து பார்க்க ..  சப் சப் என்று விரலை சப்பி கொண்டு மகன் அவன் நெஞ்சில் கிடக்க .. வேகமாக தள்ளிவிட போனவன்...  மனம்தான் கல் இல்லையே...  அவன் விரலை நகட்டி தன் கைக்குள் பிடித்து இறுக்கி வைத்து கொண்டு கண்ணை மூட மகனை அணைத்து பிடித்தார் போலவே தூங்கியும் போனான் ... 

எப்போய் கிளம்பிட்டியா நானும் அம்மாவும் ரெடி...

"ப்ச் ,  இருடா லவ் ஸ்பீக்கரை முழுங்குன மாதிரி அம்மாவும் மகனும் கத்தி கத்தி டார்ச்சர் பண்ணாதீங்க நீங்க போடுற சத்தத்துல ஜிப்புல போயி கண்டதுமாட்டி செத்துருவேன் போல இருக்கு" என்று ஜிப்பை மாட்டிக் கொண்டே ஜீவா வெளியே வர 

"ஆடாத மணிக்கு ஆயிரம் பூட்டு போட்டு வச்சிருந்த கதையா இருக்கு என்று முனங்கி கொண்டு வெளியே வந்த ஜீவாவை பாரிஜாதம் ஒரு நிமிடம் என்ன ரெட்டை நிமிடம் ஆழமாக சைட் அடித்தாள்

கருப்பு சட்டை ப்ளூ கலர் ஜீன்ஸ் போட்டு இருந்தான்..  அவள் ஏதோ குதர்க்கமாக பேசுகிறாள் என்று தெரிந்தது ஆனால் புரியவில்லை,  தோளை உலுக்கிக்கொண்டு வாட்சை கட்டியபடி கதவை மூடிக்கொண்டு நின்ற அவன் பின்னே இவளும் நிற்க . கதவில் இருந்த குட்டி கண்ணாடியில் இருவர் ஜோடி பொருத்தமும் சற்று சுமாராகத்தான் இருந்ததோ 

"ஏன்டா உங்க அப்பன் பக்கத்துல நான் கொஞ்சம் சுமாராத்தான் இருக்கேகோ?  என்று  பாரிஜாதம் மகனைச் சுரண்ட 

அதெல்லாம் நல்லாத்தான்மோய் இருக்க,  அவரு ஆளு வெளுப்பா இருந்த உடனே, கொஞ்சம் தூக்கலா தெரியுறார்...  மாமா கடையில முல்தானி மெட்டி , வாங்கிட்டு வந்து தர்றேன்...  ரெண்டு நாள் போடு நீயும் பாலீஸ் ஆயிடலாம் என்று மகனும் தாயிடம் கிசுகிசுக்க 

" இதெல்லாம் எப்படிடா தெரியும்??

 "மாமா பொஞ்சாதி அதுதான் போடும்னு முல்தானி மெட்டி முதல் தரம் வாங்கி மூட்ட முட்டையா மாமா அடுக்கி வச்சிருக்கார்... 

அவன் கடைக்கு போகாதன்னு சொன்னாலும் கேட்கிறாயா நீ , அவன்தான் உன்னை மனுஷனாவே மதிக்க மாட்டேங்கிறான்ல...  

"அவருக்காக எங்க போறேன்? மாமன் மக அந்த ஒட்டை பல்லிக்காக போறேன்" என்ற மகனை செல்லமாக முறைத்தவள்..

"உன் விவரத்துல பாதி உன் அப்பனுக்கு இருந்தா கூட போதும்டா வச்சி ஒப்பேத்திடலாம்...

"தான் தேத்தி புடுதேன்ம்மா 

"ம்ம் 

"எங்கங்க  போகணும்  நீங்க முன்னாடி போங்க நான் பின்னாடி வர்றேன் என்ற ஜீவாவை தாயும் மகனும் முறைக்க 

ஏன் கூட வந்தா ஆகாதா? 

"ப்ச் முன்ன பின்ன தெரியாதவங்க கூட ஒட்டி

போனா 

"ஓஓஓ முன்ன பின்ன தெரியாதோ என்று பாரிஜாதம் காலை எக்கி அவன் காதில் கிசுகிசுத்தவள் 

"முன்ன விட பின்னதான்டி இன்னும் அழகா இருக்கன்னு சொன்ன நியாபகம் "

"ஏங்க சும்மா சும்மா எதோ புரியாத மாதிரி பேசாதிங்க..  முதல்ல தள்ளி நின்னு பேசுங்க,  நீங்க ரெண்டு பேரும் இப்படி ஒட்டி உரசினா எப்படிங்க எனக்கு பொண்ணு கிடைக்கும்...  

"விவரம் தான் வாடா, உன் அப்பன் ஓவரா பண்றான்  என்று இருவரும் ஜீவாவுக்கு பின்னே நடக்க சட்டையை மடித்து விட்டு கொண்டு நடக்கும் ஜீவாவை கன்னி பெண்கள் கூட்டம் சற்று மொய்க்க 

"ஆத்தாடி ஆத்தா , என் மச்சானை கண்ணாலேயே கற்பழிச்சிபுடுவாளுக போலவே..  யோவ் நில்லு என்று ஜீவா முன்னே போய் நின்றவள் 

"எவடி அது என் மச்சானை முண்டை கண்ணை உருட்டி உருட்டி பார்க்கிறது ...கண்ணை நொண்டி புடுவேன் என்று காலடி மணல் எடுத்து ஜீவா முன்னே நீட்டி

"மச்சான் துப்பு கல்லடி பட்டாலும் கண்ணடி பட புடாது ம்ம் .... 

"ப்ளீஸ் இது மாதிரி அநாகரீகமாக நடந்துக்காதீங்க எனக்கு சுத்தமா பிடிக்கல "என்று விட்டு ஜீவா நகர .. 

"அநாகரீகமா??? தாலி கட்டாத பொண்ணோட கட்டுல்ல படுத்தது நீ மச்சான் ... நீ யோக்கியதையா இருந்து இருந்தா நான் ஏன் இப்படி ஒட்டி உரசிக்கிட்டு நிக்க போறேன் ...  என்று அவள் எரிச்சலில் கத்த...  தலையில் அடித்து கொண்டு அவர்கள் அருகே வந்தவன் அவள் நீட்டி வைத்திருந்த கையில் 

தூதூதூ போதுமா  ?

அப்படி வாங்க வழிக்கு .... போதும் போதும் என்று அவனுக்கு சுற்றி போட்டவள் ... வட்டியை பிரிக்க .. அவள் பஜாரித்தனம் பார்த்து தலையை பிடித்தான் 

ஏங்க பாவம் அந்த பொண்ணு,  கால்ல விழுந்து கெஞ்சுது  அந்த பணத்துலையா கோட்டை கட்ட போறீங்க விடலாம்தான?

எதுக்கு விடணும்..அது என் காசு... முதல் பொண்டாட்டியை அம்போன்னு விட்டுட்டு இவளுக்கு சீவி சிங்காரிக்க கடன் வாங்குனான் , அப்ப ஒழுங்கா  தரணும்ல..  சும்மா தொட்டத்துக்கு எல்லாம் என்னை குறை சொல்லிகிட்டு இருக்காதேயும்.... அண்ணன் எனக்கு ஒரு டீ , மகனுக்கு  ஒரு பூஸ்ட் உங்களுக்கு என்ன வேணும்?  டீக்கடையில் கால் மேல் கால் போட்டு பேப்பர் படித்தபடி இருந்த பாரிஜாதம் ஜீவாவை பார்க்க 

எதையாவது சொல்லு  என்று எதிர் இருக்கையில் வந்து அமர்ந்தவனை அழுத்தமாக பார்த்தவள்

இப்ப என்ன சொன்னீங்க மச்சான் .. சொல்லுன்னு சொன்னீங்க தான கண்கள் பளிச்சிட அவள் கேட்க 

ஏதோ ப்ளோவுல வந்து இருக்கும்ங்க,   தலை வலியா இருக்கு சீக்கிரம் வேலையை முடிச்சு விடுங்க ...  ஆங்கிலத்தில் அவர்கள் மீது இருந்த பிடித்தமின்மையை அவன் உதடுகள்  சத்தில்லாத முணுமுணுக்க ஆக்ஸ்போர்ட் டிக்ஷனரி வரை படித்தவள் உதடு விரக்தியாக வளைந்தது.. 

நாம் கொடுக்கும்  அன்பும், நேசமும் நமக்கு  திரும்பி கொடுப்பது என்னவோ உதாசீனத்தைதான்.,.