காதலின் மீதியோ நீ-8

காதலின் மீதியோ நீ-8

காதலின் மீதியோ நீ-8

நித்ராவுக்கு இன்னும் உள்ளத்தில் பதட்டம் இருந்தது ’இந்த வெள்ளைக்கரடிக்கு வேற கோபத்துல முத்தம் கொடுத்துட்டேன். அதுவேற ஸ்டேட்டஸ் பைத்தியம். யாரு முன்னாடியாவது சொல்லி கேவலமா திட்டப்போகுது. என் மானமே போகப்போகது. இதுல வேற காலை உடைச்சிட்டு வந்துப் படுத்திருக்கேன். ஐயோ! நான் என்ன செய்வேன்?’என்று பயந்து கொண்டிருந்தாள்.

அதோடு சேர்த்து இப்போது கால் வலியும் சேர்த்துக்கொண்டு பாடாய்படுத்தியது.

ஒருவழியாக மூன்றுநாள் எப்படியோ கடந்துவிட்டது.அன்று வேலைக்கு சென்ற மோகனைக் கூப்பிட்டுவிட்டிருந்தான் ஆயுஷ்.

இந்த ஆயுஷுக்கும் நமக்கும் எப்போதுமே செட்டாகாது. ஆனால் ஏன் கூப்பிட்டு விடுறான் என்று யோசனையோடு போனான்.

எப்போதும்போல் அதே கெத்தோடு”மோகன் உங்க சிஸ்ஸின் அன்னைக்கு வரைஞ்சுக்கொடுத்தப் ப்ளான் சின்னச் சின்ன சேஞ்சஸ் இருக்கு. அவங்க ஆபிஸ் வர்றவரைக்கும் வீட்டுல உட்கார்ந்தே வேலைப் பார்க்கட்டும். இந்த ப்ளானை கரெக்க்ஷன் பண்ணிக் குடுக்கச் சொல்லுங்க. அடுத்தடுத்த வொர்க் என்னன்னு நான் அவங்களுக்கு மெயில் பண்றேன். இல்லைன்னா வாட்ஸப்ல அப்டேட் பண்ணிக்கிறேன். அவங்களுக்கு சேலரியும் கிடைச்சிடும். டென்சன் இல்லாமல் வேலையும் முடியும். அவங்ககிட்ட இன்பார்ம் பண்ணிடுங்க”என்று சில பேப்பர்களை அவனிடம் கொடுத்துவிட்டான்.

“ஓகே சார்.வேற எதுவும் சொல்லணுமா?”

“இல்லை சார்.அவங்க யூஸ் பண்ற போன் நம்பர் தந்தாபோதும். நானே அப்டேட்ட பண்ணிடுறேன். அப்புறம் அவங்க ஹெல்த் எப்படி இருக்கு?”

‘இப்போதான் அவ ஹெல்த்த பத்திக் கேட்கத் தோணுதாடா வெள்ளக்கரடி. உன் வேலை முக்கியம்னு முதல்ல வேலையைத் தந்துட்டு, அப்புறம் நலம் விசாரிக்கப்பாரு. உன் புத்தி மாறவே மாறாது’என்று மனசுக்குள்ளாகவே திட்டிக் கொண்டிருந்தான்.

அடடா அத்தானுக்கும் கொளுந்தியாளுக்கும் என்ன ஒரு ஒற்றுமை. ஆயுஷைத் திட்டுறதுக்கு மட்டும் இரண்டு பேரும் ஒன்னுபோல பேசுறாங்க.என்னா ஒரு ஒற்றுமை?

“நல்லாயிருக்கா சார். கால் வலின்னுதான் நைட்டு தூங்கமுடியலன்னு மித்ராக்கிட்ட அழறா. எப்படியும் மூணுவாரம் பொறுத்துதானே ஆகணும். சீக்கிரம் சரியாகிடும்னு நம்புறோம். ஓகே சார் அவ நம்பரை உங்களுக்கு அனுப்புறேன். இப்போ எனக்கு கொஞ்சம் வேலை பெண்டிங் இருக்கு.நான் போறேன்” என்று வந்துவிட்டான்.

அதைப்பார்த்த ஆயுஷ் “ச்சை அவளுக்காக இவன் கிட்டலாம் சமாதானமாகப் பேச வேண்டியதிருக்கு. எவன்கிட்டலாம் இறங்கிப்பேசவேண்டியதிருக்கு’ என்று தன்னை தானே திட்டிக்கொண்ட அன்றைக்கு தனக்காக காத்திருந்த வேலையை செய்ய தொடங்கினான்.

இப்பொழுது தங்கையும் இல்லை சைட்டுகள் கூட்டிட்டு போக இன்னைக்கு திறமையான இஞ்சினியரும் இல்லை என்பதால் தனி ஆளாக ஒவ்வொரு சைட்டுக்கும் சென்று கொண்டிருந்தான்.

அவனுக்குக் கீழாக நிறைய இன்ஞ்சினியர் சைட்டுலயே வேலைப்பார்க்கிறார்கள்தான்.

ஆனால் அவர்களுக்கு எல்லாம் ஒரு ஹெட்டாக பிரீத்தாவும் மித்ராவும் வேலைப்பார்த்தார்கள்.

இப்போ நித்ரைவைத் தேடுறது வேலைக்காக இல்லைன்னு தெரியும்,ஆனாலும் அவளைப் பார்க்க என்ன ப்ளானெல்லாம் உண்டோ அதையெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தான்.

தன் ஸ்டேட்டஸ்ஸை விட்டு இறங்கிப்போய் அவள் வீட்டுக்கும் போகமுடியாது. அப்படி போனால் என்னோட ஸ்டேட்டஸ் என்னாவது பதினைந்துநாள் கழிச்சு வரட்டும் அவளை பார்த்துக்குறேன் என்று ஒரு வீராப்பபோடு வேலை செய்ய தொடங்கியிருந்தான்.

ஆனாலும் மனம் அவளையே தேடியது அதை அடக்குவதற்கு அவன் பட்ட பாடு அதிகம். ஒவ்வொரு நேரத்துக்கும் இவ்வளவு யோசனை வருது.காதல்ல இதுதான் சகஜமாக இருக்குமோ? 

என்னது காதலா? இது எப்போ காதலா மாறுச்சு? என்று அவனே தன்னுடைய தலையை பிடித்துக்கொண்டான்.

இது சரியில்லை ஆயுஷ் இந்தக் காதல் வந்துட்டாலே அப்புறம் கல்யாணம் பண்ணனும் இது சரிவராது.அதுவும் நம்ம வீட்டுல இந்த ஸ்டேட்டஸ் எல்லாம் பார்ப்பாங்க. அவளோட ஸ்டேட்டஸுக்கும் நம்ம ஸ்டேட்டஸுக்கும் ஏணி வைச்சாலும் எட்டாது.இதுல காதலா?என்று நிறைய யோசித்தான்.

அவளை காதலிச்சுட்டு வேற எவளையாவது உன்னால் கல்யாணம் பண்ணிக்க முடியுமா? என்று ஆயுஷின் மனசாட்சி கேட்டது. அது எப்படி முடியும்? என்று அவனது அறிவு சொன்னது.

என்னதான் பிடித்தம் என்று வந்தபோதும் அவனது ஸ்டேட்டஸ் பைத்தியம் இன்னும் போகலையே! காதல் என்றாலே தன்னை இழப்பதுதானே! அது இங்க கொஞ்சமும் வரலை. இதுக்குள்ள இவன் கல்யாணம் காதலின் அடுத்த நிலைன்னு யோசிக்கிறானே!

அடேய் காதல்னா என்னன்னு உணர்ந்து புரியணும்டா வெள்ளைக்கரடி என்று காதலே காறித்துப்பியது!

மோகன் அன்று மாலை வீட்டுக்கு வந்து நிறயை பைல்களை மித்ராவிடம் கொடுத்து ”இதை ஆயுஷ் குடுத்துவிட்டான். அந்த வெள்ளைக்கரடிக்கு வேலைதான் முக்கியம். வீட்டுல சும்மாதானே இருப்பாங்க உட்கார்ந்துக்கிட்டே இந்த வொர்க்கை முடிக்கச் சொல்லிடுங்கன்னு சொல்லிவிட்ருக்கு” என்று சொன்னதும் நித்ரா வலியையும் மீறி கலகலன்னு சிரித்துவிட்டாள்.

எதுக்கு சிரிக்கிறான்னு தெரியாது மோகன் முழித்தான்.

“இல்லைத்தான் என்னை மாதிரியே ஆயுஷை நீங்க வெள்ளைக்கரடின்னு சொன்னீங்களே அதுக்குத்தான் சிரிச்சேன்” என்று மீண்டும் சிரித்தாள்.

“அவனே ஒரு ஸ்டேட்டஸ் பைத்தியம், ஆனால் குப்தா சார் அப்படியில்லை புரியுதா? அவன் தங்கச்சி பிரீத்தாவும் இப்படி எல்லாம் ஸ்டேட்டஸ்லாம் பார்க்க மாட்டாள் இறங்கி பழுகுவாள். இவன் ஒருத்தன்தான் அந்த குடும்பத்திலேயே ஸ்டேட்டஸ் பைத்தியம் வேலைக்காரங்க கிட்ட சரிசமமாக பேச மாட்டான் அதனால் இவனுக்கு எனக்கும் செட் ஆகாது” என்று மோகன் சொன்னான் மித்ரா அப்படியே அவனை ஒரு பார்வை தான் பார்த்தாள்.

ஆஹா பிரீத்தா பேரைச் சொல்லிட்டனோ? என்று அமைதியாக தங்களது அறைக்குள் சென்றான்.

அவனது பின்னாடியே வந்த மித்ரா அவனது முதுகில் ஒன்று போட்டவள் “இப்பவும் அந்த பிரீத்தா வெள்ளைக்கொழுக்கட்டையைப் பத்திப் பேசணும்னா வாயெல்லாம் இனிக்குது உங்களுக்கு” என்று கோபத்தில் திட்டினாள்.

“யம்மா என் பொண்டாட்டியே! உன்னைத்தான்டி உசுருக்குள்ள வைச்சிருக்கேன். அவபெயரையெல்லாம் சொல்லக்கூடாதா என்ன? ப்ளோவுல வந்துட்டும்மா விடேன்”

“விடமுடியாது போங்க”என்று அவனைத் தள்ளிவிட்டு வெளியே போனவளை இழுத்து அணைத்துப்பிடித்து அவனைப் போங்கவென்று சொன்ன வாயைத் தனது வாயால் அடைத்து இப்போது முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.

விடுங்கத்தான் விடுங்கத்தான் என்று அவனைத் தள்ளிவிட்டும் அதை அவன் கேட்டமாதிரியே தெரியவில்லை.

“ஏன்டி அவளே கல்யாணம் முடிஞ்சு அவ புருஷன் கூட ஜெர்மனியில் இருக்கா. என்ன நினைச்சுக்கூட பார்க்க மாட்டாள். நான் எதுக்குடி அவளை நினைக்க போறேன். ஆயுஷையும் அவளையும் கம்பேர் பண்ணி சொல்றதுக்கு ஒரு ப்ளோல வந்துட்டு அவ்வளவுதான். அந்த அளவுக்கு நான் வோர்த்தில்லடி. என்னை நம்புடி “என்றவன் மித்ராவின் கன்னத்தைப் பிடித்து கொஞ்சிக் கொண்டிருந்தான்.

அதெல்லாம் நம்பினாலதான் இரண்டுபிள்ளையைப் பெத்து உங்கக் கையில தந்திருக்கேன். இருந்தாலும் அவள் பேரு உங்க வாயிலிருந்து வந்ததும் சுருக்குன்னு குத்துதுல. அதுதான் கோபம் என்னையறியாமல் வந்திடுது என்றவளின் மனவேதனையும் அவனுக்குப் புரியத்தான் செய்தது. இனி பிரீத்தா பேரை எங்கேயும் உச்சரிக்கூடாது என்று மனதில் சங்கல்பம் தனது மனைவிக்காவே செய்துகொண்டான்.

அங்கே நித்ரா அவன் கொடுத்திருந்த ப்ராஜெக்ட் ப்ளான் கரக்க்ஷ்னையும் மற்ற வொர்க்கையும் எடுத்துப் பார்த்துவிட்டு இதையெல்லாம் இப்பவே செய்யணுமா? என்று அலுத்துக்கொண்டாள்.

இந்தக்காலை வைச்சுட்டு நானே நொந்துப்போய் இருக்கேன் . இவரு வேற கடுப்பக்கிளப்பிட்டு என்று நெற்றியில் கைவைத்து அழுத்தி பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

அப்போது போனில் டிங்கென்று மெசேஜ் டோன் அடிக்கவும் எனக்கு எவன்டா மெசேஜ் போட்டது? என்று எடுத்துப் பார்த்தாள்.

புது நம்பரல் இருந்து “ஹாய் ஹவ் இஸ் யுவர் ஹெல்த்? ஆர் யூ ஓகே?”என்று வந்திருந்தது.

இதுயாருடா புதுசா நம்ம ஹெல்த்தையெல்லாம் விசாரிக்கிறது. விட்டா சாப்பிட்டியா கக்கூஸ் போனியான்னு வரைக்கும் தெரியாத பொண்ணுன்னுக்கூட பார்க்காமல் கேட்பானுங்க போல போடாங்க என்று திட்டினாள்.

அவளுக்க்க் இருந்தக் கடுப்பில் “நான் எப்படி இருந்தா உனக்கென்னடா பட்டர்? தெரியாத நம்பர்ல இருந்து தெரிஞ்சமாதிரியே கேட்கிற?இடியட்ன்னு” எழுதி அதுபாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு கண்ணை மூடினாள்.

அடுத்த நொடியே கோப ஸ்மைலியோடு “ஹூம் டூ செய்ட் இடியட்? ஆம் ஐ இடியட்? ஹவ் டேர் யூ சே டூ மீ?ஐ யம் யூவர் எம்.டி மைண்ட் யுவர் வேர்ட்ஸ்” என்று வந்திருந்தது.

“என்னது எம்டியா? எந்த எம்.டி? உங்க பேரென்ன? சாரி நான் நான் அனானிமஸ் நம்பர்னு நினைச்சிட்டேன்” என்று பயந்து டைப் பண்ணி அனுப்பினாள்.

அவள் அனுப்புவதற்குள் அங்கிருந்து “ஐ யம் ஆயுஷ் குப்தா? ஆர் யூ நித்ரா சங்கரன்?”என்று கேட்டு அனுப்பியிருந்தான்.

“அடங்கொக்காமக்கா எப்போ பார்த்தாலும் இவருக்கிட்டயே போய்தான் என் கிரகம் வாயக் குடுக்கிறேன்.கடவுளே எனக்கு நவக்கிரகமும் உச்சத்துல இருக்கா என்ன?முடியல” என்று நினைத்தவள் மீண்டும் சாரி சொல்லி அனுப்பியிருந்தாள்.

“யார் பேசிறாங்கன்னு தெரியாமலயே இப்படித்தான் மரியாதை இல்லாமல் பேசுவியா? உனக்குன்னு ஒரு டிக்னிட்டியை மெயின்டெய்ன் பண்ணமாட்டியா என்ன?”என்று அதற்கும் சேர்த்து பாடம் எடுத்துவிட்டு திட்டிவிட்டு கொஞ்ச நேரம் மெசேஜ் பண்ணாமலயே இருந்தான்.

இதுக்குத்தான் சொல்லுறது பொறுமையா இருன்னு கேட்டியா நித்ரா என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டிருந்தாள்.

அடுத்த ஐந்து நிமிடம் கழித்து”எப்படி இருக்க?கால் வலிக்குதா?சாப்ட்டியா?”என்று கேசுவலாகக் கேட்டான்.

அந்த மெசேஜைப் பார்த்தவளுக்கு நெஞ்சுக்குள்ள பக்குன்னு இருந்துச்சு. என்னடா இது முன்னாடி அனுப்பின மெசேஜிக்குக்கூட இப்படி பயம்வரல. ஆனா இந்தா இப்படிக் கேட்கிறதுதான் பயமா இருக்கு. என்னடா நடக்குது இங்க?”என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்ததும் மெசேஜ் டிங்குன்னு வந்துவிழுந்தது.

அதில் முந்தைய மெசேஜுக்கு ரிப்ளை அனுப்பாமல் இருந்ததுக்கு கோப ஸ்மைலி வந்து விழுந்தது.

“ஏன்டா இவ்வளவு உரிமையா கேட்கிறதுக்கு நான் என்ன உன் பொண்டாட்டியா? இல்ல காதலியா ரிப்ளையெல்லாம் பண்ணமுடியாதுடா போடா” என்று போனை ஆப்லைன்ல போட்டுவிட்டு ப்ராஜெக்ட்டு பைலை எடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அடுத்த இரண்டு நிமிடத்தில் அவளது போனுக்கு அழைப்பு வந்தது, அது வேற ஒரு நம்பர்.

“யாரா இருக்கும்? எடுத்துதான் பார்ப்போமே”என்னு எடுத்துக் காதில் வைத்தாள்.

அந்தப்பக்கமிருந்து வந்தக் கந்தர்வக் குரலில் அப்படியே வாயைப்பிளந்துக்கொண்டு அமைதியாக இருந்தாள்.

“ஹலோ நித்ரா ஆர் யூ தேர்?”என்று மீண்டுமாக அந்தக்குரல் கேட்டதும் எஸ் சார் என்று மட்டுமே பதில் சொன்னாள்.

“ஏன் ஆப்லைன் போட்டுட்டு போயிட்ட? என்கிட்ட பேச பிடிக்கலையா? இல்லை பயமா?ம்ம்”என்று கேட்டான்.

“அது வந்து சார் வந்து சார் பயமெல்லாம் இல்லை”

“அப்போ பேசப்பிடிக்கலையா? ஓகே நான் வைக்கிறேன்”என்று போனை வைக்கப்போனான்.

“ஐயோ சார் அப்படியெல்லாம் இல்லை.நீங்க பேசுங்க எதுக்காக கால் பண்ணுனீங்க?”

“மோகன் ஒன்னுமே சொல்லலையா என்ன? கொஞ்சம் வொர்க் குடுத்துவிட்டனே.அ வருக்கிட்ட இருந்துதான் உன் நம்பரே வாங்குனேன்”

“அப்படியா அவர் எதுவும் சொல்லல சார்”

“இட்ஸ் ஓகே. நீ இதையெல்லாம் முடிச்சிட்டு இதுதான் என் பெர்சனல் நம்பர் இதுக்கே அனுப்பிடு. இதுலயே பேசு. இது உனக்கு மட்டுமே தெரிஞ்ச நம்பர் புரியுதா. யாருக்கிட்டயும் குடுக்காத.ஓகே வா”

“ம்ம்ம்”

“ஒரு ராவான கிஸ் கிடைக்குமா?” என்று ஹஸ்க்கி வாய்ஸில் ஆயுஷ் கேட்கவும் பதறி சார்ர்ர் என்று குரல் நடுங்கப் பதறினாள்..

“சும்மா விளையாட்டுக்குத்தான் கேட்டேன். குட் நைட் பை டேக் கேர்” என்றுவிட்டு வைத்துவிட்டான்.

ஆயுஷ் அந்த ஹஸ்கி வாய்ஸில் முத்தம் கேட்டதும் பேசியதுமே மூளைக்குள் சரியாக பதிந்துவிட்டது. 

அதுவே அவளை பதினைந்து நாட்களாக இம்சித்து அந்த இம்சை அரசனை தனது நெஞ்சிலயே குடிவைத்திருந்தாள் அந்த மாயக்காரி!