குரோத கொள்முதல் அழகே 7
Kurotham7
7 குரோத கொள்முதல் அழகே !!
பெண்கள் சிறைச்சாலை கதவு திறக்கப்பட உள்ளிருந்து சாக்லேட் நிற பாதங்கள் தன் வலது காலை வெளியே வைத்து நளினமாக நடந்து வந்தது ... அந்த திராவிட நிற கால்கள் இரண்டும் அப்படியே நிற்க,
பாப்பா என்று ஓடி வந்து ஒருவர் அவளுக்கு மாலை போட உதட்டை சுளித்து அந்த மாலையை அத்து வீசினாள் பாரிஜாதம் !! சிந்தாமணியின் மகள் , வஞ்சகமூர்த்தி தங்கை , தமிழ்நாட்டில் உள்ள அத்தனை சிறையிலும் எங்களுக்கு கிளைகள் உண்டு என்பது போல , தாய் ஒரு சிறையில் இருக்க அண்ணன் இன்னொரு சிறையில் போவான் வருவான் , தங்கை இங்கே உள்ள குட்டிச்சிறையில் என்று அவர்கள் பார்க்காத ஜெயிலே இல்லை...
பாரிஜாதம் அழகான பெயர்தான் ஆளும் கூட திராவிட அழகிதான்... சோலை வனத்தில் மலர்ந்த மலராக இருந்திருந்தால் , மாலையாக யாராவது கோர்த்து இருப்பார்கள் ... இவள் காட்டுக் களைச் செடிகளோடு வளர்ந்து கிடந்த அழகிய மலர்!! பறிக்க ஆளில்லை, எடுக்க நினைத்தாலும் மலரை சுற்றி முட்கள் குத்தியது....
என்ன ஜாமின்ல எடுக்குறதுக்கு இத்தனை நாளா? என்று தன் எதிரில் நின்ற தன் வேலையாளை பாரிஜாதம் முறைத்துப் பார்த்தாள்.. கண்கள் இரண்டும் கதகளி ஆடியது ... அவள் அணிந்திருந்த தாவணியும் சிவப்பு நிற பாவாடையும் கழுத்தில் போட்டிருந்த அணிகலன்களும் , தலை நிறைய வைத்திருந்த பூவூம் , உனக்கு மட்டும் யாரும்மா ஜெயிலுக்குள்ள தனியா ஷாப்பிங் மால் திறந்தது என்பது போல அலங்காரம் சற்றும் குறையாமல் அதே சமயம் செயற்கை பூச்சுகள், எதுவும் இல்லாமல் மஞ்சள் பூசி குங்குமம் குலைத்து நெற்றியில் வைத்து கண்ணுக்கு கண்மை தீட்டி கைக்கு மருதாணி இட்டு ரம்மியமான அழகு!! ஆனால் அந்தப் பார்வைகள் மட்டும் பெண்ணுக்குரிய நளினம் இல்லாமல் இருந்தது ஆனால் அது கூட அவளுக்கு பேரழகா தான் தெரிந்தது...
"இல்லம்மா அது ஜாமீன் கிடைக்கல" என்று சுப்பையா தலையை சொரிய
"ஏன் சுப்பையா அண்ணே பொய் சொல்ற ,. அந்த தடியனுக்கு மட்டும் கொலை கேஸ்ல உள்ள போனா கூட ரெண்டே நாள்ல வெளிய வந்துடுறான்.. ஆனா சாதாரண பொட்டிகேஸ் எனக்கு பத்து நாளா விசாரணை கைதின்னு தூக்கி உள்ள போட்டு இருக்கான்க... அது கூட பரவால்ல கொசுக்கடி தாங்க முடியல , குண்டாஸ்ல ஒருத்தியை தூக்கி பக்கத்துல போட்டு இருக்காங்க ... ஏதோ ரோடு ரோலர் ஓடின மாதிரி ராத்திரி எல்லாம் கொர் கொர்னு குறட்டை , நேத்து எட்டி மிதிச்சேன் ராத்திரியே கைகலப்பு ஆயிடுச்சு,..
"சாரிம்மா அடுத்தவாட்டி உடனே ஜாமீன் எடுத்துடுறேன்...
"ம்க்கும், இப்படியே சொல்லுங்க அவனுக்குன்னா மட்டும் வேற ஒரு சட்டம், எனக்குன்னா மட்டும் எல்லாத்துலேயும் ரெண்டாம் இடம் தான்... பார்த்துட்டே இருங்க , ஒரு நாள் இல்ல ஒரு நாள் அவன் தலைய அறுத்து இந்த கையில தூக்கி பிடிச்சு நியூஸ் பேப்பர்ல மொத பக்கத்துல வர போறேன்... என் முதல் கொலையே அவனாத்தான் இருப்பான்... அவனுக்கு மட்டும் என் ஆத்தா சம்பாதிச்ச அத்தனை சொத்தும், எனக்கு அந்த குட்டி வீடு , வட்டி பிரிக்கிறது மட்டும்தான்... அவன்தான் வர்ற லாபம் அத்தனையும் எடுத்துக்குறான்.. ஒரே வயித்துல தானே பிறந்தோம், எதுக்கு இந்த ஓரவஞ்சனை?? அவர் என்ன செய்ய பாவமாக அண்ணன் தங்கைக்கு நடுவே மாட்டிகொண்டு முழிப்பார்,.
ரவுடிசம் அவனுக்கு பாத்தியப்பட்டது, கந்துவட்டி இவளுக்கு பாத்தியப்பட்டது காக்கி நாடா உனக்கு பாவாடை நாடா எனக்குன்னு பங்கு போட்டு பொறுக்கித்தனம் பண்ணுகின்றனர்...
கார் எங்க?? என்று சுத்தி முத்தி பாரிஜாதம் காரை தேட...
"கார் எல்லாம் பெரியவர் கூட வெளிய போயிடுச்சு இன்னும் அவளுக்கு கோபம் கூடிப்போனது...
"அவர் கொண்டு போகல்மாமா, பக்கத்துல தானே வீடு இருக்கு , பஸ் புடிச்சு இஇஇ கையை நீட்டி தடுத்த பாரிஜாதம்
"போதும் அவனுக்கு முட்டுக் கொடுத்தது, அவன் என்னை எந்த கேட்டகிரியில் வச்சிருக்கான்னு எனக்கு நல்லாவே தெரியும் , எல்லாம் அந்த பொம்பளையை சொல்லணும் ... என்ன மட்டும் பெத்திருக்க வேண்டியதுதானே என்று தாயையும் தமையனையும் திட்டி கொண்டே பஸ்ஸ்டாப் வந்து நிற்க ...
ப்ச் இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று எரிச்சலில் பாரிஜாதம் தாவணி முந்தானை கொண்டு முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்தாள்...
"சிந்தாமணி மக நிக்கிறா திரும்பி பார்க்காம ஓடுங்கடி என்று பெண்கள் கூட்டம் ஓடிவிட ... வஞ்சகமூர்த்தி தங்கச்சி நிக்குது என்று ஆண்கள் சுற்றி வழியில் அவளை கண்டு பைக்கை மாற்றுவழியில் ஓட்டிட ஈ காக்கா அங்கு இல்லை....
எக்ஸ்க்யூஸ் மீ என்ற குரலில் வியர்வையை துடைத்து கொண்டு நின்ற பாரிஜாதம் திரும்பி பார்க்க ரோலர் சூட்கேஸ் கண்ணில் கூலர்ஸ், கருப்பு சட்டையை மடக்கி க்ரே நிற பேண்ட் அணிந்து அழகாக புன்னகை செய்தான் ஜீவா... மாலை கையில் இருந்த பணத்துக்கு நீர்யானை அவதாரம் எடுத்து விட்டு காலை எழும்பி வந்து வேலையை பார்க்க கிளம்பியாச்சு.... தன் முன்னே நின்ற அவனை பாரிஜாதம் மேல் இருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்க்க... அதற்குள் சுப்பையா ஓடி வந்து அவன் தடுக்க பார்க்க, பாரிஜாதம் பார்த்த பார்வையில் சுப்பையா தள்ளி நின்று கொண்டார் ....
என்ன ?
நான் ஊருக்கு புதுசுங்க.... "
"மாலை போட்டு வரவேற்கணுமா? வந்துட்டல்ல என்ன பண்ணணும்னு சொல்ற "என்றவள் ரகட் லுக்கில் அத்தனை பேரும் தெறித்து தான் ஓடி விடுவார்கள் ஆனால் ஜீவாவோ...
"மாலை போட்டு வரவேத்தா வேணாம்னா சொல்ல போறேங்க அந்த அளவு எல்லாம் நமக்கு இங்க யாரையும் தெரியாதுங்க ம____ போற பஸ் எப்ப வரும்ங்க "என்றதும் கண்ணை சுருக்கிய பாரிஜாதம் தன் ஊர் பெயரை அவன் கேட்கவும் யோசனை உள்ளாகி
"வர்ற நேரம்தான் ஆமா அங்க யாரை பார்க்க போற..
"வஞ்சக மூர்த்தி சார் இருக்கார்ல அவருக்கு டிரைவர் வேலைக்கு போறேன் ...
"எது ட்ரைவரா, நீயா பார்த்தா அப்படி தெரியலையே .... பார்க்க பணக்காரன் போல இருக்கியே உண்மையாகே ட்ரைவர் வேலைக்கு தான் வந்தியா என்ன என்ற பாரிஜாதம் கேள்வியில் உடனே பதறி போன ஜீவா ...
"ஏங்க நான் ரொம்ப ஏழைங்க... பணக்காரன் எல்லாம் இல்லை, இந்த கூலர்ஸ் கூட கடன் வாங்குனது தான் அப்பறம் இந்த பேண்ட் சட்டை ப்ரெண்டோடது... நம்புங்க ....
"நம்பிட்டேன் நம்பிட்டேன் இந்தா இந்த பஸ் தான் நானும் அங்க தான் போறேன் வா கொண்டு போய் விடுறேன்
"அட அட பொண்ணுன்னா இப்படில்ல இருக்கணும்... பார்க்க மகாலட்சுமி மாதிரி இருக்கீங்க.... அதோட உங்களை போல தேடி வந்து உதவி செய்ற குணம் எத்தனை பேருக்கும் வரும் சொல்லுங்க" என்று பாரிஜாதம் பின்னே ஜீவ் பஸ்ஸில் ஏறிட, அவளை கண்டதும் சீட்டில் இருந்த அத்தனை பேரும் திரும்பி பார்க்க..பாரிஜாதம், கடைசி சீட்டில் கால் மேல் கால் போட்டு அமர கொஞ்சமும் யோசிக்காது ஜீவா அவள் அருகே சட்டென அமர்ந்து விட
ஏய்இஇஇ என்று சுப்பையா குரல் கொடுக்க கையை மறுத்து ஆட்டிய பாரிஜாதம்
நான் பார்த்துக்கிறேன் விடுங்க என்று முடித்து விட்டு .. ஜீவா வளவள என்று இந்த ஊரை பற்றி பேச பேச பதில் சொல்லிக் கொண்டே வந்தாள்...
ஆமாங்க கேட்கணும்னு நினைச்சேன் ஜெயில் வாசல்ல இருந்த ஸ்டாப்ல ஏறுனீங்களே , உங்களுக்கு தெரிஞ்ச யாரும் ஜெயில்ல இருக்காங்களோ?? பார்த்துட்டு வர்றீங்களோ?
இல்ல ... நான்தான் ரிமாண்டுல இருந்துட்டு வர்றேன்
நீங்களா? என்ன ஆச்சுங்க?
ப்ச் சின்ன கேஸ் தான் ... வீட்டுக்கு பின்ன விவசாயம் பண்ணினேன் தப்புன்னு சொல்லி உள்ள தூக்கி போட்டுட்டானுக ...
என்னங்க நீங்க காமெடி பண்ணிக்கிட்டு விவசாயம் செய்றதுக்கெல்லாம் ஜெயில்ல போடுவாங்களா? ....
"நான் பண்ணினது கஞ்சா செடி விவசாயம் இதுதான் என் ஊர் இறங்கு ., நீ வேலைக்கு வந்து இருக்கிறது என் வீட்டுக்குதான் ... இனி இங்க தான இருக்க போற , பொறுமையா விவசாயம் பத்தி பேசுவோம்.. என்று வண்டி நிற்கும் முன்னே குதித்து இறங்கி பாரிஜாதம் போய்விட, இவன் போன அவளை பே என்று பார்த்து கொண்டு நின்றான் ...
எப்பா இறங்கு என்று கண்டக்டர் குரல் கொடுக்க இறங்கவா வேண்டாமா என்று பீதியில் ஜீவா நின்றான் ...
வஞ்சமூர்ததி தங்கச்சி கிட்ட உனக்கு என்ன பேச்சு இனிமே பேசின கை காலை உடைச்சிடுவேன் என்று சுப்பையா திட்டிவிட்டு போக .... தூரத்தில் வட்டி தராத ஒரு கிழவனை எட்டி உதைத்து கொண்டு நின்ற பாரிஜாதத்தை கதி கலங்க பார்த்த ஜீவா
டேடி சொன்ன பொண்ணு இதுவா ?? எம்மே ஏஏஏஏஏஏ வேண்டவே வேண்டாம் போற உசுர் அங்கேயே போகட்டும் , எங்க இங்க நின்ன பஸ்ஸை காணல, அய்யய்யோ என் பெட்டியை காணல, பாக்கெட் தடவி பார்க்க காசும் இல்லை .... எல்லாவற்றையும் பறிகொடுத்து விட்டு நின்றவன் முன்னே வந்து ஜாகுவார் கார் ப்ரேக் போட்டு நிற்க ....
இந்த ஊருக்கு போனா நல்ல வழி கிடைக்கும்னு அனுப்பி விட்டாங்க திரும்புற திசை எல்லாம் மூத்திர சந்தா இருக்கே இப்ப யார் ? என்று புலம்பி கொண்டே நின்ற காரை பார்க்க ... நடு ரோட்டில் நின்ற அவனை கண்டுவிட்டு..
இவன் அந்த பயல்ல , வஞ்சமூர்ததிதான் அவன் அருகே கொண்டு வந்து காரை விட்டது,,
மகாபிரபு மீண்டும் நீங்களா? காரில் இருந்த வஞ்சகமூர்த்தியை பார்த்து ஜீவா சிரிக்க
ஆமா யாருடா நீ. இங்கிட்டுகுள்ளையே சுத்தி வந்துட்டு இருக்க ..ஆளு புதுசா இருக்க ... "
பேர் ஜீவா , சென்னையில இருந்து இங்க வேலைக்கு வந்தேன் , பெட்டி காசு எல்லாம் போச்சு எவனோ ஆட்டையை போட்டுட்டு போயிட்டான்...
"வேலைக்காக இந்த ஊர்லையா? இவன் என்ன லூசா என்பது போல வஞ்சமூர்ததி அவனை பார்க்க
ஆமா அண்ணன் ஏதோ வஞ்சமூர்த்தியாம்ல அவனுக்கு முதலாளியா இருக்க ஆள் கேட்டு இருந்தாங்க அதான் போனா போகுதுன்னு கொஞ்ச நாள் முதலாளியா இருந்துட்டு போகலாம்னு வந்தேன் என்றதும் மீசையை திருகி அவனை பார்த்த வஞ்சமூர்ததி...
உனக்கு வாய்ல வாஸ்து சரியில்லைன்னு நினைக்கிறேன் .... ராத்திரி பெரிய உபகாரம் பண்ணி இருக்க அதான் உயிரோட நிக்கிற தம்பி ... நீ தேடி வந்த வஞ்சக மூர்த்தி நான்தான் என்றதும் ஜீவா தலையை சொரிய....
ஹிஹி சாரி ...
ஆமா , என்ன வேலைக்கு வந்த ?
டிரைவர் வேலைக்குன்னு சொன்னாங்க சார் அண்ணன் அய்யா என்று இதுவா அதுவா என தெரியாது புலம்ப .... அருகே நின்ற சுப்பையா வஞ்சகமூர்த்தி காதில்
"தம்பி ஆள பாத்தா ஒரு மார்க்கமா இருக்கான்.. நம்ம தொழிலுக்கு மூணாவது ஆள உள்ள சேர்க்கிறது அவ்வளவு நல்லதா படல....
ப்ச் , லட்டு மாமி கிடைக்கிறதுக்கு இவன் தாண்யா காரணம்.. ஏதோ இவனுக்கும் எனக்கும் ஏக பொருத்தம் ஆகிப்போச்சு. சவத்த பத்துல ஒருத்தனா கிடந்துட்டு போறான் ...
"இடத்தை சொல்லி அனுப்பி வை .. ஒழுங்கா இருக்கானான்னு பார்ப்போம் இல்லை நம்ம ஸ்டைல்ல சொல்லிக்கலாம் ... நம்ம ஊருக்குள்ள அவ்வளவு துணிவா வந்தவன் ,இனி வெளிய போக கூடாது புரியுதா??
"ரைட்டு புரிஞ்சிடுச்சு,., என்றவர் வேடிக்கை பார்த்து கொண்டு நின்ற ஜீவா புறம் திரும்பி
நேரே போய் லேப்ட்ல திரும்பு., அய்யா பூர்வீக வீடு வரும் அங்க வேலையாள் தங்குற வீடு இருக்கும் இது சாவி குளிச்சி கிளிச்சி கிளம்பி அரண்மனைக்கு வா கார் ரெடியா இருக்கும் ...
ம்ம் என்று ஜீவா சுப்பையா சொன்ன வீடு நோக்கி நடை போட
மாமி வீட்டுக்கு கார் அனுப்ப சொன்னேனே அனுப்பியாச்சா சுப்பையா? அவ வீட்டுக்கு காவலுக்கு யாரை போட்டு இருக்க ...
கார் ரெடி ட்ரைவர் தான் நான் போறேன், நீ போறேன்னு சண்டை போடுறானுக என்றதும் கண்களை சுருக்கியவன்
"என்ன , நான் முன் வாசல் வழியா வெளிய வந்ததும் பின்வாசல்வழியா உள்ள போக ஆசை படுறானுக போலேயே "இவன் இப்படி இருந்தா இவன் கூட சேர்ந்த பொறம்போக்குக எப்படி இருக்கும் ...
"அது" என்று சுப்பையா தலையை சொரிய
"என் ஆசை தீர்ற வரை மாமி எனக்கு மட்டும்தான் எவன் மூச்சாவது பட்டுச்சு வெட்டி காக்காவுக்கு உடம்பை போட்டுபுடுவேன்னு சொல்லிடு..
"சரிங்க அய்யா...
"இந்தா போனானே அவனை மாமிக்கு ட்ரைவரா போடு "
"அய்யா புது பையன் ஆளு எப்படின்னு தெரியாம எப்படி அனுப்ப ?
"முகரையை பார்த்தாலே தெரியாது, இவன் அதுக்கு சரி பட்டு வர மாட்டான் குண்டூஸ் வீட்டுக்கு நான் இல்லாத ராத்திரி , காவலுக்கும் இவனையே போடு ....
ம்ம் சரி அய்யா ...
ஜீவா தனக்கு கொடுத்த ஒத்தை அறையை உதட்டை பிதுக்கி பாத்தான் கண்ணாடி மாளிகையில் பிறந்தவன் அந்த ஒற்றை அறையில் யாரோ ஒருத்தன் ஏவலுக்கு வேலை செய்யணும் மனம் கசந்தது.,
பேசாம டேடி பேச்சை கேட்டு அங்கேயே இருந்து இருக்கலாமோ... என்று புலம்பி கொண்டே அங்கிருந்த கிணற்றில் நீரை மோர்ந்து தலையில் ஊத்தியவன், குளிர் தாங்க முடியாமல் வெடவெடவென்று ஆடிக்கொண்டிருக்க பாரிஜாதம் அவனை வைத்த கண் வாங்காது பார்த்து கொண்டிருந்தாள்...
என்ன ம்மா அவனை அப்ப பார்க்கிறீங்க? சுப்பையா பாரிஜாதம் பார்வை ஜீவாவையையே நோக்கி இருக்க தயக்கமாக கேட்க..
அவனா ?? இனிமே அவர்னு சொல்லி பழகுங்க சுப்பையா அண்ணன்
பாப்பா அவர் அதிர ...
உங்க அண்ணன் காதுக்கு போச்சு
போனா என்ன பண்ணுவான்... இந்த பாரிஜாதம் கழுத்துல தாலின்னு ஒன்னு ஏறினா அது அதோ அங்க நிக்கிறானே அவன் கையால தான் ... நான் முடிவு பண்ணிட்டேன் ... பார்வையை அவன் மீது இருந்து எடுக்காதே பாரிஜாதம் கூற
அந்த பயலுக்கு கல்யாணம் ஆகி இருந்தா
அவன் பொண்டாட்டியை கொல்லுவேன்
ஹான் வேற யாராயாவது காதலிச்சா
அவன் காதலியை கொல்லுவேன்
ஒருவேளை உங்களை பிடிக்காம போனா
பிடிக்குதோ இல்லையோ , அவன் எனக்கு தான் .... என்று சிரித்தவள் விளையாட வில்லை வினையமாகத்தான் ஜீவாவை பார்க்கிறாள் என்று புரிந்து சுப்பையாவுக்கு தான் வியர்த்து கொட்டியது.... வஞ்சகமூர்த்தி லேடி வெர்ஷன் இவளே ஜீவா நிலை நினைத்து தான் பாவமாக இருந்தது..
அண்ணனும் தங்கச்சியும் ஒரு முடிவோடதான் அடுத்தவங்க வாழ்கையை கெடுப்பாங்க போல இன்னும் எத்தனை,பேர் வாழ்க்கையை கெடுக்க போறாங்களோ என்று பெருமூச்சு விட்டார்...
அநியாயம் செய்வது ஆணோ பெண்ணோ நீதி இருவருக்கும் சரிசமமே!!!