மூப்பு அடையா யட்சகா 3

Muppu3

மூப்பு அடையா யட்சகா 3

3 மூப்பு அடையா யட்சகா!!

தேனிசையிடம் போனில் பேசிவிட்டு யட்சன் போனை வைத்தவன் அப்படியே சேரில் கண் மூடி தலை சாய்த்தான்.. 

முடி நரைத்த பின்பு வந்த ஆசையில் விளைந்த இளம்பயிர் அவள், இளமை தேரில் பவணி வந்த இளவரசி அவள் ...

வயதுக்கும் ஆசைக்கும் சம்மந்தம் இல்லை என்பது போல.. மகன் வளரும் வரை நன்னடத்தை விதிகளோடு வாழ்ந்த யட்சன் சறுக்கினான் ... எல்லாருக்கும் ஒரு இருண்ட பக்கம் உண்டு, இது வரை ஒளியில் வாழ்ந்த அவன் மூப்பை மறந்து உடலை நெளித்தான்... இருண்ட வாழ்க்கை ஒன்று தனக்கு இருந்தால் தான் என்ன ?? யாருக்கு தெரிய போகிறது யாருக்கும் தெரிய விடாது பார்த்து கொள்வோமே என்று அதீத நம்பிக்கைகள் சில செயல்களை செய்ய தீவிரமாக... 

சார் இதுல பையோடேட்டா இருக்கு " என்று அன்றைய இரவு வீட்டுக்கு கிளம்ப தயாரான யட்சன் ஆபீஸ் அறையை திறந்து கொண்டு பிஏ சண்முகம் உள்ளே வர ...

"அது வந்து சண்முகம்" என்று பிசிறி தட்டிய குரலில் முதலாளி பேச தொடங்க 

"அய்யா, நான் உங்க காலடியில கிடக்கிற நாய் , உங்களை பத்தி எனக்கு தெரியாதுங்களா, உசுரே போனாலும் இந்த ரகசியம் வெளிய போகாதுங்க என்ற விசுவாசி நம்பி தானே இந்த செயலை செய்ய யட்சன் துணிந்தது

"நீங்க பார்த்து சொல்லுங்க ரெடி பண்ணிடுறேன் வெளியே வெயிட் பண்ணுறேன் "யட்சன் சங்கடமாக அந்த பைலை எடுக்காமல் இருப்பது கண்டு சண்முகம் வெளியே கிளம்பி விட்டார்... அவர் போனதும் யட்சன் வேகமாக பைல்களை எடுத்து கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தான்.... 

முதல் பைல் அழகான பெண் அவள் பெயர் வயது , என்ன தேவைக்காக இந்த தொழிலுக்கு வந்தாள் என்ற பகுதியில் வயதானவர்களுக்கும் தேவை இருக்குமே முடியாத மனைவியிடம் பெறாத இன்பத்தை கொடுக்கும் பொது சேவைக்காக என்று இருக்க , சலித்து பைலை தூக்கி போட்டான்... அடுத்து அடுத்து என்று ஆர்வமாக பைல்களை யட்சன் புரட்ட ... எல்லாவற்றிலும் ஏதோ ஒரு பொய் காரணம் அடுக்கி உத்தமிகள் போலவும் ,சேவை செய்வது போலவும் இருக்க யட்சன் டையை கழட்டி வீசிவிட்டு.. 

"இது எல்லாம் ஒப்பேறாது , எப்படி நடிக்கிறாளுக நாளைக்கு நம்பி உள்ள விட்டுட்டு , நாறி போக முடியாது.. மகன் முன்ன பேச முடியாம நாண்டுட்டு தான் சாகணும் , ஆனா முடியலையே நரைத்த முடியை யட்சன் வேக வேக மூச்சு விட்டு கோதினான்..

எத்தனை வருடம் தான் ஆசைகளை வெறுப்பது, எத்தனை வருடம் தான் நல்லவன் வேஷம் போடுவது ஆசை வளர்ந்து வளர்ந்து பேராசை ஆகி போனது தேவை பெருத்து போனது .... கழுத்தை தேய்த்த யட்சன் பார்வை இன்னும் எடுக்கப்படாத அந்த ஒற்றை பைலை நோக்கியது

ப்ச் இதுல மட்டும் என்ன எழுதி இருக்க போகுது என்று அந்த பைலை எடுக்கவே இல்லை ... 

"இத்தனை வருஷம் ஒழுங்கா இருந்தாச்சு, இனிமேலும் அப்படியே இருந்து விட்டு போவோம் என்று யட்சன் மனதுக்கும் ஆசைக்கும் பூட்டு போட்டு விட்டவன் .. இரவு பகலாக வேலையில் கவனம் ஆகி போனான் ... மகன் வளரும் வரை எதுவும் தெரிய இல்லை .. மகன் நண்பர்கள் ரேஸ் என்று சுற்ற சுற்ற இவன் ஏனோ ஒதுக்கப்பட்ட உணர்வு, தனிமை எந்த வயதிலும் ஆபத்தே... அவனுக்கும் அந்த தனிமை ஆபத்தாகி போனது .. 

அன்றைய நடு இரவு ஆபீஸில் வேலை இருக்கவும் யட்சன் உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருந்தவன் ஒரு பைலை தேடி அலமாரியை உருட்டிக்கொண்டு இருக்க ... சட்டென அவன் காலில் வந்து ஒரு பைல் நச்சென்று விழுந்தது..

ஆவ்ச் ஊஊஊ என்று கத்தியவன் கீழே விழுந்த பைலை எடுத்து மீண்டும் பைல்களுக்குள்ளே வைக்கப் போனவன் ஏதோ யோசனை வந்தவனாக அந்த பைலில் இருந்து வெளியே நீண்டு கொண்டிருந்த ஒரு அழகிய கண்களைப் பார்த்து தன்னுடைய வெள்ளை மீசையை தடவியவன்...

பொண்ணு போட்டோவா? அது எப்படி இங்க என்று அந்த பைலை திறந்து பார்க்க...

அந்த அழகிய கண்ணுக்குச் சொந்தக்காரி போட்டோ வடிவில் அந்த பைல் உள்ளே ஒளிந்து உட்கார்ந்திருந்தாள் 

இது என்ன ஃபைல்? யாரு இங்க கொண்டு வந்து வச்சது" என்று அனைத்தும் மறந்தவன் யோசனையாக எச்சம் அந்த பைலை உருட்ட ஆரம்பிக்க 

பெயர் தேனிசை 

வயது 22 

எதற்காக இந்த வேலை என்ற இடத்தில் 

பணம் தேவைப்படுகிறது என்று உள்ளதை உள்ளபடி சொல்லி இருக்க ... 

இதற்கு முன் அனுபவம் இல்லை என்ற வாக்கியமும் நரைத்த மீசைக்கு நடுவில் இருந்த இளம் உதடுகளை மெல்ல சிரிக்க வைத்தது ... மீண்டும் ஒருமுறை அந்த போட்டோவை எடுத்து உத்துப் பார்த்தான்...

சாந்தமான முகத்தோடு சந்தன நிற சேலையில் குங்கும நிறத்தில் அழகியாக தேனிசை ஒரு மரத்தில் சாய்ந்து நின்று கொண்டிருந்தாள் 

ப்யூட்டிபுல்!! தானாக உதடு அசைந்தது 

பார்த்ததும் பச்சக்கென்று மனதில் ஒட்டிக்கொண்டாள்.. மனதிற்கு போட்டு வைத்திருந்த பூட்டு மெல்ல திறந்தது, அந்த திறந்த மனதிற்குள் மீண்டும் ஆசை வேர் விட்டு எழுந்தது... இந்த பைல் வந்து கிட்டத்தட்ட 10 நாள் ஆகிவிட்டது அதற்குள் அவள் வேறு யாருக்கும் கை மாறி இருப்பாளோ என்று யோசனையே சிவந்த நிறத்து நரைத்த அழகனை இன்னும் சிவக்க வைத்தது.... சட்டென , அந்த நடு இரவில் சண்முகத்திற்கு போன் போட்டு விட்டான்...

"சண்முகம் நீ கொடுத்த பைல்ல தேனிசைன்னு ஒரு ப்ரோபைல் இருந்தது.. அதை பேசி முடிச்சிடு...

"சார் இப்போவா??" என்று அவர் கொட்டாவி நடுவே பேச 

"ம்ச் சாரி சாரி சண்முகம் மணி பார்க்கல...

"ஐயோ இருக்கட்டும் சார் , என்ன பேர் சொன்னிங்க 

"தேனிசை, 

"நாளைக்கு பேசட்டுமா சார் 

"இல்ல இல்ல இன்னைக்கே பேசி எனக்கு புக் பண்ணிடு... அந்த பொண்ணு தவிர வேற யாரும் கூட வரக்கூடாது... ஸ்டீரிட்டா சொல்லிடு புரியுதா?

சரிங்க சார் ஒரு வேளை அந்த பொண்ணு இல்லன்னா 

"நோ நோ எனக்கு அந்த பொண்ணுதான் வேணும்..

"ஓஓஓ அப்படியா சார், ஏஜென்சில கேட்டுதான் சொல்ல முடியும்... பத்து நாள் ஆயிடுச்சுல

"இப்பவே கேட்டு சொல்லு , நான் உன் பதிலுக்காக வெயிட் பண்றேன் "என்று சண்முகம் சொல்லப்போகும் பதிலுக்காக ஆபீஸ் அறையில் அந்த இருட்டில் குறுக்கும் நெடுக்கமாக நடந்து கொண்டு இருந்தான் யட்சன்... கையில் தேனிசை புகைப்படம் உறவாடியது .. நொடிக்கு ஒரு தடவை குனிந்து அவள் போட்டோவை பார்த்தான்.. பார்க்க பார்க்க எப்படியாவது அவள் வேண்டும் என்று ஆசை கூடிக் கொண்டே போனது..

ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று சும்மாவா சொன்னார்கள் மனிதன் பல வேளை சிக்கலில் மாட்டி சீரழிந்து போவது ஆசையால் தான்... 

"எவ்வளவு பணம் செலவானாலும் சரி இவள் தான் தன் ராத்திரியை அலங்கரிக்கப் போகிற தேவதை என்று முடிவு எடுத்து விட்டான்.. சண்முகம் போன் போட முதல் அழைப்பிலேயே போனை எடுத்து..

"என்ன ஆச்சு ஃப்ரீயா அந்த பொண்ணு, "

ஆமா சார் ஆனாஆஆஆஆ

"ஆனா என்ன, எவ்வளவு பணம்னாலும் கொடுத்துடலாம்

"இது வேற சார்

"என்னாச்சு 

"என்னன்னு தெரில சார்.. நேத்து வரை ஓகே சொன்ன பொண்ணு, இன்னைக்கு பயமா இருக்கு நான் வரலைன்னு முரண்டு பிடிக்குது போல "

ஷட் இஇஇ "அப்பட்டமாக ஏமாற்றம் யட்சன் முகத்தில் தெரிந்தது ...

"என்ன சார் பண்ண ??

"ம்க்கும் நான் அவளை மீட் பண்ணணும் ஏற்பாடு பண்ண சொல்லு "

"அது சார் "

"நான் ஓகே சொல்ல வைக்கிறேன், நான் பேசி பார்கிறேன் ... "

"ஓகே சார் "அவளை பார்க்க போகும் நேரத்துக்காக கொக்காக தவம் இருந்தது நரைத்த மீசையும் தாடியும் .... 

"என்ன சண்முகம் ஓகே சொல்லிச்சா 

"உங்களை மீட் பண்ண ஓகே சொல்லி இருக்காங்க போல ஆனா இடம் அவங்க தான் சொல்வாங்களாம்" 

ஓஓஓஓ கண்ணை சுருக்கினான் ரிஸ்க் எடுக்கிறோமோ என்று அறிவு எச்சரிக்கை மணி அடித்தது ... ஆனால் மேஜை மீது காற்றில் ஆடிய அவள் புகைப்படம் கிய்யா மிய்யா என்று அவன் கண்ணை கிளறி விட்டது ... முதுமை மறந்து இளமையில் ஆடிய தூதுவளை கொடிக்கு இரை இவளாக வேண்டும் என்று உடல் கொதித்தது, அவள் உருட்டிய கண்ணில் நித்தமும் இரவை கொண்டாட ஆசையோ ஆசை .. தன் வழிக்கு எல்லாரையும் கொண்டு வந்து பழக்க பட்டவன் அவள் காட்டிய ஒத்தையடி பாதையில் போக சம்மதம் சொன்னானே!! உண்டான அத்தனை கேள்விக்கும்.. 

ப்ச் பாத்துக்கலாம் என்று எச்சரிக்கை மணியை கிடாசிவிட்டு ஆசை மணிக்கு ஆதரவு கொடுத்தான் நரைத்தவாலிபன் !!

எங்க வரணுமாம்...

"_______ கோவில் பக்கம் ... "

"ஓகே நாளைக்கு ஈவினிங் வேண்டாம் வேண்டாம் நைட் ஒன்பது மணிக்கு வர்றேன்னு சொல்லுங்க .... இரவு தூக்கமே இல்லை .... அடுத்த நாள் ஒன்பது மணிக்காக கடிகாரத்தை பார்த்தபடி காத்து கிடந்தது மூப்பு அடையா வாலிப நெஞ்சம் !! 

சில காத்திருப்புகள் அழகானது தான் என்று வெளுத்த மீசை கொண்டவன் அறிந்த நேரம் அது..

பழைய நினைவுகளில் தலை சாய்த்து உட்கார்ந்திருந்த யட்சன் போன் மணி தொடர்ந்து எழுப்ப.... 

ப்ச் சலித்து கொண்டு நினைவில் இருந்து நிகழ்காலம் வந்தான்.. சட்டென கண்ணைத் திறந்து மேஜை மீது அதிர்ந்த போனை பார்க்க ... மகனும் அவனும் தோள்மேல் கை போட்டு சிரித்தபடி நின்று கொண்டிருந்த போட்டோ ஜீவா மை சன் என்ற வாசகத்தோடு ஒலித்துக் கொண்டிருந்தது... பெருமூச்சு ஒன்றை விட்டவன் . போனை அட்டென்ட் செய்து காதில் வைக்க 

"டேடி 

"ம்ம சொல்லுடா என்றவன் குரல் சற்று அமைதியாகவே ஒலித்தது

" என்ன டேடி எப்பவும் கம்பீரமா வர்ற மை சன் வரல ஏதாவது பிரச்சனையா , உடம்பு எதுவும் பண்ணுதா கழுத்தை முட்டிக்கொண்டு இருந்த சட்டை பட்டனை திறந்து விட்டவன் ...

வேலை டென்ஷன் வேற ஒன்னும் இல்ல என்ன விஷயம் ? அப்பனை தேடி இருக்க, ஏதாவது காரியான்னாதான உனக்கு அப்பா ஞாபகம் வரும் 

"எக்ஸாக்ட்லி டேடி , எனக்கு உங்கள பத்தி தெரியுமோ இல்லையோ , ஆனா உங்களுக்கு என்ன பத்தி எல்லாமே தெரியுது... நீங்கதான் இந்த உலகத்தோட பேஸ்ட் அப்பா என்ற மகனின் பேச்சை ரசிக்க முடியவில்லை...

"அவன் நல்ல தகப்பனா கெட்ட தகப்பனா என்பது அவன் மனசாட்சிக்கு தான் தெரியும்...

"ஐஸ் வச்சது போதும் , என்ன விஷயம் ??

"இல்ல டேடி, நாளைக்கு ட்ரெய்னிங் ரேஸ் இருக்கு... காலைல அஞ்சு மணிக்கு போயிடுவேன்.. இசையை ரெடி ஆகி இருக்க சொல்லி இருக்கேன்... கொஞ்சம் போய் நீங்களே பிக்கப் பண்ணிட்டு வந்துடுவீங்களா? 

"நானா? 

"ப்ளீஸ் ப்பா .... அவளை தனியாக பிடித்து மாறுகை மாறுகால் வாங்க நேரம் பாத்து கொண்டிருந்தவனுக்கு மகனே நேரம் அமைத்து கொடுக்க... 

"இப்படியே பொறுப்பு இல்லாம இருக்காத ஜீவா , இன்னும் நீ சின்ன பையன் இல்லை.. உன்ன நம்பி மனைவி பிள்ளைன்னு வரும் போது இது எல்லாம் சரியா இருக்காது சொல்லிட்டேன் ....

"அதெல்லாம் நீ இருக்கல்ல டேடி, நீ பார்த்துப்ப இச் இச் வைக்கிறேன் என்று போனை வைத்து விட்டான் மகன்...

முதல் முறை அவளை பார்க்க எவ்வளவு ஆர்வமாக இருந்தானோ 

அதற்கு எதிரான மனநிலையில் இன்று இருந்தான் 

அவளை நினைத்தால் ஆத்திரம் தான் வந்து தொலைத்தது....  

நாற்பதுகளில் வருவது தூய காதலாம் 

நாற்பதுகளில் தூய காமமும் வரலாமே 

ஆண்களின் ஆபத்தான வயது நாற்பது முதல் ஐம்பது  

பெண்ணின் ஆபத்தான வயது இருபது முதல் நாற்பது 

அவளும் ஆபத்தின் விளிம்பில் 

இவனும் ஆபத்து விளிம்பில் 

ஆக கிளுகிளு கிழவனையும் குளுகுளு குமரியையும் வைத்து நாம குளிர்காய்வோம்