வன்முறை செய் தப்பில்லை 2
Vanmurai2
2 வன்முறை செய் தப்பில்லை !!
பாரிஜாதம் வீட்டின் முன்னே கிடா விருந்து நடந்து கொண்டிருந்தது....
பாரிஜாதம் கார் பல்லாக்கு போல பவனி வந்தது, தார் ராக்ஸ் காரை அவள் கைகள் லாபகமாக ஓட்ட... அவள் அருகே கைகள் கட்டப்பட்ட நிலையில் வாயில் துணி வைத்து அடைத்தபடி ஜீவா உட்கார்ந்து இருந்தான்....
"உனக்காக இந்த ஒருத்தி வருஷ கணக்கா பிள்ளையோட காத்து கிடக்கிறா, நீ எவளோ ஒருத்திக்கு இலவச இணைப்பு கொடுக்குறதுக்கு ஆளா பறந்து , தாம்பூல தட்டோட வந்து நிக்கிறியோ... இருக்குடி மாப்பிள்ளை உனக்கு ... உன் மேல கொலை வெறியாகி போய் இருக்கேன் ,. எதாவது பேசி என்கிட்ட வாங்கி கட்டிக்காத" கோபத்தில் கத்திய பாரிஜாதம் திரும்பி ஏதோ பேசுவதற்கு முயற்சி செய்த ஜீவா வாயிலிருந்த துணியை எடுத்து விட்டு
"என்ன கேட்கணும் கேளுங்க... அவள் தேர் போல நகர்ந்த வண்டிக்கு முன்னால் மகன் குத்தாட்டம் ஆடிக்கொண்டே வான வேடிக்கை வைத்து வருவோர் போவோருக்கு எல்லாம் .. என் அப்பா வந்தாச்சு என்று கத்தி சொல்லிக் கொண்டே ஓடிக்கொண்டிருந்தான் ....மகன் முகம் எல்லாம் பல்லாக இருந்தது.. தகப்பன் தாய் என்பது வெறும் வார்த்தை அல்ல பல உறவுகளை கட்டமைக்கும் அஸ்திவாரமே அதுதான் !!
அப்பன் பேரு தெரியாத புள்ளன்னு விளையாட போன இடத்துல என்ன நக்கல் பண்றாங்கமோய், எனக்கு அப்பா இருக்குல்ல "என்று மூக்கை உறிஞ்சி கொண்டு மகன் வந்து நிற்க
"எவண்டா அது என் பிள்ளையை அப்படி சொன்னது இனி எவளாவது அப்படி சொன்னா, எனக்கு அப்பா இருக்கு வருவார்னு சொல்லு..உங்க எல்லார் அப்பாவை விட , எங்க அப்பா ஒரு படி மேலன்னு சொல்லு அதையும் தாண்டி ஏதாவது பேசினா கல்லை கொண்டு மண்டையை உடைச்சிட்டு வா அம்மா பாத்துக்குறேன்" என்ற கல்லை தூக்கி மகன் கையில் கொடுக்க, அன்றே ரவுடித்தனம் பழகியவனோடு 10 வயது பிள்ளைகள் கூட விளையாட பக்கத்தில் வராது .. பொம்பள ரவுடி பெத்த குட்டி ரவுடி என்று அவனை பக்கத்திலேயே சேர்க்க மாட்டார்கள்
அதற்கெல்லாம் தாயும் மகனும் கவலைப்பட்டதே இல்லை தாயின் புல்லட்டில் முன்னே ஏறி உட்கார்ந்து கொண்டு இந்த உலகத்தையே சுற்றி வருவான்... எல்லாரும் கிரிக்கெட் விளையாடுறாங்கமோய்
நாமளும் விளையாடுவோம் வா என்று தாயும் மகனும் விளையாடுவார்கள் தாயின் கைக்குள் நீச்சல் பழகினான், குறும்புகள் பழகினான், அதில் பல கெட்டவார்த்தையும் அடக்கம் .. வட்டி பிரிக்க பாரிஜாதம் போனால் அவளுக்கு பாடிகார்ட் போல இவர்தான் முன்னால் போவார் ...
ஆனாலும் அவன் குட்டி இதயத்திற்குள் எப்போது தகப்பன் வருவான் என்ற ஏக்கம் இருந்தது போல் நாக்கை மடித்து வைத்துக்கொண்டு ஆடிய மகனின் சந்தோஷத்தை கண்ணிமைக்காமல் பாரிஜாதம் பார்த்துக் கொண்டே இருந்தாள்...
பேய்மழை அடித்து ஊற்றியது.....
டொக் டொக் அக்கா வயிறு வலிக்குது கொஞ்சம் ஆஸ்பத்திரி வரை போகணும் வர்றிங்களா??அன்று ஒரு நாள் இரவு பாரிஜாதம் இடை வலி தாளாது, நிற்க முடியாது அந்த மழையில் நின்றாள் ...
"இவ ஆத்தா நிதமும் ஒருத்தன் கூட படுப்பா... அண்ணன்காரன் பிடிச்சவளை எல்லாம் வப்பாட்டியா வச்சிருந்தான். இவ மட்டும் யோக்கியமாவா இருப்பா , எவனுக்கு முந்தி விரிச்சு பிள்ளை உண்டானாளோ? தாய், தமையன் சாயம் கேட்காதே அவள் மீது பூசப்பட்டது அவள் செய்த சாபம் அன்றி வேறென்ன??
"பாவம்டி வலி வந்திடுச்சு போல, கதவை ரொம்ப நேரமா தட்டுது என்னன்னு கேட்போம் உள்ளிருந்து அந்த அடை மழையில் குரல் வந்தது ... மழையில் நனைந்தபடி அருகே இருந்த வீட்டு கதவை தட்டிய பாரிஜாதம் கைகள் அப்படியே நின்று விட்டது ....
"எத்தனை பேரோட போனாளோ? நீயும் போனியாய்யா இப்படி துடிக்கிற...
"எனக்கு ஏன் வம்பு நான் வாயை திறக்கல ...." அத்தனை காதுகளும் அவள் வலியை உணரத்தான் செய்தது எல்லாரும் அவள் பிறப்பை, வளர்ப்பை பேசினார்களே தவிர ஒருத்தர் கூட உதவ வரவில்லை .... ஒத்தையாக அவளே போய் பிள்ளையை பெத்து எடுத்து கொண்டு வந்தாள் .. மின்னல் போல வந்தவன், மின்னல் போல அவள் வாழ்க்கை உள்ளே நுழைந்து மின்மினி பூச்சி போல வெளிச்சம் கொடுத்து பாதைக்கு ஒளி காட்டாது தனித்து விட்டு போய்விட்டான்... அவனை தேடாத நாள் இல்லை... அவளுக்கே அத்தனை பெயர் கொடுத்த உலகம் அவள் பிள்ளையை விட்டா வைத்திருக்கும்... பேசிய நாவை எல்லாம் இவள் தீயை உமிழும் நாக்கு சுட்டெரித்தது..
"என் மகனுக்கு அப்பா யாருன்னு ஊரை கூட்டி ஒரு நாள் வரும் அப்போ சொல்வேன்... அவன் அப்பன் உங்களை போல இல்லடா ஆம்பள ... ஒரு பொண்ணுக்கு கண்ணீரையும் வலியையும் கொடுக்க தெரியாத ஆம்பள .. அவன் வருவான் அன்னைக்கு இந்த ஊரை ரெண்டாக்குவேன்... அப்போ நான் யாருக்கு முந்தி விரிச்சேன்னு தெரிஞ்சுக்கோங்க... என்று திமிராக சொன்னவள் அவன் வரும் நாளைக்காக காத்து இருக்க , இவனோ பொக்கிசா வீட்டு வாசலில் நிற்க .. பாரிஜாதத்துக்கு சொல்ல முடியாத எரிச்சல், ஆத்திரம் ... பிடித்தவர்கள் மேல் மட்டுமே கோவம் அதீதமாக வரும்.. அவளுக்கு மிகவும் பிடித்தவன் ஆயிற்றே ஜீவா பிரிவு வெறியாக மாறி நின்றது... பெண் சிங்கம் வேட்டையாடினால் தவறா என்ன??
அன்னைக்கு உங்க அண்ணன் அராஜகம் பண்ணுனான் .. இன்னைக்கு நீங்க பண்றீங்களா என்னங்க இது அநியாயமா இருக்கு" ...என்ற ஜீவா புலம்பல் கேட்டு கண்ணை மூடி திறந்து அவனை நோக்கி திரும்பி அமர்ந்தவள்..
"என்ன அநியாயம் நடந்தது ? வில் என்று வளைந்த புருவமும் உதடும் கேலியாக வளைந்தது..
"யாரு பெத்த பிள்ளைக்கு யாரு அப்பா ஆகுறதுங்க ...
"நான் பெத்த பிள்ளைக்கு நீ அப்பா ஆகு ..
"ப்ச் ,நீங்க அப்பவே அப்படிங்க... நான் உங்க நிழலை கூட தொட்டது இல்ல.... யாருகிட்டேயோ ஏமாந்துட்டு என் மேல பழி போடுறீங்களே... இதெல்லாம் நியாயமா? வண்டியை பிரேக் போட்டு நிறுத்திவிட்டு அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தவள்...
இந்தப் பாரிஜாதத்தை ஏமாத்த இன்னொருத்தன் பிறந்துதான்டா வரணும் ... என்ன சொன்ன அப்பவே அப்படியா? நான் எத்தனை பேர் கூட படுத்ததை நீ பார்த்த ?
அது
"எத்தனை பேர் கூட போனத நீ பார்த்த?? என்று அவன் சட்டை காலரைப் பிடித்து இழுத்து தன் அருகே கொண்டு வர, ஜீவா சற்று பயந்து அவன் பின்னால் நகர போக ..அவனை விடாது தன் கண்ணோடு கண் பார்க்க வைத்தவள்...
அவளுக்கு வாழ்க்கை கொடுக்க ஆளா பறந்தல்ல எனக்கும் வாழ்க்கை கொடு வா... என் பிள்ளைக்கு நீதான் அப்பங்கிறதுக்கு ஆதாரம் வேணுமா என்றவள் கிசுகிசுப்பாக அவன் காதில் ஏதோ சொல்ல... ஜீவா அதிர்ந்து போய் அவளைப் பார்த்தான் ...
"இன்னும் ஏதாவது வேணும்னா சொல்லு , புட்டு புட்டு வைக்கிறேன்.. உன் கூட படுத்துதான் இந்த புள்ள வந்தது.. ஒழுங்கு மரியாதையா என்கூட வந்து வாழ்க்கை நடத்தல , உன்ன ரெண்டா பொளந்து நடுத்தெருவுல போட்டுட்டு __ச்சியா உட்கார்ந்தாலும் உட்காரவனே தவிர... உன்ன எவளுக்கும் விட்டு கொடுக்க மாட்டேன், இனிமே விடவும் மாட்டேன்... போதும் போதும் நீ உலகத்தை அறிஞ்சதும் புரிஞ்சதும்.. இனி, நானே உலகத்தை விளக்கு விளக்குன்னு விளக்குறேன் .... இது உன் புள்ள தான், நம்பினா நம்பு , நம்பலனாலும் நீ தான் இந்த பிள்ளைக்கு இனிமே தகப்பன் ... வா இறங்கு அவன் மறுத்து தலையாட்ட ... அவனை குண்டுகட்டாக தூக்கி கீழே இறக்கி விட...
வானவேடிக்கை ஊரையே அதிர வைத்தது...
என்னடி பாரிஜாதம் ஊரையே ஒரு வழி ஆக்கிக்கிட்டு இருக்க என்று கிழவி ஒன்று குரல் கொடுக்க
"பின்ன என் பிள்ளைக்கு அப்பன்.. என் புருஷன் ஊர்ல இருந்து வந்திருக்காரு , சும்மா விட்டுருவேனா, எப்படி இருக்கார் என் வூட்டுக்காரர் என்று ஜீவாவை இடித்து கொண்டு நின்றாள்...அவன் கையை எடுத்து தன் தோள் மேல் போட்டு கொண்டு மகன் எடுக்கும் போட்டோவுக்கு போஸ் வேறு கொடுத்தாள்..
நல்லா பட்டணத்தான் போல அழகா டிப்டாப்பா இருக்கான் , அப்படியே உன் மகன் இவர் ஜாடைதான்...
"கேட்டியா மச்சான் இதுக்கு மேலேயும் ஆதாரம் வேணுமா....
"நீங்க காசு கொடுத்து பேச சொல்லி இருப்பீங்க... எனக்கு தெரியாது என் சுண்டு விரல் கூட யார் மேலையும் தொட்டது இல்லைங்க ..நான் இந்த பெரிய தப்பை பண்ணி இருக்க மாட்டேன் ... உங்க பழிக்கு என்ன பலி ஆக்காதீங்க... என்ன சொன்னாலும் நான் நம்ப மாட்டேங்க.. என்றவன் அவள் கையில் இருந்து உருவி நகர்ந்த நின்று கொண்டான் ...
"நம்ப வேண்டாம் , நீ நம்பலைன்னு யாரும் இங்க முக்காடு போட்டு அழல வா" என்று அவன் கையோடு கைகோர்த்துக்கொண்டு வீட்டுக்குள் இழுத்து சென்றாள் பாரிஜாதம் ...
"எப்போய் எப்போய் என்று இன்பா ஜீவா அருகேயே உட்கார்ந்து இருக்க இவனோ தப்பிக்க வழி தேடியே காத்திருந்தான்...
"இரவு வந்தது முற்றத்தில் கட்டிலில் பணத்தை போட்டு பாரிஜாதம் எண்ணி கொண்டிருக்க இன்பாவும் பணத்தை எண்ணி கட்டி கொண்டிருந்தான் ...
9500 கூட நூறு கூட்டினா எம்புட்டும்மா வரும் ... பிஞ்சு கை நிறைய பணத்தை வைத்து கொண்டு இன்பா தாயை திரும்பி பார்த்தான்
"ஸ்கூல்ல சேர்க்க வந்தா போதுமா, அப்பா பேர் போடணும்ல அப்பா பேர் என்ன ? இவனுக்கு அப்பா இருக்கா என்ன ? ஒதத அப்பாவா இருந்தா பெயர் சொல்லலாம்... ஒன்றுக்கு மேற்பட்டது இருந்தா யார் பெயரை போட என்று அங்கிருந்தவர்கள் இவள் காது படவே கிண்டல் செய்ய
வாடா இந்த பள்ளிக்கூடத்துல படிச்சுதான் நீ உசரணும்னு அவசியம் இல்லை... என்று அழைத்து வந்து விட்டாள்...
9600 டா
ஓஓஓ சரி சரி
"எம்மோய் அந்த நாதாரி சோமன் ஆயிரம் ரூபாய் குறைச்சு வச்சிருக்கான் ... கணக்கு பாடம் காசை கையில் கொடுத்து தாய் கற்று கொடுத்தாள்,. உலக பாடம் கூடவே அவனை வைத்து கொண்டு கற்று கொடுத்தாள் அவனின் நடமாடும் பல்கலைக்கழகம் பாரிஜாதமே!!
பரதேசி நாய் திருதிருன்னு முழிக்கும் போதே நினைச்சேன்டா ____ குடிச்சான் நாளைக்கு வச்சிக்கிறேன்....
விடாதம்மா , நம்மையே ஏமாத்துறான் "
"இதுக தாயும் பிள்ளையுமா??" என்பது போல ஜீவா காட்சி பொருள் போலத்தான் இருவரையும் வந்ததில் இருந்து பார்த்து கொண்டு இருக்கிறான் ஈவு இரக்கமற்ற தாய் ,அதற்கு ஜால்ரா போடும் மகன் .. இன்னும் முளைக்க கூட இல்லை அதற்குள் அத்தனை பேச்சு ... தாய்க்கு இணையாக பேசுகிறான் .... தான் இந்த தவறை செய்திருக்க மாட்டோம் இவள் தன்னை ஏமாற்றுகிறாள் என்று ஆணித்தரமாக நம்பினான் ....
உன் அப்பனுக்கு என்னவாம்டா சோத்தை தின்னாரா? ஜீவாவுக்கு வைத்த உணவு வைத்தபடி இருந்தது கப்பல் மூழ்கிய சோதனையில் உட்கார்ந்து இருந்தான் ...
ம்ஹூம் ... பசிச்சா திங்க போறார் ...
அதான , ஆளை பாரு ஆட்டை திருடுன கள்ளன் போல முழிக்கிறதை என்று தாயும் மகனும் ஜீவாவை பார்க்க.. அவனோ கன்னத்தில் கை வைத்து அவ்வப்போது புலம்பி கொண்டு ரோட்டை வேடிக்கை பார்க்க
"அப்பா அழகா இருக்கான்லம்மோய்...
"இருக்கார்ல சொல்லணும்" என்றவள் ஜீவாவை வெட்கம் இன்றி ரசித்தாள்.. அவன் தலைகோதும் அழகில் கூட அவளுக்கு பெண்மை துளிர்த்தது... தூரத்தில் இருந்த அவனுக்கு நெட்டி முறித்தாள்...
ஊர் கண்ணே பட்டிடும் போல, எம்புட்டு அழகா இருக்கான்ல.. பைத்தியக்காரன் என்ன போட்டு பாடா படுத்துறான் , இவனுக்காக ஏங்கி போய் நான் கிடக்க , எட்டிகூட பார்க்க மாட்டைக்கான் ____ என்ற தாய் கையை சுரண்டிய இன்பா ...
"எம்மோய், நீ மட்டும் கண்டமேனிக்கு பேசுற...
"அது அவர் மேல உள்ள கோவத்துல நாலு வார்த்தை ப்ளோவுல வரும்டா, அதுக்காக அந்தாள விட்டு கொடுத்துட முடியுமா... ஏன்டா மொவனே உன் அப்பனுக்கு எப்பதான்டா என் மேல லவ்வு வரும்...
"எங்க அவரு புலம்புறதை பார்த்தா இப்போதைக்கு எதுவும் நடக்காது போலேயே..
"நீ ஏன்டா வருத்தப்படுற..
"பின்ன எல்லாருக்கும் தங்கச்சி பாப்பா இருக்கு நான் மட்டும் தனியாவே கிடக்கேனே...
"ஹாஹா அப்போ குஞ்சுமணிக்கு, குட்டி பாப்பா ரெடி பண்ணிடுவோம் உன் அப்பாவை வழிக்கு கொண்டு வர்றது உன் வேலை
"டன் டன் அவரை லவ் பண்ண வைக்கிறோம் தங்கச்சி பாப்பாவை தூக்குறோம் என்று முத்துப்பல் தெரிய இன்பா சிரித்தான்...
இருட்டோடு இருட்டாக ஊரை விட்டு தப்பித்துவிட நினைத்து , பாரிஜாதம் அறையில் இருந்த தன் கார் சாவியை கனபாடு பட்டு திருடி கொண்டு ஜீவா காரை திறக்க போக ...
காருக்கு அடியில் இருந்து உருண்டு வந்தது குட்டி உருவம் அவன் பேண்டை பிடித்து இழுக்க... கீழே குனிந்து பார்த்த ஜீவாவுக்கு பக்கென்று ஆகி போனது ...
தலைக்கு கைகொடுத்து தரையில் படுத்தபடி கையில் ஸ்பேனரோடு காலை ஆட்டி கொண்டிருந்தான் இன்பாதித்தன்.
இவனா?? என்று ஜீவா பதற
"தெரியும்டி மாப்பிள்ளை, எப்படியும் நீ ஓடிருவேன்னு அதான் நானும் அம்மாவும் உனக்கு முன்னேவே ப்ரீ ப்ளான் போட்டு இங்க வந்தாச்சு.. இந்தா இது உன் கார் ப்ரேக் என்று பிரேக்கை மகன் நீட்ட ...
பாரு ஆம்பளன்னா எதுக்கும் பயப்பட கூடாது மகனேன்னு, ஆடு மேய்க்கிறதுல இருந்து ஆட்டோ மொபைல் வரை அத்தனையும் சொல்லி தந்து அம்மா வளர்த்து இருக்கு .. குட்டி பையன் தானே ஏமாத்திட்டு ஓடலாம்னு பார்த்தே முதல் கொலை நீதான்டி மாப்பிள்ளை... என்று எழும்பியவன் ...
"டேய் அப்பாவுக்கு மரியாதை கொடு" என்று கார் ஜன்னலை பாரிஜாதம் திறக்க .. கார் பின்சீட்டில் கால் மேல் கால் போட்டு பாரிஜாதம் அவன் கூலரை
கண்ணில் மாட்டி கொண்டு படுத்து இருக்க
"அய்யோ தானா வந்து இந்த சைத்தானுக கிட்ட மாட்டி கிட்டோமே என்ற ரீதியில் அவன் நிற்க ....
"உன் அப்பாவை நான் டீல் பண்ணிக்கிறேன் நீ போய் டவுசரை போடு "
"ஏதே நான் ஆம்பள பையன்னு எப்படி ஊருக்குள்ள தெரியும்.. அப்படியே கிடக்கட்டும் அப்பத்தான் நான் வளர்ந்து பெருசான பின்ன நம்ம அருமை பெருமை ஊர் சொல்லும்... இந்த ஆள் போல மறைச்சு வச்சா எலி செத்து போகும் , இப்படிதான் ஆகும் வீரமே வராது ... பாரு முழியை வெவ்வே" என்று ஜீவாவை பார்த்து முகத்தை கோணிவிட்டு அவனை இடித்து தள்ளிவிட்டு இன்பா ஓட .. ஏதோ தோன்றி ஜீவா பேண்டை தடவ அவன் பர்ஸ், பாஸ்போர்ட் கார் சாவி அத்தனையும் ஆட்டையை போட்டு விட்டு ஓடி விட்டான் ..
"ஏங்க உங்களுக்கு மனசாட்சி இல்லையா" என்ற ஜீவாவை பல்லை கடித்து பாரிஜாதம்
மனசாட்சி வச்சி _யிரை கூட புடுங்க முடியாது , ஒழுங்கா நான் சொல்றது கேட்டு என் புருசனா இருந்தா உன் உயிர் தப்பிக்கும் .. இல்லை இதோ போறான் பாரு நான் பெத்த குட்டிப்புலி, அவன் போதும் உன் சோலியை முடிக்க" என்று மீண்டும் அவனை தூக்கி தோளில் போட்டவள் தனி அறை உள்ளே ஜீவாவை போட்டு கதவை பூட்டினாள்..
"அய்யோ யாராவது இதுக கிட்ட இருந்து காப்பாத்துங்க..என்று ஜீவா கத்தி கதவை தட்டி உடைத்து பசி மயக்கத்தில் அப்படியே மயங்கி விழ..
டேய் அதை துணி போட்டு மறைச்சுட்டாவது சாப்பிட்டு தொலைடா, பெரிய வில்லேஜ் விஞ்ஞானி போல பேசு, டவுசர் மட்டும் போட்டிராத என்று எலும்பை கடித்து இழுக்கும் மகனை பாரிஜாதம் முறைக்க
அதுவும் திங்கட்டும் , அப்பதான் சீக்கிரம் வளருமாம்... பக்கத்து வீட்டு கிழவி சொல்லிச்சு.. மாப்பிள்ளைக்கு குட்டி குஞ்____ னு யாரும் சொல்ல முடியாது பாரு... அதான் பாத்துக்கோங்கன்னு விட்டாச்சு, நாளைக்கு பின்ன சங்கடகுஸ்கா ஆகிட கூடாதுல்ல ... எல்லாம் பிற்காலத்தை கருத்தில் கொண்டுதான் இப்படி சுத்துறேன்... நீ சோத்தை தின்னு .. அங்கிட்டு ஏன் சோதனை பண்ணுத ..
"உண்மையாவே அதான் காரணமாடா
"என் அப்பன் காசுல தான் குஞ்சை ம_க்கணும்னு சபதம் விட்டிருக்கேன்
அடேய் மங்கம்மா சபதம் மாதிரி கு__சம்மா சபதமா
"யா யா "
டேய் உன் அப்பனுக்கு பல்ப்பே எரியலைண்ணா உன் நிலமை ??
டிங்கி டிங்கின்னு சுத்த வேண்டியதுதான்
என் சிங்க குட்டி டா நீ,என்று மகனை தூக்கி போட்டு பிடித்தாள் பாரிஜாதம்
கதவுக்கு இந்த பக்கம் உட்காந்து தாயும் மகனும் சிரித்து சிரித்து பேச .. இவன் காதில் அந்த சிரிப்பு விழ ... இதுக வன்முறை விட்டு தப்பி பிழைக்கவே மனம் வேண்டியது ..
இறுக பற்றிக்கொண்டால் உறவை காப்பாத்தி விடலாம் என்ற எண்ணம் தாய்க்கும் மகனுக்கும்
அன்பும் திணிக்கப்பட்டால் அது விஷமாய் தான் மாறும் என அறிந்திலர்!!